Sunday, November 1, 2020

சுப சுவாமிநாதன் 75-ஆம் ஆண்டு வாழ்த்து

 காரைக்குடி இராம. சுப்பையா . விசாலாட்சி இணையருக்கு மகனாய் பிறந்தார்கள். காரைக்குடியில் பள்ளிபடிப்பை முடித்தார்கள். 1964 ஆம் ஆண்டு சென்னை வந்து எல் வி அவர்களின் ORWO கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார்கள். 1967 ஆம் ஆண்டு நாச்சியார்புரம் நாகரத்தினதுடன் திருமணம் நடைபெற்றது. சுப்பு என்ற மகனும், பொற்கொடி, மலர்கொடி, சுந்தரி என்ற மகள்களும் உள்ளன. அனைவரையும் படிக்க வைத்து, திருமணம் செய்து, நல்ல மருமகள் மருமகன்களை கிடைக்கப்பெற்றவர்கள். அருமையான பேரன்கள் பேத்திகள். 1970 ஆம் ஆண்டு, அசோக்பில்லரில் வீடு வாங்கி குடிபோனார்கள். அப்போது என்னை இரண்டு வருடம் மகன் போல அத்தையும் மாமாவும் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் வீட்டில் இருந்துகொண்டே எம் ஏ ஆங்கிலம் படித்து வேலை தேடியும் வந்தேன். நிறைய உணவகங்களுக்கும், படத்திற்கும் அழைத்துப்போவார்கள். அவர்களோடும் பிள்ளைகளோடும் இருந்த அந்நாட்கள் மறக்க முடியாதவை. 1984 ஆம் ஆண்டு விருகம்பாக்கத்தில் வீடு கட்டி குடியேறினார்கள். எனக்கும் மீனாவுக்கும் திருமணத்தின் போது ஆச்சியிடமும் அண்ணனிடமும் தூது சென்றவர்கள். 1967 முதல் 1984 வரை ஜப்பான, ஜெர்மனி, ஐரோப்பா முதலிய வெளிநாடுகளுக்கு பல முறை பணி நிமித்தமாக சென்று வந்துள்ளார்கள். அன்பானவர்கள் பாசமானவர்கள் பன்முக திறமைசாலி, நிர்வாகத்திறன் கொண்டவர்கள், நகைச்சுவையாக பேசுவார்கள். விருந்தோம்பலுக்கு பெயர் போனவர்கள். தெரிந்தும் தெரியாமலும் நிறைய பேருக்கு உதவி செய்து வருகிறார்கள். தினமும் பல பயனுள்ள கருத்துள்ள செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். அவர்களின் எழுத்து வல்லமை அதில் தெரிகிறது. அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள். என்னை பார்ப்பதற்கு கரோனா நேரத்தில் கூட வந்து பார்த்து சென்றார்கள். என் மீது அவர்களுக்கு அளவு கடந்த பாசம். மாமாவும் அத்தையும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன். 

அன்புடன் சி நாச்சியப்பா மீனா, மாதவி வள்ளியப்பா.கனகம் தங்கவேல். 

Saturday, October 31, 2020

எம் கோபாலகிருஷ்ணன் இரங்கல்

எம் கோபாலகிருட்டிணன் - இரங்கல்

இந்தியன் வங்கி மறைந்த தலைவர் மேலாண்மை இயக்குனர்)

தந்தை பெயர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர மேயராக இருந்தவர். மனைவி பெயர் ராஜலட்சுமி ஒரு மகள் குடும்பமிருக்கிறது. அவர் இளங்கோ கலை மன்ற தலைவராக இருந்தார். மாமா இயக்குனர் எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்திற்கு விருது வழங்கினார். இந்தியன் வங்கியில் அதிகாரியாக சேர்ந்தார். கடுமையாக உழைத்து பதவி உயர்வுகள் பெற்று பொது மேலாளர் ஆனார். அவருடைய செல்வாக்கால், அதே வங்கியில் செயல் இயக்குனர் ஆனார். பின்பு தலைவர், மேலாண்மை இயக்குனர் ஆனார்.

அவர் அதிகாரிகள் பயிற்சி பெற, சென்னையில் Image என்ற கட்டிடத்தைக் கட்டினார். பயிற்சி தவிர அந்த கட்டிடத்தை வாடகைக்கும் அனுமதித்தார். 

அவர் மும்பை மண்டல மேலாளராக இருக்கும் போது அதிகாரிகள் குடியிருப்பு கட்டினார். அதில் வாகன வசதி செய்து கொடுத்தார். அதில் பராமரிப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருங்கள் என்றார். பேங்க ஆப் தஞ்சாவூரை இணைத்தார். எனக்கு சென்னை திருவான்மியூர்க்கு மாற்றல் ஆனது. எக்மோர் பி ஒ டி யில், நிறைய செயற்படாச் சொத்துக்கள் இருந்தன. அதனால், கே ஆர் சேதுராமன் என்னை அங்கு மாற்றினார். பி ஒ டி கிளைகள் தோன்றின நான் எழும்பூர் பி ஒ டி யில் மேலாளராக பணியாற்றினேன். 

அதிகாரிகள் கிராமசேவை செய்ய வேண்டும் என்பார்.  என்னை கிராம சேவைக்காக திருமழிசையில் போட்டார்கள். கோபாலகிருட்டிணன் அவர்களையும், கண்ணன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். இருவரும் நான் சென்னையிலிருந்து போகும்படி போட்டார்கள். நான் நன்றாக செய்தேன். அந்த கிளையில் மார்கரெட் லெக்டேசியா என்கிற கிராம வளர்ச்சி அதிகாரி இருந்தார்கள். அவர்கள் கிளையில் உள்ள 14 கிராமங்களையும் சுற்றி வருவார்கள். நன்றாக ஒத்துழைத்தார்கள். நேமம் மாதிரி கிராமம் ஸ்டெல் மேரிஸ் கல்லூரிலிருந்து மாணவிகள் வந்து, கிராமத்தில் வாடிக்கையாளர்கள் வீடுகளில் ஒரு வாரம் தங்கி சேவை செய்தார்கள். கல்லூரியில் அவர்களையும் என்னையும் பாராட்டி கல்லூரி முதல்வரும் கோபாலகிருட்டிணன் அவர்களும் பேசினார்கள். கோபாலகிருட்டிணன் மருத்துவமனைகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தார்.  கோபாலகிருட்டிணன் அவர்களின் மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Friday, October 2, 2020

எஸ்பிபி நினைவலைகள்

 பாடும் நிலா பாலு அவர்கள் நம்மை எல்லாம் தவிக்கவிட்டு விட்டு மறைந்து விட்டார். அவர் பாடிய பாடல்கள் எண்ணிலடங்கா. 14 மொழிகளில் 42,000 பாடல்கள் பாடிய மாமனிதர். ஒரே நாளில் 21 பாடல்களை பதிவு செய்த சாதனையாளர் பாலு அவர்கள். எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்" படத்தில் அறிமுகமாகி, ரஜினி அவர்களின் "அண்ணாத்த" படத்துடன் தன் இசைப் பயணத்தை  முடித்துக்கொண்டார். அவரின் புகழ் உலகம் உள்ளவரை இருந்துகொண்டே இருக்கும். அவருடைய பாடல்கள் நமக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். "கேளடி கண்மணி" படத்தில் மண்ணில் இந்த காதல் பாடலை மூச்சு விடாமல் பாடியும் நடித்தும் சாதனை புரிந்தார். அன்பானவர், அடக்கமானவர், பண்பாளர், மனிதநேயம் உள்ளவர். இப்படி அவர் குணநலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நம் மத்திய அரசு விருதுகளையும் பல மாநில அரசு விருதுகளையும் இன்னும் பல்வேறு விருதுகளையும் ஒருங்கே பெற்றவர். மாமா எஸ்பிஎம் இயக்கிய 70 படங்களில் 100 பாடல்கள் பாடியும், 2 பாடல்கள் இசை அமைத்தும், 1 படத்தில் நடித்தும் கொடுத்தவர். மாமா அவரைப்பற்றி நிறைய சொல்வார்கள். கேட்டு பெருமிதம் அடைவோம். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று. 

Thursday, May 31, 2018

குறுந்தொகை - பாடல் 400

சேயாறு செல்லாம் ஆயின் இடரின்று
களைஇக் காமம் பெருந்தோட்கு என்று
நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய ஏகிக் களரிக்
கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை
வலவோய் இன்று தந்தனை தேரே
நோயுழந்து உறைவியை நல்க லானே .

பாடலின் பொருள் :

நீண்ட வெளியில் செல்வோமாயின், பெரும்தோளையுடைய  தலைவியின் காமமாகிய துயரை இன்று களைதல் நம்மால் இயலாதென்று,
நல்லதை விரும்பி எண்ணிய மனத்துடன் பாகனே நீ தேரைச் செலுத்தினை!
அதாவது அவ்வாறு நல்லதை  எண்ணிய விரைந்து கரம்பு நிலத்தில்
மனத்தையுடையை  ஆகி  , முரடான மேடுகள்  உடையும்படி விரைந்து , கரம்பை நிலத்தில் புதுவழி கண்டு செலுத்திய அறிவுத்திறனுடைய தேர்ப்பாகனே ! காம நோயால் பிரிவுத்துயரில் உழன்று வருந்தி இருந்த தலைவியை  ,நலமுடன் நீ தந்ததால் , இன்று  நீ தேரை மட்டுமா ஊருக்குள் தந்தனை ? இல்லை ; என் தலைவியையே உயிருடன் தந்தனை! ! நீ போற்றுதற்கு உரியை !


இப்பாடலை எழுதியவர் பேயனார்

குறுந்தொகை - பாடல் 350

அம்ம வாழி தோழி முன்னின்று
பனிக்கடுங் குன்றஞ் செல்லா தீம்எனச்  
சொல்லின மாயின் செல்லார் கொல்லோ
ஆற்றயல் இருந்த இருந்தோட்  டஞ்சிறை
நெடுங்காற் கணத்துள் ஆளறி வுறீஇ
யாறுசெல்  வம்பலர் படைதலை பெயர்க்கும் 
மலையுடைக்  கான நீந்தி
நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசி  னோரே .

பாடலின் பொருள்

தோழி ! வாழி ! ஒன்று சொல்வன் கேட்பாயாக ! பாலை வழியின் பக்கத்திலிருந்த கரிய கொம்பையும் அழகிய சிறகையும் நீண்ட கால்களையும் கொண்ட கண ந்து ள்  என்னும் பறவையானது வழிப்பறி கள்வராம் ஆள்கள் மறைந்து இருப்பதை முன்னதாக அறிவுறுத்தும் .அவ்வாறு முன்கூட்டி அறிவுறுத்தி , அவ்வழியே செல்லும்
வணிகப் பயணிகளின் படைகளை அங்கிருந்து நீங்கி வேறு இடத்திற்கு மாற்றிப் போகச் செய்யும் .அத்தகைய மலைகள் சூழ்ந்த காடுகளைக் கடந்து , நிலை நில்லாதபொருள் வேட்கையால் பிரிந்த தலைவரின் முன் நின்று ,
'பனிக்காலத்தே தாங்க இயலாத  கடுந் துயரடைவோம் ,பிரிந்து செல்லாதீர் ' என முன்பே சொல்லினமாயின் சென்றிருப்பாரோ ?

இப்பாடலை எழுதியவர்  ஆலந்தூர்கிழார்

Thursday, May 17, 2018

குறுந்தொகை - பாடல் 310

புள்ளும் ;புலம்பின பூவும் கூம்பின
கானலும் புலம்புநனி உடைத்தே வானமும்
நம்மே  போலும் மம்மர்த்து  ஆகி
எல்லை கழியப் புல்லென் றன்றே ;
இன்னும் உலெனே - தோழி ! _ இந்நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உறைக்குநர்ப் பெறினே .


தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின; கானலும் புலம்பு  தனி உடைத்து ; வானமும் நம்மே  போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று! இந் நிலையை ,தண்ணிய கமழும் ஞாழல்  உள்ள தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறின் ,இன்னும் உளென்  


இப்பாடலை எழுதியவர் பெருங்கண்ணன்

குறுந்தொகை - பாடல் 275

முல்லை ஊர்ந்த கல்லுயர்பு ஏறிக்
கண்டனம் வருகம் ; சென்மோ- தோழி! 
எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்
புல்லார் நல்லான் பூமணி கொல்லோ ?
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
வல்வில் இளையர் பக்கம் போற்ற,
ஈர்மணற் காட்டாறு வரூஉம்
தேர்மணி கொல்?- ஆண்டு இயம்பிய உளவே .

பாடலின் பொருள்
தோழி காளையை உடைய பசுவினங்கள் மாலை ஊரை வந்தடையும் .புல்லை உண்ட நல்ல  பசுக்களின் கழுத்திற்  பூண்டிருக்கும்  மணியோசையோ ?செய்யக்கருதிய செயலைச் செய்து முடித்த நிறைவுகொண்ட உள்ளத்தோடு ,வலிய வில்லை உடைய இளைய வீரர்கள் தன்   இரு பக்கமும், பாதுகாத்தவராக வந்து கொண்டிருக்க , ஈரமாகிய மணலையுடைய காட்டுவழியிலே வரும் தலைவனது தேரின் மணியோசையோ ?முல்லைக்கொடி படர்ந்திருக்கும் கல்லின் மேலாக ஏறி  நின்று  அங்கே ஒலிப்பனவாக உள்ளவை யாவையென யாமும் கண்டு வருவோம் ; வருவாயாக

இப்பாடலை  எழுதியவர் ஒக்கூர்  மாசாத்தி

Saturday, April 28, 2018

குறுந்தொகை - பாடல் 251

மடவ வாழி - மஞ்ஞை மாஇனம்
கால மாரி பெய்தென ,அதன்எதிர் 
ஆலலும்ஆலின  பிடவும் பூத்தன ;
கார் அன்று - இகுளை-தீர்க நின் படரே !
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் ,
புதுநீர் கொளீ இய,உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே

பாடலின் பொருள்

தோழீ ! முன்னைய கார் காலத்துப் பெய்ய வேண்டிய மழையில் ,பெய்யாது தங்கிய பழைய நீரைக் கொட்டி விட்டுப் புதிய நீரைக் கடலில் முகப்பதற்காக ,இப்போது பெய்யும்தொடர் பற்ற காலத்து மழையின் முழங்கும் குரலைக் கேட்டு .மயில்களின் பெரிய கூட்டம் ,இதனைக் கார் கால மழையென்றே கருதி ,அம்முகிற் கூட்டத்திற்கு எதிரே மகிழ்ந்து ஆடுதலை மேற் கொண்டன .பிடவும் அவ்வாறே பூத்தன .அவை அறிவற்றன .இது உண்மையான கார்காலம் அன்று .உன் துன்பம் நீங்குவதாக !

இப்பாடலை எழுதியவர் இடைக்காடனார்  

குறுந்தொகை - பாடல் 210

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த  வெண்ணெல் வெஞ்சோறு   
எழுகலத்து எந்தினும் சிறிது - என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக்  கரைந்த காக்கையது பலியே.

பாடலின் பொருள்
தலைவா! என் தோழியின் பருத்த தோலை நெகிழ்ச்சி செய்த பிரிவுத் துன்பத்திற்கு ,நல்நிமித்தமாகப் புதிய விருந்தினர் வருவர் என உணர்த்தக் கரைந்த காக்கையாலேயே, யான் தலைவியே
 'நீ வந்து விடுவாய்'' என ஆற்றுவித்தேன்.அதனால் அக் காக்கைக்குப் பலி உணவாக,திண்ணிய தேரையுடைய கண்டீரக் கோப்பெருநள்ளியின் காட்டிலுள்ள இடையர்கள் பல பசுக்கள் தந்த நெய்யுடன் ,தொண்டி நகரில் முழுவதுமாக விளைந்த வெண்ணெல் அனைத்தையும் கொண்டு சமைத்த சோற்றை ஏழுகலங்களில் ஏந்திக்கொடுத்தாலும் அது சிறிதேயாகும் !


இப்பாடலை எழுதியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்

Friday, April 20, 2018

குறுந்தொகை - பாடல் 175

    "பருவத் தேன்நசைஇப் பல்பறைத் தொழுதி
     உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை ,
     நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
     மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
     இரங்கேன்- தோழி!- எங்கு என்கொல்? என்று
     பிறர்பிறர் அறியக் கூறல்
     அமைந்தாங்கு அமைக; அம்பலஅஃது எவனே?

    பாடலின் பொருள்

    தேனை விரும்பிப் பலவாகிய  ' செவ்வியுள்ள மலர்களின் புதிய தேனி விரும்பி பலவாகிய வண்டுக்கூட்டம் வலி மை வாய்ந்த அலைகள் மோதுகிற  மணல்
    திணிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புண்ணி யின் கரிய கிளையல்  மொய்த்த படி மலர்ந்த பூக்களையும் கரிய நீரையும் உடைய கடற் கரைக்கு த் தலைவன் பொருட்டு யான் இரக்கப்பட மாட்டேன் .இங்கே இவளுக்கு என்ன ஆயிற்று ஏன் இவள் பழித்து பேசுதல் அவரவர் மனம் போன படி அமையட்டும் , அவர்கள்  கூறும் அம்பல் என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு தலைவி அதுபற்றி அஞ்சேல் என்றது இது .