பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில்
ஈடுபாடு
கொண்ட காரைக்குடி இராம சுப்பையா -
விசாலாட்சியின்
சமதர்ம இல்லத்தில் 22.3.1939..ல் தோன்றினீர்கள்
சுயமரியாதை வீரர் சர் ஏ .டி .பன்னீர் செல்வத்தின்
நினைவாக செல்வமணி என்று பெயர்
சூட்டினார்கள்
சமதர்ம இல்லத்தில் இரண்டு வயதில்
இறந்து போன
இலெனின் மாமாவையும் இல்லறம் ஏற்று
இரண்டு
பிள்ளை களையும் பெற்றுவிட்டு 1974ல் இறந்து
போன இந்திரா சித்தியையும் சேர்த்து எட்டு
விழுதுகள் அதில் நீங்கள் நான்காவது விழுது
படித்தீர்கள் மீ .சு .பள்ளியில்
பெற்றீர்கள் பட்டயம் அழகப்பர் பல்தொழில் பயிலகத்தில்
ஆற்றி னீர்கள் அரசுப்பணி
பட்டுக்கோட்டையில்
நெய்வேலியிலும் பணியாற்றினீர்கள்
மீண்டும் வந்தீர்கள் சென்னை
பொதுப்பணித் துறைக்கு
தலைமைப் பொறியாளர் பாராட்டும் படி
நடந்தீர்கள்
ஊழல் மட்டும் செய்ததில்லை
ஊழல் மட்டும் செய்ததில்லை
அத்தையோ ஆத்தங்குடி ஆறுமுக நாவலர்
பள்ளி, சிதம்பரத்தில் படித்தார்கள்
1964 ல் இல்லறம் ஏற்றீர்கள்
தமிழாசிரியை . பெற்றார்கள் நல்லாசிரியை
விருது தளபதி ஸ்டாலின் கையால்
அத்தையோ சைவம் நீங்கள் அசைவம்
பொன் இளங்கோ ,இராமசாமி ,விசாலாட்சி ,வள்ளியப்பன்
நால்வரையும் பெற்றீர்கள் மூத்த பிள்ளைக்கு
சுயமரியாதை இயக்க வீரர் பொன்னம்பலனார் பெயரையும்
அவர் தம்பி இளங்கோவன் பெயரையும்
சேர்த்து பெயர் சூட்டினீர்கள்
பொன்
இளங்கோ பொறுப்பான பிள்ளை நீங்கள் இருவரும்
வேலைக்குச்செல்வதால் பார்த்துக்
கொள்வான் தம்பி,தங்கைகளை
நான்கு பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்
உங்களுக்கு உண்டு குடும்ப நண்பர்கள்
வடிவேலு ,வைரவசுந்தரம் ,கோவை பாலு ,கோபால் அண்ணன் ,
பொறியாளர் பெரியசாமி,ஜெயராமன் ,மருத்துவர் செல்வராஜ்
போன்றோர் இது வள்ளுவர்
சொன்னதைப் போல் நெஞ்சத்து
அகநக நட்பதான நட்பு
எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும்
நேரத்துக்கு வருவீர்கள்
அதேபோல் மற்றவர்களும் வரவேண்டும் என்று
எதிர் பார்ப்பீர்கள்
எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்
எழுதுவீர்கள் வீட்டுக் கணக்கை
உடுத்துவீர்கள் உடைகளை அழகாக எல்லா
நிழற்படங்களையும் பாதுகாத்து வைத்திருப்பீர்கள்
சமதர்ம இல்ல
முகநூலில் யாருடைய பிறந்த நாள்
திருமண நாள் வந்தாலும் போடுவீர்கள் பொருத்தமான படத்தை
1964 ல்
நடைபெற்ற உங்களின் திருமண அழைப்பு
அசோக்நகர் வீடு பால் காய்ச்சும்
அழைப்பு வைத்திருக்கிறீர்கள் பாதுகாத்து
சமதர்ம இல்ல வீட்டை பழமை மாறாமல்
புதுப் பொலிவோடு புதுப்பித்த மாமாக்கள்
நால்வருக்கும் எங்கள் பாராட்டுக்கள்
நீங்களும் நண்பர் பாலுவும்
இருந்தீர்கள்
வழிகாட்டியாக . நல்ல இடம் பார்த்து பிள்ளைகள்
நால்வருக்கும் மணமுடித்து வைத்தீர்கள்
அத்தையும் நீங்களும்
நல்ல சம்பந்திகளை பெற்றீர்கள்
நாலில் ஒன்று சுயமரியாதைத் திருமணம்
பெற்றீர்கள் மூன்று நல்ல மருமகள்களும்
ஒரு நல்ல மாப்பிள்ளையும்
உங்களுக்கு நடந்தது இரண்டு அறுவைச்
சிகிச்சை
பிள்ளைகள் கொடுத்தார்கள் உழைப்பும் பொருளும்
காப்பாற்ற முடியவில்லை மருத்துவர்களால்
வாங்கிய புதிய மகிழுந்தில் கூட
பயணிக்கவில்லை
78 அகவை
போதுமென்று முடித்துக் கொண்டீர்கள்
வாழ்க்கைப் பயணத்தை. வணக்கம் உங்களுக்கு