Friday, September 23, 2016
தந்தை பெரியார் கவிதை - கலைவாணர்
நாகர்கோவில் சுடலைமுத்து கிருட்டிணன்
பெற்றார் புகழ் கலைவாணராக
வில்லுப்பாட்டு,நாடகம் ,திரைப்படம்
என எல்லாவற்றிலும் பதித்தார் முத்திரை
சிரிப்பதற்கு மட்டுமல்ல
சிந்திப்பதற்கும்
உரியன வசனங்களும் பாடல்களும்
நடித்தார் 150 படங்களுக்கு மேல்
சிவகவி, ராஜாராணி ,மணமகள் போன்ற படங்கள்
சேர்த்தன புகழ் அவருக்கு பொருளும்
சேர்ந்தது
ஆனார் வாரிக் கொடுக்கும் வள்ளலாக
மணந்தார் நடிகை மதுரத்தை
கலைஞர் கட்டினார் கலைவாணர் அரங்கம்
சென்னையில்
நடைபெற்றது கலைவாணரின் கிந்தனார்
இசை
நிகழ்ச்சி 3.9.1944 அன்று
ஈரோட்டில் திராவிடர்கழகக் கட்டிடம்
கட்டுவதற்காக
பெரியார் புகழ்ந்தார்
கிருட்டிணன் ஒரு மேதாவி ,வள்ளல் ,
பொது நலத்திற்கு உதவுபவர் ,புரட்சியாளர்
என்று
அணிவித்தார் பொற்சங்கிலியும் பதக்கமும்
வழங்கினார் தனியாக ஒரு பொன் பதக்கம்
1.11.1944ல் பெரியார் சென்றார்
கிருட்டிணன்
குழுவினர் நடித்த இழந்த காதல்
நாடகத்துக்கு
நாடக ரசபாவங்களை விளக்கிய பெரியார்
நாடகப் புரட்சி பற்றிய வரலாறு எழுதப்
படும்
போது கிருட்டிணன் படம் அட்டைப்
பக்கத்தில்
இருக்க வேண்டும் என்றார்
பொறாமைக்காரர்கள் பின்னினர் சதிவலை
கிருட்டிணனையும் எம். கே. தியாகராஜ
பாகவதரையும்
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்க
வைக்க
பெற்றனர் வெற்றி செய்யாத குற்றத்திற்கு ஆயுள்
தண்டனை வாங்கிக் கொடுப்பதில்
பெரியார் சென்றார் சிறைக்கு
கொடுத்தார் ரூபாய் 10000
வழக்குச்செலவுக்கு
3.11.1945 ல் குடிஅரசு இதழில் எழுதினார்
தலையங்கம் 14 வருட கடுங்காவல்
விதிக்கப்பட்ட போது அய்யோ கிருட்டிணா
உனக்கா இந்த கதி என்று
பெரியார் எழுதினார் துணைத் தலையங்கம்
10.11.1945ல் கிருட்டிணன்-பாகவதர் விடுதலை
முயற்சிக்கு ஒவ்வொருவரும் ஒரு ரூபாய்
வீதம்
ரூபாய் 50000 திரட்ட வேண்டும் என்று
நாடெங்கும் நடத்தப் பட்டன கூட்டங்கள்
அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும்
தீர்மானங்களை நிறைவேற்றி
கிருட்டிணன்-பாகவதரை விடுதலை செய்ய
வேண்டுமென்று
பெரியார் தலையங்கம் 15.6.1946 விடுதலை இதழில்
கிருட்டிணன்,பாகவதர் பிணையல்
மனுப் போட வேண்டும்
அரசு அதைக் கவனிக்க வேண்டும் கருணைக்
கண்களுடன் என்று
விடுதலை இதழ் தலையங்கம் 25.4.1947 அன்று
கிருட்டிணன் -பாகவதர் விடுதலை
உண்மை பெற்றது வெற்றி என்று
கலைவாணர் கலந்து கொண்டார் 15.1.1949 அன்று
பெரியார் சென்னையில் நடத்திய
திருக்குறள் மாநாட்டில்
பட்டுக்கோட்டை அழகிரி குடும்பத்துக்கு
நிதி அளிப்பு விழா நடைபெற்றது
தஞ்சையில்
அண்ணா தலைமையில் 29.5.1949 அன்று
அழகிரி குடும்பக் கடனோ ரூபாய் 6000
ஆனால் வசூலானதோ 3500 ரூபாய் மட்டுமே
கலைவாணர் வழங்கினார் 6000 ரூபாய்
தன் சொந்தப் பொறுப்பிலிருந்து 2500 ரூபாய்
சேர்த்து. விழாவில் ,பாவேந்தர், கலைஞர் போன்றோர்
கலந்து கொண்டனர்
Sunday, September 18, 2016
தந்தை பெரியார் கவிதைகள் - திரு.வி .க
திருவாரூர் விருதாச்சல கல்யாணசுந்தரம்
திரு.வி.க என்றே அழைக்கப்பட்டார்
கற்றார் தமிழ்
மறைமலை அடிகளிடமும்
யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளையிடமும்
தொடங்கினார் தொழிற்சங்கம் 1918 ல்
நவசக்தி வார ஏட்டை தோற்றுவித்தார் 1920
ல்
நாணயமிக்கவர்; கிடையாது
சொந்த வீடு கூட. எழுதினார் நூல்கள்
50 க்கும் மேல் அவற்றுள்
பெண்ணின் பெருமை,முருகன் அல்லது அழகு ,
மனித
வாழ்க்கையும் காந்தியடிகளும்
சிறந்தன . இருந்தார் அவர் 1926 ல்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக
ஆற்றினார் பணி ஆசிரியராக
வெஸ்லி கல்லூரியில் சில ஆண்டுகள்
தமிழ்
உலகம் போற்றியது
திரு .வி.க வைத் தமிழ்த் தென்றல் என்று
பெரியார் இந்தி எதிர்ப்புப்
போராட்டத்தில்
சிறை
சென்ற போது
9.12.1938 அன்று திரு. வி.க. எழுதினார்
தலையங்கம் நவசக்தி யில்
"சிறப்பறவை யாகிய இராமசாமி நாயக்கர்
வரலாற்றை விரித்துக்கூற வேண்டியதில்லை.
அவர்தம் வரலாற்றில் அறியக்
கிடக்கும்
நுட்பங்கள் பல உண்டு .அவற்றில்
சிறப்பாகக் '
குறிக்கத் தக்கன, இடையறா ச்சேவை ,
சமத்துவ நோக்கம்,சுதந்திரஉணர்ச்சி ,நட்புரிமை ,
தாட்சண்யமின்மை ,உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாமை ,அஞ்சாமை ,ஊக்கம் ,
சோர்வின்மை, சலிப்பின்மை,எடுத்த வினையை
முடிக்கும் திறன் ,கரவு -சூழ்ச்சியின்மை முதலியன .
இவை அவர்தம் வாழ்வாக அரும்பி ,மலர்ந்து ,காய்த்து ,
கனிந்து நிற்கின்றன .இந்நீர்மைகள்
திரு.நாயக்கரை
அடிக்கடி சிறை புகச் செய்கின்றன போலும்
“
இது காட்டுகிறது திரு.வி.க.வின் அழகிய
உரைநடையையும் பெரியார் பற்றிய
அவரின் உயர்ந்த எண்ணத்தையும்.
திரு.வி.க..60 அகவையை அடைந்தபோது
அமைக்கப் பட்டது மணிவிழாக் கழகம்
பெரியார் எழுதினார் துணைத் தலையங்கம்
விடுதலையில் அதை வரவேற்று.
மணி விழா நாளன்று வெளியிட்டார்
பெரியார்
விடுதலை முதல் பக்கத்தில்
திரு.வி.க.வாழ்க்கை
வரலாற்றையும் ஆற்று மணலினும் அதிகநாள்
வாழ்க
என்ற தலையங்கத்தையும்
அன்றைய விடுதலையை திரு.வி.க. மணி மலர்
என்று பெயரிட்டு பெருமைப் படுத்தினார்
பெரியார்.
திரு.வி.க சூட்டினார் வைக்கம் வீரர் என்கிற பட்டத்தைப்
பெரியாருக்கு திரு.வி.கசொன்னார்
எனக்குப்
பெண்டு ,பிள்ளைகள் இல்லை ,நான் செத்துப் போனால்
எனக்காக ஆளுகின்ற ஒரு நண்பர்
இருந்தால் அது
பெரியாராகத்தான் இருக்க முடியும் இந்த
நாட்டில்
நல்ல செயல்கள் செய்தவர் பெரியார்
ஒருவர்தான்
எங்கள் இருவருக்கும் தொழிலாளர்
பிரச்சினையில்
எந்த வேற்றுமையும் இல்லை என்றார்.
1948ல் திராவிடர் கழகம் கொண்டாடியது
பொங்கல் விழா வ. உ .சிதம்பரனார் பந்தலில்
நான் முதலில் தமிழன்,பிறகு இந்தியன் மூன்றாவதாக
உலகத்தவன் என்றார் திரு.வி.க.
எழுச்சி உரை ஆற்றினார் திரு.வி.க.
வ .உ .சி படத்தை திறந்து வைத்து
மதுரை மாவட்ட முதலாவது தி.க.
மாநாட்டில்
மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற
இந்தி எதிர்ப்பமாநாட்டில் எழுச்சியுரை
ஆற்றினார் திரு.வி.க.பெரியார் ,அண்ணா
பாவேந்தர் ஆகியோருடன்
22.8.1948 அன்று நடைபெற்றது இந்தி
எதிர்ப்புக் கூட்டம்
திரு.வி.க.தலைமையில்
லட்சம் பேர் கலந்து கொண்டனர் .
15.1.1949 மற்றும் 16.1.1949 ஆகிய
நாட்களில்
நடைபெற்றது திருக்குறள் மாநாடு
சென்னையில்
பெரியார் விடுத்தார் வேண்டுகோள்
திரு.வி.க. கலந்து கொண்டு
உரையாற்றினார்.
22.3.1949 அன்று பெரியார்
உரையாற்றினார்
திருவள்ளுவர் உள்ளம் பற்றி பச்சையப்பன்
கல்லூரியில் திரு.வி..க.
தலைமையில்
Subscribe to:
Posts (Atom)