Wednesday, April 20, 2016

குடியரசு

குடியரசைத் தொடங்கினார்
1933ல் அரசை எதிர்த்து எழுதினார் 1925ல்
இது முதலாளித்துவ ஆட்சி
பணக்காரர்களுக்கு பதவியும்
கல்வியும் கிடைக்கிறது
இது ஒழிய வேண்டும்
என்று எழுதினார்

ஈவெரா வுக்கு  6  மாத சிறை
வெளியீட்டாளரான கண்ணம்மாவுக்கு 
3 மாத சிறை
குடியரசு நிறுத்தப்பட்டது
ஈவெரா ஈரோடு
வேலைத்திட்டத்தை  அறிவித்தார்
நீதிக்கட்சி ஆதரித்தது
ஈவெரா நீதிக்கட்சியை
ஆதரித்தார் சிங்காரவேலர்
ஜீவானந்தம் அதை விரும்பவில்லை


1934 தேர்தலில் நீதிக்கட்சி
படுதோல்வி அடைந்தது
நான் ஏன் பிறந்தேன்
என்கிற வீரர் பகத்சிங்கின்
தமிழாக்கம் தடை செய்யப்பட்டது

ஈவெரா சமதர்மப் பிரச்சாரத்தைக்
கைவிடாவிட்டால்  சுயமரியாதை
இயக்கம் தடை செய்யப்படும்
என்று அரசு அறிவித்தது
எனவே ஆங்கில அரசாங்கத்தை
ஆதரித்து குடியரசில் வெளியிட்டார்
இளைஞர்கள்,சிங்காரவேலர்,
ஜீவானந்தம் எதிர்த்தனர்

பர்ப்பனரல்லாதார் நலம் நாடி

நீதிக்கட்சியின் பக்கம் திரும்பினார்  

Friday, March 18, 2016

நாகம்மையார்

1933ம் ஆண்டு நாகம்மையார்
 மரணமடைந்தார்கள்  யாரையும்
அழவேண்டாம் என்று சொன்னார்
ஈவெரா எழுதியது
“அடிமை போயிற்றென்று சொல்வேனா
ஆதரவு  போயிற்றென்று சொல்வேனா
இன்பம் போயிற்றென்று சொல்வேனா
ஒன்றுமே விளங்கவில்லை "
இயக்கப் பணிகளில்
 மேலும் தீவிரமாக
ஈடுபட நாகம்மையார்
மறைவும் நன்மைக்கே

என்று கருதினார்

Tuesday, February 9, 2016

அயல்நாடு

1929ல்நாகம்மையாரோடும்
போட்மெயில் பொன்னம்பலனார் உட்பட
தோழர்கள் சிலரோடும்
மலாயா,சிங்கப்பூர் ஆகிய
நாடுகளுக்கு சென்றார் ஈவெரா
சுயமரியாதைப் பிரசாரம் 
செய்தார் பினாங்கு உட்பட
பல இடங்களுக்கும்
மலேயாவில்  சென்றார்
கேட்கும் கேள்விகளுக்கு
விடை கூறி அசத்தினார்
நல்ல வரவேற்புக் கிடைத்தது.

சிங்கப்பூரிலும் அவ்வாறே
வெற்றிகரமான பிரச்சாரம்
அமைந்தது மகிழ்ச்சியோடு
நாடு திரும்பினர்
அவருடைய சுற்றுப்பயணத்தால்
தமிழர்களிடையே  ஒற்றுமை
ஏற்பட்டது அறிவுவெளிச்சம்
பரவியது  இருநாடுகளிலும்

1931 திசம்பரில்  மேலை
நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
மேற்கொள்கிறார் ஈவெரா
ஆப்பிரிக்கா ,கிறீஸ்,
எகிப்து ,துருக்கி,
சோவியத் ருஷியா,
ஜெர்மனி, இங்கிலாந்து,
பிரான்சு ,ஸ்பெயின் ,
போர்சுகல் ,இலங்கை
ஆகிய நாடுகளுக்கு
சுற்றுப்பயணம் செய்கிறார்

ருஷியா வில் 94 நாட்கள்
தங்கி இருக்கிறார் .
எல்லா இடங்களிலும்
தொழிலாளர் நிலை ,
அறிவியல் வளர்ச்சி 
பற்றியெல்லாம் அறிந்து கொண்டார்
சொற்பொழிவும் ஆற்றினார்
திரும்பும்போது இலங்கை வழியாக 
இந்தியா திரும்பினர்
இலங்கையில் சொற்பொழிவாற்றினார்
இலங்கைச் சொற்பொழிவு
3000 படிகள் விற்றன

ருஷியப் பயணத்திற்குப்பின்
பெண்களைக்கூட தோழர்
என்றே அழைத்தார் ஈவெரா
மா சிங்காரவேலரின் கருத்துக்கள்
ஈவெரா வின் பிரச்சாரத்துக்கு
உதவியாக இருந்தன.