Thursday, December 31, 2015

தந்தை பெரியார் கவிதை - சுயமரியாதை



சுயமரியாதை



1898 முதல் 1930 வரை
நியமிக்கப்பட்ட 9 நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர்
ஒருவர் நாயர்
உதவி கலக்டர் 140 பேரில் 77 பேர் பார்ப்பனர்
வெகுண்டெழுந்த டி எம் நாயரும்
பி தியாகராயரும்
தென்னிந்திய நல உரிமைச்சங்கம்
என்னும் நீதிக்கட்சியை
துவங்கினர் பனகல் அரசர்
நடேசனார்  ஆகியோர்
ஒத்துழைத்தனர்

1925ல் குடியரசைத் தொடக்கினார்
ஈவெரா உள்ளதை
உள்ளபடியே சொல்லும்
இதழ்கள் இல்லாததால்
எல்லோரும் சமநிலைக்கு
வர வேண்டுமானால்
தாழ்த்தப்பட்டவர்கள்  சமநிலைக்கு
வர வேண்டுமானால்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
வேண்டும் என்றார் ஈவெரா


பார்ப்பனர்களிடம் அரசியலில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்ற பிட்டி தியாகராயரின் சொற்கள்
ஈவெரா வுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்தியது



சுயமரியாதை  இயக்கக்
கருத்துக்களை பரப்பினார்
பார்ப்பனர் அல்லாதார்
நன்மை பெறவேண்டும் என்றார்
நீதிக்கட்சிக் கூட்டங்களில்
பேசினார் வெறும்
சுயராச்சியத்தால்  பலனில்லை
என்று அறிவித்தார்


பெங்களூரில் காந்தியாரை
சந்திக்கிறார் மூன்று
கோரிக்கைகளை வைக்கிறார்
காங்கிரசை ஒழிக்க வேண்டும்
சாதியை ஒழிக்க வேண்டும்
இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்
காந்தியார் உட்ன்படவில்லை

1927 இந்தியர்களுக்கு வேறு
என்னென்ன சலுகைகள்
வழங்கலாம்  என்று
அறிவதற்காக சைமன் கமிசன்
வருகிறது  ஈவெரா ஒத்துழைக்கிறார்
1927முத்தையா முதலியார்
வகுப்புவாரி சட்டத்தை
நடைமுறைப் படுத்துகிறார்
மகிழ்ச்சி அடைந்த  ஈவெரா
குழந்தைகளுக்கு முத்தையா
என்று பெயர்
வைக்கச்சொல்கிறார் 
1928ரயில்வே தொழிலாளர்க்காகப்
போராடி 1 மாத சிறை செல்கிறார்

1929 பிப்ரவரி மாதம்
சென்னை மாகான முதல் மாநாடு
செங்கல் பட்டில்
நடந்தது அரிய
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
பு அ சௌந்தரபபானண்டியன் தலைவர்
பத்தாயிரக் கணக்கில்
இளைஞரகள் குழுமியிருந்தனர் 



சாதிப்பட்டங்களை விட்டுவிடுதல்
மதக்குறிகளை அணியாதிருத்தல்
புரோகிதத்தை அறவே ஒழித்தல்
கொவில்களில்  இடைதரகர்
இல்லாமலும் பூசைக்குக் காசு
செலவு செய்யாமலும்  இருத்தல் 
எல்லோருக்கும் கட்டாயத்
துவக்கக் கல்வி தருதல்
தீண்டாமை ஒழிந்திட
எல்லாப் பொது இடங்களிலும்
தாழ்த்தப்பட்டவர் நுழைந்திட சட்டப்படி
அனுமதி தருதல்
அரசு அலுவல்களில் முதலிடம்
தாழ்த்தப்பட்டோருக்கே  அளித்தல்
புறம்போக்கு நிலங்களை
தாழ்த்ப்பட்டோருக்கும் நிலமற்ற
 ஏழை விவசாயிகளுக்கும் வழங்குதல்

பெண்களுக்கு  சொத்துரிமை
வாரிசு உரிமை ,எந்தத்தொழிலையும்
ஏற்று நடத்திட சமஉரிமை
16 வயதுக்குப்பின் திருமணம் செய்ய ,
,விதவை மணவிலக்குப்பெற  ,
விதவை மறுமணம் புரிய உரிமை
துவக்கக்கல்வி ஆசிரியைகளாக
பெண்களையே  நியமித்தல்
ஏழை மாணவர்களுக்கு இலவச
உணவு,உடை,புத்தகம் தருதல்
ரயில்வே உணவு விடுதிகளில்
சாதிப்பாகுபாடு ஒழித்தல்
மத விச்யங்களில் அரசு
நடுநிலை வகிப்பததால்
பெரும்பான்மை மக்களின் உரிமை
பாதிக்கப்படுவதால் சட்டப்படி
அவர்களுக்குப் பாதுகாப்பு தருதல்

சுயமரியாதை  இயக்கம் கண்ட
ஈவெரா  அவர்களைப் பாரட்டுவதோடு
அவருடைய தலைமையில்
பரிபூரண   நம்பிக்கை தெரிவிப்பது
என்கிற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது






































Monday, December 21, 2015

தொகுதி -10

விரைவு  உணவுச் சாவடி 

91. CUSTOMER                     வாடிக்கையாளர்

92. SERVER                            பரிமாறுபவர்

93. COOK                                 சமையல்காரர்

94. OVEN                                  அடுப்பு 

95. GRILL                                  பொறியடுப்பு

96.CUP                                       கோப்பை  

97. SPOON                                 கரண்டி

98. COOL DRINKS                     குயளிர் பானங்கள்

99.SAUCE                                   கூட்டுச் சாறு

100. DUST BIN                           குப்பைத்  தொட்டி