Tuesday, June 13, 2017

அடையாளம்

ஏற்கனவே வலைப்பூவில் இருந்த கவிதை தான்
காணாமல் போய்விட்டது அதனால் மறுபடியும் போட்டிருக்கிறேன்

*அப்பா வைத்த பெயர்
முதல்   அடையாளம் -நாளும்
அடுத்தவரை நேசிப்பது
அன்பின்  அடையாளம்
*மழலைச்செல்வமோ
காதலின் அடையாளம் -காட்டும்
மனித நேயமே
மானுட அடையாளம் 
*கற்றவழி  நிற்பது
கல்விக்கு அடையாளம் -வாழ்வில்
குறள்வழி நடப்பது
சான்றோர்க்கு அடையாளம்
*மானமும் அறிவும்
மனிதருக்கு அடையாளம் -போற்றும்
பெரியார் எனும் பெயர்
தொண்டின் அடையாளம்
  *சங்க இலக்கியம்
தமிழுக்கு அடையாளம் -கனல்மிகு
புரட்சிக் கவிஞரே
நல்ல கவிதைக்குஅடையாளம்
*பொங்கல் திருநாள்
தமிழர்க்கு அடையாளம் -என்பதால்
புத்தாண்டு தை முதலானது
வரலாற்று அடையாளம்
*கலைஞருக்குப் பாராட்டு
நம் நன்றியின் அடையாளம் -செட்டிநாட்டில்
காரைக்குடி இராம சுப்பையா

பகுத்திறிவின் அடையாளம்