Saturday, December 31, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - மூவலூர்

ராமாமிர்தம் அம்மையார் திருவாரூர் மாவட்டத்தில்
மூவலூர் எனும் ஊரில் கிருட்டிணன் -சின்னம்மாள்
இணையருக்கு மகளாகப் பிறக்கிறார் . பெற்றோர் 10ரூ  பணத்துக்கு
விற்றுவிடுகின்றனர் பொட்டுக் கட்டிக் கொள்வதற்காக
அந்தக் காலத்தில்  ஒரு சமூகத்தில் பருவம் எய்தாத பெண்களை
பொட்டுக்கட்டி தேவதாசியாக-  இருப்பதற்கு விற்று விடுவார்கள்
 அந்த சமூகத்தில் பிறந்தவர்தான் ராமாமிர்தம்
காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர்
அதை தெய்வத் தொண்டு என்று சொன்னார்     
தேவதாசிப் பெண்களை பாலியல் வன்முறைக்கு
ஆளாக்கினார்கள் கடவுள் பெயரால்
1917  தேவதாசி முறையை ஒழிக்கப் போராட்டம்
நடத்தினார் சங்கம் அமைத்தார் இசை வேளாளர்
சங்கம் என்றழைக்கப் பட்டது  அது
பொட்டுத் தாலிகளை அறுத்துவிட்டு அந்தப்
பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தார்
' தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் ' என்ற
கதை எழுதினார் சிவகிரி ஜமீன் வெள்ளைத் துரைச்சி
நாச்சியார் பொருள் உதவி கொண்டு ராமாமிர்தம்


அதைத் தாண்டி மற்ற சமமூகங்களில் உள்ள
வர்களுக்கு சாதி மறுப்புத் திருமணங்களும்
செய்து வைத்தார் குத்தூசி குருசாமி -குஞ்சிதம்
அப்படித் திருமணம் செய்து கொண்டவர்கள்
சாதி மறுப்புத்  திருமணங்கள்  மட்டுமல்ல
விதவைத் திருமணங்களும் நடத்தினார்
அவர் ஒரு அரசியல் வாதியும் கூட
காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தார்
வகுப்புவாரி ஒதுக்கீடு கேட்டு  காங்கிரஸ்
இயக்கத்தை  விட்டு பெரியார் வெளியேறும்போது
அவருடன் ராமாமிர்தமும் வெளியேறினார் 
' சுயமரியாதை இயக்கப் போராட்டங்களில்
கலந்து கொண்டார் ஆர்வத்தோடு
1938ல் பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு
போராட்டத்தில் கலந்து கொண்டார்
மருத்துவர் தர்மாம்பாள் தலைமையில்
திருச்சி யிலிருந்து சென்னை வந்தார்
வழியெல்லாம் இந்தி எதிர்ப்பு முழக்கத்தோடு
தேவதாசி ஒழிப்பு வேண்டுமென்று
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
வேண்டுகோள் வைத்தார் சத்திய மூர்த்தி
அய்யர் அது தெய்வத் தொண்டு என்று சொன்னார்
முத்து லட்சுமி அந்த தெய்வத் தொண்டை
உங்கள் குடும்பப் பெண்கள் செய்யட்டும்
என்று விடை கொடுத்தார் சினத்தோடு 
தேவதாசி  முறை  ஒழிந்தது 1947ல்
1962 ஆம் ஆண்டு மறைந்தது மூவலூர் நிலவு
1979ல் கலைஞர் உருவாக்கினார் மூவலூர்
ராமாமிர்தம் திருமணத் திட்டம் அவர்

நினைவைப்  போற்றும்  வகையில்   

Thursday, December 15, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - மொழி ஞாயிறு

                   
 பாவாணரின் இயற்பெயர் தேவநேயன்  என்பதாகும் 
அவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 
ஞானமுத்தன் -பரிபூரணம் இணையருக்கு பத்தாவது
கடைக்குட்டி நான்காவது மகன்  ஆவார்
ஐந்தாம் அகவையில் தந்தையை இழக்கிறார்
அடுத்து தாயையும் இழக்கிறார்  அவர்
மூத்த உடன்பிறந்தவர்களின் அரவணைப்பில்
வளர்க்கிறார் பள்ளி படிப்பை  சோழபுரத்தில் 
மற்றும்  ஆம்பூரில் முடிக்கிறார்  பதினோராம்
வகுப்போ பாளையங்கோட்டையில் படிக்கிறார்
பதினேழாம் வயதில் ஆறாம் வகுப்பு ஆசிரியராக
வாழ்க்கையை தொடங்குகிறார்  கவி புனையும்
ஆற்றலும் இருக்கிறது தேவநேயருக்கு பாளையங்கோட்டை
தமிழாசிரியர் மாசிலாமணியார் தேவநேயக் கவிவாணன்
என்றழைக்கிறார் கவிவாணன் என்பதே தனித்தமிழில்
பாவாணன் என்றாகியது பிற்காலத்தில்
மதுரை தமிழ் சங்கப் பண்டிதத் தேர்வு எழுதி
வெற்றி பெறும் ஒரே மாணவர் பாவாணர்
சென்னை திருவல்லிக்கேணியில் கெல்லட்
உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப்
பணி .  பின்னர் சென்னை கிறித்தவக் கல்லூரி
உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி
1926ல் திருநெல்வேலி  தென்னிந்திய   தமிழ்ச் சங்கம்
நடத்திய புலவர்தேர்வில் வெற்றிபெறும்
ஒரே மாணவர் பாவாணர் தான்
1928ல் மன்னார்குடியில் பின்லே கல்லூரி
உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர்
மனைவி எஸ்தர் மறைகிறார்  கைக்  குழந்தையை
விட்டு  விட்டு .  1930ல் அக்கை  மகள் நேசமணி
அம்மையாரை திருமணம் செய்து கொள்கிறார்
19031ல் செந்தமிழ்ச் செல்வியில் பாவாணரின் ,
மொழியாராய்ச்சி( comparative   philology ) என்னும்கட்டுரை
வெளிவருகிறது  முதன் முதலாக
ஆண் மகவு பிறக்கிறது நச்சினார்க்கினிய
நம்பி என்று பெயர் சூட்டுகிறார்
1934ல் திருச்சி பிஷப் ஈபர் கல்லூரி உயர்
நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக
பொறுப்பை ஏற்றார் . 1936ல் 'கட்டுரைவரைவியல் '
என்னும் நூல்வெளிவருகிறது  சொந்த வெளியீடாய்
1937 ஆம்  ஆண்டு ' கட்டாய இந்திக் கல்விக்
கண்டனம்-செந்தமிழ்க் காஞ்சி ' என்னும்
இசைப்பானூல் வெளிவருகிறது  தேசாபிமானத்
தமிழ்த் தொண்டன் என்கிற புனை பெயரில்
1939 ல் பைந்தமிழ் வளர்த்த பாண்டியன்  என்று
பெயர் சூட்டப்பெற்ற குழந்தை மறைகிறது
 1940 ஆம் ஆண்டு 'ஒப்பியன் மொழிநூல் '
சொந்த  வெளியீடாக வெளி வருகிறது அதில்
1. பார்ப்பனரைத் தமிழர் வென்ற வகை
2. பார்ப்பனர் தமிழரை வென்ற வகை
3 பார்ப்பனர் மதி நுட்பம் உடையவர்
4ஆரியத்தால் தமிழ் கெட்ட மை.
5 ஆரியர் தொல்லகம்
6.தமிழ் நாட்டில்  பார்ப்பனர்ஐ வகை நிலை
7.கடைக் கழகக் காலப் பார்ப்பனர்நிலை
8.பார்ப்பார்,அய்யர் ,அந்தணர் என்னும் பெயர்கள்  
9 தமிழகத்தில்  இருசார் பார்ப்பனர்
10..பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்
11  இந்திய நாகரிகம் தமிழ் நாகரிகமே
12. பார்ப்பனர் மதி நுட்பம் உடையவர்எனல்
13. ஆரியத்தால் தமிழர்  கெட்டமை
14வடசொற் கலப்பினால் தமிழுக்கு  நேர்ந்த தீங்குகள்
15.ஆரியத்தால் தமிழர் கெட்டமை
16 .ஆரிய தமிழப்போர் தொன்று தொட்டாதல்
17 பார்ப்பனர்  தமிழ்நூற்கன்றி தமிழ் மொழிக்கு அதிகாரிகளாகாமை
18.பார்ப்பனர்களின் ' ' கர ஒலிப்புத் தவறு 
என்று பட்டியலிடுகிறார்  பாவாணர்
இந்நூலின்  பயன் கருதி தந்தை பெரியார்
போற்றினார் பாவாணரை மகிழ்ந்து
சேலம் தமிழ்ப் பேரவை பெரியார் கையால்
பாவாணருக்கு 'திராவிடமொழிநூல் ஞாயிறு '
என்னும் பட்டடத்தை வழங்கியது
"தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்த பின்னும்
துளங்காது துலங்கு பகுத்தறிவுத் தொண்டால்
நன்னூற்றை தாண்டவரும் நோற்றலாற்றின்
நானிலத்துப் பெரியாரை வாழ்த்துவமே "
என்கிற வெண்பாவை பாவாணர் இயற்றுகிறார்
பெரியாரின் 94 வது வயதில் வாழ்த்தி
மொழி ஆய்வில் பாவாணர் போல் வேறு யார்
உளார் என்று பாராட்டுகிறார் பாவேந்தர்
"தமிழில்  தமிழ் சார்ந்த கன்னடம் தெலுங்கில்
அமை கேரளம் துளுவில் ஆர்வம் கமழ்கின்ற
ஆங்கிலத்தில் எனை அயல் மொழியில் வல்லுநர் எப்
பாங்கில் உளார் பாவாணர் போல் "
பாவாணர் பெரியார் நடத்தும் சாதி ஒழிப்பு
மாநாடுகளில் கலந்துகொள்கிறார் களிப்போடு
"பஃருளி நாட்டில் பிறந்தவனாம்
பகுத்தறிவுப் பண்பில் சிறந்தவனாம் "
என்று பாடுகிறார் பாவாணர் பகுத்தறிவோடு
1943 சென்னை மண்ணடி முத்தியாலுப்பேட்டை
உயர்நிலைப் பள்ளியில் தமிழசசிரியராகப் பொறுப்பேற்றார்
சென்னையில்  சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
நடதத்திய முதலாம் தமிழுணர்ச்சி மாநாட்டில்
உரையாற்றுகிறார்  பாவாணர் உவகையோடு
'சுட்டுவிளக்கம்  அல்லது வேர்ச்சொல் ஐந்து '
என்கிற நூல் வெளியாகிறது
1944சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத்
தமிழாசிரியராக அமர்த்தப் பெறுகிறார்'
திராவிடத் தாய் 'வெளியாகிறது சொந்த வெளியீடாக
1949  சேலம் கல்லூரியில் துரை மாணிக்கம்
(தனித்தமிழ் இயக்க முன்னோடி பாவலரேறு
பெருஞ்சித்திரனார் ) பயின்றார் பாவாணரிடம்
'சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் ' நூல் வெளியாகிறது
தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார்
பாவாணர் சொல்லாராய்ச்சித் துறையில்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்  என்று
சான்று வழங்குகிறார் மகிழ்ந்து
1952 தமிழில் முதுகலை (எம் ஏ ) பட்டம்  பெறுகிறார்
'பழந்தமிழாட்சி ' நூல் வெளியாகிறது
1953 முதல் தாய் மொழி அல்லது தமிழாக்க விளக்கம் '
வெளியாகிறது தமிழர்களுக்காக
1954  'தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் ' வெளியாகிறது
A critical survey of Madras University Lexicon
என்கிற ஆங்கில நூலை வெளியிட்டார் பாவாணர்
பின்னர் 'சென்னைப் பல்கலைக் கழக அகராதியின்
சீர்கேடுகள் ' என்று தமிழிலும் வெளியிட்டார்
1956  அண்ணாமலைப் பல்கலையில் 'திராவிட
மொழியாராய்ச்சித் துறை  வாசகராக பணி
ஏற்கிறார் பாவாணர் .  அங்கே துறையின்
தலைவராக வங்காளப் பார்ப்பனர் சுனித் குமார்
சட்டர்சீ இருக்கிறார் . இருவருக்கும் கருத்து மோதல்
ஏற்படுகிறது . பணி விலகுகிறார் பாவாணர்
1959 பாவலரேறு பெருஞ்சித்திரனார் தனித்தமிழ்
தொண்டிற்காக இதழொன்று தொடங்குகிறார்
அதற்குத்' தென்மொழி' என்று பெயர் சூட்டுகிறார்
பாவாணர் தமிழ் வளர்க்க வேண்டி 
1960 ஆட்சித் துறைக் கலைச்சொல்லாக்கம்
குறித்துப் பாராட்டி தமிழ் நாடு அரசு செப்புப்
பட்டயம் வழங்கி  சிறப்பிக்கிறது
பாவாணரின் துணைவி நேசமணி அம்மையார்
மறைகிறார்கள்  தனிமையில் விட்டு விட்டு
பாவாணர் வருவாய்இன்றி இருப்பதால்
பாவலரேறு அவர்கள் தென்மொழியில்
 'பாவாணர் பொருட்கொடைத் திட்டம் '
அறிவித்து தமிழன்பர்கள் உதவிட
வழி வகுத்தார்கள் பாராட்டும்படி
1964 மதுரைத் தமிழ் காப்புக் கழகம்
'தமிழ்ப் பெருங்காவலர் ' என்னும்
பட்டம் வழங்கியது பாவாணருக்கு
1966     THE  PRIMARY CLASSICAL LANGUAGE OF THE WORLD                                                         
என்னும் ஆங்கில நூல்
முக்கூடல்  சொக்கலால் ராம் (சேட்டு) அவர்களின்
பொருட் கொடையால் வெளியிடப்பட்டது  இது
தமிழ் செம்மொழி ஆவதற்குக் காரணியமாக
இருந்தது என்று கலைஞர் குறிப்பிடுகிறார்
செம்மொழி பற்றிய அவருடைய நூலில்
' பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்'
'இசைத்தமிழ்க் கலம்பகம் 'என்ற நூல்கள்
சொந்த வெளியீடாக வெளி வந்தன
1967 மதுரைத்தமிழ் எழுத்தாளர் மன்றம்
பாவாணரின் மணிவிழாவைக் கொண்டாடியது
'மொழிநூல் மூதறிஞர் ' என்னும் பட்டமும்
ரூ 7352 பொற்கிழியும் வழங்கியது
THE LANGUAGE PROBLEMS OF TAMILNAD AND ITS LOGICAL SOLUTIONS
என்னும் நூல் வெளிவந்தது ; சொந்த வெளியீடு
துறையூரில் பாவாணர் நூல் வெளியீட்டுக்குழு
ரூ 4001 பொற்கிழி வழங்கியது  ;அதில்
'தமிழ் வரலாறு ',  'வடமொழி வரலாறு '
ஆகிய  நூல்கள்  வெளியிடப்பட்டன
1968 திருச்சியில் உலகத் தமிழ்க் கழகம் தொடங்கப்
பெற்றது பாவாணர் அதன் தலைவரானார்
' இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் '
மற்றும் 'வண்ணனை மொழிநூலார் வழுவியல் '



ஆகிய சொந்த வெளியீடுகள் வெளிவந்தன
சென்னையில் பெரியார் தென்மொழிக் கல்லூரி
தொடங்கி அங்கே தமிழையும் பதினெண் திராவிட
மொழிகளையும் தமிழ் வாயிலாகவும் ஆங்கில
தொடங்கி அங்கே தமிழையும் பதினெண் திராவிட
மொழிகளையும் தமிழ் வாயிலாகவும்
ஆங்கில வாயிலாகவும் சிறப்பாகக்
கற்பிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் பாவாணர்
பெரியார் அதனை நிறைவேற்றவில்லை
நீலமலை பெரும்பகல்லாவில் தங்கி
ஒரு மாதம் மலை வாணர் வழக்காற்றுச்சொற்களை
திரட்டினார் பாவாணர் ஆய்வு நோக்குடன்
உ .த .க முதல் மாநாடு பறம்புக் குடியில்
நடந்தது அதில் பாவாணரின்' திருக்குறள்
தமிழ் மரபுரை ' வெளியிடப் பட்டது
சொந்த வெளியீடு தான் அதுவும்
'இசையரங்கு இன்னிசைக்கோவை'
'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா'
ஆகிய நூல்கள் முகவை மாவட்ட
உ .த .க வெளியீடுகள் ஆம்
1970  கருநாடகத் தமிழர்களுக்குப் பாதுகாப்புக்
கோரி அம் மாநில முதல்வருக்கு கடிதம்எழுதினார்
நெய்வேலியில்' பாவாணர் தமிழ்க் குடும்பம் '
என்ற அமைப்பு தா .அன்புவாணன் -வெற்றிச்செல்வி
இணையரால் ஏற்படுத்தப்பட்டது
உ .த க  மாதிகையாக 'முதன் மொழி'
பாவாணர் சிறப்பாசிரியர் ஆனார்
1971  பறம்பு மலையில் குன்றக்குடிஅடிகளார் தலைமையில்
நடந்த பாரிவிழாவில் பாவாணருக்கு' செந்தமிழ் ஞாயிறு '
பட்டம் வழங்கி முதல்வர் கலைஞர் சிறப்பித்தார்
தென்மொழியின் 'செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
அகரமுதலித் திட்டம் 'வகுக்கப்பெற்றது 
200  தமிழன்பர் கள் ஒவ்வொருவரும் மதம் ரூ 10
அனுப்புவது   என்றும்  அதில் பாதி உருவாக்கச் செலவுக்கும்
மீதி வெளீயீட்டுச் செலவுக்கும் ஒதுக்கப் பட்டது
பாவாணருக்கு தனித்தமிழ் அன்பர்கள் பணம்
அனுப்பி வந்தனர் நிறைவேறும் நிலையில்
இந்த நிலையில் அன்றைய முதல்வர் கலைஞர்
திட்டத்தினை அரசு சார்பில் ஏற்றுக் கொண்டு
பாவாணரை அதன் இயக்குனர் ஆக்கினார்பாவாணர் 10 நாட்கள் வால்பாறையில் தங்கி மலை வாணர் வழக்காற்று சொற்களை
திரட்டினார் .  பாவலரேறு உடன் சென்றிருந்தார்
1972 உ த க  தஞ்சை மாநாடு 'தமிழன் பிறந்தகத்
தீர்மானிப்பு  அறைகூவல் 'கருத்தரங்கமாக
இருந்தது பாவாணர் உரையாற்றினார்
'தமிழர்  மதம்', 'தமிழர் வரலாறு' நூல்கள்
சொந்த வெளியீடு அவை
1973' வேர்ச்சொல் கட்டுரைகள் 'நூல் வெளிவந்தது
1978 'மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை '
நேசமணி பதிப்பக வெளியீடு அந்த ஆய்வு நூல்
1979 'செந்தமிழ்ச் செல்வர் ' என்னும் விருது
பாவாணருக்கு வழங்கினார் அன்றைய முதல்வர்
ம கோ இரா (எம் ஜி ஆர் ) அவர்கள்
'தமிழ் இலக்கிய வரலாறு 'நேசமணி பதிப்பக
வெளியீடாக வருகிறது தமிழர்களுக்காக
1980  LEMURIAN  L ANGUAGE AND ITS RAMIFICATIONS-AN EPITOME
என்னும் ஆங்கில நூல் 400 பக்க அளவில்
திட்டமிடப் பட்டிருந்தது . அதன் 52 பக்க
சுருக்க வடிவம் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு  
அயல் நாட்டுப் பேராளர்க்கெனத் தட்டச்சில்
நெய்வேலி உ .த க உருவாக்கம் செய்தது
1981  மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ்
மாநாட்டில் பங்கேற்று 'மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும் '
என்கிற தலைப்பில் ஒன்றே கால் மணி நேரம்
சொற்பொழிவாற்றினார் பாவாணர்
15.1.1981 பாவாணர்  மறைந்தார் தமிழர்களை
விட்டு  விட்டு மீளாத  துக்கத்தில்
பாவாணரின் கோட்பாடுகள்
1.மாந்தன் தோன்றிய  இடம் ,அழிந்துபோன  குமரிக் கண்டமே
2.மாந்தன் பேசிய முதன் தமிழே ;அதுவே ஞால முதல் மொழி
3.தமிழ் திராவிடத்துக்குத் தாயும் ,ஆரியத்துக்கு மூலமும் ஆகும்
4.தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே
        என் வாழ்க்கைக் குறிக்கோள்
5 இற்றைத் தமிழ் இலக்கியத்திற்கு அணியாய் இருப்பதும்
    தமிழன் தான் இழந்த உரிமைகளைப் பெறுவதற்கு
   ஆவணம் போல் உதவுவதும் தொல்காப்பியம் ஒன்றே
இந்தக் குறிக்கோளை / கோட்பாடுகளை  அடைவதற்கு
35 ஆராய்ச்சி நூல்கள் எழுதி இருக்கிறார்பாவாணர்
அதனால் அவரை மொழி ஞாயிறு என்று கொண்டாடுகிறது

தமிழ் உலகம் 

Thursday, December 8, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - பெருந்தலைவர்

15. 7.1903 அன்று விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி இணையருக்கு
மகனாகப் பிறந்தார் காமாட்சி  அந்தப் பெயர் பெண் பெயர்
போல் இருப்பதால் காமராசன் என்று மாற்றிக் கொண்டார்
தந்தை 6 வயது இருக்கும்போது இறந்து விடுகிறார்
அம்மா போராடி வளர்க்கிறார் காமராசனை  
பள்ளிப்படிப்பை முடித்து உயர்நிலைப் பள்ளியில்
சேர்கிறார் படிப்பைத் தொடர இயலவில்லை
மாமாவின் துணிக்கடையில் வேலை பார்க்கிறார்
திரு வி க , வரதராஜுலு நாயுடு போன்றோர் பேச்சைக்
கேட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்
சத்திய மூர்த்தியைத் தன் குரு என்கிறார்
உப்பு சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபடுகிறார்
அலிப்பூர்  சிறை உட்பட பல சிறைகளில் இருக்கிறார்
9 ஆண்டுகள் சிறைவாசம் இருக்கிறார்
1953ல்  ராஜாஜி குலக்கல்வித் திட்டம் கொண்டு வருகிறார்
மக்கள் எதிர்க்கிறார்கள்  பெரியார் எதிர்க்கிறார் காங்கிரஸ்
கட்சியிலும் எதிர்ப்பு வருகிறது ராஜாஜி பதவி விலகுகிறார்
முதல்வர் பதவிக்கு சி சுப்ரமணியம் போட்டியிடுகிறார்
அவரை எதிர்த்து போட்டியிட்ட காமராசர்  பெரும்பான்மை
சட்ட மன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று
தமிழக முதல்வர் ஆகிறார் தமிழர்களைக் காப்பாற்ற

தொழில் வளம் பெருக்க திருச்சியில் பி. ஹச்.. எல்
கொண்டுவந்து சாதனை படைத்தார்.      தமிழ் நாட்டில்
உள்ள அணைகள் அவர் பெயர்  சொல்லும்
மேட்டூர் கால்வாய்திட்டம் , பாவனி அணை , அமராவதி அணை ,
சாத்தனூர்  அணை  ,வைகை  அணை எல்லாம் கட்டினார்
மூன்றுமுறை முதல்வர் என்றபோதும்
அவர் வாடகை வீட்டில் குடியிருந்தார்
அவருடைய சொத்து புத்தகங்கள், 2 வேட்டி
2 சட்டை ரூ 150 பணம் அவ்வளவுதான்  
இப்படிப்பட்ட பெருந்தலைவரை தமிழ்நாட்டில் ,
இந்தியாவில்  ஏன் உலகத்திலேயே பார்க்க  முடியாது
திருமணம் செய்து கொள்ளவில்லை
நாட்டையே குடும்பமாக நினைத்தார்
காமராசர் எனும் கல்வி வள்ளல்

பச்சைத்  தமிழர் காமராசர் ஆட்சியைக் காப்பாற்ற
வேண்டும் உள்ளாட்சித் தேர்தலிலும்  அவர் கட்சியையே
ஆதரிக்க வேண்டும் என்கிறார் பெரியார் ஆர்வத்தோடு
ஆனாலும் சென்னை மாநகராட்சியை  திமுக  கைப்பற்றுகிறது
தமிழகத்தில் தமிழும் மத்தியில் ஆங்கிலமும்
தொடரும் என்று தான் கூறி விட்டதாகவும்
அதை தலைமை அமைச்சர் நேரு ஏற்றுக்  கொண்டு
விட்டதாகவும் 1960 ஆகஸ்ட் காமராசர் கூறுகிறார் 
திருச்சி நகராட்சியில் காமராசர் படத்தைத் திறந்து
வைத்து பெரியார் சொல்கிறார் அவர் செயற்கரிய செய்யும்
கர்மவீரர் என்றும் 26000 பள்ளிகள் 304 உயர்நிலைப் பள்ளிகள்
57 கல்லூரிகளை நிறுவியவர் என்றும் பாராட்டுகிறார்
தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராசர் ஆட்சி
மேலும் 10  ஆண்டுகளுக்கு  தொடர வேண்டும்  என்றார்
பெரியார்  அக்கறையோடு நினைத்து
19.2.1961 அன்று காமராசருக்கு  சட்டமன்ற
வளாகத்தில் சிலை எடுக்க வேண்டும் என்றார்  பெரியார்


காமராசரை ஆதரிப்பது ஏன் என்றொரு புத்தகம்
எழுதி வெளியிட்டார்  பெரியார்
இன்றைய காமராசர் ஆட்சி பச்சை நீதியை
அடிப்படையாக வைத்து வருணாசிரமக்
கோட்டையை கல்வித் துறையில் தகர்த்து
வருகிறது  என்றார்  பெரியார்

முதியோர் உதவித் தொகை பெற 70 வயது
என்று இருந்து வந்தது அதை 60 வயது என்று
விரிவாக்கினார் பெருந்தலைவர்  நல்  மனதோடு
காமராசர் ஆட்சி சாதி ஒழிப்புக்கு சாதகமாயிருக்கிறது
எனவே இன்னும் 5 ஆண்டுகளுக்கு வாக்களியுங்கள்
காமராசரின் ஆட்சி தமிழர்களின் பொற்காலம்
படிப்போர் எண்ணிக்கை பெருகியிருக்கிறது
உயர் நிலைப்   பள்ளி   வரையில்
இலவசக் கல்வி  மதிய உணவு
15% இருந்தது  இப்போது 37%ஆகியிருக்கிறது
தொடக்க கல்வி கட்டாயமாகி
உள்ளது கல்விக்கான நிதி 1946-47ல் 6.59 கோடி
1963-64ல்28.70 கோடியாய் கூடியுள்ளது
என்று புள்ளிவிவரம் வெளியானது விடுதலையில்
இந்தியைத் தடுக்க முடியாவிட்டால்
பதவி துறப்பேன் என்று வீர முழக்கமிட்டார்
முதல்வர் காமராசர் .7.7.1963 அன்று பெரியார்
போடி தொகுதியில் பரப்புரை செய்தார்..       காமராசர்
ஆட்சி தொடர்ந்தால் தமிழர்கள் நூற்றுக்கு நூறு
பேரும் படித்து விடலாம் என்றார் உறுதியோடு
காமராசர் திட்டம் கொண்டுவரப் பட்டது
அதன்படி பதவியில் இருக்கும் மூத்த தலைவர்கள்
பதவி விலகி கட்சிப்பணியில் ஈடுபடுவது வேண்டும்   
காமராசர் பதவி விலக நினைத்தார் அப்போது
பெரியார் ஒரு தந்தி அனுப்பினார்
" தாங்களாகவோ பிறர் அறிவித்த கருத்துக்கு  இசையவோ
முதலமைச்சர் பொறுப்பு நீங்குதல் தமிழர்கட்கும்
தமிழ் நாட்டுக்கும் தங்களுக்கும் தற்கொலைக்கொப்பானதாகும் "
காமராசர் பெரியாரின் அறிவுரையைக் கேட்கவில்லை
பதவி துறந்தார் பிறர் பின்னிய வலையில்
காமராசர் அகில இந்தியக் காங்கிரசின் தலைவர்
ஆனார் . தலைமை அமைச்சர்களை உருவாக்குபவர்
(கிங் மேக்கர் ) என்றழைக்கப்பட்டார்  9.10.63 அன்று
தலைமை அமைச்சர் நேரு பெருந்தலைவர் சிலையை
திறந்து வைத்தார் . காமராசர் பேசும்போது
கிருபானந்த வாரியாரின் காலட்சேபம் நாடெங்கும்
நடைபெற வேண்டும் என்கிறார் பெரியார்
அது தன் கொள்கைக்கு எதிராக இருப்பதால்
அதை கண்டிக்கிறார் சினத்தோடு
காமராசர் தலைமை அமைச்சர்  பதவிக்கு இந்திரா காந்தியை
ஆதரிக்கிறார் பெரியார் யாராக இருந்தாலும் பரவாயில்லை
என்று சொல்கிறார்  பெரியாரால்  பச்சைத் தமிழர் என்று பாரட்டப் பட்ட
காமராசர் அகில இந்திய அரசியலில் இணையற்ற
செல்வாக்குப் பெற்றவராக விளங்கிடுகிறார் நேரு காலத்தில்
கிடைத்த காங்கிரஸ் தலைமைப் பதவி சாஸ்திரி காலத்திலும்  
இந்திரா காலத்திலும் நீடித்தது தலைமை அமைச்சர்களையே
உருவாக்கும் வல்லமை படைத்தவராக பார்ப்பனரல்லாத
தமிழர் உயர்ந்திருப்பதை பார்ப்பனர்கள் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை  என்பது உண்மை
பசு வதை தடைச்சட்டம் வேண்டும் என்று
இந்துத்துவா அமைப்பினர் சொன்னபோது அப்படிச்
சட்டம் தேவையில்லை என்றார் பெருந்தலைவர்
 7.11.66      இந்துத்துவா அமைப்பினர் தூண்டிவிட்டுக் காலிகள்
பெருந்தலைவர் தில்லி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது
நாற்புறமும் தாக்கி நெருப்பும் வைத்து விட்டனர்

கொல்லைப்புற வழியாக தப்பிக்க திமுக  தோழர்
கோதண்டபாணி உதவினார் நல் மனதோடு  
திருச்சியில் 17.9. 1967 அன்று பெரியாரின் முழு
உருவச்சிலையை (நின்று கொண்டிருக்கும் தோற்றம் )
பெருந்தலைவர் திறந்து வைத்தார்
பெருந்தலைவர் தேர்தலில் நாகர்கோவிலில் வென்றதும்
பெரியார் தலையங்கம் தீட்டினார்  பாராட்டி
வெள்ளைக்காரன் போன பிறகு காங்கிரஸ் பார்ப்பனர்கள்
கைக்கு வந்தது ; அவர்கள் எவ்வளவு வேண்டியும் நெருங்காமலிருந்து
பார்ப்பனரை பதவியிலிருந்து  வெளியேற்றினேன் பிறகு பதவிக்கு
வந்த பார்ப்பனரல்லாத தமிழர் காமராசர் அவர் விரும்பியதற்கு
இணங்க அவரை ஆதரித்தேன்  என்கிறார் தந்தை பெரியார் 
அப்படிப்பட்ட பச்சைத்தமிழர்
தலைமை அமைச்சர் இந்திராகாந்தி நெருக்கடி நிலை
கொண்டுவந்ததால் மனம் நொந்தார்  உடலும்
நலிந்தது 1975 ஆம் ஆண்டு காந்தி  பிறந்த  நாளில்
அக்டோபர் 2ல்  மறைந்தார் மக்களை விட்டு விட்டு
கலைஞர் அமைத்தார் அவருக்கு நினைவகம்
காந்தி மண்டபம் அருகில்    கடற்கரைச் சாலைக்கும்

காமராசர் பெயர் சூட்டப்பட்டது அன்போடு