Tuesday, February 9, 2016

அயல்நாடு

1929ல்நாகம்மையாரோடும்
போட்மெயில் பொன்னம்பலனார் உட்பட
தோழர்கள் சிலரோடும்
மலாயா,சிங்கப்பூர் ஆகிய
நாடுகளுக்கு சென்றார் ஈவெரா
சுயமரியாதைப் பிரசாரம் 
செய்தார் பினாங்கு உட்பட
பல இடங்களுக்கும்
மலேயாவில்  சென்றார்
கேட்கும் கேள்விகளுக்கு
விடை கூறி அசத்தினார்
நல்ல வரவேற்புக் கிடைத்தது.

சிங்கப்பூரிலும் அவ்வாறே
வெற்றிகரமான பிரச்சாரம்
அமைந்தது மகிழ்ச்சியோடு
நாடு திரும்பினர்
அவருடைய சுற்றுப்பயணத்தால்
தமிழர்களிடையே  ஒற்றுமை
ஏற்பட்டது அறிவுவெளிச்சம்
பரவியது  இருநாடுகளிலும்

1931 திசம்பரில்  மேலை
நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
மேற்கொள்கிறார் ஈவெரா
ஆப்பிரிக்கா ,கிறீஸ்,
எகிப்து ,துருக்கி,
சோவியத் ருஷியா,
ஜெர்மனி, இங்கிலாந்து,
பிரான்சு ,ஸ்பெயின் ,
போர்சுகல் ,இலங்கை
ஆகிய நாடுகளுக்கு
சுற்றுப்பயணம் செய்கிறார்

ருஷியா வில் 94 நாட்கள்
தங்கி இருக்கிறார் .
எல்லா இடங்களிலும்
தொழிலாளர் நிலை ,
அறிவியல் வளர்ச்சி 
பற்றியெல்லாம் அறிந்து கொண்டார்
சொற்பொழிவும் ஆற்றினார்
திரும்பும்போது இலங்கை வழியாக 
இந்தியா திரும்பினர்
இலங்கையில் சொற்பொழிவாற்றினார்
இலங்கைச் சொற்பொழிவு
3000 படிகள் விற்றன

ருஷியப் பயணத்திற்குப்பின்
பெண்களைக்கூட தோழர்
என்றே அழைத்தார் ஈவெரா
மா சிங்காரவேலரின் கருத்துக்கள்
ஈவெரா வின் பிரச்சாரத்துக்கு
உதவியாக இருந்தன.