Thursday, February 23, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - பாவலரேறு

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின்
இயற்பெயர் துரை மாணிக்கம் பெற்றோர்
துரைசாமி-குஞ்சம்மாள் இணையர்
10.3.1933ல் சேலம் அருகில் சமுத்திரம்
என்னும் சிற்றூரில் பிறந்தார்கள்
பள்ளிக் கல்வி சேலம் -ஆத்தூர்
கல்லூரிப் படிப்போ சேலம் நகராண்மைக் கல்லூரி
அங்கே சில ஆண்டுகள் தேவநேயப் பாவாணர்
அவர்களிடம் படிக்கிறார் சிறப்பாக
தாமரை அம்மையாரை திருமணம் செய்து கொள்கிறார்
நடுவண் அரசின் அஞ்சல் துறையில் பணி செய்கிறார்
முதலில் புதுவையிலும் பிறகு கடலூரிலும்
பணி செய்கிறார் பண்போடு
மறைமலை அடிகள் ,தேவநேயப் பாவாணர்
என்கிற வரிசையில் தனித்தமிழ் இயக்கம்
வளர்க்கிறார் 'தென்மொழி ' இதழ் தொடங்கி
பாவேந்தரின் நட்பும் இருக்கிறது அவருக்கு
தன்னுடைய முதல் கவிதை நூலுக்கு பாவேந்தரின்
அணிந்துரை வாங்குகிறார் அன்போடு

கொய்யாக்கனி , ஐயை ,ஆரியப் பார்ப்பனரின்
அளவிறந்த கொட்டங்கள் ,பாவாணர் ,சாதி ஒழிப்பு 
திருக்குறள் மெய்ப்பொருளுரை உள்ளிட்ட
37 நூல்களை தனித்தமிழில் இயற்றியிருக்கிறார்
எழுதுவது மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட
பாவாணரின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு
சேர்த்தார் பாவலரேறு கடமையாக
பாவாணர் காட்டுப் பாடியில் தங்கி வருவாய்
இன்றி இருந்தபோது பாவாணர் பொருட்கொடைத்திட்டம்
ஏற்படுத்தினார் தென்மொழி அன்பர்கள் மூலம்
பாவாணரின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித்
திட்டம் செயல்படாமல் இருந்தபோது பாவாணருக்கு
காத்திருக்க வயதில்லை என்று கருதி தென்மொழி  செந்தமிழ் சொற்பிறப்பியல்அகரமுதலித் திட்டம் ஏற்படுத்தினார்  இருநூறு தனித்தமிழ் அன்பர்களைச் சேர்த்து
திட்டம் வெற்றி கரமாக ஆன நிலையில் அதைக்
கலைஞர்  எடுத்துக் கொண்டார் அரசு சார்பில்
பெருஞ்சித்திரனார் தமிழறிஞர் மட்டுமல்ல போராளியும்
கூட இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாடு பிரிவினை
போராட்டம் நடத்தியிருக்கிறார் சிறப்பொடு
அவர் மதுரையில் நடத்திய முதல்பிரிவினை
மாநாட்டை தந்தை பெரியார் தொடங்கி வைத்தார்
பாவலரேறு பெரியார் பற்றியும் நூலொன்று
எழுதியிருக்கிறார் .  அதில் அவரைப் பாராட்டுவதைப்
பார்ப்போம் முதலில்ஈராயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் கூறிய சீர்திருத்த இலக்கணத்துக்கு 
இலக்கிய,மாய்இருந்தவர் பெரியார்    என்கிறார் 
பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர் ஒரு
இனத்தின் தலைவர் ஒரு காலத்தின் தலைவர்
அவர் பேசிய பேச்சை சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது
அவர் சுற்றிய தொலைவை அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது  அவர் நெப்போலியனைவிடப் போரிட்டவர்
இலெனினைவிட பொதுமக்களை நேருக்கு நேர் கண்டு பேசியவர் அவரால்தான் தொண்டு என்னும் சொல்லுக்குரிய முழுப்  பொருளையும் உருவாக்கி காட்ட முடிந்தது
இத்தனை பாராட்டுகிற பெருஞ்சித்திரனார்
பெரியார் மீது வருத்தங்கள் இல்லாமலும் இல்லை
காமராசர் ஒருவர்க்காக அக்கட்சியில் உள்ள
தீயவர்களையும் ஆதரித்தாரே எக்கிறார்
அதற்கான கரணியங்களை பெருந்தலைவர்
பகுதியில்  பார்த்தோம்
பெரியார் திராவிடநாடு திராவிடருக்கே என்றாரே
தமிழ்நாடு தமிழருக்கே என்று சொல்லாமல் என்கிறார்
இதற்கான விடையை மூவர் என்கிற தலைப்பில் பார்ப்போம்பெரியார் தமிழில் என்ன இருக்கிறது என்கிறாரே
என்கிறார் பாவலரேறு அதற்கான விடையை
தமிழ் என்கிறபகுதியில்  பார்த்தோம்
பாவலரேறு மட்டுமல்ல குடும்பமே தமிழ்க் குடும்பம்
தாமரை அம்மையாரும் போராளி தான்
1. மகள் பொற்கொடி 25 ஆண்டுகள் தமிழ் வழிக்  கல்விப் பள்ளி நடத்துகிறார்  200 பேருக்கு இலவயக் கல்வியும் உண்டு
2.மருமகன் இறைக்குருவனார்    15 ஆண்டுகள் தென்மொழியை பார்த்துக் கொண்டார் 15 நூல்களும் எழுதியிருக்கிறார்
3. மகன் முனைவர் பூங்குன்றன்    செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி பதிப்பாசிரியர் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் அறிவியல் களஞ்சியம் பதிப்பாசிரியர் தென்மொழியை' பார்த்துக் கொள்கிறார்
4. மருமகள் கயற்கண்ணி தொலைபேசித் துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள்
5 மகள்  தேன்மொழி தழல் ஏடு நடத்துகின்றார் 
-6. மருமகன்  பேரா அருளியார் தஞ்சை தமிழ்ப் பல்கலையில் சொல்லாய்வு செய்தவர் அருங்கலை சொல்  அகராதி ஏற்படுத்தியவர் அயற்சொல் அகராதி உட்பட 10 நூல்கள்  எழுதியவர்
7. மகள் செந் தாழை: செவ்விந்தியப் பிள்ளைகளுக்கு பள்ளி அரிசோனாவில் 
8.  மருமகன் முனைவர் ஆறிறைவன்  அறிவியல் அறிஞர் அரிசோனாவில்
மகன் பொழிலன் : ஈழப் போராட்டத்தில் 10 ஆண்டுகள்  சிறை. 7 நூல்கள் எழுதியிருக்கிறார் 'தமிழ் நிலம்' ஏடு நடத்துகிறார்
10. மருமகள் அரசி: இல்லத்தரசி
11. மகள் பிறைநுதல் 'மாணவர் களம்மாத இதழ் நடத்துகிறார்
12. -மருமகன் முனைவர் குணத்தொகையன்: பள்ளிக்கல்வித்துறையில் பணி செய்தவர் . ஈழ[ப் போராட்டத்தால் பணி விலகல்.   எஸ் ஆர் எம் பல்கலையின் தமிழ்ப் பேராயத்தில் இருக்கிறார் 
எல்லோரும் தனித் தமிழ்த் தொண்டர்கள் போராளிகள்
தமிழக்களம்  என்கிற அமைப்பையும் தென்மொழி  பதிப்பகத்தினையும் நடத்துகின்றனர்  பாவலரேறுஅவர்கள் 11.6.1995 அன்று மறைந்தார்கள் சில ஆண்டுகள் ,முன் தாமரை அம்மையாரும் மறைந்தார்கள்
பெற்றோர் மறைந்த பின்னும் பிள்ளைகள்
அதே உணர்வோடிருப்பதும் அய்யாவின் நூல்களை
வெளியிட்டுத் தொண்டுசெய்வதும் அரிது 

Thursday, February 16, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - இனி

பெரியார் தொடர் கட்டுரை எழுதினார்
 21.3.1943 மற்றும் 28.3.1943 நாட்களில்
திராவிட நாடு இதழில் இனி வரும்  உலகம்
என்ற  தலைப்பில் . அதில் கம்பியில்லாத்
தந்தி சாதனம் எல்லோர்  சட்டைப் பையிலும்
இருக்கும் என்றார்  இன்று அலைபேசி (செல்போன்)
வந்திருக்கிறது அவர் சொன்னபடி
உருவத்தை தந்தியில் அனுப்பும்படி  வசதி
வரும் ஆளுக்காள் உருவம்காட்டி பேசும்படி
நிலை வரும்  என்றார் முன் யோசனையோடு
கட்செவி (whatsapp)  வந்திருக்கிறது
இனி ஆண் -பெண் சேர்க்கை நீக்கப் படலாம்
என்றார் 1974 ல் சோதனைக் குழாய் குழந்தை
அறிமுகமானது  அதே போல் கிராமங்களில்
நகரத்தில் உள்ள எல்லா வசதியும் இருக்க
வேண்டும்  என்றார் 1944ல்
அது    ஏவுகணை விஞ்ஞானி மேனாள் குடியரசுத்
தலைவர் மறைந்த ஏ பி ஜே 

அப்துல்  கலாம் கூறிய  (PURA )  திட்டம் ஆகும்

Thursday, February 9, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மகிழுந்து

பெரியார் வீட்டில் இருந்ததை விட மிகுதியாக
மகிழுந்தில் (கார் )வாழ்ந்தார் பரப்புரை செய்து கொண்டே
1.2.1959 அன்று பெரியார் மகிழுந்து மூலமாக சுமார்
4000 மைல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்  
மணியம்மையார் ,ஆனைமலை ராமகிட்டிணம்மாள் ,
ஏ என் நரசிம்மன் ,கி .வீரமணி,,புலவர் கோ இமய வரம்பன்
ஆகியோரும் வந்தனர் பெரியாரோடு
சிக்கந்தராபாத் ,ஜான்ஸி ,நாகபுரி ,ஜபல்பூர்
வழியாக கான்பூர் சென்றனர்
கான்பூரில் பெரியார் பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினை
குறித்து ஆங்கிலத்தில் 2 மணி  நேரம் பேசினார்
பின்னர் லட்சுமணபுரி பல்கலைக்கழக யூனியனில்
சொற்பொழிவு  12ம் தேதி டெல்லி பயணமானார்
அங்கு ரிப்பப்ளிக்கன் கட்சியாரின் கூட்டத்திலும்
தமிழர்கள்கூட்டத்திலும் பேசினார் பெரியார்
17 ஆம் தேதி அங்கிருந்து கிளம்பி பம்பாய்க்கு
20ஆம்  தேதி   சென்று  சேர்ந்தார்  அங்கு பெரும்
வரவேற்பு கொள்கை முழக்கம் 25..2.1959 அன்று
பம்பாய் விட்டுக் கிளம்பி 28.2.1959 சென்னை
வந்து சேர்ந்தார்  பெரியார் 
வடநாட்டு சுற்றுப் பயணத்தை பாராட்ட
1.3.1959 அன்று சென்னை வாழ் மக்கள்
ஒரு லட்சம் பேர் ஊர்வலமும் 2 லட்சம்
பேர் கடற்கரை கூட்டத்திலேயும்  கலந்து
கொண்டனர்  'கரண்ட் ' நிருபர் பெர்னாண்டஸ்
பேட்டி கண்டு 4.3.1959 அன்று வெளியிட்டார்
கல்கண்டு இதழும் பெரியார் எல்லா மொழிகளிலும்
பேசுகிறார் என்று வெளியிட்டது  வட நட்டு ஏடுகளான
ஸ்டேட்ஸ்மென் ,அடிவானஸ் ,பயனீர் ,நேஷனல் ஹெரால்டு   மற்றும் உருது ஏடுகளான சியசத் ,அல்ஜமாயத் ஆகியவை பெரியாரின் பேச்சு ,கொள்கை ,போராட்டம்  பற்றி
செய்தி  வெளியிட்டன  நன் முறையில்
1961 ல் பெரியாருக்கு அன்பளிப்பாக மகிழுந்து
வழங்கினார்கள்  இப்போது  படுக்கை முதலிய
வசதியுடன் நகரும் வீடு போல சாலை ஊர்தி (வேன் )
ரூ 20000 க் கு  விலைக்கு வந்துள்ளது
தோழர்கள் அன்பளிப்பு வழங்குங்கள் என்று
வீரமணி விடுத்தார் வேண்டுகோள்
6.10.68 அன்று பெரியாருக்கு 'நகரும் குடில்' வழங்கப்பட்டது
கரூரில்  விழாவுக்கு கலைஞர் வர இயலவில்லை
நகரும் குடில் பெரியார் ,மணியம்மையார் வீரமணி
ஆகியோருடன் வடநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டது
7.10.1968 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டு
செகந்திராபாதில் 9ஆம் தேதி தங்கி அங்கு
பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார் பெரியார்
12ஆம் தேதி லக்னோ சேர்ந்தார் அங்கே
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தாழ்த்தப் பட்டோர் ,
பிற்படுத்தப் பட்டோர் ,சிறுபான்மையினர்  மாநாட்டை
துவக்கி வைத்து ஆராய்ச்சி மிக்க அரிய கருத்துக்களை
வழங்கினார் பெரியார் தமிழில்
பெரியாரின் தமிழ்ப் பேச்சை வீரமணி ஆங்கிலத்தில்
தர அதை இந்தியில் மொழிபெயர்த்து வழங்கினார்கள் 
திரும்பும் வழியில் ஐதராபாதில்  இரு நாட்கள் தங்கி
20.10.1968 இரவு பெரியார் குழுவினர் சென்னை திரும்பினர்
அவருடைய கால்படாத இடம் தமிழகத்திலே இல்லை
அவர் செல்லாத குக்கிராமம் இல்லை .அவர் பேசாத
பட்டி தொட்டியில்லை .அவருடைய குரலை எதிரொலிக்காத
மனைகளே இல்லை .கவிஞர் கருணானந்தம் நினைக்கிறார்
பெரியாருக்கு என்று தனியாக வீடு எதற்கென்று
அவர் இருப்பதெல்லாம் மகிழுந்திலே தான்
அவர் வாழ்வதெல்லாம் மகிழுந்திலே தான்
19.8.73 அன்று தஞ்சையிலே பெருவிழா வீரமணி
அவர்கள் கேட்ட சாலைஊர்தி (வேன்) நிதி கேட்டது
ஓரு லட்சம் ஆனால் திரண்டதோ ஒருலட்சத்து
அறுபதாயிரம் .  மீதியுள்ள ரூ 50000 நிதியாக
பெரியாரிடம் நிதியாக வழங்கப் பட்டது
ரூ 10000 பெரியார் அறக்கட்டளை சொற்பொழிவுக்காக
வழங்கப் பட்டது மகிழ்ச்சியோடுl
தங்கத்தாலான சாவியையும் வழங்கி பொன்னாடை
போர்த்தி சிறப்பித்தார் முதல்வர் கலைஞர்
அய்யாவின் பாசமிகு மருத்துவர்கள் கே .ராமச்சந்திர
பட் ,ஜான்சன் ஆகியோருக்கு மாலை அணிவிக்கப் பட்டது
ஊர்தியிலிருந்தபடியே பேசும்படி அமைத்து
குளிசாதன வசதியும் செய்தவர்கள்  எல் .ஜி .பாலகிருட்டிணன் நிறுவனத்தார் ஆவர்
இந்த வசதி மிக்க ஊர்தியை
பெரியார் பயன் படுத்தியது இரண்டாண்டுகள் தான்


Friday, February 3, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மறைமலை அடிகள்

15.7.1876 நாகையில் சொக்கநாதர் -சின்னம்மாள்
இணையருக்கு மகனாகப் பிறந்தார் வேதாசலம்
பள்ளிப் படிப்பு நாகப்பட்டணத்தில்
தந்தை மறைந்து விடுவதால் பள்ளிப்
படிப்பு பாதியில் நிற்கிறது வேதாசலத்துக்கு
கிறித்தவப் பள்ளியில் படித்ததால்
இளமையிலேயே ஆங்கிலப் புலமை
இருக்கிறது அவருக்கு
சமற்கிருதம் கற்க விரும்புகிறார் பார்ப்பனரல்லாதவராக
இருப்பதால் ஆசிரியர் கற்பிக்க மறுக்கிறார்
பார்ப்பன நண்பன் மூலம் கற்றுக் கொள்கிறார்
சமற்கிருதம் மெல்ல மெல்ல
தமிழ் நாராயணபிள்ளையிடம் கற்கிறார்
சைவ  தத்துவம் சோமசுந்தர நாயக்கரிடம்
மானோன்மணியம் சுந்தரம் பிள்ளையிடம் தமிழ்
நாடகம் கற்றுத் தேர்கிறார் வேதாச்சலம் 
தமிழாசிரியர் பணி கிடைக்கிறது திருவனந்தையில்
17ஆம் வயதில் சௌந்தரவள்ளி திருமணம் செய்து
கொண்டு இல்லறம் ஏற்கிறார் அவர் 
சித்தாந்த தீபிகை இதழில் துணை ஆசிரியர்
அதை விடுத்து சென்னை கிறித்தவக் கல்லூரியில் பணி
வி .ஜி .சூரியநாராயண சாஸ்திரிகளிடம்
சைவம் பற்றி அறிந்து கொள்கிறார்
சைவம் பற்றி தமிழகம் முழுவதும் சொற்பொழிவாற்றுகிறார்
' சைவ சித்தாந்த      மகா சமாஜம் ' ஏற்படுத்துகிறார்
1910 தமிழ் விருப்பமொழிதான் என்றும் ஆங்கிலம்
பயிற்று மொழியாக  இருக்கும் என்றும் சென்னைப்
பல்கலைக்கழகம் விதி இயற்றுகிறது  தமிழ்
பயிற்றும் வாய்ப்புகள்  குறைகின்றன 
தமிழில் ஆய்வு மேற்கொள்கிறார் நல்ல சொற்பொழிவாளர் 
காளிதாசனின் சாகுந்தலத்தை தமிழாக்கம் செய்கிறார்
1916ல் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்குகிறார்
சுவாமி வேதாச்சலம் என்ற தன் பெயரை மறைமலை
அடிகள் என்றும் 'ஞான சாகரம் ' என்ற தன் இதழை
'அறிவுக்கடல் ' என்றும் மாற்றிக் கொள்கிறார் 'முல்லைப்பாட்டு ஆராய்ச்சி ' , தொலைவில் உணர்தல் ',
'மரணத்தின் பின் மனிதன் நிலை ', '100 ஆண்டு உயிர் வாழ்வது '      உள்ளிட்ட 100 நூல்களை இயற்றியுள்ளார்
அவருடைய திருமகள் நீலாம்பிகை தனித் தமிழ்
உணர்வுகளுக்கு உதவியாக இருந்தார்கள் அவர்கள் தலைமையில் நடை பெற்ற மகளிர் மாநாட்டில்தான்
ஈ வெ ரா அவர்களுக்கு பெரியார் பட்டம் கொடுத்தார்கள் பெருமையோடு தன் இறுதி நாட்களை சென்னைக்கு அருகே பல்லாவரத்தில் கழித்தார்கள் 15.9. 1950ல் மறைந்தார்கள் 74 வயதில் 
அவர்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கததுக்கு 2016ஆம்
ஆண்டு நூறாவது ஆண்டு அவர் வழியில் ஞா .தேவநேயப்
பாவாணரும் பாவலரேறு பெருஞ்சித்த்திரனார் போன்றவர்களும் தொடர்ந்து உழைத்திருக்கிறார்கள் தனித்தமிழுக்காக   முனைப்போடு
மறைமலை அடிகள் இந்தி எதிர்ப்பாளரும்கூட
"இந்தி பொது மொழி தகுதி உடையதன்று;இந்தி நுழைப்பால்
தமிழ் கெடும்; தமிழர் துன்புறுவர் " என்று  எழுதினார்  பெரியார் சுவாமி வேதாசலம் தமிழ்நாட்டில் தமிழ்
மக்களின் நாகரிக விஷயமாய்த் தக்க ஆராய்ச்சி
உடையவர் என்று சொல்கிறார் 
நீலாம்பிகை அம்மையார் திருமணத்தின்போது
குருக்கள் பார்ப்பனர் அவரை வைத்து திருமணம்
செய்யலாமா என்ற கேள்விஎழுந்தது . அடிகள்
குருக்கள் பார்ப்பனரல்லர் ஆதி சைவர் என்றும்
அவர் கொள்கைக்கு முரணல்ல என்றார்
பெரியார் ஏற்கவில்லை அவ்விளக்கத்தை
17.7.1948 அன்று சென்னை அரண்மனைக்காரன் தெரு
செயின்ட் மேரி மண்டபத்தில் சென்னை மாகாண
இந்தி எதிர்ப்பு மாநாடு மறைமலை அடிகள்
தலைமையில் நடைபெற்றது  சிறப்போடு
தந்தை பெரியார் ,திரு வி க ,அண்ணா ,பாரதிதாசன் ,
மபொசி, நாரண துரைக்கண்ணன் ஆகியோர் கலந்து
கொண்டு எழுச்சியுரை ஆற்றினர்