Thursday, November 30, 2017

குறுந்தொகை - *பாடல் 28

" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல் பாடல் 28
" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப வென்
 உயவுநோய் யறியாது துஞ்சும் ஊர்க்கே

பாடலின்  பொருள்  :சுழல்கின்ற வடைக் காற்று வருந்தா நிற்ப
என் காம நோய் அறியாது இனிது துயில்கின்ற இவ்வூரின் கண்
: அவர் அறியுமாறு  மூளச் செய்து அறிவிப்பேனா முழக்கம் உண்டாகும்படி கூப்பிடுவேனோ 
      
நயம் : மன ,மொழி மெய்களால் முயன்று இவ்வூருக்கு
அறிவிப்பேனோ என்றவாறு
பாடலைப் பாடியவர் அவ்வையார் 







குறுந்தொகை - பாடல் 26

" அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற்  தோன்று நாடன்
தகா அன் போலத் தான் தீது மொழியினுந் 
தன்கண்  கண்டது பொய்க்குவது  தன்றே
 தேக்கொக்  கருந்து முள்எயிற்றுத்  துவர்வா ய்  
வரையாடு வன்பறழ்த்  தந்தைக்
கடுவனு மறியும்  அக் கொடியோ னையே "
இதன் பொருள்:
 முகையில்லாத படி முழுதும் மலர்ந்த கரிய கால்களை உடைய வேங்கை மரத்தினது மேனோக்கிஎழும் பெரிய கிளையிடத்தி ருந்த
மயில் அம்மரத்தின் மேலேறி மலரைக் கொய்யும் மகளிரைப் போலத்
தோன்றும் நாடன் ,தகுதி இல்லாதவன் போலத் தான் தீங்கு தருவதாக
கூறினும்,அவ னிடத்து உண்டான ஒழுக்கம் பொய்யான தன்று .
இனிய மாம்பழத்தை  உண்ணும் முள்ளினை ஒத்த கூரிய பல்லினையு,ம்
சிவந்த வாயினையும்  உடைய வரையினத்து விளையாடும் வலிய
குட்டிக்குத் தந்தையான ஆண் குரங்கும் அறியும் அக்கொடியவனை


  



Sunday, November 19, 2017

குறுந்தொகை - பாடல் 25

" யாரு மில்லைத் தானே கள்வன்
தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கொ  
நினைத்தா  ளன்ன சிறுபசுங் காஅல
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே

பாடலின் பொருள் :

எவருமிலர் (அவன் கூறிய சூளுறவை உணருமவர் ) அவன்தான்
கள்வனாயினான்  . அவன் விரைவில் வரைவேன் என்ற அச்சூளுறவை ப்
பொய்த்தானாயின் ,யான் என்செய்குவேன் ? தினையினது தாளை ஒத்த 
சிறிய  பசிய கால்களை உடைய ,இடையறாது ஒழுகும் நீரின் கண்
ஆரல் மீனை (உணவிற்க்காகப் ) பார்க்கும் குருகும் உண்டு ,அவன்
மணந்த அன்று
பாடலைப்  பாடியவர் கபிலர்]







குறுந்தொகை - பாடல் 23



அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன  நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே  அவள்
நன்ன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே " 

பாடலின் பொருள்

குறிசொல்பவளே   குறிசொல்பவளே   வெள்ளிய சங்குமணிக்  கோவை       போன்று நல்ல நெடுங் கூந்தல் உடையவனான அகவன்
மகளே நீ பாட்டையே பாடுவாயாக மென்மேலும் பாட்டைப் பாடிக்
கொண்டே இருப்பாயாக அவருடைய நல்ல நெடிய குன்றத்தை
பாடிய பாட்டையே  இன்னமும் பாடுவாயாக


பாடலைப் பாடியவர் அவ்வையார்

Thursday, November 9, 2017

குறுந்தொகை - *பாடல் 22

"நீர்வார் கண்ணை நீ இவ   னொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரல்
சிலம்பணி கோண்ட வலஞ்சுரி மரா அத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் எண்ணுதல் நின்னொடுஞ் செலவே

பாடலின் பொருள் :

நீர் வடியும் கண்ணை உடையையாய் நீ இங்குத் தங்கும்படி
விட்டு எவர் பிரியுமவர் ?சாரலிடத்து மலையை அழகு செய்தலைக்
கொண்ட  வலமான சுழிகளோடு கூடிய மலர்களை உடைய வெண்
கடம்பினது அழகிய கிளைகள் வேனிற் காலத்துக் கமழ்தலைச் செய்யும்
இனிய ஊர் எண்ணுவது  நீ  உடன் சென்ற பின்பு நின்னோடும் சென்ற
தலைவன் செலவை எனவே உடன்கொண்டு செல்வதன்றி விட்டுப் பிரியான் தலைவன்   என்றாளாம் .
பாடிய புலவர் சேரமானெந்தை


நயம் : தலைவன் விட்டுப் பிரியான் என்ற குறிப்பை  உணர்த்துகிறது   

குறுந்தொகை - *பாடல் 20

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோ ராக
மடவ  மாக மடந்தை நாமே "
பாடலின் பொருள் :
அன்பு வளர்ந்து அருளாகும் அருள் என்னும் அன்பு ஈன் குழவி
பொருள் வயிற் பிரிதல் என்பது ஒரு துறைப் பெயர் .வாழ்வதற்கு
பொருள் இன்றியமையாதது .ஆதலின் பொருள் தேடப் போதல்
அறிவுடைமை என்று கருதப்பட்டது .ஆனால் அது அன்பையும் அருளையும் துறந்து செய்ய வேண்டுவதாகிறது

பாடியவர் கோப்பெருஞ்சோழன்.

நயம் : 
காதல் பாடலாக இருந்தாலும் பொருள் தேடப் போவது பற்றிய பாடலாக

இருக்கிறது