Saturday, October 31, 2020

எம் கோபாலகிருஷ்ணன் இரங்கல்

எம் கோபாலகிருட்டிணன் - இரங்கல்

இந்தியன் வங்கி மறைந்த தலைவர் மேலாண்மை இயக்குனர்)

தந்தை பெயர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர மேயராக இருந்தவர். மனைவி பெயர் ராஜலட்சுமி ஒரு மகள் குடும்பமிருக்கிறது. அவர் இளங்கோ கலை மன்ற தலைவராக இருந்தார். மாமா இயக்குனர் எஸ்பி முத்துராமன் அவர்களுக்கு மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்திற்கு விருது வழங்கினார். இந்தியன் வங்கியில் அதிகாரியாக சேர்ந்தார். கடுமையாக உழைத்து பதவி உயர்வுகள் பெற்று பொது மேலாளர் ஆனார். அவருடைய செல்வாக்கால், அதே வங்கியில் செயல் இயக்குனர் ஆனார். பின்பு தலைவர், மேலாண்மை இயக்குனர் ஆனார்.

அவர் அதிகாரிகள் பயிற்சி பெற, சென்னையில் Image என்ற கட்டிடத்தைக் கட்டினார். பயிற்சி தவிர அந்த கட்டிடத்தை வாடகைக்கும் அனுமதித்தார். 

அவர் மும்பை மண்டல மேலாளராக இருக்கும் போது அதிகாரிகள் குடியிருப்பு கட்டினார். அதில் வாகன வசதி செய்து கொடுத்தார். அதில் பராமரிப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருங்கள் என்றார். பேங்க ஆப் தஞ்சாவூரை இணைத்தார். எனக்கு சென்னை திருவான்மியூர்க்கு மாற்றல் ஆனது. எக்மோர் பி ஒ டி யில், நிறைய செயற்படாச் சொத்துக்கள் இருந்தன. அதனால், கே ஆர் சேதுராமன் என்னை அங்கு மாற்றினார். பி ஒ டி கிளைகள் தோன்றின நான் எழும்பூர் பி ஒ டி யில் மேலாளராக பணியாற்றினேன். 

அதிகாரிகள் கிராமசேவை செய்ய வேண்டும் என்பார்.  என்னை கிராம சேவைக்காக திருமழிசையில் போட்டார்கள். கோபாலகிருட்டிணன் அவர்களையும், கண்ணன் அவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். இருவரும் நான் சென்னையிலிருந்து போகும்படி போட்டார்கள். நான் நன்றாக செய்தேன். அந்த கிளையில் மார்கரெட் லெக்டேசியா என்கிற கிராம வளர்ச்சி அதிகாரி இருந்தார்கள். அவர்கள் கிளையில் உள்ள 14 கிராமங்களையும் சுற்றி வருவார்கள். நன்றாக ஒத்துழைத்தார்கள். நேமம் மாதிரி கிராமம் ஸ்டெல் மேரிஸ் கல்லூரிலிருந்து மாணவிகள் வந்து, கிராமத்தில் வாடிக்கையாளர்கள் வீடுகளில் ஒரு வாரம் தங்கி சேவை செய்தார்கள். கல்லூரியில் அவர்களையும் என்னையும் பாராட்டி கல்லூரி முதல்வரும் கோபாலகிருட்டிணன் அவர்களும் பேசினார்கள். கோபாலகிருட்டிணன் மருத்துவமனைகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தார்.  கோபாலகிருட்டிணன் அவர்களின் மறைவு சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

Friday, October 2, 2020

எஸ்பிபி நினைவலைகள்

 பாடும் நிலா பாலு அவர்கள் நம்மை எல்லாம் தவிக்கவிட்டு விட்டு மறைந்து விட்டார். அவர் பாடிய பாடல்கள் எண்ணிலடங்கா. 14 மொழிகளில் 42,000 பாடல்கள் பாடிய மாமனிதர். ஒரே நாளில் 21 பாடல்களை பதிவு செய்த சாதனையாளர் பாலு அவர்கள். எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்" படத்தில் அறிமுகமாகி, ரஜினி அவர்களின் "அண்ணாத்த" படத்துடன் தன் இசைப் பயணத்தை  முடித்துக்கொண்டார். அவரின் புகழ் உலகம் உள்ளவரை இருந்துகொண்டே இருக்கும். அவருடைய பாடல்கள் நமக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். "கேளடி கண்மணி" படத்தில் மண்ணில் இந்த காதல் பாடலை மூச்சு விடாமல் பாடியும் நடித்தும் சாதனை புரிந்தார். அன்பானவர், அடக்கமானவர், பண்பாளர், மனிதநேயம் உள்ளவர். இப்படி அவர் குணநலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நம் மத்திய அரசு விருதுகளையும் பல மாநில அரசு விருதுகளையும் இன்னும் பல்வேறு விருதுகளையும் ஒருங்கே பெற்றவர். மாமா எஸ்பிஎம் இயக்கிய 70 படங்களில் 100 பாடல்கள் பாடியும், 2 பாடல்கள் இசை அமைத்தும், 1 படத்தில் நடித்தும் கொடுத்தவர். மாமா அவரைப்பற்றி நிறைய சொல்வார்கள். கேட்டு பெருமிதம் அடைவோம். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று.