Saturday, April 28, 2018

குறுந்தொகை - பாடல் 251

மடவ வாழி - மஞ்ஞை மாஇனம்
கால மாரி பெய்தென ,அதன்எதிர் 
ஆலலும்ஆலின  பிடவும் பூத்தன ;
கார் அன்று - இகுளை-தீர்க நின் படரே !
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் ,
புதுநீர் கொளீ இய,உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே

பாடலின் பொருள்

தோழீ ! முன்னைய கார் காலத்துப் பெய்ய வேண்டிய மழையில் ,பெய்யாது தங்கிய பழைய நீரைக் கொட்டி விட்டுப் புதிய நீரைக் கடலில் முகப்பதற்காக ,இப்போது பெய்யும்தொடர் பற்ற காலத்து மழையின் முழங்கும் குரலைக் கேட்டு .மயில்களின் பெரிய கூட்டம் ,இதனைக் கார் கால மழையென்றே கருதி ,அம்முகிற் கூட்டத்திற்கு எதிரே மகிழ்ந்து ஆடுதலை மேற் கொண்டன .பிடவும் அவ்வாறே பூத்தன .அவை அறிவற்றன .இது உண்மையான கார்காலம் அன்று .உன் துன்பம் நீங்குவதாக !

இப்பாடலை எழுதியவர் இடைக்காடனார்  

குறுந்தொகை - பாடல் 210

திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த  வெண்ணெல் வெஞ்சோறு   
எழுகலத்து எந்தினும் சிறிது - என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்துவரக்  கரைந்த காக்கையது பலியே.

பாடலின் பொருள்
தலைவா! என் தோழியின் பருத்த தோலை நெகிழ்ச்சி செய்த பிரிவுத் துன்பத்திற்கு ,நல்நிமித்தமாகப் புதிய விருந்தினர் வருவர் என உணர்த்தக் கரைந்த காக்கையாலேயே, யான் தலைவியே
 'நீ வந்து விடுவாய்'' என ஆற்றுவித்தேன்.அதனால் அக் காக்கைக்குப் பலி உணவாக,திண்ணிய தேரையுடைய கண்டீரக் கோப்பெருநள்ளியின் காட்டிலுள்ள இடையர்கள் பல பசுக்கள் தந்த நெய்யுடன் ,தொண்டி நகரில் முழுவதுமாக விளைந்த வெண்ணெல் அனைத்தையும் கொண்டு சமைத்த சோற்றை ஏழுகலங்களில் ஏந்திக்கொடுத்தாலும் அது சிறிதேயாகும் !


இப்பாடலை எழுதியவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்

Friday, April 20, 2018

குறுந்தொகை - பாடல் 175

    "பருவத் தேன்நசைஇப் பல்பறைத் தொழுதி
     உரவுத்திரை பொருத திணிமணல் அடைகரை ,
     நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம் 
     மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்கு
     இரங்கேன்- தோழி!- எங்கு என்கொல்? என்று
     பிறர்பிறர் அறியக் கூறல்
     அமைந்தாங்கு அமைக; அம்பலஅஃது எவனே?

    பாடலின் பொருள்

    தேனை விரும்பிப் பலவாகிய  ' செவ்வியுள்ள மலர்களின் புதிய தேனி விரும்பி பலவாகிய வண்டுக்கூட்டம் வலி மை வாய்ந்த அலைகள் மோதுகிற  மணல்
    திணிந்த கரை ஓரத்தில் உள்ள நனைந்த புண்ணி யின் கரிய கிளையல்  மொய்த்த படி மலர்ந்த பூக்களையும் கரிய நீரையும் உடைய கடற் கரைக்கு த் தலைவன் பொருட்டு யான் இரக்கப்பட மாட்டேன் .இங்கே இவளுக்கு என்ன ஆயிற்று ஏன் இவள் பழித்து பேசுதல் அவரவர் மனம் போன படி அமையட்டும் , அவர்கள்  கூறும் அம்பல் என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு என்ன செய்து விடும்? ஊரார் பழி கூறுவதாகத் தோழி சொன்னதற்கு தலைவி அதுபற்றி அஞ்சேல் என்றது இது .




















குறுந்தொகை - பாடல் 159

"தழைஅணி அல்குல் தாங்கல்செல்லா
நுழைசிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக,
அம்மெல் ஆகம் நிறைய வீங்கிக்
கொம்மை வரிமுலை செப்புடன் எதிரின:
யாங்குஆ  குவள்கொல் பூங்குழை?"  என்னும்
அவல நெஞ்சமொடு உசாவாக் 
கவலை  மாக்கட்டு- இப் பேதை ஊரே

பாடலின் பொருள்
தலியய் அணிந்த அல்குலுடன் எதயும் பொறுக்க மாட்டாத நுண்நிய சிறிய

இடைக்கு துன்பமாகும்படி அவளது அழகிய மெல்லிய மார்பு நிரம்பப் பருத்துத் திரண்டுருண்ட தேமல் உள்ள முலைகள் செப்புடன் மாறுபட்டமன .ஆகவே இப் பருவம் எய்திய பூ ங்குழை எது நிலையை அடைவாளோ என்று பருவம் எய்தித் தள தள வென்று  வளர்ந்து விட்டாளே என்ன ஆகுமோ என்று மகளை ப் பற்றிக் கவலைப் பாடமல் தோழி சாடுவதுபோல  பேசுகிறாள் ஆயினும் தலைவனுக்கு இவள்  தலிவனுக்கு இவள் இட் செரியாக் கூடும் என எச்சரிக்கிறாள்

Monday, April 9, 2018

குறுந்தொகை - பாடல் 117

மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல்அஞ்சிய பருவரல் ர்ஞெண்டு  
கண்டல் வேர்அளைச்  செலீஇயர் ,அண்டர்
கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்  
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உளஈண்டு விலைஞர் வளையே

பாடலின் பொருள்

மாரிக்காலத்து ஆம்பலைப் போன்ற கொக்கின் பார்வையை
வெருவியதாலான நண்டு கண்டல் மரத்தின் வேரிடத்தில் உள்ள வளியிடத்து செல்ல அண்டாது வலிகயிற்றை  அரிந்து பெரிய வல்லமையோடு வலையில் அழுத்தும்
து யினை உடையான் வாராமல் அமைவானாயிம் 
அமைந்திடுக ,சிரியனவும் உள்ளன ,இங்கு வளையல் விற்பார் கையிடத்து வளைகள்
 

பாடலை பாடியவர் குன்றியனார்

குறுந்தொகை - பாடல் 100

"அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலிக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனனே
மணத்தற்கு அரிய, பணைப்பெருந் தோளே'"
 
பாடலின் பொருள் :

மலையருவியினை உடைய பரந்த நிலத்தின் கண் மலைநெல்லினை விதைத்து அந்நிலத்திடையே முளைத்த பசிய இலையினை உடைய
மலை மல்லிகையும் பசியமரலுமாகிய களையினைப் பறிக்கின்ற 
காந்தள்ஆகிய வாழ்வேலியை  உடைய சிறு குடி வாழ்வோர்
பசிப்பாராயின் தறுகண் மை உடைய யானையினது மருப்பினை
வல்வில் ஓரியின் கொல்லி மலைக்கண் எழுதப்பட்ட பாவைதன்னி
கண்டார்க்கு மடமை வரச் செய்பவள் ஆவாள் மூங்கில் போன்ற பெரிய
தோள்கள் தழுவுவதற்கு அரியன வாகும்

பாடலை பாடியவர்  கபிலர்


Sunday, April 1, 2018

குறுந்தொகை - பாடல் 96

"அருவி வேங்கைப் பெருமலை  நாடற்கு
யானெவன்  செய்கோ என்றி; யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல்? நன்னுதல்! நீயே  "

பாடலின் பொருள் :

நல்ல நெற்றியை உடைய தோழியே அருவியையும் வேங்கை மரங்களையும்
பெரிய மலைகளை உடைய  நாட்டை உடைய தலைவன் பால் உள்ள
குறைக்கு என்ன பரிகாரம் செய்ய வல்லேன் என்று கூறா நின்றவனை
நீ அவ்வாறு பொருட்டு கூறிய விளையாட்டு மொழி என்று நினையாது
வாய்மை என்று கருதி விடுவேனாயின்  நீ என்ன தன்மை
உடைமை ஆகுமை

பாடலை பாடியவர் அள்ளுர் நன்முல்லையார் 


குறுந்தொகை - பாடல் 91

"அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின், வு ஊர் சில குக நீ துஞ்சும் நாளே !
பலஆ குகநின் நெஞ்சில் படரே !
ஓவாது  ஈயும் மாரி வண்கைக்
கடும்பகட்டு யாணை , நெடுந்தேர், அஞ்சி
கொன்முனை இரவு ஊர் போலச்
சிலஆ குக,நீ துஞ்சும் நாளே ."

பாடலின் பொருள்

பிணங்குதலை  உடைய கொடியாகிய பிரம்பினது வரி அமைந்த
முதிர்ந்த பழத்தைஆழ்ந்த நீரை  உடைய குளத்தின்கண் 
வாழும் கெண்டை மீன் கவ்வித் தின்றற்கு இடமான குளிர்ந்த
துறைகளின் ஊரை உடைய இத் தலைவனுக்கு பெண்டாகிய நீ இத் தன்மை  உடைய  யானால் ஒழிவின்றி ஈதல் செய்யும் மழை போன்ற வள்ளன்மை   உடைய கையினையும் களிற்று யானைகளயும்  நெடிய தேரினையும்  உடைய அஞ்சி என்பானுடைய அச்சத்தைச் செய்யும் போர்க்களத்தில் இரவினை உடைய ஊரில் உள்ளாரி போன்று நின் நெஞ்சின் கண் துன்பம் பற் பல வாகுக   நீ துயிலும் நாள் சிற்சில வாக


பாடலை பாடியவர் அவ்வையார்