Friday, March 31, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மதம்

மதத்திற்காக மனிதன் ஏற்பட்டான் என்றும் மதத்தை
காப்பாற்ற வேண்டியது மனிதனின் கடமை என்றும் அது
எப்படிப் பட்டதானாலும் அதைப் பற்றிக் குற்றம் சொல்லவோ திருத்தவோ யாருக்கும் உரிமையில்லை என்று   
மதம்எதுவாயிருந்தாலும்  அதை அழிக்க வேண்டியது சீர் திருத்தம் கோருகின்ற ஒவ்வொருவருடைய கடமையாகும் 
குடி அரசு 25.1.1931
நெற்றியில் நாமமோ வீபூதி யோ கோபியோ சந்தனமோ
பூசுவதுதான் இந்துமதம் என்றுஒருவரை ஒருவர் தாழ்ந்த 
சாதி உயர்ந்தசாதி என்று சொல்வதுதான் இந்து மதம் என்கிறார்கள்   பாவ  புண்ணியம்  என்பது தேசத்திற்கு   ஒரு விதமாகவும் மதத்திற்கு ஒரு விதமாகவும் சாதிக்கு ஒரு விதமாகவும் தான்  கருதப்படுகிறது.நமது கலியாணங்களிலேயே மதத்திற்கு  மதம்
சாதிக்கு சாதி  வித்தியாசம்
சிலர் வேதம் என்ற ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லோரும்        நடக்க வேண்டும் என்பார்கள் . அதில் என்ன சொல்லி இருக்கிறது நான் பார்க்கலாமா என்றால் அது கடவுளால் படைக்கப்பட்டது அதை நீ  பார்ப்பது பாவம் நான் சொல்வதைத்தான் நீ நம்ப வேண்டும்  என்பார்கள் 
நம் சென்னை மாநிலத்தில்  மாத்திரம் இந்துமத சடங்குகள்
பெயராலும் மதத்தின் பெயராலும் தெய்வங்கள் பெயராலும்
வருடம் ஒன்றுக்கு 10 கோடி  ரூபாய்க்கு  மேல்செலவாகிறது
குடி அரசு  30.5.1926
நான் சொல்வது உங்கள் அறிவு ஆராய்ச்சி , புத்தி அனுபவம்
இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளி விடுங்கள் ,
மதம் என்பதற்கு நாம் உத்தேசிக்கும் பொருள் என்ன என்று
பார்த்த்தால் ஆராய்ச்சிக்காரர்கள் மதம் என்பது கொள்கை என்று சொல்கிறார்கள் .அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்து மதம் என்பதற்கு என்ன பொருள்
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் அவர் எங்கும் உள்ளவர் என்கிற தத்துவம் நம்மமுடைய மதத்துக் கடவுளுக்கும் உண்டானால்
நாம் கடவுள் கிட்டத்தில் போகக்கூடாது கோவிலுக்குள் வரக் கூடாது மற்றொருவர் மாத்திரம்தான் கடவுளைத் தொடலாம் கழுவலாம் வேட்டி   துணி கட்டலாம் என்கிற கொடுமைகள் அதற்கு ஏற்படுத்த முடியுமா  
நீங்கள் கீழ் சாதி  பூசை பண்ணுகிறவனும் சிலரும் மாத்திரம் உயர்ந்த    சாதி அதனால் நீங்கள் கொடுக்க வேண்டியது மற்றவன் சாப்பிட வேண்டியது
குடி அரசு  11.9.1927
பெரியார் சொல்கிறார் நான் உங்கள் முன்னிலையில்
சொல்ல வந்தது சமய சீர்திருத்தம் , நான் சொல்வதையெல்லாம்
ஒப்புக்கொண்டுதான் தீர வேண்டுமென்றும் அதன்படி நடக்கா
விட்டால் பாவம் வரும் என்றும் சொல்லி பார்ப்பனர்களைப்  போல்  ஏமாற்ற வரவில்லை நான் சொல்லுவதையெல்லாம்  பொறுமையுடன் கேட்டு பிறகு உங்கள் விருப்பம் போல் நடவுங்கள் என்று சொல்லிய   பின்பே சமய சீர்திருத்தம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறேன்
நம் நாட்டிற்கு வந்த பார்ப்பனர்கள் கவலையற்று இருந்த
நம் மக்களை ஏமாற்றி தங்கள் நன்மைக்குத் தக்கபடி திருப்பி
தங்களுக்கு இவைகள் எல்லாவற்றையும் அடிமையாக்கிக் கொண்டு இவைகளுக்கு தாங்களே எசமானர்கள் ஆகி விட்டார்கள்    ஆனால் கடவுளால் ஏற்படுத்தப்பட்டதென்றும் கோடி கோடி
வருடங்கள் ஆனதென்றும் சொல்லும்  நமது மதத்தையோ
பெரும்பான்மையான மக்கள் படிக்கக் கூடாது அப்படிப்  
படித்தால் நாக்கை அறுக்கவும் கேட்டால் காதில் ஈயத்தை
காய்ச்சி ஊற்றவும் படித்துவிட்டால் நெஞ்சை அறுக்கவும்
என்று பலவிதமான தண்டனைகள் உண்டு
குடி அரசு 23.10.1927
சமற்கிருதம்    தேவ  மொழி பொது மொழி மத மொழி அறிவு  மொழி என்று சொல்லி அதற்குப் பார்ப்பனரல்லாதார் பணத்தில் பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதும் அதில் பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள்
படிக்க ஆசைப்பட்டால் மறுப்பதுமான அயோக்கியத் தனத்தை ஒழிக்கவோ
கண்டிக்கவோ எந்தத் தேசியத்தலைவர்கள்  முன் வந்தார்கள் என்று கேட்கிறோம் 
குடி அரசு 19.8.1928
கிறித்தவ மதத்தில் நாயுடு கிறித்தவன் நாடார் கிறித்தவன்
என்ற பாகுபாடுகள் காணப்படுகின்றன ஆகவே முகமதிய
மதத்தை தழுவுவது சீக்கிரத்தில் சமூக சமத்துவத்தை அளிக்க  முடியும்
என்று கருதுகிறார் பெரியார்     
மதமோ கொள்கையின் மூலம் ஏற்படுவது அது மன
உணர்ச்சிக்கும் அறிவு உணர்ச்சிக்கும் தக்கபடி
அடிக்கடி மாற்றிக்கொள்ள உரிமை உடையது என்பதாகும்
இந்துமதம்  என்பதைப் பொறுத்த  வரை ஏற்படும் செலவுகள்          
சகிக்க முடியாதிருப்பதோடு அதனால் நாட்டிற்கு ஏற்படும்
தொல்லைகள் அளவிட முடியாதன வாக இருக்கின்றன
3.`11.1929
குடி அரசு 3.11.1929
மனிதனின்  அறிவிற்குப் பயப்படும் கடவுளும் மார்க்கமும்
உலகத்தில் யாருக்கு என்ன பயனை அளிக்கக் கூடும்
கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை மதம் என்றால்
மூட நம்பிக்கை என்கிற தீர்மானம் ஏற்பட்டு விட்டது
இந்து மதம் இஸ்லாமானர்களுக்கும் கிறித்தவர்களுக்கும்
கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பன்மடங்கு கெடுதியை இந்து மதம் பார்ப்பனரல்லாத மக்களுக்கு விளைவிக்கிறது
அதைவிடப் பன்மடங்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கிறது
குடி அரசு 7.6.1931
ஆனால் மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது
அது கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது கடவுளை காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாய்  இருப்பது  
மாரியம்மன் கொண்டாட்டம்போல் இசுலாம் சமூகத்திலும்
'அல்லாசாமி பண்டிகை' நடக்கிறது மேலும் நாகூர் போன்ற
தல விசேடங்களும்  சந்தனக் கூடு,தீ மிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன .இவை குர் ஆனில் இருக்கின்றதா என்பது
கேள்வியல்ல . ஆனால் இவைகள் ஒழிக்கப்பட்ட பிறகுதான்
எந்த சமூகமும் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்ள முடியும்z
இந்துக்கள் காசிக்கும் இராமேஸ்வரத்துக்கும் போய்ப்
பணம் செலவழித்துவிட்டு ,பாவம் தொலைந்துவிட்டது
என்று திரும்பி வருவதைப் பார்த்து முஸ்லிம்கள் சிரித்துவிட்டு முஸ்லிம்கள் நாகூருக்கு ,மக்காவுக்கும் முத்துப்பேட்டைக்கும்
போய்விட்டு வந்து தங்கள் பாவம் தொலைந்து விட்டது என்றால் மற்றவர்கள் சிரிக்கமாட்டார்களா
குடி அரசு 9.8.1931
இந்தியர்களாகிய நாம் இவ்வளவு பிரிவினராயிருப்பதற்கு இந்த  இந்து மதமல்லாமல் வேறு எது கரணியம் ; பொதுவாக இந்துக்கள் இத்தனை சாதிகளாக அவற்றிலும் உயர்வு தாழ்வாக பார்ப்பான் ,பறையன்
என்று பிளவு பட்டிருப்பதற்கு  இந்து மதமே கரணியம் 
விலங்குகளில் சாதி வேறுபாடு உண்டா ? கழுதையில் ,நாயில் ,குரங்கில் எருமையில் பறை நாய் , பறைக்  குரங்கு  பறை எருமை பார்ப்பன நாய் ,பார்ப்பாரக்
குரங்கு ,பார்ப்பார எருமை என்றும் உண்டா ? மனிதனில் மட்டும் இப்படி இருப்பதற்கு மதம் அல்லாமல் வேறு எது கரணியம் 
பெற்றோர்களை  இறந்துபோனவர்களை மதிக்க வேண்டாம் 
என்று நான் சொல்ல வரவில்லை . அதற்காகப் பார்ப்பானுக்கு  ஏன் அழ வேண்டும் . அவன் காலில் ஏன் விழ வேண்டும் .அவன் கால்
கழுவின தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும் மாட்டுச் சாணியும்  மூத்திரமும்
கலக்கி ஏன் குடிக்க வேண்டும் இது மதக் கட்டளை மத தத்துவம்  என்றால்
இப்படிப்  பட்ட மதம் ஒழிய வேண்டாமா
குடி அரசு 19.12.1937
திராவிட நாட்டில் உள்ள திராவிடர்களைப் பொறுத்த
வரையில் மத சம்பந்தமாக பேச வேண்டுமானால்
கிறித்தவர்கள் இசுலாமியர்கள் தவிர மற்ற மக்களுக்கு
மதம் என்று ஒரு கொள்கையோ கருத்தோ ஒன்றும்
இல்லை என்று சொல்லலாம்
தவிரவும் இந்து மதம் என்ற சொல் எந்த மத ஆதாரங்களில்
 காணப்படுவதில்லை இந்து மதத்தின் கொள்கை இன்னதென்று சொல்வதற்கும் ஆதாரங்கள் கிடையாது
குடி அரசு 19.12.1947
கோவில்களில் கடவுள் பூசைகளில் இரு குறைபாடுகள்
1.     கடவுள் பூசையின்போது சொல்லப்படும் தோத்திர சொற்கள்  தமிழில் சொல்லாமல் சமற்கிருதத்தில் சொல்வது
2.     வழி படுகின்றார்களை கடவுள் இருக்கும் அறைக்குள் சென்று வழிபட அனுமதிக்காமல் வெளியில் நின்று வழிபட அனுமதிக்காமல் வெளியில் நின்று வழி பட வேண்டும் என்று சொல்லி இழிவு படுத்து வது 
விடுதலை 28.1.1960
கடவுள் அறைக்குள் ஒரு சாதி மக்கள் போகக்கூடாது
என்று தடுத்து வைத்திருப்பது மானக்கேடான விஷயம் 
கடவுள் உண்டா இல்லையா என்பது ஒவ்வொரு
மக்களுடைய சொந்த விஷயம் ஆனால் மானக்கேடு
என்பது எல்லா மக்களையும் பொறுத்த விஷயம்
மானக்கேடு என்றால் உயிர் விடவும் வேண்டும்
என்கிற தமிழ் மக்கள் வலியப்போய் இழிவை சம்பாதித்துக்
கொள்வது அறிவுடைமையாகுமா என்பதை பக்தர்கள்
சிந்தித்துப் பார்க்க வேண்டும்
விடுதலை  28.1.1960
இந்து மதம் எப்போது உண்டாயிற்று என்று சொல்ல முடியாது என்று சங்கராச்சாரியாரே சொல்கிறார் அது உலகம் உண்டான காலத்திலேயே உண்டானது என்கிறார்  உலகம் உண்டான காலம்
காட்டுமிராண்டித் தனமாக இருந்திருக்க வேண்டும்
எனவே இந்து மதம் என்பது ஒரு புரட்டு
அதற்கு எந்த ஆதாரமும் இல்லை  
இராஜாஜி பஞ்சமர் வீட்டில் சாப்பிடுவார் சங்கராச்சாரி
பஞ்சமனைக் கண்டதற்கு குளிப்பார்  சிலர் நிழல் பட்டதற்குக்
குளிப்பர் சிலர் பஞ்சம ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு பார்ப்பனராகவே இருப்பர் 
பலித்தவரை என்பதுதான் பார்ப்பனீயமும் இந்து மதமும் 
விடுதலை  4.3.1969
இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும்
அபிஷேகத்துக்கும் கடவுள் பற்றிய சமய மடங்களுக்கும்
மடாதிபதிகளுக்கும் மூர்த்தி தலம் தீர்த்த தலம் முதலிய
யாத்திரைகளுக்கும் இக் கடவுள்களின் அவதார
மகிமைகளையும் திருவிளையாடல்களையும்
அவைகளைப் பற்றிய பாட்டுக்களையும் அச்சடித்து
விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும் மற்றும்
இவைகளுக்காக செலவாகும் பொருள்களிலும் 
மகிமைகளையும் திருவிளையாடல்களையும்
அவைகளைப் பற்றிய பாட்டுக்களையும் அச்சடித்து
விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும் மற்றும்
இவைகளுக்காக செலவாகும் பொருள்களிலும் 
நேரங்களிலும் நம் நாட்டில் மட்டும் வருடா வருடம்
சுமார் 20 கோடி ரூபாய்க்கு குறைவில்லாமல் பாழாகிறது
நம் நாட்டிற்கு அவசியமாக வேண்டியது என்னவென்றால்
மூட நம்பிக்கை ஒழிய வேண்டும் ..அறிவுக்கு விடுதலை ஏற்பட்டு அது வளர்ச்சி பெற வேண்டும் .சுயமரியாதை உணர்ச்சி ஏற்பட வேண்டும்
இம்மூன்றும் ஏற்பட வேண்டுமானால் மதமும் ,சாமியும் சமயச்சாரிகளும் சந்திக்கு வந்தே தீர வேண்டும்
குடி அரசு 1.7.1928
இந்த மாதிரி நாமம் போடுவதும் சாம்பல் அடிப்பதும் நம்
நாட்டிலேதான் ஏற்பட்டிருக்கிறதே  அன்றி மற்ற எந்த
நாடுகளிலும் இருப்பதாகச் சொல்லமுடியாது .பக்தர்களும்
நாயன் மார்களும் ஆழ்வர்களும் இங்கு மாதிரி மேல்
நாடுகளில் தோன்றியும் இருக்க முடியாது
விடுதலை   21.2.1952
வைணவ மதத்திற்கு  சொர்க்கமான எரிகின்ற தீண்டாத சாதி
பக்தர் ஒருவர் இருந்து அவரைக் கோவிலுக்குள் விடாமல்
தடுக்கப் பட்டு ,கனவு கண்டு கடைசியாக விஷ்ணு வந்து அழைத்துப் போகிறார் 
சைவத்திலும் தீண்டப்படாத வகுப்பு நந்தன் என்று ஒருவர் இருந்து பரமசிவன் வந்து கனவில் சொல்லி சாமி தரிசனம் செய்யப் பட்டதாக சொல்லப்படுகிறது
பகுத்தறிவு மலர் கட்டுரை 1935
மதம் அரசியலின் பேரால் ஒரு சமயத்திலும் ,சமுதாயத்தின் பேரால்
மற்றோர் சமயத்திலும் மொழியின் பேரால் வேறோர் சமயத்திலும்   தனது ஆதிக்கத்தை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கும்  மதக்கர்த்தர்கள்   அந்த மதத்தை வளர்க்கப் பாடு படுவார்கள் .அதை அடியோடு -வேரோடு கல்லி
எடுத்து அதன் ஆதாரமே இல்லாமல் செய்தால்தான் மதம் அழியும் இன்றயக் கடவுள் ஒற்றைக் காசுக்குக் கூட பிரயோசனமில்லை
இன்றைய மதம் ஒற்றைக் காசுக்குக் கூட பிரயோசனமில்லை
நமக்கு வேறு மதம் வேறு கடவுள் வேறு கட்டளை வேண்டும்
எப்படி இலஞ்சம் வாங்குகிற நீதியரசரும் அதற்கேற்ற
காவல் துறை அதிகாரிகளும் இருப்பார்களானால்
அட்டூழியங்கள் அதிகரிக்குமா அதே போல் கடவுள்
மன்னித்து விடுவார் அவருக்கு விருப்பமான
பிரார்த்தனையை செலுத்திவிட்டால் என்ற நம்பிக்கை
மக்களுக்கு ஏற்படவும் ,முதலில் ஒரு குற்றம் செய்ய
அஞ்சியவன் பிறகு நாளடைவில் பயமின்றி பல குற்றங்களை
செய்ய முற்படுகிறான் தான் ஒரு தவறு செய்தால் அது
தன்னை பாதிக்கும் என்ற பயமற்று
எங்கள் கழகத்தவர் பிறரால் அடித்துத் துன்புறுத்தப் பட்டபோதும்
மதுரையில் எங்கள் கொட்டகைகளும்  சேலத்தில் எங்கள் ஊர்வலத்தின் மீது
காவல் துறை முன்னிலையில் கல்லும் சோடா புட்டியும் வீசப் பட்ட போதும்
அண்ணாமலை நகரில் எங்கள் கழக மாணவர்கள் மீது
காவல்துறை பாதுகாப்புடன் தாக்குதல் நடத்தப் பட்ட போதும்
தற்காப்புக்காகக் கூட எங்கள் கழகத்தவர் எதிர் தாக்குதல்
செய்யவில்லை 
விடுதலை 22.2.1948
கிறித்தவர்கள் மதத்தின் பெயரால் செலவழிக்கும் பொருளில் ஓரளவு மக்களுடைய கல்விக்கும் மருத்துவ உதவிக்கும் செலவழித்து வருவதை நாம் பார்க்கிறோம் . ஆனால் இந்துக்கள் தங்கள் மதத்தின் பெயரால்
செலவிடுவதில் ஒரு காசு கூட ஏழைகளுக்குப் பயன் படுவதில்லை . நாட்டின் 
நன்மைக்கும்  பயன்படுவதில்லை என்பதே உண்மையாகும் 

குடி அரசு 15.10.1949
ஒரு கிறித்தவனிடமோ ஒரு இசுலாமியரிடமோ இருக்கின்ற
'மன இளக்கம் ' -மனிதனை மனிதனாக மதிக்கின்ற தன்மை
இன அன்பு ,உதவி , இந்து என்பவனிடம் இல்லை
விடுதலை 3.8.1956
கடவுளைப் பற்றி , அதாவது கடவுள் என்றால் என்ன என்பது  பற்றி ஆஸ்திகனாவது அல்லது கடவுள் தன்மைகள் பெற்ற பெரியவர்களாவது விளக்கினவர்கள் இல்லை
நம் நாட்டு அரசியல் மேதாவிகளும் இப்படித்தான் . அதாவது
பூகம்பத்தால் விளையும் கேடுகளும் வெள்ளத்தாலும் நெருப்பாலும் ஏற்படும் கொடுமைகளும் கடவுள் கோபத்தால் ஏற்பட்ட விளைவு என்று சொல்லி மக்களை மிரட்டுகிறார்கள்
புதிய உலகம் தனக்கென்று சட்டங்கள் செய்து கொள்ள வேண்டும் குற்றங்கள் பற்றியும் பலவந்தத்தை பற்றியும் பயப்பட வேண்டாம் மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் மண  வாழ்க்கை தொடர்பாக  சமூகம் தன் நலங்களை பாதுகாத்துக் கொள்ளும் தனிப்பட்ட
ஆட்களின் செயல்களை கோவில்கள் அடக்கி ஆள முடியாது
 இனி வருங்காலத்தில் அது பற்றிய உண்மையை நாம் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும் , து ஒரு பெரிய விஷயம்  மதப் பற்று மனிதனுக்கு இயற்கையல்ல என்பதை கண்டு பிடித்தோம்
அநேகர்  மதத்தை விட்டு விட்டார்கள மதப் புத்தகத்தை யாரும் படிப்பதில்லை
.நமது புத்தகங்களிலும் செய்தித் தாள்களிலும் மதக் குறிப்புகள்
 காணப்படுவதில்லை  
விடுதலை 18.8.1972
எல்லா மதத்துக்குமே ஒரு கடவுள் உண்டு ;மேல் உலகமுண்டு மோட்ச நரகமுண்டு ;ஆத்மா  உண்டு 
எல்லா மதங்களிலும் ஏழை - பணக்காரன் இருக்கிறார்கள்
எசமான் -கூலியாள் இருக்கிறார்கள் உத்சவம் பண்டிகை இருக்கின்றன   இந்தியாவில் 10 கோடி இசுலாமியர்கள் இருக்கிறார்கள் 1 கோடி கிறித்தவர்கள்
இருக்கிறார்கள் சுமார் 10 கோடி வைணவர்கள்  இருக்கிறார்கள் 5 கோடி சைவர்கள்
இருக்கிறார்கள்
விடுதலை 9.2.1948
கடவுளுக்கு ஒன்றும் வேண்டியதில்லை எனும் முட்டாள்கள்
அந்தக் கடவுளுக்கு சோறு ,பெண்டாட்டி வைப்பாட்டி  முதலியவைகளை அமைக்கிறார்கள்
எதற்காக இந்து எதற்காக கிறித்தவம் எதற்காக இசுலாம்
முதலிய மதங்கள் வேண்டும் ? இவைகளுக்கு தனித்தனி
வேதம் ,வேஷம் செய்கைகள் முதலியவை எதற்காக
இவைகளால் பிரிவினை உணர்ச்சியல்லாமல் வேறென்ன
நன்மை


விடுதலை  18.10/1972.

Thursday, March 23, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - சாதி

பெரியாரின் பேச்சுக்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட
கட்டுரைகளிலிருந்தும்' பெரியார் இன்றும் என்றும் '
என்கிற தலைப்பில் விடியல் பதிப்பகம் வெளியிட்டிருக்கும்
நூலில் இருந்து எடுக்கப்பட்ட தொகுப்பு இது.
பெரியார் சொல்கிறார்  அவரது தொண்டு சாதி ஒழிப்புத்
தொண்டுதான் என்றாலும் அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள் ,மதம் ,சாஸ்திரம் பார்ப்பன ஒழிப்பு பிரச்சாரமாகத் தான் முடிகிறது கரணியத்தோடு
நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத் தவிர மற்ற
சாதியர்கள் தாழ்ந்தவர்கள் . கீழ் மேல் சாதிக் கலப்பு
என்று சொல்லும்படியான இழிவுத் தன்மையில் பிறந்தவர்கள்
என்பதும் நமது சாதித் தத்துவமாக இருக்கிறது
ஜபம் ,தவசு ,தீர்த்த யாத்திரை ,சன்யாசம் ,கடவுள் தோத்திரம் ,ஆராதனை இந்தக் காரியங்கள் பெண்களும் சூத்திரர்களும்
ஒரு போதும் செய்யக் கூடாது
சூத்திரன் சமஸ்கிருதம் படிக்கக் கூடாது
மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலம்
தொட்டே இந்த நாட்டில் கீழ் சாதி -மேல் சாதி
உணர்ச்சி தோன்றி விட்டது
100 க்கு 3 பேர்களால் 100 க்கு 97 பேர்கள் மீது
சுமத்தப் பட்டிருக்கும் சூத்திரப் பட்டம்
ஒழிக்கப் பட முடிந்ததா
தீண்டாமை ஒழிப்புக்கோ சாதி ஒழிப்புக்கோ
முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும்
ஒருவர் பின் ஒருவர் நிற்கும் வரிசையில் தேவேந்திர
குல வேளாளர் கடைசியில் நிற்கிறார்கள்
சூத்திரர்  என்பவர்களோ பார்ப்பானின் வைப்பாட்டி
மக்கள் என்று அமைக்கப் பட்டு விட்டது
சாப்பிடுவதற்கு இரண்டு பாகங்கள் இருக்கின்றன
ஒன்றில் பார்ப்பான் சாப்பிடுவதற்கும் இன்னொன்றில்
சத்திரியன் ,வைசியன் சூத்திரன் எல்லோரும்
சாப்பிடுவதற்கும் இருக்கின்றன
சாதி மரத்தையும் ,மத மரத்தையும் சேர்த்து
நெருப்பு வைக்க வேண்டும்
மனிதன் மலத்தைக் காலில் மிதித்து விட்டால் அந்தக் காலை மட்டும் தண்ணீர் விட்டுக் கழுவி விட்டால் அந்தக் குற்றம் போய் விடுவதாக கருதப்படுகிறது .ஒரு மனிதனை இன்னொரு மனிதன் தொட்டுவிட்டால் அதனால் ஏற்பட்ட தோஷம் அவன் தன் உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளித்தால்  ஒழியப் போவதில்லை என்கிறார்கள்
மலத்தை விட மனிதன் எவ்வளவு  கேவலமாக மதிக்கப் 
படுகிறான் என்று பாருங்கள்
படையாச்சி ,பிள்ளை ,கவுண்டர் ,நாயுடு ,பறையன் ,
சக்கிலி என்பவர்கள் எல்லாம் ஒரே சாதி தான் ;
அதாவது சூத்திரர்கள் தாம்
சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி ,உடை ,பூணூல் ,முதலிய
சின்னங்களையெல்லாம் சட்ட பூர்வமாக தடுக்க வேண்டும்
அவ்வாறு செய்தால் சாதிகள் ஒழியும்
இந்து மதம் ஒழிந்தால் சாதி ஒழியும் ; அதே நேரத்தில்
பார்ப்பனீயமும் ஒழிந்து போகும்
கருப்பு உடை அணியக் கரணியம் நாம் இப்போது இழி சாதி மக்களாகவும் ,சூத்திரர்களாகவும் ,தாழ்த்தப் பட்டிருக்கிறோம் என்ற இழிவை உணர்த்துவதற்காகத்தான் கொடியின் நடுவில்
உள்ள சிவப்பு நாம் அந்த இழிவிலிருந்து மீண்டு வருகிறோம்
என்பதைக் காட்டுகிறது
யோக்கியமான ஜனநாயகம் இருக்குமானால் ஷெட்யூல் வகுப்புக்கு  18% இடங்கள்   என்று ஒதுக்கி இருக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதே
மானம் உடையவனுக்கு மனிதன் என்று பெயர் . மானமும்
அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கிறோம்
நம் முன்னோர்கள் ஆன அரசர்கள் எல்லாம் சாதியை
காப்பாற்றினார்கள் சாதியை காப்பாற்றித் தான்  புகழ் 
பெற்றார்கள்  சாதியைக் காப்பாற்றுகிற கடவுளைத்தானே நாம் கும்பிடுகிறோம்
நாம் கும்பிடுற கடவுள் சாதியை காப்பாற்றுகிற கடவுள் அல்ல  என்று
யாராவது சொல்லட்டுமே
சுய ராஜ்யம் என்பது சாதி ,மதம் ,தர்மம் இவைகளை
காப்பாற்றுவது தானே
நம் கடவுள்            -    சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம்              -    சாதி காப்பாற்றும் மதம்     
நம் அரசாங்கம்                -    சாதி காப்பாற்றும் அரசாங்க,ம்
நம் இலக்கியம்              -     சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி             -     சாதி காப்பாற்றும்  மொழி
ஒரு இராஜாவும் பள்ளிக்கூடம் கட்டியதாகக்காணோம்
பார்ப்பனர்களுக்கு       பாடசாலை கட்டியிருக்கிறார்கள்
எங்கே இருக்கிறது சாதி -பலாத்காரத்தில்
மனிதனை அடக்கச்சாதி இருக்கிறதே
தவிரஇயற்கையில் எங்கே இருக்கிறது       
அரசியல் சட்டத்தை எழுதிய ஆறு பேர்களில்
நாலுபேர் பார்ப்பனர்கள் என்கிறார் பெரியார்
நான் ஏன் தாழ்ந்தசாதி என்று கேட்கஉரிமை
இல்லைஎன்றால் இது    என்ன   சுயராஜ்யம்
அரசியல்சட்டத்தில் இந்து மதத்திற்குப் பாதுகாப்பு   அளிக்கப்
பட்டிருக்கிறது இந்துமதத்தில் சாதிக்குப் பாதுகாப்பு   இருக்கிறது இதைதிருத்தி அமைக்க சாதி ஒழிப்புக் காரருக்குவசதி  இல்லை
வாய்ப்பும்இல்லை (368 வது பிரிவைப் படியுங்கள்)
சட்டத்தைக் கொழுத்திச் சாம்பலைசட்டம் செய்த
மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள் 
என்னை இப்பொழுது நீதிமன்றத்தில் நடைபெறும்
வழக்கில் என்னை நீண்டநாள் தண்டனை வழங்கி 
விடுவதால் பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ 
நிலை குலைந்து விடுவதற்கோ   ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்செய்தியை வரவேற்க   வேண்டும் 
இந்த அரசியல் கொடி உனக்குப் பிடிக்கவில்லையானால்
நாட்டைவிட்டு வெளியேறி விடு என்று பேசியிருக்கிறார்
பண்டித ஜவஹர்லால் நேரு ; அவர் என்ன சாதி பார்ப்பன
புரோகித சாதி ; எந்த நிலையில் என்றால் இந்திய தலைமை
அமைச்சர் என்கிற நிலையில்
பெரியார்     நீதிமன்ற வாக்குமூலம்:
இந்த ஆட்சி கொடுமையான காட்டுமிராண்டிஆட்சி ;
அதாவது பச்சைப் பார்ப்பான் நீதி, நேர்மை அன்பு
அறிவு அற்ற கொடும் காட்டுமிராண்டி பார்ப்பனப்
பாதகர்கள் ஆட்சி    
பார்ப்பன வழக்கறிஞர்களை புறக்கணிக்க வேண்டும்
அவர்களிடம் எந்த வணிக தொடர்பும் வைத்துக் கொள்ளக்
கூடாது ;அவர்களின் உணவகங்களுக்கு அறவேசெல்லக்  கூடாது
என் பிறவி காரணமாகஎன் இன இழிவிற்குக் காரணமாக
இருக்கும் சாதியை ஒழிப்பதும்என் இன மக்களாகிய தமிழர்களுடையவும்
என் தாய் நாடான தமிழ் நாட்டைப் பனியா பார்ப்பனர்களின் அடிமைத்    தளையிலிருந்தும் சுரண்டலிருந்தும்    மீட்டு சுதந்திரமாக வாழ வைக்கவழி
 செய்வதுமான தனித் தமிழ் நாடு   பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்
சாதி ஒழிப்பிற்காக ஒரே நாளில்   3500- 4000 பேர்கள் சிறை
சென்றதும் நமது கழகம் ஒன்றில் தான்