Sunday, November 30, 2014

இரங்கற் பா

பிறந்தது பெரியகுளம் ஆனாலும்

காரைக்குடி அரசர்  

நம்   கவியரசர்

தன் பணி மறந்தபோதும் தவறாமல்

தமிழ்ப்பணி முடி அரசர்

சிந்தனை


சிந்தனை ஒரு ஏற்பாடல்ல ;

சிந்திக்கிறவனுக்குள் ஏற்படும் சிலிர்ப்பு ;

சிலிர்ப்பின் வெளிப்பாடு;

எழுத்தும் பேச்சும்

அந்த வெளிப்பாட்டை

 உணர்த்தும் ஒளிக்கீற்றுகள்!

சமூகத்துக்கான சிந்தனை மலரட்டும்.


Tuesday, November 25, 2014

6. வாழ்க்கைத்துணைநலம்

"மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான் .
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை ."

நல்லதம்பி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஓய்வுஊதியம் 25000 அளவில்தான் இருக்கும். வேறு வருமானம் கிடையாது. ஆனாலும் மனோன்மணி கணவருக்கு கிடைக்கும் வருவாயில் குடும்பத்தை சிறப்புற நடத்தும் பெண்மணி ஆவார்.

Sunday, November 23, 2014

தொகுதி - 1

தொகுதி - 1

1. Paper – தாள்  

2. Pen - பேனா

3. Marks - மதிப்பெண்கள்

4. School - பள்ளிக்கூடம்

5. Class - வகுப்பு

6. College  - கல்லூரி

7. Mobile - கைபேசி

8. Internet - இணையம்

9. Chair - நாற்காலி

10. Table -  மேசை



 .





Friday, November 21, 2014

5. இல்வாழ்க்கை

" இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
  நல்லாற்றின் நின்ற துணை ."

மணிவண்ணன் நெல்லை  மாநகரில் துணிக்கடை நடத்திவரும் ஒரு வணிகர். அவருடைய கடையில் பத்துப்பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு நல்ல ஊதியம் கொடுப்பதால் அவர்கள் அடிக்கடி கடைமாறிச் செல்வதில்லை . வருவாயைக் கணக்கிட்டு வருமான வரி கட்டிவிடும் நேர்மையாளர். புத்தாண்டு , பொங்கல் போன்ற விழாக்காலங்களில் தள்ளுபடி கொடுப்பதால் கூடுதல் விற்பனை கிடைக்கும் .

அவருடைய பெற்றோர் இருவரிடமும் பேரன்பு உடையவர் . அவர்கள் விரும்புவதைத் தக்க நேரத்தில் வாங்கிக் கொடுப்பார் . முகம் கோணாமல் நடந்து கொள்வார். முதுமை கரணியமாக ஏற்படும் சிக்கல்களுக்கு மருத்துவரிடம் அழைத்துச் சென்று தீர்வு காண்பார்.

Thursday, November 20, 2014

4. அறன் சிறப்பு

“அழுக்காறு அவா  வெகுளி  இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் ."

தமிழாசிரியர் பொன்னம்பலம் மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்கிறபோது , வள்ளுவர் பொறாமை , பேராசை , கொடுஞ்சினம் , கடும்சொல் நான்கும் விலக்கி வாழ்வதே அறம் என்று சொல்லிருப்பதைச் சுட்டிக்காட்டினர். அறிவியல் கோட்பாடுகளுக்கு வரையறை (definition) சொல்வதைப்போல் இருக்கிறது என்றார்.

3. துறந்தார் சிறப்பு

" செயற்கரிய  செய்வார்  பெரியர் சிறியர்
 செயற்கரிய செய்கலாதார் . "  

தமிழாசிரியர் பொன்னம்பலம் நல்ல புலமையும் உலக அறிவும் உடையவர்.மேற்கண்ட குறளுக்கு விளக்கம் சொல்லும்போது மாணவர்கள்  செயற்கரிய செய்த பெரியர் ஒருவரைச் சொல்லுங்களேன் என்று கேட்டனர்.ஏன் நம் பெரியாரையே எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

ஈரோடு   வெங்கட்ட நாயக்கரின் மகன் இராமசாமி வைதீகத்தில்   திளைத்த செல்வக்குடும்பத்தில் பிறந்தார்.இளம் வயதில் குறும்புக்காரர் . வீட்டுக்கு வரும் வைதீகப் பண்டிதர்களிடம் வாதம் செய்து அவர்கள் தவறு என்ற  அடிப்படை  அறிவை வளர்த்துக்கொண்டார். காலப்போக்கில் வேத, புராண, இதிகாசங்களைப்  படித்துக் கடவுள்  இல்லவே இல்லை என்கிற முடிவுக்கு வந்தார். கடவுளோடு மதமும் ,மதத்தோடு சாதியும் பின்னிப் பிணைந்திருப்பத்தைக் கண்டார் .கடவுள், மதம் ,சாதி மூன்றையும் ஒழிக்கப் பாடுபட்டார்.

2. வான்சிறப்பு

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்  துப்பார்க்குத்
 துப்பாய தூஉம் மழை” .

 பாவலர் சமூகப்பணிகளில்  ஆர்வம் உடையவர் .தன்னாலியன்ற தொண்டறத்தைச்
சமூகத்திற்கு ஆற்றும் இயல்பினர் . ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரங்களில்
திருக்குறள் வகுப்பு நடத்துவது அவருடைய பணிகளில் ஒன்று .இளைஞர்கள்
குறளின் பொருளைத் தெரிந்து கொள்வதோடு வினாக்களை எழுப்பித் தங்கள்
அய்யங்களையும் போக்கிக்கொள்வர் .

விழிகள்

கருப்பு வெள்ளை   சீருடை அணிந்து

விழிப்புடன்  இருப்பார் - "விழிகள் " அவர் பெயர்

குளத்தில் மீனாய்க் குதிக்கும்  விழிகள்

முகத்தில் பதித்த 'சிமிட்டல் ' விளக்குகள்

அந்தியில் வாடி வைகறை மலரும்

அரும்பிலா மலர்கள் ; நெற்றிப்பந்தரில்

நாட்டியம் ஆடிடும் மாதவி மகளிர்

நதிகள்

மேகப்பிழிவு மழையாகும் ; அந்த

மழையின் தொகுப்பு நதியாகும்

நதிகள் ஓடி உணவாகும் ; அந்த

உணவில் உயிர்கள் பயிராகும்

நதிகள் பயிர்களுக்குத் தாய்ப்பால்

அவை பூமிப்பெண்ணின் நரைகள்.

இல்லை, பூமித் தாயின் ரத்த நாளங்கள்

சுற்றிக்களைத்த பூமியின் வியர்வை

1. அறத்துப்பால் - அறிவன் சிறப்பு (கடவுள் வாழ்த்து )

நல்லூர் நெல்லைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர் .அந்த ஊரில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை நன்கு கற்றவர் பாவலர் .அவர் வாலறிவர்; மக்கள் மனங்களில் பொருந்தியிருக்கும் சான்றோர்; வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர்; ஐம்பொறிகளை அடக்கியவர் ; தனக்குவமை இல்லாதவர் ;அறக்கடலாக விளங்குபவர்; எண்ணிலடங்கா நல்ல பண்புகளை உடையவர் ;பிறவிப்பெருங்கடலைக் கடக்கத் துணையாக நிற்பவர்.