Friday, September 30, 2016

தந்தை பெரியார் கவிதை - நடிகவேள்

மெட்ராஸ் ராஜகோபால  ராதாகிருஷ்ணன்
(MADRAS RAJAGOPALA RADHAKRISHNAN)               
எம் ஆர்  ராதா  என்று அழைக்கப்பட்டார்
நல்ல நாத்திகர்.   கொண்டிருந்தார் ஈடுபாடு
பெரியாரின்  சுயமரியாதை  இயக்கத்தில்
நடித்த நாடகங்களோ 5000 க்கு மேல்
நடித்தார் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்
நடிகவேள் பட்டம் பெற்றார்
இரத்தக் கண்ணீர் புகழ்  பெற்றது

திருச்சியில் திராவிடர் கழக மாகாண மாநாட்டில்
29.9.1945 ல்  பெரியார் தலைமையில்
நடைபெற்றது நடிகவேள் எம் ஆர் ராதாவின்
போர்வாள்  நாடகம் கண்டு களித்ததோ  இலட்சம் பேர்



11.5.1946 மற்றும் 12.5.1946 ஆகிய நாட்களில்
மாகாண  முதலாவது கருப்புச்சட்டைப்படை
மாநாடு நடைபெற்றது மதுரையில்
அமைக்கப் பட்டது பெரிய பந்தல்
வைகைப் பாலத்தின் கீழே
தொடர்வண்டி நிலையத்திலிருந்து
ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்
தலைவர்கள்  மாநாட்டுப் பந்தலுக்கு

20000 கருஞ்சட்டைத் தொண்டர்கள் அணிவகுக்க
எம் ஆர் ராதாவும் பாவலர் பாலசுந்தரமும்
இராணுவ கருப்புச்சட்டை உடையில்
குதிரை மீது அமர்ந்து அணிவகுப்பை நடத்தினார்கள்
இரட்டைக் குதிரை பூட்டிய வண்டியில்
வந்தனர் பெரியார் , அண்ணா  மற்றும்  முன்னணித்
தலைவர்கள் முதல்நாள் மாநாட்டிற்குப் பெரியார்
தலைமை தாங்கினார்.  அண்ணா விளக்கினார் திராவிடநாடு
பிரிவினைத் திட்டத்தை. கருப்புச்சட்டைப் படை
அமைக்கப் பட்டதின் நோக்கத்தை எடுத்துரைத்தார் சம்பத்.
சுயமரியாதை இயக்கத் தத்துவத்தை எடுத்துரைத்தார்
அழகிரிசாமி . காலிகள் நடத்தினர் கலகம்
வைத்தனர் நெருப்பு மாநாட்டுப் பந்தலுக்கு
இரண்டாம்  நாள் மதுரை காங்கிரஸ்
தலைவர் வைத்தியநாத அய்யர் தூண்டுதலால்

திருவாரூரில்  8.8.1946 அன்று பெரியார் பார்வையிட்டார்
1000 கருஞ்சட்டைப் படை அணிவகுப்பை
ராதா தாங்கினார் தலைமை கருஞ்சட்டையில்
குதிரை  மேல் அமர்ந்து 15000 மக்கள் கொண்ட ஊர்வலத்துக்கு

23.10.1948 அன்று நடைபெற்றது நடிகவேளின் நாடகம்
திராவிடர் கழக 19 வது மாகாண சிறப்பு மாநாட்டில் ஈரோட்டில்

7.8.1949 அன்று திருச்சி மாவட்ட19 வது  மாநாட்டில்

நடிகவேள் ஆற்றினார் உரை திருச்சியில்

Friday, September 23, 2016


தந்தை பெரியார் கவிதை - கலைவாணர்

நாகர்கோவில் சுடலைமுத்து கிருட்டிணன்
பெற்றார் புகழ் கலைவாணராக
வில்லுப்பாட்டு,நாடகம் ,திரைப்படம்
என எல்லாவற்றிலும் பதித்தார் முத்திரை
சிரிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும்
உரியன வசனங்களும் பாடல்களும்
நடித்தார் 150 படங்களுக்கு மேல்
சிவகவி, ராஜாராணி ,மணமகள்  போன்ற படங்கள்
சேர்த்தன புகழ் அவருக்கு பொருளும் சேர்ந்தது
ஆனார் வாரிக் கொடுக்கும் வள்ளலாக
மணந்தார் நடிகை மதுரத்தை

கலைஞர் கட்டினார் கலைவாணர் அரங்கம் சென்னையில்
நடைபெற்றது கலைவாணரின் கிந்தனார்
இசை  நிகழ்ச்சி 3.9.1944 அன்று
ஈரோட்டில் திராவிடர்கழகக் கட்டிடம் கட்டுவதற்காக
பெரியார்  புகழ்ந்தார்  கிருட்டிணன் ஒரு மேதாவி ,வள்ளல் ,
பொது நலத்திற்கு உதவுபவர் ,புரட்சியாளர் என்று
அணிவித்தார் பொற்சங்கிலியும் பதக்கமும்
வழங்கினார் தனியாக ஒரு பொன் பதக்கம்

1.11.1944ல் பெரியார் சென்றார் கிருட்டிணன்
குழுவினர் நடித்த இழந்த காதல் நாடகத்துக்கு
நாடக ரசபாவங்களை விளக்கிய பெரியார்
நாடகப் புரட்சி பற்றிய வரலாறு எழுதப் படும்
போது கிருட்டிணன் படம் அட்டைப் பக்கத்தில்
இருக்க வேண்டும் என்றார் 

பொறாமைக்காரர்கள்  பின்னினர் சதிவலை
கிருட்டிணனையும் எம். கே. தியாகராஜ பாகவதரையும்
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் சிக்க வைக்க
பெற்றனர்  வெற்றி செய்யாத குற்றத்திற்கு ஆயுள்
தண்டனை வாங்கிக் கொடுப்பதில்

பெரியார் சென்றார் சிறைக்கு
கொடுத்தார் ரூபாய் 10000 வழக்குச்செலவுக்கு
3.11.1945 ல்  குடிஅரசு இதழில் எழுதினார்
தலையங்கம் 14 வருட கடுங்காவல்
விதிக்கப்பட்ட போது அய்யோ கிருட்டிணா
உனக்கா இந்த கதி என்று

பெரியார் எழுதினார் துணைத் தலையங்கம்
10.11.1945ல் கிருட்டிணன்-பாகவதர் விடுதலை
முயற்சிக்கு ஒவ்வொருவரும் ஒரு ரூபாய்
வீதம்  ரூபாய் 50000 திரட்ட வேண்டும்  என்று
நாடெங்கும் நடத்தப் பட்டன கூட்டங்கள்
அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும்
தீர்மானங்களை நிறைவேற்றி
கிருட்டிணன்-பாகவதரை விடுதலை செய்ய
வேண்டுமென்று

பெரியார் தலையங்கம் 15.6.1946 விடுதலை  இதழில்
கிருட்டிணன்,பாகவதர் பிணையல் மனுப்  போட வேண்டும்
அரசு அதைக் கவனிக்க வேண்டும் கருணைக் கண்களுடன் என்று
விடுதலை  இதழ் தலையங்கம் 25.4.1947 அன்று
கிருட்டிணன் -பாகவதர் விடுதலை
உண்மை பெற்றது வெற்றி என்று

கலைவாணர் கலந்து கொண்டார்  15.1.1949 அன்று
பெரியார் சென்னையில் நடத்திய திருக்குறள்  மாநாட்டில் 


பட்டுக்கோட்டை அழகிரி குடும்பத்துக்கு
நிதி அளிப்பு விழா நடைபெற்றது தஞ்சையில்
அண்ணா தலைமையில் 29.5.1949 அன்று
அழகிரி குடும்பக் கடனோ ரூபாய் 6000
ஆனால் வசூலானதோ 3500 ரூபாய் மட்டுமே
கலைவாணர் வழங்கினார் 6000 ரூபாய்
தன் சொந்தப் பொறுப்பிலிருந்து 2500 ரூபாய்
சேர்த்து விழாவில் ,பாவேந்தர், கலைஞர் போன்றோர்
கலந்து கொண்டனர்  

   

Sunday, September 18, 2016

தந்தை பெரியார் கவிதைகள் - திரு.வி .க

திருவாரூர்  விருதாச்சல கல்யாணசுந்தரம்
திரு.வி.க  என்றே அழைக்கப்பட்டார்
கற்றார்  தமிழ்  மறைமலை அடிகளிடமும்
யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளையிடமும்

தொடங்கினார் தொழிற்சங்கம் 1918 ல்
நவசக்தி வார ஏட்டை தோற்றுவித்தார் 1920 ல்
நாணயமிக்கவர்; கிடையாது
சொந்த வீடு கூட.  எழுதினார் நூல்கள்
50 க்கும்  மேல் அவற்றுள்
பெண்ணின் பெருமை,முருகன் அல்லது அழகு ,
மனித  வாழ்க்கையும் காந்தியடிகளும்
சிறந்தன .  இருந்தார் அவர் 1926 ல்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக

ஆற்றினார்  பணி ஆசிரியராக
வெஸ்லி கல்லூரியில் சில ஆண்டுகள்


தமிழ்  உலகம் போற்றியது
திரு .வி.க வைத் தமிழ்த் தென்றல் என்று

பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்
சிறை  சென்ற போது
9.12.1938 அன்று திரு. வி.க. எழுதினார்
தலையங்கம் நவசக்தி யில்
"சிறப்பறவை யாகிய இராமசாமி நாயக்கர்
வரலாற்றை விரித்துக்கூற வேண்டியதில்லை.
அவர்தம் வரலாற்றில் அறியக் கிடக்கும் 
நுட்பங்கள் பல உண்டு .அவற்றில் சிறப்பாகக் '
குறிக்கத் தக்கன, இடையறா ச்சேவை ,
சமத்துவ நோக்கம்,சுதந்திரஉணர்ச்சி ,நட்புரிமை ,
தாட்சண்யமின்மை ,உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசாமை ,அஞ்சாமை ,ஊக்கம்
சோர்வின்மை, சலிப்பின்மை,எடுத்த வினையை
முடிக்கும் திறன் ,கரவு -சூழ்ச்சியின்மை முதலியன .
இவை அவர்தம் வாழ்வாக அரும்பி ,மலர்ந்து ,காய்த்து ,
கனிந்து நிற்கின்றன .இந்நீர்மைகள் திரு.நாயக்கரை
அடிக்கடி சிறை புகச் செய்கின்றன போலும்
இது காட்டுகிறது திரு.வி.க.வின் அழகிய
உரைநடையையும் பெரியார் பற்றிய
அவரின் உயர்ந்த எண்ணத்தையும்.

திரு.வி.க..60 அகவையை அடைந்தபோது
அமைக்கப் பட்டது மணிவிழாக் கழகம்
பெரியார் எழுதினார் துணைத் தலையங்கம்
விடுதலையில் அதை வரவேற்று.
மணி விழா நாளன்று வெளியிட்டார் பெரியார்
விடுதலை முதல் பக்கத்தில் திரு.வி.க.வாழ்க்கை
வரலாற்றையும் ஆற்று மணலினும் அதிகநாள் வாழ்க
என்ற தலையங்கத்தையும்
அன்றைய விடுதலையை திரு.வி.க. மணி  மலர்
என்று பெயரிட்டு பெருமைப் படுத்தினார் பெரியார்.

திரு.வி.க  சூட்டினார் வைக்கம் வீரர் என்கிற பட்டத்தைப்
பெரியாருக்கு திரு.வி.கசொன்னார் எனக்குப்
பெண்டு ,பிள்ளைகள் இல்லை ,நான் செத்துப் போனால்
எனக்காக ஆளுகின்ற ஒரு நண்பர் இருந்தால்  அது
பெரியாராகத்தான் இருக்க முடியும் இந்த நாட்டில்
நல்ல செயல்கள் செய்தவர் பெரியார் ஒருவர்தான்

எங்கள் இருவருக்கும் தொழிலாளர் பிரச்சினையில்
எந்த வேற்றுமையும் இல்லை என்றார்.

1948ல் திராவிடர் கழகம் கொண்டாடியது
பொங்கல்  விழா வ. உ .சிதம்பரனார் பந்தலில்
நான் முதலில் தமிழன்,பிறகு இந்தியன் மூன்றாவதாக
உலகத்தவன் என்றார் திரு.வி.க.
 
எழுச்சி உரை ஆற்றினார் திரு.வி.க.
வ .உ .சி  படத்தை திறந்து வைத்து
மதுரை மாவட்ட முதலாவது தி.க. மாநாட்டில்

மறைமலை அடிகள் தலைமையில் நடைபெற்ற
இந்தி எதிர்ப்பமாநாட்டில் எழுச்சியுரை
ஆற்றினார் திரு.வி.க.பெரியார் ,அண்ணா
பாவேந்தர் ஆகியோருடன்

22.8.1948 அன்று நடைபெற்றது இந்தி
எதிர்ப்புக் கூட்டம் திரு.வி.க.தலைமையில்
லட்சம் பேர் கலந்து கொண்டனர் .


15.1.1949 மற்றும் 16.1.1949 ஆகிய நாட்களில்
நடைபெற்றது திருக்குறள் மாநாடு சென்னையில்
பெரியார் விடுத்தார் வேண்டுகோள்
திரு.வி.க. கலந்து கொண்டு உரையாற்றினார்.

22.3.1949 அன்று பெரியார் உரையாற்றினார்
திருவள்ளுவர் உள்ளம் பற்றி பச்சையப்பன்
கல்லூரியில் திரு.வி..க. தலைமையில்   


Saturday, September 17, 2016

எஸ்.பி .செல்வமணி 78 - இரங்கல் கவிதை

பெரியாரின்    சுயமரியாதை இயக்கத்தில்  ஈடுபாடு
கொண்ட காரைக்குடி இராம சுப்பையா - விசாலாட்சியின்
சமதர்ம இல்லத்தில்  22.3.1939..ல் தோன்றினீர்கள்
சுயமரியாதை  வீரர் சர் ஏ .டி .பன்னீர் செல்வத்தின்
நினைவாக செல்வமணி என்று பெயர் சூட்டினார்கள்
சமதர்ம இல்லத்தில் இரண்டு வயதில் இறந்து போன
இலெனின் மாமாவையும் இல்லறம் ஏற்று இரண்டு
பிள்ளை களையும் பெற்றுவிட்டு 1974ல் இறந்து
போன இந்திரா சித்தியையும்  சேர்த்து எட்டு
விழுதுகள் அதில் நீங்கள் நான்காவது  விழுது

படித்தீர்கள் மீ .சு .பள்ளியில்
பெற்றீர்கள்  பட்டயம் அழகப்பர் பல்தொழில் பயிலகத்தில்
ஆற்றி னீர்கள் அரசுப்பணி பட்டுக்கோட்டையில்
நெய்வேலியிலும் பணியாற்றினீர்கள்
மீண்டும் வந்தீர்கள் சென்னை பொதுப்பணித் துறைக்கு
தலைமைப் பொறியாளர் பாராட்டும் படி நடந்தீர்கள் 
ஊழல் மட்டும் செய்ததில்லை

அத்தையோ ஆத்தங்குடி ஆறுமுக நாவலர்
பள்ளி, சிதம்பரத்தில் படித்தார்கள்
1964 ல் இல்லறம் ஏற்றீர்கள்
தமிழாசிரியை . பெற்றார்கள்  நல்லாசிரியை
விருது தளபதி ஸ்டாலின் கையால்
அத்தையோ சைவம் நீங்கள் அசைவம்

பொன் இளங்கோ ,இராமசாமி ,விசாலாட்சி ,வள்ளியப்பன்
நால்வரையும்  பெற்றீர்கள் மூத்த பிள்ளைக்கு
சுயமரியாதை இயக்க  வீரர் பொன்னம்பலனார் பெயரையும்
அவர் தம்பி இளங்கோவன் பெயரையும் சேர்த்து  பெயர்  சூட்டினீர்கள்
பொன்  இளங்கோ பொறுப்பான பிள்ளை நீங்கள் இருவரும்
வேலைக்குச்செல்வதால் பார்த்துக் கொள்வான் தம்பி,தங்கைகளை
நான்கு பிள்ளைகளும் நல்ல பிள்ளைகள்


உங்களுக்கு உண்டு குடும்ப நண்பர்கள்
வடிவேலு ,வைரவசுந்தரம் ,கோவை பாலு ,கோபால் அண்ணன் ,
பொறியாளர் பெரியசாமி,ஜெயராமன் ,மருத்துவர் செல்வராஜ் 
போன்றோர் இது வள்ளுவர் சொன்னதைப் போல் நெஞ்சத்து
அகநக நட்பதான நட்பு  



எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் நேரத்துக்கு  வருவீர்கள்
அதேபோல் மற்றவர்களும் வரவேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்
எதையும் திட்டமிட்டு செய்வீர்கள் எழுதுவீர்கள் வீட்டுக் கணக்கை
உடுத்துவீர்கள் உடைகளை அழகாக எல்லா நிழற்படங்களையும் பாதுகாத்து வைத்திருப்பீர்கள்
சமதர்ம இல்ல முகநூலில் யாருடைய பிறந்த நாள்
திருமண நாள்  வந்தாலும் போடுவீர்கள் பொருத்தமான படத்தை
1964 ல்  நடைபெற்ற உங்களின் திருமண அழைப்பு
அசோக்நகர் வீடு பால் காய்ச்சும் அழைப்பு வைத்திருக்கிறீர்கள் பாதுகாத்து 

சமதர்ம  இல்ல வீட்டை பழமை மாறாமல்
புதுப்  பொலிவோடு புதுப்பித்த மாமாக்கள்
நால்வருக்கும் எங்கள் பாராட்டுக்கள்
நீங்களும் நண்பர் பாலுவும் இருந்தீர்கள்
வழிகாட்டியாக .  நல்ல இடம் பார்த்து பிள்ளைகள்
நால்வருக்கும் மணமுடித்து வைத்தீர்கள் அத்தையும்  நீங்களும்
நல்ல சம்பந்திகளை பெற்றீர்கள்
நாலில்  ஒன்று சுயமரியாதைத் திருமணம் 
பெற்றீர்கள் மூன்று நல்ல மருமகள்களும்
ஒரு நல்ல மாப்பிள்ளையும் 


உங்களுக்கு நடந்தது இரண்டு அறுவைச் சிகிச்சை
பிள்ளைகள்  கொடுத்தார்கள் உழைப்பும்  பொருளும்
காப்பாற்ற  முடியவில்லை மருத்துவர்களால்
வாங்கிய புதிய மகிழுந்தில் கூட பயணிக்கவில்லை  
78 அகவை  போதுமென்று முடித்துக்  கொண்டீர்கள்
வாழ்க்கைப் பயணத்தை.   வணக்கம் உங்களுக்கு

Sunday, September 4, 2016


தந்தை பெரியார் கவிதை - செல்வம்

சர் பன்னீர்  செல்வம்  அவர்களின்  முழுப் பெயர்
ஆரோக்கியசாமி  தாமரைச்செல்வம்  பன்னீர்செல்வம்
கேம்பிரிட்ஜ் பல்கலையின் முன்னாள் மாணவர் 
இருந்தார் தஞ்சை மாநகராட்சித்தலைவராக
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினர் கூட
தஞ்சை மாவட்டம் திருவையாறில்
இருந்தது மன்னர் மானியத்தில் நடைபெற்ற
சமற்கிருதக் கல்லூரி ஒன்று செல்வம்
உத்தரவிட்டார் தமிழும் அங்கே கற்பிக்க

அவர் இருந்தார் பொப்பிலி அரசரின் அமைச்சரவையில்
உள்துறை அமைச்சராக 1937 தேர்தலில் நீதிக் கட்சி
தோற்றது ஆனாலும் வென்ற சிலரில் அவர் ஒருவர்
சுயமரியாதை கூட்டங்களிலும் மாநாடுகளிலும்
கலந்துகொண்டு எதிரிகளுக்கு பதில் கூறி வந்தார்


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாருக்கு
சிறை தண்டணை விதிக்கப்பட்ட போது
கலங்கா நெஞ்சினர் ஆன செல்வம் கலங்கினார்
1938ல் வேலூரில் கூடிய உணர்ச்சி மிக்க
தமிழர்மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்
சிறை செல்லு முன்பே  பெரியாரால் எழுதப்பட்டிருந்த 
மாநாட்டு விரிவுரையை படித்தார் பன்னீர்செல்வம்

அரசு நியமித்தது அவரை ஆலோசகராக
இந்திய மந்திரி சபைக்கு.  பெரியார்
எழுதினார் தலையங்கம் விடுதலையில்
நமது செல்வம் என்று.   நாட்டுக்கு இன்னும்
நல்லது செய்வார் என்று பெருமைப் பட்ட
பெரியார் நீதிக் கட்சிக்கு அடித்தளமாகவும்
உதவியாகவும் இருந்தவர் இந்த நெருக்கடியான
நேரத்தில் இந்தியாவை விட்டுப் பிரிந்து
செல்கிறாரே என்று வருத்தப் பட்டார்.

ஹனிபால் ஓமான்  கடலில்  விழுந்தது
செல்வம் இங்கிலாந்துக்கு சென்ற விமானம்
பெரியார் எழுதினார் மெய் நடுங்குகிறது
எழுதக் கை ஓடவில்லை
கண்கலங்கி மறைக்கிறது கண்ணீர் எழுத்துக்களை
அழிக்கிறது என்று.  பாழாய்ப் போன உத்தியோகம்
வந்ததும் போதும் தமிழர்களைப் பரிதவிக்க
விட்டு விட்டு மறைந்து விட்டார் என்றார்.


பெரியார்.விடுத்தார் வேண்டுகோள்
தமிழர்கள் கட்ட வேண்டும் கறுப்புக் கொடி 
வீடுகளில் என்றும் அடைக்கவேண்டும்
கடைகளை என்றும் கருப்புக் கொடி ஊர்வலம்
வந்து இரங்கல் கூட்டம் நடத்தி செல்வத்தின்
தொண்டை விளக்க வேண்டும்  என்றார்.

எழுதினார் பாவேந்தர் பன்னீர் செல்வம்  பற்றி
"மேலோங்கிய விண் விமானம் உடைந்ததோ
ஒலிநீர் வெள்ளம் தூங்கிய கடல் வீழ்ந்தானோ
துயர்க்கடல் வீழ்ந்தொம் நாங்கள்  "
2.4.1940 அன்று கடைப்பிடிக்கப்பட்டது
செல்வம்   நினைவு நாள்   திருச்சியில்

பேசினார்  பெரியார்.