Saturday, December 30, 2017

குறுந்தொகை - பாடல் 40

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்   தனவே

பாடலின் பொருள் :
என் தாயும் நின் தாயும் எம்முறையில் உறவினர் ? என்
தந்தையும் நின்தந்தையும் எவ்வகையில் உறவினர் யானும்
நீயம் ஒருவரை ஒருவர் எவ்வகையில் உரியவரென அறிந்தோம்?
செந்நிலத்துப் பெய்யும் மழை நீரானது தானும் அம்மண்ணுடன் 
கலப்புற்றுச் செந்நிறமாவது போல நம்முடைய அன்பு கொண்ட
நெஞ்சங்கள் தாமே தம்மில் கலந்து ஒன்று பட்டன .
பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை
பாடலில் வரும் உவமையை வைத்து

செம்புலப் பெயல் நீரார் என்று பெயர் வைத்துள்ளனர்

குறுந்தொகை - பாடல் 38

" கான மஞ்ஞை அறையீன் முட்டை
 வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன்  வாழி - தோழி உண்கண் 
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

பாடலின் பொருள் :
கானகத்தே மயில் ஈன்ற முட்டையினை   பாறையின் கண் குரங்குக்குட்டி உருட்டும் மலை நாடனுடைய நட்பு பெரிதாகும் .மை உண்ட கண்களில் பெருகு கின்ற நீரொடு ஒரு படியாக அவன் பிரியவும் அவனை நினையாமல் இருப்பதற்கான ஆற்றலை வன்மையாகப் பெற்றவர்க்கே அது என்றும் நன்மை உடையதாகும்.


நயம் : தலைவி அடையும் துன்பத்திற்கு இரங்காமால் பழி கூறி நிற்கும் ஊர்  

Wednesday, December 20, 2017

குறுந்தொகை - பாடல் 36:

துறுக லய லது   மானை மாக்கொடி                                 
துஞ்சு களி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகளன் ஆக   நீ யலன் யான் என
நற்றொன் மணந்த ஞான்றை மற்று –அவன்
தாவா வஞ்சினம்  உரைத்தது
நோயோ - தோழி -- நின்யி னானே

பாடலின் பொருள் :
சூளுறவு பொய்த்தலால் வரும் நோயைக் குறித்துத் தொடர்புடைய
தாமே கவலைப் படாதிருக்க நீ ஏன் துன்புறு கின்றாய் என்பதாம் .நெஞ்சு
அறிய  உரைத்த சூளுறவைப் பொய்ப்பின்  தன் நெஞ்சே தன்னைச் சுடும்
என்பதனாலே அது அவனுக்கு நோயாகும்.

நயம்:
நெஞ்சு  கனமாக என்பதற்கு நின் நெஞ்சு இடமாக இருந்து என்பாரும்  உளர் .நெஞ்சு இடமாக இருத்தலில் பிரிந்த பொழுதும் தவறு இலனாகலின் அது கூறான்  என்க

பாடியவர் பரணர்

குறுந்தொகை - பாடல் 34

 “ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கவ்வை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே
முனா அது யானையங் குருகின் கானல் அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்ப இசை வேறூஉம்
குட்டுவன் மாந்தை அன்ன எம்
குழல்  விளங்கு ஆய்நுதற் கிழவனும் அவனே

பாடலின் பொருள் :
இன்னாது கேட்டுக் கலங்கிய ஊர்ப் பழி இனி மணமங்கள
ஒலியாகிய இன்னோசை கேட்டு இன்புறுமாறு அவளுக்குத்
தலைவனுடன் மணம் உறுதியாயிற்று என்பதாம்.

நயம் :கொல்லி மலையைச் சேர்ந்தவ ராதலால் அவர்க்குரிய மாந்தைப் பட்டினத்தைக் கூறினார்.

பாடலைப்  பாடியவர்  கொல்லிக் கண்ணனார்

Saturday, December 9, 2017

குறுந்தொகை - பாடல் 31

மள்ளர் குழீஇய விழவினாலும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண் தக்கோனை
யானுமோ  ராடுகள மகளே என்கைக்  
கோடீரிலங்கு  வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே

பாடலின் பொருள் :
அயலார் தலைவியை மனத்தின் பொருட்டாக வரைந்து வந்த காலத்து
தலைவி தோழிக்கு தன்னுடைய நிலையை வெளிப் படுத்துகிறாள் 
அவனோ பீடுகெழு குரிசில் மாண் தக்கோன் ;யானும் குலமகள்
எனினும் என்னைக் கைவிட்டு அவன் பிரிய அவனை நான் யாண்டும்
சென்று தேட என் தகுதியும் கெட்டு அவன் தகுதியும் கெட நேர்ந்ததன்றி
அவனை எவ்விடத்தும் கண்டிலன் என்கின்றாள்

நயம் :
தலைவனை தகுதி கேட்டுத் தேடியும் எங்கும் கண்டிலள் என்கிறாள் 

பாடலைப் பாடியவர் ஆதி மந்தியார்

குறுந்தொகை - பாடல் 29

நல்லுரை இகந்து புல்லுரைத் தா அய்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள  நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 
பெரிதா லம்மநின் பூசலுயர் கோட்டு
மகவுடை மந்தி போல
பெரிதாலம்மநின் பூசலுயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அக னுறத் தழீஇக் கேட்கு நர்ப்பெறினே

பாடலின் பொருள் :
அங்ஙனம்     பூசலை அகனுறத் தழுவிக் கேட்பாரின்மையின் உள்பூசல்
பயனின்றாகும் என்பது கருத்து . தன் விருப்பத்திற்கிணங்கி இரவுக் குறியில்
வர உடன் படுதல் .இரவுக்குறி மறுத்தல் .ஆசை வெள்ளத்திற்கும் ,அதனைத்
தாங்காது உருகும் பசு மட் கலத்திற்கும் உவமை . 
நயம் : தண்ணீர் பட்டவு டன்  உருகி அழிதலின் எண்ணியவுடனே  உருகும் உள்ளத்திற்கு உவமையாக்கினாள்

படலைப் பாடியவர் அவ்வையார்




Thursday, November 30, 2017

குறுந்தொகை - *பாடல் 28

" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல் பாடல் 28
" மூட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்
ஓரெஆன் யானும் மோர் பெற்றி மேலிட்டு
' ஆ அ; ஒல்' லெனக் கூவுவேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்ப வென்
 உயவுநோய் யறியாது துஞ்சும் ஊர்க்கே

பாடலின்  பொருள்  :சுழல்கின்ற வடைக் காற்று வருந்தா நிற்ப
என் காம நோய் அறியாது இனிது துயில்கின்ற இவ்வூரின் கண்
: அவர் அறியுமாறு  மூளச் செய்து அறிவிப்பேனா முழக்கம் உண்டாகும்படி கூப்பிடுவேனோ 
      
நயம் : மன ,மொழி மெய்களால் முயன்று இவ்வூருக்கு
அறிவிப்பேனோ என்றவாறு
பாடலைப் பாடியவர் அவ்வையார் 







குறுந்தொகை - பாடல் 26

" அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கெழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரிற்  தோன்று நாடன்
தகா அன் போலத் தான் தீது மொழியினுந் 
தன்கண்  கண்டது பொய்க்குவது  தன்றே
 தேக்கொக்  கருந்து முள்எயிற்றுத்  துவர்வா ய்  
வரையாடு வன்பறழ்த்  தந்தைக்
கடுவனு மறியும்  அக் கொடியோ னையே "
இதன் பொருள்:
 முகையில்லாத படி முழுதும் மலர்ந்த கரிய கால்களை உடைய வேங்கை மரத்தினது மேனோக்கிஎழும் பெரிய கிளையிடத்தி ருந்த
மயில் அம்மரத்தின் மேலேறி மலரைக் கொய்யும் மகளிரைப் போலத்
தோன்றும் நாடன் ,தகுதி இல்லாதவன் போலத் தான் தீங்கு தருவதாக
கூறினும்,அவ னிடத்து உண்டான ஒழுக்கம் பொய்யான தன்று .
இனிய மாம்பழத்தை  உண்ணும் முள்ளினை ஒத்த கூரிய பல்லினையு,ம்
சிவந்த வாயினையும்  உடைய வரையினத்து விளையாடும் வலிய
குட்டிக்குத் தந்தையான ஆண் குரங்கும் அறியும் அக்கொடியவனை


  



Sunday, November 19, 2017

குறுந்தொகை - பாடல் 25

" யாரு மில்லைத் தானே கள்வன்
தானவன் பொய்ப்பின் யானெவன் செய்கொ  
நினைத்தா  ளன்ன சிறுபசுங் காஅல
ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதா மணந்த ஞான்றே

பாடலின் பொருள் :

எவருமிலர் (அவன் கூறிய சூளுறவை உணருமவர் ) அவன்தான்
கள்வனாயினான்  . அவன் விரைவில் வரைவேன் என்ற அச்சூளுறவை ப்
பொய்த்தானாயின் ,யான் என்செய்குவேன் ? தினையினது தாளை ஒத்த 
சிறிய  பசிய கால்களை உடைய ,இடையறாது ஒழுகும் நீரின் கண்
ஆரல் மீனை (உணவிற்க்காகப் ) பார்க்கும் குருகும் உண்டு ,அவன்
மணந்த அன்று
பாடலைப்  பாடியவர் கபிலர்]







குறுந்தொகை - பாடல் 23



அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பன்ன  நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே  அவள்
நன்ன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே " 

பாடலின் பொருள்

குறிசொல்பவளே   குறிசொல்பவளே   வெள்ளிய சங்குமணிக்  கோவை       போன்று நல்ல நெடுங் கூந்தல் உடையவனான அகவன்
மகளே நீ பாட்டையே பாடுவாயாக மென்மேலும் பாட்டைப் பாடிக்
கொண்டே இருப்பாயாக அவருடைய நல்ல நெடிய குன்றத்தை
பாடிய பாட்டையே  இன்னமும் பாடுவாயாக


பாடலைப் பாடியவர் அவ்வையார்

Thursday, November 9, 2017

குறுந்தொகை - *பாடல் 22

"நீர்வார் கண்ணை நீ இவ   னொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரல்
சிலம்பணி கோண்ட வலஞ்சுரி மரா அத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் எண்ணுதல் நின்னொடுஞ் செலவே

பாடலின் பொருள் :

நீர் வடியும் கண்ணை உடையையாய் நீ இங்குத் தங்கும்படி
விட்டு எவர் பிரியுமவர் ?சாரலிடத்து மலையை அழகு செய்தலைக்
கொண்ட  வலமான சுழிகளோடு கூடிய மலர்களை உடைய வெண்
கடம்பினது அழகிய கிளைகள் வேனிற் காலத்துக் கமழ்தலைச் செய்யும்
இனிய ஊர் எண்ணுவது  நீ  உடன் சென்ற பின்பு நின்னோடும் சென்ற
தலைவன் செலவை எனவே உடன்கொண்டு செல்வதன்றி விட்டுப் பிரியான் தலைவன்   என்றாளாம் .
பாடிய புலவர் சேரமானெந்தை


நயம் : தலைவன் விட்டுப் பிரியான் என்ற குறிப்பை  உணர்த்துகிறது   

குறுந்தொகை - *பாடல் 20

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோராயின்
உரவோர் உரவோ ராக
மடவ  மாக மடந்தை நாமே "
பாடலின் பொருள் :
அன்பு வளர்ந்து அருளாகும் அருள் என்னும் அன்பு ஈன் குழவி
பொருள் வயிற் பிரிதல் என்பது ஒரு துறைப் பெயர் .வாழ்வதற்கு
பொருள் இன்றியமையாதது .ஆதலின் பொருள் தேடப் போதல்
அறிவுடைமை என்று கருதப்பட்டது .ஆனால் அது அன்பையும் அருளையும் துறந்து செய்ய வேண்டுவதாகிறது

பாடியவர் கோப்பெருஞ்சோழன்.

நயம் : 
காதல் பாடலாக இருந்தாலும் பொருள் தேடப் போவது பற்றிய பாடலாக

இருக்கிறது

Sunday, October 29, 2017

குறுந்தொகை - பாடல் 18

" வேரல் வேலி  வேர்க்கோட்  பலவின்
சாரல் நாட  செவ்வியை  ஆகுமதி 
யார ஃ  தறிந்திசி  னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந்  தூங்கியாங்கு
இவளுயிர் தவச்சிறிது காமமோ பெரிதே "   
பாடலின் பொருள் :
மூங்கிலாகிய வேலியினையும் வேரின் கண்ணே பழம் பழுத்தலைக்
கொள்ளும் பலாமரத்தினை உடைய மலைச்சாரலை உடைய நாட
செம்மை உடையனாதலைக் கைக்கொள் ; எவர் அதனை அறிந்தார் ?
சாரற் கண்ணே சிறிய கோட்டிடத்துப்  பெரிய பழம் தொங்குவது போன்று
இவளுயிர் மிகச் சிறியது.இவளுற்ற காமமோ பெரிய தாயிருக்கின்றது .
ஆதலின் நூற்றக்  கணக்கான ஊறுகொண்ட ஆற்றிடத்து இரவு வருதலை
இனி விட்டு வரைந்து கொள் 
பாடலைப் பாடியவர் கபிலர்

நயம்: தலைவன்அவளை மணந்து இல்லறம் பேணுவதற்கான உணர்வு எழும் என்பதாம் 

குறுந்தொகை - பாடல் 15

" பறைபடப்  பணிலம் ஆர்ப்ப  இறைகொள்பு
தொன்மூ  தாலத்துப் பொதியில் தோன்றிய   
நல்லூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
செயலை வெள்வேல் விடலையோடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே
பாடலின் பொருள் :
பறைகள் ஒலிக்கவும் சங்குகள் முழங்கவும் கடவுள்தன்
மையைக்கொண்டு பழைய முதிர்ந்த ஆலினைஉடைய
பொதியின்மலைக் கண்ணே ,விளக்கமுற்றுள்ள  நல்லூரை  
இடமாகக் கொண்ட கோசரது சிறந்த மொழி போல உண்மை ஆகின்றது
தோழி . சிறந்த கழலை அணிந்த செயலைத் தளிர் போலும் வெள்ளிய 
வேலையுடைய விடலையோடு கூட்டமான வளையல்கள்
அணிந்த முன்கையினை உடைய மடந்தைக்கு உண்டான  நட்பு  
பாடலைப் பாடியவர் அவ்வையார்     நயம்:
நயம்:
தொடுவளை எனக் கொண்டு தொடுவளை முன்கை என்றாள் தலைவி

தலைவனுடன் கலந்திருத்தலால்

Friday, October 20, 2017

குறுந்தொகை - பாடல் 13

" மாசரக் க  ழீ  இய யானை போலப்
பெரும்பெய லுழந்த இரும்பினர்த் துறுகல்
பைத லொருதலை சேக்கு நாடன்
நோய் தந்தனனே தோழி
பாலை ஆர்த்தன குவளையங் கண்ணே"
பாடலின் பொருள் :
அழுக்கில்லாமல் கழுவிய யானையை போன்றது ,பெரிய மழையினாலே
வருந்திய கோங்கின் பக்கத்தில் உள்ள நெருஙகின மலை கண்பார்க்குத்
துன்பம் உண்டகும்படி ஓரிடத்துத் தங்கும்..நாடன் பிரிந்து நோயைத்
தந்தான் ஆதலின் பசலை நிறைந்தன .குவளை போன்ற அழகிய
கண்களிடத்து .

இந்தப் பாடியவர் கபிலர்

குறுந்தொகை - பாடல் 11

கோடி ரிலங்கு வளை  நாடொறும்
பாடிய கலுழும் கண்ணொடு புலம்பி
ஈங்கிவன் உறைதலும் முயங்குவ மாங்கே
ஏழுவினி வாழியென் நெஞ்சே முனா அது  
குல்லைக் கண்ணி வடுகர்  முனையது
வல்வேல்  காட்டின் நன்னாட்டு உம்பர்
மொழிபெயர்  தேத்தாராயினும்
வழி விடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே
பாடலின் பொருள் :
சங்கினை அறுத்து செய்த வளையல்கள் நழுவும்படிநாள் தோறும்
பெருமை இல்லனவாய் வருந்தும் கண்களோடு புலம்பி இவ்வகை
தனித்துறைதலும் முயங்குவோம் அவ்விடத்து ஆதலின் இப்பொழுது
வாழ்வாயாக எனது நெஞ்சே எதிரில் கஞ்சம் குல்லை மாலை அணிந்த  
வடுகர் போரிடத்தை உடையதும் வலிய வேலங்காட்டினை உடைய
நல்ல  நாட்டின் மேலிடத்ததுமான மொழியும் வேறான தேயத்தினை
உடையவரானாலும் அவரோடு யானும் உடன்போக்கு வழி
விடுதலை சூழ்வாயாக, அவருடைய நாட்டைக்  குறித்து
படலைப் பாடியவர் மாமூலனார்
நயம் : தன் நெஞ்சிற்குச் சொல்வது போலத் தோழியின் காதில்படக் கூறுகிறாள் .தன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளக் கூறும் உளவியல் இது


Sunday, October 8, 2017

குறுந்தொகை - பாடல் 8

கழனி மாத்து விளைந்துரு தீம்பழம்
பழன வாளை கதூஉ   மூரன்
எம்மிற்  பெருமொழி கூறித் தம்மில்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே
பாடிய புலவர்  ஆலங்குடி வங்கனார்
பொருள் :வயல் வரப்பிலே உள்ள மாமரத்தினது விளைந்த
தானே வீழ்கின்ற இனிய  பழத்தை பக்கத்துப் பொதுவாகிய
நீர்நிலைச் செருவிலே உள்ள வாளை மீணானது பற்றி உண்ணுதற்கு
இடமாகிய ஊருக்குரிய தலைவன்.அவன் எம் வீட்டிலே முன்  நிற்பவர்
கையையும் காலையும் தான் தூக்கத் தானும் அவ்வாறே
தூக்குகிற கண்ணாடிப் பாவைபோல் தன் மகனுக்குத் தாயாக விளங்குகிற தலைவி அவன் விரும்புகிற வாறெல்லாம் செய்து ஒழுகுகிறாள் போலும்.

நயம்கழனிக் கரையிலுள்ள மரத்திலிருந்து முதிர்ந்து தானே உதிர்ந்த பழத்தை வயலிடத்து வாழை கவ்வினாற்போல , இவ் விடத்திலுள்ள எல்லா இன்பங்களையும் ஊரன் தானே எய்துகின்றான்       



குறுந்தொகை - பாடல் 3

நிலத்தினும் நீரினும்

'நிலத்தினும் பெரிது வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ''
இதன் பொருள்  நாடனொடு கொண்ட நட்பானது
பெரிது ; உயர்ந்த்தது ' அளவிறந்த ஆழமுடையது எனக்கூறி
அதனையே சிறந்தது எனக்  கூறுகின்றாள்.இதனால்
தலைவன் தலைவியின் பெருங்காதலை உணர்ந்து
அவளை விரைய மணந்து வாழும் வாழ்விலே மனத்தை
செலுத்துபவ னாவான் . குறிஞ்சி 12 ஆண்டு வளர்ந்து மலரும் பூ
அதேபோல் தலைவி 12 ஆண்டில் பூப்பெய்தி நிற்பவள் .  
பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்
நயம்:
சாரல் மலைப் பக்கம் குறிஞ்சி மரத்தின் கொம்பு கரிய நிறம்
உடைய தாதலின் கருங் கோட் குறிஞ்சி எனப்பட்டது . பூவில் தேனைக்
கவர்ந்து கொண்டு வந்து என்க .தேன் ஆகுபெயராய் இறாலுக்கு ஆயிற்று
தலைவர் என்னை மறப்பாரல்லர் அவர் அன்பு பெரிது என இயற்பட
மொழிந்தபடியாம் . அளத்தற்குரிய தென்பாள் அகலம்,உயரம்,ஆழம்
ஆகிய மூன்றற்கும் தனித் தனியே சிறந்த உவமை எடுத்தோதினாள்

திருவள்ளுவனாரும் ஞாலத்தின் மாணப் பெரிது என்றார்.  

Friday, September 22, 2017

குறுந்தொகை

பெரியாருக்குப் பிறகு என்னுடைய வலைப்பூவில் சங்கத் தமிழ்  குறுந்தொகையைப் பற்றி மாதத்தின் 1ஆம் நாள் , 10ஆம் நாள், 20ஆம் நாள் எழுத  இருக்கிறேன்.அனைவரும் படிக்க வேண்டுகிறேன். நன்றி .
  
குறுந்தொகை
சங்க இலக்கியம் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமாகும்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
எட்டுத் தொகை எங்கிற வெண்வபாவால் எட்டுத்தொகை 
நூல்களை அறியலாம் பத்துப் பாட்டு நூல்கள்
 
திருமுருகாற்றுப் படை           பொருநர் ஆற்றுப் படை
சிறுபாண்  ஆற்றுப்   படை       பெரும் பாண் ஆற்றுப் படை
முல்லைப் பாட்டு                 மதுரைக்காஞ்சி
நெடுநல்  வாடை                 குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை                   மலைப்படு கடாம்
குறுந்தொகை சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகையுள்
அடங்கும் நல்ல என்கிற அடைமொழியும் உண்டு
காதல் பாடல்கள் 4முதல் 8 வரை அடிகள் உடையவை
கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய பெருந்தேவனார்  பாடியிருக்கிறார்
அவரைத் தவிர்த்து 205 புலவர்கள் காணப் படுகின்றனர் .பெயர்
தெரியாத பாடல்கள் 10 உள குறுந்தொகையில் 400 பாடல்கள் உள்ளன 
ஒரு பாடல் இறையனார் இயற்றியது
 ’’கொங்குதேர்   வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது  மொழிமோ
பயிலியது    கெழிஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று  அரிவை கூந்தலின்
மணமும்  உளவோ நீ அறியும்  பூவே ‘’ 
இதன் பொருள்   ;  இவள் கூந்தல் போன்று இனிது மணக்கும்
மலர் இதுவரை அறிந்திலேன்
மலர் தொறும் சென்று   ஆராயும் வண்டே  நீ சொல்
இந்தப் பாடலைப் பாடி பாண்டியன் அவையில்
தருமி பொற்கிழி பெறுகிறான் நக்கீரனார் பாடலில்
பொருட் குற்றம் இருப்பதாக கூறுகிறார் இறையனாரே
அவைக்குச் சென்று வாதிடுகிறார் ஆனாலும் நெற்றிக்
கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்கிறார்
நக்கீரனார் இது திருவிளையாடல் கதையும் கூட.