Tuesday, July 12, 2016

கருமி

பெரியார் தினமும் குளிப்பதில்லை
முகம் மழிப்பதில்லை
கனிவான முகம்
கூரிய விழிகள்
இது அவரின் அடையாளம்.வேகமாக
தோல்வி கண்டு துவளுவதில்லை
வேகமாகப் போராடும் வீரர்

சிக்கனக்காரர் எப்போதும்
தொடர் வண்டியில்
மூன்றாம் வகுப்பில்தான்
பயணம் செய்தார்

ஈரோடு வீட்டைப் புதுப்பித்துக்
கொள்ளவில்லை தளம் கூடப்
போட்டுக் கொள்ளவில்லை 
கட்டில்  கூட மரக்கட்டில்
கிடையாது அரசு மருத்துவமனையில் 
இருப்பதைப்போன்ற உலோகக்
கட்டில்தான் (ஸ்டீல்)
மக்களோ அவருக்கு எடைக்கு எடை
நாணயம் கொடுத்தார்கள்
வெள்ளி கொடுத்தார்கள் மற்ற
பொருட்களைக் கொடுத்தார்கள்
பணம் கோடியில் சேர்ந்தது
அவரைப்  பொறுத்தவரை
கருமியாக  இருந்துகொண்டு
மற்றவர்களுக்கு   வழங்குவதில்
வள்ளலாக இருந்தார்
திருச்சியில் ஈ.வெ.ரா கல்லூரி ,
அரசு மருத்துவமனை ,
அனாதை விடுதி அமைத்தார்

அறக்கட்டளை  அமைத்து
பெரியார் திடலை
வாங்கிப் போட்டார்
நாகம்மையாரும் சரி , மணியம்மையாரும் சரி
விருந்தோம்பலில் சிறந்தவர்கள்
பெரியார் அவர்கள் பரிமாறுவதை
கவனித்து  விருந்தினர்கள்
சாப்பிடுகிறார்களா 
என்று பார்ப்பார்
பரிமாறியதைச் சாப்பிடாவிட்டால்
கோபித்துக் கொள்ளுவார்
அவரும் அப்படித்தான்
பரிமாறியதைச் சாப்பிடாமல்
தூக்கிப்போட மாட்டார்
தன் பெட்டியைத் தானே தூக்கும்
எளிய தலைவர்
மணியம்மையாரோ புத்தகக்
கட்டுக்களைத் தூக்குவார்கள்

மேட்டூர் அணையைத் 
திட்டமிட்டுக் கட்டிய
பொறியாளர் ப.வ.மாணிக்க நாயக்கர்
மும்மொழிப் புலவர்
கம்பனின் புளுகும் வால்மீகி வாய்மையும்
என்ற  நூல்  எழுதியவர்
அவருடைய நட்பும்
கருவூர் மருதையா பிள்ளை நட்பும்
கைவல்ய சாமியாரின் நட்பும்
பெரியாரின் ஆய்வுக்கு

உதவியாக இருந்தன.