Thursday, April 27, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மணியம்மையார்

மணியம்மையாரின் இயற்பெயர் காந்திமதி
10.3.1917ல் பிறந்தார்கள் வேலூரில் கனக
சபை முதலியார் மகளாக தந்தை நீதிக் கட்சி
சார்புடையவர் அவர் மறைந்ததும் காந்திமதி   
1942-43ல் திராவிடர் கழகத்தில் இணைகிறார் 
தோழர் அண்ணல் தங்கோ காந்தி மதிக்கு அரசியல் மணி
என்று பெயர் சூட்டினார் அது சுருக்கப் பட்டு கே ஏ மணி
என்றழைக்கப் பட்டது 1949 வரையில்
பெரியாரைப் பேண சில பெண்கள் முன்வரவேண்டும்
என்று 23.10,.1943 குடி  அரசு இதழில் வேண்டுகோள்
விடுக்கிறார் கே ஏ மணியம்மையார் 
பெரியாருக்கு நாக்கில் வலியும் நாற்றமும் இருந்தது
மருத்துவர் சுந்தர வதனத்திடம் கொண்டுபோய் காட்டினார்
புற்றுநோய்  அது என்று கூறி மருத்துவர் ராய் அவர்களிடம் 
அனுப்பினார் ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது பெரியாருக்கு நாக்கு முகம் எல்லாம் வீங்கிவிட்டது நாக்கிலிருந்து சதா தண்ணீர் வடிந்தது பெரியார் கவலை அடைந்தார் உயிருக்கு பயந்தல்ல நாயக்கன் நாத்திகன் அவன் கடவுளை மதத்தை திட்டினான் என்று கூறி பாமர
மக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றுவார்கள் என்று
கருதினார் மணியம்மையார் மருத்துவரிடம்  முகம் 
நாக்கு எல்லாம் வீங்கியிருக்கிறதே தண்ணீர் வடிகிறதே
என்று கேட்டார்கள் அவர் சிகிச்சை பலன் அளிக்கத்
தொடங்கியிருக்கிறது சில நாட்களில் குணமாகி விடும்
என்று கூறினார் பெரியாரைப் பற்றி           
22.8.1948 அன்று பெரியார் இல்லத்தில் திராவிடர்
கழக ஆலோசனைக் குழுக் கூட்டம் நடை பெற்றுக்
கொண்டிருந்த போது இந்தி எதிர்ப்புக் காக  காவல்துறை
மணியம்மையாரை கைது செய்தது  
29.3.49 சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு
மறியலை பெரியார் பார்வையிட்டார்
மணியம்மையார் முன் நின்றார்கள்
' விடுதலை' மீது அரசு கோரியிருந்த பிணையல்
தொகை ரூ 10000 ஐ நீதிபதி  முன்பு மணியம்மையார்
18.6.1949 அன்று கட்டினார்கள்
14 5.1949 அன்று திருவண்ணாமலை தொடர்
வண்டி நிலையத்தில் தந்தை பெரியார்
காலை 6.46 முதல் 7.17 வரை தலைமை
ஆளுநர் ஆக இருந்த இராஜாஜியை சந்தித்து
பேசினார் அது பற்றி இராஜாஜி கூறியது
நண்பர் ஈ வெ ராமசாமி நாயக்கரை நான்
கண்டது குறித்து பொது மக்கள் தீவிரமான
எண்ணம் கொண்டிருக்கலாம் நானும்
அவரும் சந்தித்துப் பேசியது முழுமையும்
அவர் என்னுடன் கலந்து பேச விரும்பிய
சொந்த விஷயங்களை பற்றியே ஆகும்
அவருடைய அரசியல் பொது வாழ்க்கைக்கும்
இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
இராஜாஜியை திருவண்ணாமலையில் சந்தித்தது
பற்றிப் பெரியார் குறிப்பிட்டார் எனக்குப் பின் கட்சிக்கும்
என்  சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும்
அதைப் பற்றி இரண்டொருவரை கேட்டேன் அதே போல்
இராஜாஜியையும் கேட்டேன் சொந்த முறையில் அவர்      
சில யோசனை கூறினார் அதை இந்த சந்தர்ப்பத்தில்
கூற வேண்டிய அவசியமில்லை காலா காலத்தில்
தெரிந்து கொள்வீர்கள் 
மேலும் எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படியான
வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்வது அவசியமும்
அவசரமும் ஆகும் நான் 5,6 வருடமாகப் பழகி
நம்பிக்கை கொண்டதும் என் நலத்திலும் இயக்க
நலத்திலும் உண்மையான பற்றும் கவலையும்
கொண்டு நடந்து வந்திருக்கிறதுமான
மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக
ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும்  தனிப்
பட்ட தன்மையையும் சேர்த்து மற்றும் சுமார்
4,5 பேர்களையும் சேர்த்து இயக்க நப்புக்கும் 
பொருள் பாதுகாப்புக்ககுமாக ஒரு டிரஸ்ட் பத்திரம்
எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன் அப் பத்திரமும்
எழுதப்பட்டு வருகிறது 
9.7.1949 பிற்பகல் 3.3.மணிக்கு பெரியார் ஈ வெ ரா -
கே ஏ மணியம்மையார் அவர்கள் பதிவுத் திருமணம்
பதிவாளர் முன்னிலையில் பதிவு செய்யப் பட்டது
பதிவுத் திருமணம் தி .நகரில் உள்ள பதிவாளர்
அலுவலகத்தில்  நடைபெற்றது திருவாட்டி ஞானம்
நாயகம் அவர்கள் சாட்சிக் கையொப்பம் இட்டார்கள்  
பெரியார் கருத்துப்படி அவர் ஆற்றும் தொண்டுக்கு
தொண்டின்  நலனுக்கு ஒரு துணை ,ஒரு நட்பு, ஒரு
உதவி தேடிக்கொண்டு அத்துனையைசெல்லுபடியாகும்
அளவுக்கும் சட்டப்படி பதிவு செய்து கொண்டுள்ளார்  
வாழ்க்கைத் துணை ஒப்பந்தப்படி ஏற்படும் வாழ்வு
வாழ்வின் பயன் யாவும் பொதுநலத்துக்கு பயன்
படக் கூடியதே ஆகும்
பெரியார் சொல்கிறார் இத்திருமணம் பிள்ளைப்
பேற்றிற்காக செய்து கொள்ளப்பட்டது அல்ல
இயற்கை இன்ப உணர்ச்சிக்காக செய்து கொள்ளப்
பட்டதும் அல்ல வாழ்க்கைத் துணைக்காகவே
செய்து கொள்ளப் பட்டது 
ஒரு துணை வேண்டுமென்றால் அதை அவர்
விருப்பத்துக்கு தேடிக்கொள்வது சரியா அல்லது
பிறர் விருப்பத்துக்கு தேடிக் கொள்வது சரியா
என்று சிந்திக்க வேண்டுகிறார்
இத் திருமணம் பற்றி குற்றம் சாட்டுகிறவர்கள்
பெரியார் கழகத்தின் எந்தக் கொள்கையை  விட்டுக்
கொடுத்துவிட்டார் என்று சொல்லி மெய்ப்பிக்கட்டுமே
இராஜாஜி பெரியாருக்கு அந்தரங்கம் என்று
குறிப்பிட்டு ஓர்  கடிதம் எழுதினார் அதனால்
அதை பெரியார் வெளியிடவில்லை அவர்
மறைவுக்குப் பின் அது வெளியிடப் பட்டது
அதில் இராஜாஜி "30 வயதுப் பெண்தங்களிடம்
 எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும்
தங்களுக்குப் பின் சொத்தை தாங்கள் எண்ணுகிறபடி
பரிபாலனம் செய்வாள் என்று  நம்புவதில் பயனில்லை "
என்று மணியம்மையாரைப் பற்றி எழுதியிருந்தார்
இராஜாஜி மணியம்மையாரைப் பற்றிப் போட்ட
கணக்கு உலகியலில் போடப்படும் சராசரிக்
கணக்கு அய்யாவின் கணக்கு ஆச்சரியாரின்
மூளைக்கே எட்டாத தெளிவும் தீர்க்கமும்
நிறைந்த கணக்கு என்பதும் ,அவர் வைத்த  
நம்பிக்கை எவ்வளவு சிறப்பாக வீண்போகாத
நம்பிக்கை என்பதும் எடுத்த முடிவு எவ்வளவு
சரியான முடிவு என்பதும்  இன்று இந்த உலகே
புரிந்து கொண்டுள்ளது 
அன்னை  மணியம்மையார் அய்யா அவர்களை
 95 வயது வரை கட்டிக் காத்தது மட்டு மின்றி
அவர் மறைந்த 1973 ஆம் ஆண்டுக்குப் பிறகு
அவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கி
கண்ணை இமை காப்பது போல் நெருக்கடி 
காலத்திலும் காத்து அவரது அறக் கட்டளை
யை வளர்த்தார்கள்
அவர்களுடைய சொந்த பயன்பாட்டுக்காக
அய்யா அளித்த சொத்துக்களையும் மற்றும்
அவருக்கென இருந்த சொந்த சொத்துக்களையும்
இணைத்து ஒரு  கல்வி அறப்பணிக் கழகமும்
கண்டு சாகாச் சரித்திரப் புகழ் பெற்று
கலைஞருக்கு சிலை வைக்க    அதேபோல் பெரியார் விரும்பினார்  அந்த விருப்பத்தை அன்னை மணியம்மையார் நிறைவேற்றினார்கள்

அன்னை மணியம்மையார் 16.3.78ல் மறைந்தார்கள்

Friday, April 21, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மறைவு

பெரியார் 91 வது பிறந்த நாள் செய்தியாக
'எனது நிலை 'என்ற தலைப்பில் கட்டுரை
வரைந்தார் அதைப் பார்ப்போம்
"எனக்கு வயது 90; உடல் மிகவும் மோசம்
கைகால்  நடுக்கம் அதிகம் ; சிறுநீர் கழிக்கும்
போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன்;
அவ்வளவு வலி ; தூக்கம் சரியாய் வருவது இல்லை;
நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில்
வலி ஏற்பட்டு , சில ஏப்பமோ காற்றுப் பிரிதலோ
ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது ; உண்ட உணவு
சரியானபடி செரிமாணமாவதில்லை ;முன்போல்
உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை
எந்தக் காரியம் பற்றியும்  மனதிற்கு
உற்சாகம் ஏற்படுவதில்லை ;களைப்பு
அடிக்கடி ஏற்படுகிறது ;நெஞ்சில் வலி
திடீரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த
பிறகு குறைவதுமாக இருக்கிறது
எதைப் பற்றியும் சலிப்பும் வெறுப்பும்
ஏற்பட்டு விடுகிறது
பெரியார் 95 வயது வாழ்ந்தார் மருத்துவர்கள்
ஓய்வெடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள்
உதகையில் நீண்ட ஒய்வு பெறும்படி மணியம்மை
யாரும் வீரமணியும் மற்றவர்களும் சொன்னார்கள்
பெரியார் கேட்கவில்லை 90 வயதில் நாம் பார்த்த
உடல் நலத்தை  வைத்துக்கொண்டு பெரியார் தன்
தொண்டை தொடர்ந்தார் ஊர் ஊராய் சுற்றுவதை
பேசுவதை குறைக்கவில்லை சொல்லப் போனால்
தனித்தமிழ்நாடு பெறுவதில் அதற்கான போராட்டத்தில்
தீவிரம் காட்டினார் சூத்திரப் பட்டத்தை சாதி இழிவை
ஒழிப்பதில் வேகம் கொண்டிருந்தார் அக்கறையோடு
சென்னை தி .நகரில் திடீர்ப் பிள்ளையார்
பற்றிப் பேசுவதற்கு 3 ஆண்டுகளுக்கு
முன்பு முன் பணம் கொடுத்தார்கள்  பெரியார்
பேசவில்லை அது மனதை உறுத்திக் கொண்டிருந்ததது
எனவே 19.12.1973 அன்று அங்கே பேசினார் 
இறுதிப் பேருரையாக அமைந்தது  
பகுத்தறிவு உரை அது சாதி ,
மதம் ,கடவுள் சாஸ்திரம் ஆகியவற்றுக்கு
எதிராக தன் கருத்துக்களை மொழிந்தார்
பேச்சுக்கு இடையில் நெஞ்சுவலி வந்து
துடித்தார் சற்று நிறுத்தியவர் மீண்டும்
தொடர்ந்தார் பேருரை இறுதிப் பேருரை
ஆனது பெரியாருக்கு
21.121973 அன்று இரணியா தொல்லையால்
அவதிப்பட்ட பெரியாரை சென்னை அரசு பொது
மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் பிறகு
அவருடைய விருப்பப்படி வேலூர் கிறித்தவ மருத்துவக்
கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவர்கள் ஜான்சன் , பட் இருவரும் முயன்றனர்
22.12.1973  சென்னையிலிருந்து  மருத்துவர் இராமச்சந்திரா வந்து சேர்ந்து கொண்டார்   23.12.73 மதியம் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார் கலைஞர் வந்து பார்த்தார்   மருத்துவர்கள்   மூவரும் அய்யாவைக் காப்பாற்ற  இயலவில்லை தந்தை பெரியார் 24.12.1973 காலை 7.22
மணிக்கு உலகை விட்டு மறைந்தார்
தமிழர்களை சோகத்தில் விட்டு விட்டு
இராஜாஜி அரங்கத்தில் பெரியார் உடல் வைக்கப்
பட்டது மக்கள் அஞ்சலிக்காக தமிழகமே சென்னையில்
திரண்டது பெரியாரை எல்லா அரசு மரியாதைகளுடன்
அடக்கம் செய்ய விழைந்தார் கலைஞர் பெரியார்
எந்த அரசுப் பதவியிலும் இருந்ததில்லையே  என்றார்
தலைமைச் செயலாளர் பார்த்துக் கொள்ளலாம் என்று
கூறிய கலைஞர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்
36 குண்டுகள் முழங்கின அரசு விடுமுறை அறிவிக்கப்
பட்டது கருப்புக்கோடிட்ட அரசிதழ் வெளியிடப்பட்டது 
இருப்பூர்தி மொட்டைத் தட்டு  வண்டி யில் ( டிரக் )சற்றே உயர்த்தி சாய்வாக பெரியார் உடல் கிடத்தப்பட்டது இரு மருங்கிலும் மணியம்மையார் ,வீரமணி, கலைஞர் ,நாவலர் ,
என் வி நடராசன் ,ஈ வெ .கி .சம்பத் ஆகியோர்
அமர்ந்திருக்க உடல் பெரியார் திடலுக்கு
எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தேக்குப்
பேழையில் வைத்து அடக்கம் செய்யப்
பட்டது .      பின்னர் பொருத்தமான நினைவகமும்
ஏற்படுத்தப் பட்டது அங்கே
ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த வீட்டின்
பின்புறம் அண்ணா வாழ்ந்தார் அதை
கலைஞர் அரசு வாங்கி பெரியார் -அண்ணா
நினைவகம் மணியம்மையார் தலைமையில்

17.9.1975 அன்று கலைஞர் திறந்து வைத்தார்

Thursday, April 13, 2017

தந்தை பெரியார் வசன கவிதை -விடுதலை

பெரியார் நடத்தினார் விடுதலையை
தன் பிரச்சாரத்திற்காக  1935 முதல்
பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கான  தினசரி இதழ்
மாற்றப்பட்டது ஈரோட்டிற்கு
பெரியார் நடத்தி வந்தார் அதைத் தன்
சொந்த நிர்வாகத்தில் . வந்தார் எடுத்துக்காட்டி
காங்கிரசின் தவறுகளை தேர்தல் நேரத்தில்
உணர்ந்தனர் உண்மைகளை பொதுமக்கள்
இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் விடுதலை இருந்தது       
பெருந்துணயாக அரசு  நினைத்தது அதை
அடக்க வேண்டும் என்று
வந்தது சென்னை நகரசபைத் தேர்தல் 
வெளியானது வாக்காளர்களுக்கு  வேண்டுகோள்
எச்சரிக்கை அரசு சுமத்தியது வகுப்பு வெறுப்பு
அரச வெறுப்பு குற்றம்
பதிப்பாளர் பெரியாரின் தமையனார்
ஈ வெ  கிருட்டிணசாமி அவர்களுக்கும்
ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை
அவர்களுக்கும் தலா  ஆறு மாத
சிறை தண்டனை விதிக்கப் பட்டது 
17.6.1940 அன்று பெரியார் விடுதலை
என்று தலைப்பிட்டு தலையங்கம்
எழுதினார் போரினால் காகித விலை 
கூடியிருப்பதையும் பக்கங்களை குறைக்க
முடியவில்லை விலையையும் கூட்ட
முடியவில்லை ஏதாவது தனி முயற்சி
செய்ய வேண்டும்என்றார்
  21.11.1940 அன்று பெரியார் விடுதலையை
வாரப்பத்திரிக்கை ஆக்கி விடலாமா ஈரோட்டிலிருந்து
சென்னைக்கு மாற்றிவிடலாமா என்று ஆலோசனை
கேட்டிருந்தார் 1.12.1940 லிருந்து 6 பக்கங்களாக
வந்து கொண்டிருந்த விடுதலை 4 பக்கங்கள் ஆனது
விடுதலைக்கு பிணையல் தொகை 2000
சென்ற ஆண்டு  கட்ட வேண்டி இருந்தது
இந்த ஆண்டு பிணையல் தொகை  ரூ 10000
கட்டவேண்டியிருக்கிறது 16.6.1949 அன்று
நீதிபதி முன்பு பிணையல் தொகையை 
மணியம்மையார் கட்டினார்கள்
விடுதலை இன்றும் வெளிவருகிறது

கி . வீரமணி ஆசிரியராக இருக்கிறார்கள்.

Friday, April 7, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - கடவுள்

பெரியார் பேசுகிறார்  கடவுள் என்னும் சொல்
தமிழனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள்
கற்பிக்கப் பட்ட சொல்லேயல்லாமல் பழங்காலசொல்
என்று சொல்ல முடியாது  இலக்கியங்களும் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டனவே
தொல்காப்பியம் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதே
இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள்  ஏன் ?அவை எப்படி
வந்தன  என்னவெல்லாம் கடவுளாக்கப்பட்டிருக்கின்றன
மாட்டு மலம் முதல் மாடு, குதிரை ,எருமை,குரங்கு ,பெருச்சாளி கழுகு , காக்கை ,பாம்பு மரம் ,செடிகள்,மண், உலோகம் காகிதம் முதலியவைகளும் மற்றும்  பல ஆபாச உருவங்களும்  கடவுளாக  வணங்கப் படுகின்றன
 
இராமலிங்க சுவாமி என்ற பெரியார் அறிவுதான்
கடவுள் என்று சொன்னதோடு சாதி,சமயம் ,மோட்சம்
நரகம் ,கடவுள்கள் எல்லாம் வெறும் பித்தலாட்டம்
என்று சொல்லிவிட்டார் அவர் என்ன நாத்திகரா

இன்று சிறையில் இருப்பவர்களில் சமரசவாதிகளோ
நாத்திகர்களோ  விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே 
இருப்பார்கள் மற்றைய யாவரும் கடவுள் நம்பிக்கை
உடைய ஆத்திகர்கள் தான்
 குடி அரசு 30.1.1930
சுப்ரமணியன் என்றும் சண்முகம் என்றும் கார்த்திகேயன்
என்றும் கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது 
மேற்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உட்பட்டது
என்பது வைணவ புராணங்களிலும் சைவப்புராணங்களிலும்
ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது
பகுத்தறிவு மலர் 1936
விடுதலை  17.9.1969
கொஞ்ச காலத்திற்கு  முன் எல்லா விடயங்களும் கடவுள்
செயல் என்று எண்ணியிருந்த மக்கள் உலகில் அறிவியல்
ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டு பல விடயங்கள் மனிதன் செயல் என்று சொல்ல்லத் தொடங்கி  விட்டார்கள் 
குடி அரசு    11.8. 1929
கடவுள் மனித நலத்துக்காக கண்டுபிடிக்கப்  பட்ட  கருவி
அல்ல . மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தப்
பட்ட கருவியே ஆகும் .சூரியனை ,சந்திரனை ,நெருப்பை ,
நீரை ,காற்றை ,கல்லை,மண்ணை எந்த மனிதனும் கண்டுபிடிக்கவில்லை .அவற்றின் பெயரைத்தான் தெரிந்து கொண்டான் எல்லாம் கடவுள் செயல் என்கிற எவனும் எல்லாவற்றிற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை .எல்லாம் கடவுள் செயலாய் இருக்கும்போது நாத்திகன் -கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை
கடவுள் ஒரு கற்பனையே 1971]
5 வயது   சராசரியாக வாழ்ந்த ஒரு இந்தியன் எப்படி
52 வயது உடையவனாக மாறினான் .பெரிய பெரிய
நோய்களை எல்லாம் எப்படித் தீர்த்துக் கட்டினான் .இது
அறிவு முயற்சியால்தானே .வெறும் கடவுளை மட்டும்
நம்பிக்கொண்டு சிவ சிவா என்றால் இந்த வளர்ச்சியை
 பெற்று இருக்க  முடியுமா
விடுதலை  9.10.1972
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் ;கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறுவது கண்டு பார்ப்பனர்கள் நெருப்பின்மேல் நிற்பது போல் துள்ளுகிறார்கள்
நான் சொல்லவந்தது கடவுள் கண்டுபிடிக்கப் பட்டதுமில்லை
தானே தோன்றியதுமில்லை முட்டாள்களால் உண்டாக்கப்
பட்டது  என்பதாகும்
கடவுளைப் பரப்புகிற எவனுமே கடவுள் தத்துவத்திற்கு
ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன்
பரப்புகிறவர்கள் யாவருமே நாணயத்தையோ யோக்கியதை
யையோ ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக்  கொண்டு
கடவுளைப் பரப்புவதில்லை
காட்டுமிராண்டித் தனமா அறிவுடைமை ஆகுமா என்று கேட்கிறேன் உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால் முதல் தொண்டாக இப்படிப் பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால்தானே அவன் உண்மையான அறிவாளியான தொண்டனாக  இருக்க  முடியும்  உயர் சாதிக் காரன் நலன் அனுபவிப்பவன் கடவுளைக் காப்பாற்றினால் தாழ்ந்த சாதிக் காரன் கேடு அனுபவிப்பவன் கடவுளை ஒழிப்பது என்பது தானே நியாயமும் நேமையும் அறிவுமாகும்
கடவுள் பாது காப்பு இருந்தால் வீட்டிற்குத் தாழ் போடாமலும்
பெட்டிக்குப் பூட்டுப் போடாமலும் அச்சமின்றி பொருட்களை
வைக்க முடியவில்லையே ஏன்
கடவுள் ஒரு கற்பனையே 1971
ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமண
மதமென்றும் கிறித்தவர் முகமதியர் அல்லாதவர்களுடைய
மதமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது
விடுதலை  17.12.1969
தமிழர்களுக்கு ஆரியர்களுக்கு முன் கடவுள் இல்லை
என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் தமிழில் கடவுள்
என்ற சொல்லே இல்லை
ஐரோப்பா ஆசியா ஆகிய கண்டங்களில் முக்கிய நகரங்களில்
கோடிக் கணக்கான மக்களை கொண்ட கடவுளை மறுக்கும்
சங்கங்கள் இருந்து வருகின்றன

வேதம் என்பதற்கு காணப்படும் கடவுள் தத்துவம் கூட
வேதத்திற்கு விளக்கம் செய்தவர்களான சங்கரர்  இராமானுசர் மாத்துவர் முதலிய மத குருமார்களின் விளக்கங்கள் கூட கடவுளைப் பற்றி ஒன்றுக்கொன்று பொருந்தாத  வகையில் உள்ளன அந்த வேற்றுமைகள்தாம் இன்று சங்கர ,இராமானுச மாத்துவ மதங்களாக உருப்பெற்றுள்ளன  உலகிலாகட்டும் நம் நாட்டிலாகட்டும் கடவுள் ,மதம்,சாஸ்திரம் ,தர்மம் என்பவை கற்பிக்கப்படா விட்டால்  ஏழையேது பணக்காரன் ஏது பாட்டாளி
ஏது   முதலாளி ஏது பறையன் ஏது சூத்திரன் ஏது பார்ப்பான் ஏது பட்டினி கிடப்பவன் ஏது 
இன்று நாட்டில் கல்வி என்னும் பெயரால் பல கோடிகள்
சேவு செய்து பல்கலைக்கழகம் ,கல்லூரி உயர்தரப் பள்ளி
வைத்துக் கல்வி கற்ப்பிப்பதைவிட பகுத்தறிவுப் பள்ளிகள்
மட்டும் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்தால் எந்தப் பற்றுமற்ற வகையில் மக்கள் முன்னுக்கு வருவார்கள் என்பது உறுதி 
விடுதலை 16.12.1969
இவ்வளவு கடவுள் ,மதம் இருந்தும் ஒழுக்கம் ,நாணயம்
மனிதப் பண்பு இல்லாமல் போய்விட்டது . மற்ற நாட்டில்
எல்லாம் அவற்றிலே நாகரிகம் நடக்கிறது .அந்தப் பண்பு
நமக்கில்லை .ஆனால் மேலான பண்பு என்று நம்மவன்
பேசுகிறான்  

விடுதலை  3.5.1959