Friday, October 21, 2016

தந்தை பெரியார் வசன கவிதை சுப்பையா - 3

சாமி திராவிடமணி பதிவு செய்திருப்பதைப்போல்
இராம சுப்பையா  பழமொழிகள் சொல்வார் அதில் ஒன்று
கிடையை (நோயை) நடையால் வெல்ல வேண்டும்
இதை சொல்வது மட்டுமல்ல செயலிலும் அப்படித்தான்
எங்கே போவதாக இருந்தாலும் நடப்பார் அதுவும் வேகமாக
                                                                                                                                                          

வை சு வின் பேரன் ராஜா சண்முகம் சொல்லியிருப்பதைப்போல் 
அந்தக் காலத்தில் வை சு சண்முகனார் சிங்கப்பூரிலிருந்து
வர இயலவில்லை அவர் மனைவி லட்சுமி இறந்து விடுகிறார்கள்
பங்காளிகள் வர மறுத்துவிடுகிறார்கள் இராம  சுப்பையாவும் இன்னொரு
உறவினரும் மலர்களைக் குவித்து அஞ்சலி செய்கிறார்கள்

இராம சுப்பையாவின் களப்  பணிகளில்
கடை அடைப்பு போன்ற நேரங்களில் உதவியாக
இருந்தார்  தோழர் அஞ்செழுத்து 

இன்னொருவரையும்  குறிப்பிட  வேண்டும்
அவர்தான் ஸ்பீக்கர் நாராயணசாமி என்றழைக்கப்படும்
சைக்கிள் கடை நாராயணசாமி அவர் சொல்கிறார்
இராம சுப்பையா சொல்லி அண்ணா ,கலைஞர் ,நாவலர் , பேராசிரியர்
போன்ற பேச்சாளர்களை அவர் தன் சைக்கிள் பின் இருக்கையில்
அமர வைத்து மேடைக்கு அழைத்து  செல்வாராம்
சிலம்பொலி செல்லப்பனார் சொல்கிறார்
அவர்  மாணவராயிருந்தாராம்  இராம சுப்பையாவுடன்
சேர்ந்து காரைக்குடி சுவர்களிலும்  சாலைகளிலும்
பனை மட்டை கொண்டு எழுதுவர்களாம் கட்சி விளம்பரங்களை
புலவர் ஆ பழனி அவர்களோ
செட்டிமார் நாட்டில் திராவிட இயக்கத்தின்
கொள்கைக் கோபுரம் கட்டிய சிற்பி
எனப்  பாடுகிறார்
கொள்ளுப்பேத்தி முத்துலட்சுமி முத்தையா சொல்லி
இருப்பது போல் அழைப்புமணி அடித்தால் சுப்புத்  தாத்தா
முதலில் ஓடுவார்கள் கதவை த்   திறக்க
முன்னாள் துணைப் பதிவாளர் அண்ணாமலைப்
பல்கலை ஆர்  எம்  கிருஷ்ணன் அவர்கள் சொல்லியிருப்பது
போல்  இராம சுப்பையா தன்னிலும்  இளையவர்களான
சொக்கநாதபுரம் சேதுராமன், தேவகோட்டை இராம வெள்ளையன்
காரைக்குடி  சித சிதம்பரம் போன்றவர்களை தலைவர்களிடம்
அறிமுகம் செய்து அவர்கள் வளர்ச்சிக்கு உதவினார்
பாவேந்தர் மகன் மன்னர் மன்னன்
பாராட்டியிருப்பதைப்போல்  இராம சுப்பையா
தொண்டர்தம் தொண்டர் னவர்
கயல் தினகரன் சொல்லியிருப்பதைப்போல்
வரவு  கணக்கை மட்டும் கொடுப்பாராம்
தென்றலில் பணியாற்றும்போது இராம சுப்பையா
கவிஞர் செலவு கணக்கு எங்கே என்று
கேட்டால் செலவு செய்தால்தானே
சொல்வதற்கு என்பாராம் சில கழகப் பிள்ளைகள்
உணவு தருவாங்க மற்ற இடங்களில் மூணு
வேளையும் தேநீரும் பொறையும் தான் என்பாராம்

21.5.1997 அதிகாலை உடல் நலிவால் மறைவு
இறுதிவரை வாழ்ந்தார் அவர் பகுத்தறிவாளராக
அவர் சொல்லிக்கொண்டுஇருந்ததைப்போல்
கலைஞர் முதல்வராக வந்து முதல்  மாலை அணிவித்தார்
அவர் இறுதிப் பயணம் சாதி , மதச் சடங்குகள் இல்லாமல்
நிறைவடைந்தது   துக்கத்தோடு
அமைச்சராயிருந்த தமிழ்க்குடிமகன் காரைக்குடியில்
இராம சுப்பையாவின் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தார்
     

Sunday, October 16, 2016

தந்தை பெரியார் வசன கவிதை சுப்பையா - 2

அண்ணா சொன்ன காரணங்கள் நியாயமாகப் பட்டதால்
இராம  சுப்பையாஅண்ணா   தலைமையை   ஏற்றுக் கொள்கிறார் அண்ணாவின் ஆட்சியிலும் கலைஞரின் ஆட்சியிலும் மக்களுக்கு நன்மைகள் செய்யப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்கிறார் 
அதே நேரம் பெரியாரின் கொள்கைகளில்
சமரசம் செய்துள்ளதையும் ஒப்புக்கொள்கிறார்
1951 இராமநாதபுர மாவட்ட தி.மு.க. முதல் மாநாட்டை
சிவகங்கையில் நடத்துகிறார் சிவகங்கை இராமச்சந்திரன்
வழக்குரைஞர் இராசசேகரன்  ஆகியோருடன் இணைந்து   
 
1951ல் கட்சி முடிவுப்படி கைத்தறித்துணிகளை விற்கிறார்
நாவலர் தலைமையில் .  வீட்டில் அவர் மகன்  சாமிநாதனுக்கு
டைபாயிடு காய்ச்சல் இருந்தும் விசாலாட்சி  முதல் விற்பனையை
பெற்றுக்கொள்கிறார் நாவலரிடமிருந்து

1951 காரைக்குடி என்றால் கம்பர் விழாவுக்கு பெயர் போனது
இராம சுப்பையாவுக்கு     கவியரசர் முடியரசனோடு நட்பு
ஏற்படுகிறது  இருவரும் இணைந்து குறள் விழா
நடத்தஏற்பாடு செய்கிறார்கள். அவர்களுக்கு  உதவியாக
திருக்குறள் தேனப்பன் ,நாவக்கரசன், குறள் இலக்குவன் ,
சாமி பழனியப்பன் போன்றோர் இருந்தனர் . ஆண்டு தோறும்
குறள் விழா நடைபெறத் துவங்குகிறது 

தி.மு.கழகம்  அறிவிக்கிறது போராட்டம் டால்மியாபுரம்
என்கிற பெயரை கல்லக்குடி என்று மாற்ற வேண்டும்என்று
முதல் அணிக்கு  கலைஞர் தலைவர் இரண்டாவது  அணிக்கு
இராம சுப்பையா தலைவர் மூன்றாவது அணிக்கு கண்ணதாசன்
தலைவர் முதல் அணி  களமிறங்குகிறது கலைஞர் தலைமையில்
இரண்டாவது அணி முதல் நாள் பயிற்சி வகுப்பில் சொன்னதைப்போல்
அணியமாகி புறப்பட்டோம்  தொடர் வண்டி முன் தண்டவாளத்தில்
தலை  வைத்துப்  படுத்தோம் உச்சி  வெயில்  
தண்டவாளம்  சுட்டது
காவலர் கூட்டம் நிறைய இருந்தது
வந்த  வேலை முடிந்தது எழுந்திருங்கள்  என்றார்கள்                       
தொடர் வண்டிக்கு பச்சைக்  கொடி காட்டினார்கள்   
கைது செய்தால்தான் எழுந்திரிக்க வேண்டும் என்று
பயிற்சியில் அறிவுறுத்தியிருந்ததால் என் அணியில்
ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை தடியால் அடித்தார்கள்
அந்தத் தழும்பு வாழ்நாள் முழுதும் இருந்தது
முதலில் அரியலூர் கூட்டிப் போனார்கள்
பிறகு  திருச்சி மத்திய சிறைக்குகொண்டு வந்தார்கள்
கலைஞர்   அணியயும் அங்கேதான் வைத்திருந்தார்கள் 
கவிஞர்மு.மேத்தா சொல்லியிருப்பதைப் போல் 
இராம சுப்பையா இல்லத்தின் முகவரி சமதர்ம விலாஸ்
உள்ளத்தின் முகவரி கலைஞர் விசுவாசம்
இராம சுப்பையா எந்த உணவும் சாப்பிடுவார்
அவருக்கு வரும் ரொட்டி போன்றவற்றை
மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார் அவர்
சிறை  உணவை சாப்பிடுவார் கலைஞர்
அவரை ஆக்கினார் உணவு அமைச்சராக
தோழர்கள் எல்லோரும் சேர்ந்து  கலைஞரை
முதல் அமைச்சராக ஆக்கினார்கள் 
விசாலாட்சி தேடிக் கண்டுபிடுத்து வந்தார்
மகன்  முத்துராமனையும் ஒரு வயதே ஆன
வீரபாண்டியனையும் தூக்கிக் கொண்டு 
விசாலாட்சி கொண்டு வருவார் செட்டிநாட்டு
வேங்கரிசி மாவு (சத்துமாவு) கலைஞரும்  தோழர்களும்
விரும்பி சாப்பிடுவார்கள் .   கலைஞர் நடத்தினார்
மாறுவேடப் போட்டி  அதில்  அளித்தார் மா. சே .துங்
வேடம் சீன மொழிபோல் பேசச் சொல்லி  மொழி
பெயர்த்தார்  அதை .  கலைஞர் இராம சுப்பையாவை
அண்ணன் என்றழைப்பார் .   சிறைக்கதவுகள் மட்டுமல்ல
கலைஞரின் இதயமும் திறந்து கொண்டது அண்ணனுக்காக 
இராம சுப்பையாவுக்கு சிறைத் தண்டனை மூன்று
மாதம் தான்  ஆனால் கலைஞருக்கு  ஆறு மாதம்
சிறை அவர்  தான் விடுதலை யாகும் மகிழ்ச்சியை
விட  கலைஞரையும் மற்றவர்களையும்  பிரிய
நேர்ந்ததற்காக கண்ணீர் விடுகிறார் 
இராம சுப்பையாவைப்பார்க்க  சிறைக்கு வருகிறார்
அண்ணா ஏன் உள்ளே வந்தீர்கள் வெளியில் இருந்தால்
கட்சிப்பணி ஆற்றுவீர்களே என்று சொல்கிறார்
ம .கோ .இரா (எம் ஜி ஆர் ) வருகிறார்
இராம  சுப்பையா காரைக்குடியில் நாடகம் நடத்த
தேதி கேட்கிறார் சிறையில் இருக்கும்போது  கூட
கட்சிப்பணி தானா என்கிறார் அண்ணா இராம சுப்பையா வை
தலைமைக் கழகத்துக்கு
வரும்படி அழைக்கிறார் அவரும் கரைக்குடியிலிருந்து
சென்னைக்கு மாற்றலாகி வருகிறார்
அண்ணா எப்போதும் இரவிலே தான்  எழுதுவார்
இராம சுப்பையா வெள்ளைத் தாள்களை 1,2,3 என்று எண்
போட்டு அடுக்கி வைத்து விடுவார் அண்ணா
எழுதி  ஒவ்வொன்றாக தள்ளிவிடுவார்
இராம சுப்பையா காலையில் அறையில் விழுந்து கிடைக்கும்
வெள்ளைத் தாள்களை எடுத்து எண் வரிசைப்படி அடுக்கி
வைத்து  விடுவார்  இதுதான் எழுதித் தள்ளுவது
தலைமைக் கழகத்தை விட்டு விலகும் சூழல்
தென்றல் இதழில் பணி செய்கிறார் கவிஞர்
அவரை ஆயுள் சந்தா வாங்க சொல்கிறார்அவர்
யாருடைய ஆயுள் என்கிறார்
கவிஞர் எல்லாம் இதழோட ஆயுள்  தான் என்கிறார்
அவர் இரண்டுவரி எழுதிக்கொடு என்றார்
உடனே கவிஞர் எழுதிக்கொடுத்தார்
"நின்று வரும் தென்றல் இனி என்றும் வரும் "
அதை திராவிட நாட்டில் போடச்செய்தார்

கலைஞர் நெஞ்சுக்கு நீதியில் சொல்கிறார் 
உழைப்பு ஓர் உருவம் பெற்று ஓடியாடி
வேலை  செய்கிற அதிசயத்தை பார்த்திருக்கிறீர்களா
பார்க்கவில்லை என்றால் இராம சுப்பையா வைப் பாருங்கள் 
கவியரசர் கண்ணதாசன் சொல்கிறார் வனவாசத்தில்
"ஓரிடம் நில்லான் எந்த
உணர்விலும்  நல்லான்  அன்பு
சேரிளம்  சொல்லான் தீய
சேர்க்கையில் செல்லான்   வீரப்
போரிட வல்லான்  ராம சுப்பை ய ன் "
1957 தி .மு. க  போட்டியிடும்  முதல் தேர்தல்
அண்ணா வின் நம்பிக்கை தலைமைக்  கழகக்
கட்டளையை ஏற்று காரைக்குடி  தொகுதியில் போட்டியிட்டார்  
அரசர் முத்தய்யாவையும் சா. கணேசனையும் எதிர்த்து
மும்முனைப் போட்டியில். அவர்கள் இருவருக்கும் மகிழுந்துகள்
பறக்கும் தி.மு.க. வுக்கு  சைக்கிள் தான் .  வேட்பாளரை அடையாளம்
காட்ட அவர்  சைக்கிள் கொண்டிருக்கும் கொஞ்சம் பெரிய கொடி
அண்ணா சொன்னதைப்போல கோடீஸ்வரரை எதிர்த்து கோவணாண்டியாய்
நின்றார் வெற்றி வாய்ப்பை  இழந்தாலும் அவர் உழைப்பு கட்சியை
வலுப் படுத்தியிருக்கிறது என்ற மகிழ்ச்சி இருக்கிறது
கவிஞர் கண்ணதாசனும் காரைக்குடியில்  போட்டியிட விரும்பியதால்
இருவருக்கும் மன வருத்தம் ஏற்படுகிறது
என்னிடமிருந்து பணமோ காசோ எதிர்பார்க்காமல்
இரவு பகலா உழைச்ச தோழர்கள் ஸ்டிபன் ,இரத்தினவேலு,
இராக்கப்பன் இஸ்மாயில்,மெய்யப்பன் ,அடைக்கப்பன்
போன்றவர்களை  மறக்க முடியாது
1957 கானாடுகாத்தான் வை.சு.சண்முகனார்
தொடங்கினார் முத்தமிழ்க்கழகம்  அதில்  இணைந்து
பாவேந்தரின்  கவிதை  நூல்கள் வெளிவரப் பாடுபடுகிறார்
பாவேந்தருக்கும் வை.சு.சண்முகனாருக்கும் ஒத்து வரவில்லை



1957 காரைக்குடி சி.மு.அரு .நாராயணன் அவர்கள்
தொடங்குகிறார்கள் எழில் இதழ் அதில் கவியரசர் முடியரசன்
பேராசிரியர் தமிழண்ணல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றுகிறார்

1962, 1967,1971 ஆண்டுகளில் நடைபெற்றது
தேர்தல்  இராம  சுப்பையா பம்பரமாக  சுழன்று
பணியாற்றினார் தி. மு.க. வெற்றிக்
1968 பிப்ரவரி அண்ணா உடல் நலிவால் மறைகிறார் 
இராம சுப்பையாவும் கவியரசர் முடியரசனும் லாரியோ
பேருந்தோ பிடித்து சென்னை வந்தனர் கதறியபடி
அண்ணாவை கடல் கரையில் விட்டு விட்டு
திரும்பினர்  கண்ணீர் மல்க
1972; தலைவர் கலைஞர் இராம சுப்பையாவை
நியமிக்கிறார் மகிழ்ச்சியோடு
தமிழக  சட்டமன்ற மேலவை  உறுப்பினராக
காரைக்குடி தொடர்பு குறைகிறது சென்னையில்
பிள்ளைகள் வீட்டிலே வாழ்க்கை தொடங்குகிறது 
1976 நெருக்கடி  நிலை காலத்திலும்
ஆற்றுகிறார் கட்சிப்[பணி  உறுதி குலையாமல்
 

1980 மீண்டும் ஒருமுறை தமிழக மேலவைக்குப் 
போட்டியிடுகிறார் கலைஞரின் கட்டளையை ஏற்று
வெற்றி வாய்ப்பை  இழக்கிறார் 
1987  சுயமரியாதை வீராங்கனை  விசாலாட்சி அம்மையார்
மறைவு சென்னையில் மூத்த மகன்  எஸ் .பி .முத்துராமன்
வீட்டில்  தங்குகிறார் .  முதுமை காரணமாகவும்  மனைவியை
இழந்த துயரிலும் பொது வாழ்கை பணிகள்  குறைகின்றன 


எஸ் .பி.முத்துராமன் மனைவி கமலா வை .சு.சண்முகனாரின்
பேத்தி இராம சுப்பையாவை நன்கு கவனித்துக்கொள்கிறார்
கமலா 54 வயதில் மறைகிறார் அதன் பிறகும் முத்துராமன்
வீட்டிலேயே  இருக்கிறார்  சுபவீ  சொல்லியிருப்பதைப் போல்
தன்  தந்தையை குழந்தையைப் போல் கவனித்துக் கொண்டார்
முத்துராமன்  அவருக்கு உதவியாக  அவர் மகன் சுப்பையா  என்கிற
அசோகனும் மருமகள் வசந்தியும் இருந்தார்கள்
1993 உடல்  நலிவுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்
பட்டார் வைகோ பிளவுபடும்  சூழல் கட்சி பிளவு படுமோ
என்று கவலைப்படுகிறார் வைகோ பிரிந்தபோது கலைஞர்
பக்கம் நின்றார்  ம. கோ .இரா (எம் ஜி ஆர் ) பிரிந்தபோதும்
கலைஞர்  பக்கம் தான்  நின்றார் உடல் நலம் பெற்று வீடு திரும்புகிறார்
1996 தேர்தலில் வெற்றி பெற்று  கலைஞர்  முதல்வர்
ஆனதும் அடைந்தார் பெருமகிழ்ச்சி.      வாழ்த்தினார்
தள்ளாத வயதிலும் நேரில் சென்று.            அளவளாவி மகிழ்ந்தார்
கலைஞரோடும் அங்கு வந்திருந்த திருவாரூர்த் தென்னனோடும்    
1997 மார்ச் மாதம் நடைபெற்ற ஏ வி எம்
பொன்விழாவில் கலைஞரைச் சந்தித்து நீங்க எப்படி இருக்கீங்க
என்று வினவ கலைஞர் அண்ணே நீங்க எப்படி இருக்கீங்க என்றார்
அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு அந்த நிழல் படம் தான்
அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் இருக்கிறது
அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி அந்த விழாவில் அருளாளர்
ஆர் எம்  வீரப்பன் அவர்களையும் சந்தித்தது
கொள்கை அளவில் இருவரும் மாறுபட்டாலும்
நட்பும் மரியாதையும் அப்படியே இருக்கிறது
ஆர் எம் வீ  இராம சுப்பையா விருது ஏற்படுத்தி
அதில் முதல் விருதை எஸ் பி முத்துராமனுக்கே
அளித்திருக்கிறார் மகிழ்ச்சியோடு
இராம சுப்பையா கலைஞர் சொல்லியிருப்பதைப்போல்
செட்டிநாட்டில் திராவிட இயக்கத்தின் நிழல் கூடப்
போக முடியாத காலத்தில் இயக்கப் பணிகளை செய்தவர்
பேராசிரியர் சொல்லியிருப்பதைப்போல் மதுரையில்
கருஞ்சட்டைப்படை மாநாட்டில் கலந்துகொண்ட
அந்த மாநாட்டின் பந்தல் நெருப்பு வைக்கப்பட்டது
அன்று அவர் மானாமதுரை வழியாக காரைக்குடி வந்து
பேராசிரியரை வைத்து அரிமளத்தில் கூட்டம் நடத்தியவர்
ஆசிரியர் கி வீரமணி அவர்கள்சொ ல்ல்லியிருப்பதைப்போல்
இராமநாதபுர மாவட்ட மொத்த வசூல் ரூபாய் 340 இராம
சுப்பையா விசாலாட்சி கொடுத்தது ரூபாய் 26..     1932ல்
. வி. எம் சரவணன்  அவர்கள்  சொல்லியிருப்பதைப்போல்
இராம சுப்பையா .வி .எம் நிறுவனத்துக்கு  ஒரு  பரிசை தந்திருக்கிறார்
அதன்  பெயர் எஸ் பி முத்துராமன் அது மட்டுமல்ல ஏ வி மெய்யப்பன்
அவர்கள் அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகம் பார்த்தார்கள் விரும்பினார்கள்
அதை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று அணுகினார்கள்
காரைக்குடி இராம சுப்பையா வை . அவர் ஏவிஎம் அவர்களை
அழைத்து  சென்றார்கள் அண்ணாவிடம் .  அண்ணா ஓர் இரவு உரிமையை
ழங்கினார் .  இந்த அறிமுகம் தான்  பின்னாளில்
கலைத்துறையில்  தான் நுழைய வேண்டும் என்று
முடிவாய் இருந்த முத்துராமனை அழைத்துக்கொண்டு
போனார் ஏவிஎம் அவர்களிடம் கதைப்  பிரிவில் பணிபுரிய
விரும்பினார் எஸ் பி எம்  எடிட்டிங் பிரிவைக் காட்டினார்
ஏவிஎம் எடிட்டிங் பிரிவில் கலை வாழ்க்கை தொடங்கியது  
இராம சுப்பையா சொல்கிறார் அதற்குப்பிறகு எஸ்பிஎம் க் காக
நான் எதையும் கேட்கவில்லை என்று எஸ்பிஎம் மட்டுமல்ல

எல்லாப் பிள்ளைகளும் அப்படித்தான் சொந்தக் காலில் நிற்பார்கள்