Monday, November 28, 2016

ஃ பிடல் காஸ்ட்ரோ

90 வயதில் அந்தக்  கியூபா ஞாயிறு மறைந்து விட்டது
அமெரிக்க ஆதரவில்  ஆட்சி நடத்திய வல்லாளுனர்  (சர்வாதிகாரி )
படிஸ்டாவை எதிர்த்து  ஃ பிடல் போராடினார்
தம்பி ரவுல் காஸ்ட்ரோ வும்  ஃ பிடலும் தளைப்பட்டனர்

விடுதலை ஆனதும் மெக்சிகோ சென்றனர் மேலும்
மக்கள் படிஸ்டாவுக்கு எதிராகத் திரும்பும்போது
ஃ பிடல் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைகிறார்
திட்டங்கள் தீட்ட சேர்ந்து கொண்டார் சேகுவேராவும்
மெக்சிகோவில் தங்கி பொதுவுடமைப் புரட்சியை
உருவாக்குவதில் உடனிருந்தார் சேகுவேரா  என்பதால்
ஃ பிடல் ஆக்குகிறார் அவரை அமைச்சராக 

கியூபா ஒரு குட்டித் தீவு 90 கல் தொலைவு
அமெரிக்காவிலிருந்து ஃ பிடல் சோவியத் போலப்
பொதுவுடைமை புரட்சி செய்தார் அது அமெரிக்கா
விரும்பவில்லை விதித்தது பொருளாதாரத் தடைகளை
கலங்கவில்லை காஸ்ட்ரோ.    அப்போது அவருக்கு
வயது 32 தான்     அவர்  எதிர்த்தார் 10 அமெரிக்க
அதிபர்களை  .   அமெரிக்கா 638 முறை கொல்ல
முயன்றது .    அவர் காதலியைக்  கொண்டே
அவர் பிடிக்கும் சுருட்டில் கலந்தது நஞ்சு
ஆனாலும்  அவர் தப்பித்துக் கொண்டார்
 
அவர் இருந்தார் தலைமைஅமைச்சராக
பின்பு ஆனார் குடியரசுத் தலைவராக
49 ஆண்டுகள்   இருந்திருக்கிறார் தலைமைப்
பொறுப்பில் உலகில் அவர் மட்டும் அப்படி

சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை விழித்துக்
கொண்டார் சுழலும் உலகத்துக்கு முன்பே
அணி சேரா நாடுகள் இயக்கத்திலும் இருந்தார்
(non alliied   movement)
அவரும் நடத்தினார்  இந்தியாவுக்கும் வந்தார்
இந்திரா காந்தியை சந்தித்தார் அன்போடு

கியூபாவில் 100 க்கு 100 பேர் படித்தவர்கள்
ஊட்டச்சத்து இல்லாதவர்களே இல்லை
அறிவியல் தொழில் நுட்பத் துறையில்
பெண்கள் பெரும்பான்மை அங்கே
வேளாண் துறையில் விளைச்சல் மிகுதி
மறைந்துவிட்ட கியூபா ஞாயிறுக்கு நம்

           வீர வணக்கம்

Thursday, November 24, 2016

தந்தைபெரியார் வசன கவிதை கலைஞர் - 2

அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் முதல்வராகிறார்
நாவலர்  அமைச்சரவையில் சேரவில்லை  பெரியார்
சமாதானம் செய்கிறார்  ஆனாலும் சேரவில்லை 
அவருடைய  அமைச்சரவையில்  மதி, கோவிந்தசாமி ,
சத்தியவாணிமுத்து ,மாதவன் ,சாதிக் பாட்சா ,ப .உ.சண்முகம்,
ஆதித்தனார் ,முத்துசாமி, கே வி  சுப்பையா, ஓ.பி  ராமன்
ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்  பெருமையோடு
அப்போது கலைஞருக்கு வயது 45 தான்
புலவர் கோவிந்தன் பேரவைத் தலைவர்
ஆட்சிப் பொறுப்பேற்றதும் அரசு  அக்கறையோடு
வறட்சிப் பணிகளை கவனித்தது
அண்ணாவின் மருத்துவச்செலவு ரூ 1.33 லட்சம்
அதை அண்ணா விரும்பியது போல் கழகம்
ஏற்றுக்கொண்டது  கடமை உணர்வோடு
தியாகி கோமதி சங்கர தீட்சிதர் 80 வது  பிறந்தநாளில்
கலந்து கொள்கிறார் .
கிருபானந்த வாரியார் அண்ணாவின் மறைவு பற்றி கேலி பேசுகிறார்
நெய்வேலியில் ; சிக்கல் எழுகிறது கலைஞர்  சரி செய்கிறார்
.
பேராசிரியர் கலைஞரின் தலைமை பற்றி அய்யம்
எழுப்புகிறார்     விளக்கம் பெற வேண்டி      
 .
  கலைஞர் தில்லிப் பயணம் போகிறார்
அமைச்சர் மாதவனோடு  .மத்திய அமைச்சர்
பாபு ஜெகஜீவன்ராம் உங்கள்  அரசுக்கு ஒத்துழைப்புக்
கொடுப்போம் என்கிறார் உவகையோடு
அவர் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணை
மணம் செய்துகொண்ட மு .க அழகிரி
திருமணத்துக்கும் வந்திருந்தார்
ஆனால் மத்திய அமைச்சர் மொரார்ஜீ தேசாய்
கடுமையாக நடந்துகொள்கிறார் கலைஞர்
வறட்சிப்  பணிகளுக்கு ரூ 5 கோடி கேட்டபோது

பெருந்தலைவர் காமராசர் முதல்வர்கள் கூட்டம்
கூட்ட  வேண்டும் என்கிறார்  அக்கறையோடு

கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும்
அதற்குரிய வசதிகளையும்  ஏற்படுத்துகிறார்
பேரவையில் கருத்திருமன் வேண்டாம் என்கிறார்
ஆனால் மேலவையில் ராஜாராம் நாயுடு ஏற்றுக்கொள்கிறார்
தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம்
ஒரு சாலை திறப்பு விழாவிற்காக  ஆப்பக்கூடல்
என்கிற இடத்தில அமைக்கிறார் பெரிய மேடையும்
பெரிய கொட்டகையும் கலைஞர் போகிறார்
அமைச்சர்கள் சிலரோடு . அப்போது இடி ,மழை ,
சூரைக்காற்று மேடையும் கொட்டகையும்
விழுகின்றன .நல்லவேளை மின்சாரம் துண்டிக்கப்
பட்டது அல்லது  பெரிய விபத்து நடந்திருக்கும் 

அண்ணா சொன்னதைப்போல் தி .மு .க  வின்
கடவுள் கொள்கை பிள்ளையாரையும் உடைக்க
மாட்டேன் பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க
என்பதாகும் எல்லோருக்கும் சொல்லும்படி 
அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்
நாடகத்தில் அண்ணா காக பட்டராக நடித்தார்
வி .சி. கணேசன் சிவாஜியாக நடித்தார்  அதைப்
பார்த்துப் பாராட்டிய பெரியார் சிவாஜி கணேசன்
என்றழைத்தார்  அப்படிப்பட்ட சிவாஜி கணேசன்
தி,மு,க வை விட்டு வெளியேற்றப் பட்டார்
அவர் திருப்பதி போனார் என்பதால் .

தஞ்சைப்புயல் தாக்குகிறது நிதி திரட்ட
தூக்குமேடை நாடகம் போடுகிறார்

பராசக்தி படம் கலைஞரின் உரையாடலும்
சிவாஜியின் நடிப்பும் சேர்ந்து மாபெரும் வெற்றியை
அளிக்கிறது திரை உலகில் உள்ளவர்களுக்கு

1969 கோவாவை மீட்ட தீவிரவாதி   ரானடே அண்ணாவுக்கு
நன்றி சொல்ல வருகிறான் அண்ணா போர்ச்சுகல் அரசுக்கு
போப் மூலம் பரிந்துரை செய்தார் என்பதால் மறக்காமல்

1983 ஈழச் சிறையில் தங்கதுரை ,குட்டிமணி,ஜெகன் மேலும்
50 போராளிகள் காவலர்களால் தாக்கிக் கொல்லப்பட்டனர்
குட்டியின் விழிகள் தோண்டப்பட்டு பூட்ஸ்களால் மிதிக்கப்
பட்டன கொடூரமாக 
1969 தேசிய வளர்ச்சிக் குழுவில்  கலைஞர்
மத்திய -மாநில  உறவுகள்  பற்றியும்
வங்கிகள் நாட்டுடமை பற்றியும் பேசுகிறார்
1964 க்குப்பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை
1969ல் அதை நடத்துகிறார் .  காங் 6 தி மு க 47+கூட்டணி 3

மதுரைப் பல்கலையாக இருந்ததை  மதுரைக்  காமராசர்
பல்கலை என்று பெயர்  சூட்டுகிறார்  மகிழ்ச்சியோடு உலகத்தமிழ் மாநாட்டில் வரவேற்புரை காமராசர்
அண்ணா நேரில் சென்று அழைத்தார்
குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் தொடக்கவுரை
சிறப்பாக நிகழ்த்தினார் அன்று

1969 மே வேளாண் அமைச்சர் கோவிந்தசாமி  மறைவு

மூடப்பட்ட பஞ்சாலைகள் திறப்பதற்கு ஏற்பாடு
தேவைப்படும் நிதியில் மததிய அரசு 51% மாநிலம் 49%

பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம்
கேரள முதல்வர்  மத்திய  அமைச்சர்
ஆகியோருடன் முத்தரப்பு  கையெழுத்து
கோவைக்குக் குடிநீர் தரும் சிறுவானித் திட்டமும் கூட
அண்ணாவின் 60 வது பிறந்தநாள் தமிழகமெங்கும்
60 சிலைகள் வைத்தார் கலைஞர் 
கழகம்  எப்போதும் போல் மக்களாட்சி முறைத்
தேர்தல் நடத்தும் இயக்கம் . நாவலர் பொதுச் செயலாளருக்குப்
போட்டியிடுகிறார் கலைஞரும் பொதுச்செயலாளருக்குப் போட்டியிடுகிறார்
பெரியார் கலைஞரை ஆதரிக்கிறார் விருப்பத்தோடு 
போட்டி தவிர்க்கமுடியாததாகி விடுகிறது
அப்போது ஒரு சமரசாத் திட்டம்  உருவாகிறது
புதிதாகத் தலைவர் பதவியை ஏற்படுத்துவதென்றும்
கலைஞர்  தலைவராய் இருப்பார் என்றும்
நாவலர் பொதுச்செயலாளராக இருப்பர் என்றும்
ம கோ இரா பொருளாளராக இருப்பார்   என்றும்
சமரசாத் திட்டம் அதை  எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றனர்
திட்டத்தைக் கூறியவர்கள் மதுரை முத்து ,மன்னை  ,அன்பில் ,
திருவண்ணாமலை தர்மலிங்கம் ,தூத்துக்குடி சிவசாமி
ஆகியோர் .  கழகத்தின்  சட்ட   திட்டங்களில்
மாற்றம் செய்யப் படுகிறது . பெரியார் வாழ்த்துகிறார்

குடியேரசுத் தலைவர் தேர்தலில் வி .வி .கிரி யை
கழகம் ஆதரிக்கிறது . அவர் வெற்றி பெறுகிறார்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களுக்கு
மாதம் ரூ 200 உதவித்தொகை  அளிக்கிறார்
பெரியார் கருத்துக்களைப்  போற்றும் குன்றக்குடி
அடிகளார்  அவர்களை சட்டமன்ற  மேலவைக்கு
நியமனம் செய்கிறார் பெருமைப் படுத்தி 
பெருந்தலைவர் காமராசருக்கு பள்ளிகளை
திறப்பதிலும் மதிய  உணவு வழங்குவதிலும்
உதவியாக இருந்தவர் சுயமரியாதைக்
குடும்பத்தை சேர்த்ந்தவரான நெ .து  சுந்தரவடிவேலு
அவர்களை  சென்னைப் பல்கலைக்கழக துணை
வேந்தராக நியமித்தார்  கலைஞர்
அமைத்தார்          நீதியரசர் பி வி. ராஜமன்னார்  தலைமையில்
மத்திய -மாநில உறவு பற்றி ஆராயக்குழு

வானொலி என்றும் மாநிலச் செய்திகள்
என்று வானொலியில் தமிழ்ச் சொற்களை அறிமுகம் செய்ய
வைக்கிறார்  சேலத்தில் அண்ணா சிலை திறப்பு குடியரசுத்
 தலைவர்  வி வி .கிரி திறந்து வைக்கிறார் அதை

சண்டிகர் மாநாடு  சீக்கியத் தலைவர் குருநானக்
அவர்களின்500வது  பிறந்த நாள் விழா
அப்படியே லூதியானா விவசாயப் பல்கலையை
சுற்றிப் பார்க்கிறார் ஆர்வத்தோடு   
 அமிர்தசரஸிலுள்ள  சீக்கிய பொற்கோவிலையும்
காண்கிறார் ஜாலியன்  வாலா பாக்கில் வெள்ளைக்கார
டயரால் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில்  அஞ்சலி
செலுத்துகிறார்  கலைஞர் துக்கத்தோடு 
காசுமீர  சி ங்கம்   சேக் அப்துல்லாவை சந்திக்கிறார்
மாநில  சுயாட்சிபற்றிப்  பேசிட வேண்டி
மாநில சுயாட்சித் தீர்மானம்  கொண்டு வருகிறார்
இரண்டாவது ஊதியக்குழு அமைக்கிறார்
காவல்துறை ஆணையம் அமைக்கிறார்
பிற்படுத்தப்பட்டோர் குழு அம்மைக்கிறார்

விவசாயிகள் குடியிருக்கும்  நிலங்களை  அவர்கட்கே
சொந்தமாக்கி சட்டம் இயற்றுகிறார் கலைஞர் 
பொதுவுடமைக் கட்சி தலைவர்மணலி  கந்தசாமி
பாராட்டுகிறார் மகிழ்ச்சியோடு 
கலைஞருக்கு கல்லக்குடி கொண்டான்  என்கிற பட்டம்
வழங்கப்  படுகிறது  வாழ்த்துக்களோடு
எல்லா சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று
சட்டம் கொண்டு வந்தார் அதை நிறைவேற்ற 
முடியாமல் முட்டுக்கட்டை போட்டு விட்டார்கள்
இப்போது அதை நிறைவேற்ற அரசியல் சட்டம்
திருத்தப்பட வேண்டும் அதற்காக
அண்ணா வின் நூற்றாண்டு விழா அஞ்சல் தலை
வெளியிடப் பட்டது அதில் அவருடைய தமிழ்
கையெழுத்தும் இடம்   பெற்றிருக்கிறது 

கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டார்  கலைஞர்  

.1.அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தேதீருவோம்
3. இந்தித்  திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5.மாநிலத்தில் சுயாட்சி , மத்தியில் கூட்டாட்சி 

மனோன்மணியம் காப்பியத்திலிருந்து '
"நீராரும்கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய்
வாழ்த்தாக அறிவிக்கிறார் பாடலுக்கு எம் எஸ் வி
இசை அமைக்கிறார் டி எம் சௌந்தர்ராஜனும்
பி சுசீலாவும் பாடுகிறார்கள்

சேலம் உருக்காலை பிரதமர் இந்திரா  காந்தி
அட்டிக்கல் நாட்டுகிறார் பொதுத் துறையில்

இங்கிலாந்து பிரான்சு மேற்கு ஜெர்மனி ஆகிய
நாடுகளுக்கு அரசு முறை சுற்றப் பயணம் மேற்கொள்கிறார்
பிரான்சு நாட்டில் 3 வதுஉலகத்தமிழ்  மாநாட்டில் கலந்து
கொள்கிறார் மகிழ்ச்சியோடு அதேபோல்  இலண்டன் நகரில்
கண் பரிசோதனை செய்து  கொள்கிறார்     
பாலர் அரங்கை மேம்படுத்தி கலைவாணர் அரங்கம்  
என்று பெயரிடுகிறார் பெருமை சே ர்க்க      
நில  உரம்பு 15 ஏக்கர்  என்று  குறைக்கிறார்
முன்பிருந்த  30 ஏக்கரை  மாற்றி
அமைசர்கள்  மதி, முத்துசாமி,வேழவேந்தன்
பதவி    விலகினர்   விரும்பி
மன்னர் மானிய ஒழிப்பு  முடிவு  கழகம்
ஆதரிக்கிறது ஆனால் உச்ச நீதிமன்றம்
தடை விதிக்கிறது  மறுத்து

நாடாளுமன்றம் கலைப்பு சட்டமன்றமும் கலைப்பு
இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி கழகம் 24   இ. காங்  10
சட்டமன்றத்தில் கழகம்184  (பெரியார் இராமர் படத்தை
அடித்தார்  எனும் பரப்புரையையு ம்  மீறி ) பெரியார்  பாராட்டு
பு திய  அமைச்சரவை  அமைக்கிறார்

மதுரை மாநகராட்சி ஆகிறது  மதுரை முத்து
தலைவர் அதற்கு முதலாவதாக

தொழுநோய் பிச்சைக் காரர் மறுவாழ்வுத் திட்டம்
பிச்சைக் காரர் மறுவாழ்வுத் திட்டம்
கண்ணொளிவழங்கும் திட்டம்
கை ரிக்சா  ஒழிப்புத்திட்டம்
கருணை இல்லங்கள்
கலப்புத்  திருமணத் திட்டம்
போன்ற  திட்டங்களை  செயல் படுத்திடுகிறார்
நில  உச்ச வரம்புத் திட்டம் கொண்டுவருகிறார்
அரசுக்குக் கிடைத்தது 88000 ஏக்கர்  விவசாயிகளுக்கு
வழங்கியது 63000 ஏக்கர் பரிவோடு
தனியார் வசமிருந்த பேருந்துகளை நாட்டுடமை
ஆக்கி பாண்டியன் ,சேரன் ,சோழன் ,பல்லவன் ,பெரியார்
அண்ணா, கட்டபொம்மன் பெயர்களில் அரச போக்குவரத்துக்
கழகம்  பல  உருவாக்குகிறார்

அண்ணாமலை பல்கலைக் கழகம் அவருக்கு
வழங்குகிறது முனைவர்  பட்டம்  பெருமையோடு

மூன்று வார அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
அங்கே  கண் பரிசோதனையும்   செய்து கொள்கிறார்
தலைமைஅமைச்சர் இந்திரா காந்தியின்
உதவியோடு  உருவாகிறது  வங்கதேசம் 
ம  கோ இரா கட்சியில்     கணக்கு
காட்ட வேண்டும் என்றும் பேசுகிறார்
மக்கள் மன்றத்தில் உள் நோக்கத்தோடு
கட்சி அவரை விலக்குகிறது  அவர்  அண்ணா தி .மு .க
தொடங்குகிறார் புதிதாக அண்ணாவின் பெயரைத் தாங்கி
கண்ணியத்துக்குரிய  காயிதே மில்லத்  மறைகிறார்
கலைஞர் கண்ணீர் அஞ்சலி செலுத்த்துகிறார்
மூதறிஞர் இராஜாஜி மறைகிறார்  கலைஞர்
எழுப்புகிறார் நினைவு மண்டபம்  காந்தி
மண்டபத்துக்கருகில்  கடமை  உணர்ச்சியோடு  
விடுதலைப் போராட்ட  வீரன்  வீர பாண்டியக்
கட்டபொம்மனுக்கு எழுப்புகிறார் கோட்டை
மீண்டும் தமிழகத்தில் மதுவிலக்கை  அறிமுகம்
செய்கிறார் கலைஞர் அக்கறையோடு
இதை எதிர்க் கட்சிகள் ஒப்புக்கொள்வதில்லை
1975 இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்
எதிர்க்கட்சித்  தலைவர்கள் வடக்கே கைது
 தி .மு.க  செயற்குழு  கூடி எதிர்ப்புத் தெரிவித்தது
நாட்டில் 20 அம்சத் திட்டம் அமலில் இருந்தது
காமராஜர் உடல் நலிவு அடைகிறார்  வருத்தத்தில்
கலைஞர் பார்க்கப் போகிறார்  அவரிடம்  தேசம்
போச்சு தேசம் போச்சு என்கிறார்
தமிழ் நாட்டில் மக்களாட்சி  இருக்கிறது கலைஞர்
ஆட்சி தொடர வேண்டும் என்கிறார்

சீரணி அரங்கில் மாபெரும் கூட்டம் நடக்கிறது
செய்தித் தாள் தணிக்கை இருக்கிறது  முரசொலி
கடுமையான தணிக்கைக்கு உள்ளாகிறது
அமைச்சர் என் வி என்  மறைகிறார்  கலைஞர்
நேரில் அஞ்சலி செலுத்துகிறார்

பூம்புகார் கலைக்கூடம் அமைக்கிறார்
தஞ்சையில் இராசராச சோழனுக்கு சிலை அமைக்கிறார்
அதை கோவிலுக்குள் வைக்க மத்திய அரசு  அனுமதி  தராததால்
தஞ்சைப்  பெரிய கோவில் வாசலில் வைக்கிறார் 
'சாவி மணி விழாவில்  கலந்து கொள்கிறார்
பெருந்தலைவர் காமராசர் மறைவு கலைஞர்
அஞ்சலி செலுத்துகிறார் காந்தி மண்டபம்  அருகில்
நினைவகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்  இந்திரா காந்தியும் வருகிறார்
கடற்கரை சாலைக்கு காமராசர் சாலை என்று பெயர்
சூட்டுகிறார் பெருமை சேர்த்து 

'மிசா'    சட்டம் அமல் படுத்துகிறார் தலைமை  அமைச்சர்
அதில் ஸ்டாலின் ,மாறன் மற்றும் 25000  திமுக  கண்மணிகள்
கைதாகிச் சிறையில் வாடினர்  குடும்பங்களைப் பிரிந்து   
ஆளுநர் ஆட்சி அது 2 ஆலோசகர்களின் அறிவுரைப்படி
சென்னை  சிறைச்சாலையில் வித்யாசாகர் என்கிற
காவல் அதிகாரி கழகத் தோழர்களைத் தாக்குகிறார்
அதில்  கண்மணி சிட்டி பாபு கடுமையான  தாக்குதலில்
இறந்து விடுகிறார்    ஆசிரியர் கி வீரமணி உள்ளிட்ட
திராவிடர் கழகத்தரும் கைது செய்யப் பட்டுத் தாக்குதலுக்கும்
உள்ளாயினர்  மோசமான வகையில்
கைதானவர்கள் பெயரை வெளியிடவும்  கட்டுப்பாடு
அண்ணா சதுக்கத்துக்கு வர முடியாதவர்கள்  என்று
பெயர்கள் வெளியிடப் பட்டன முரசொலியில்
சட்டசபையும் கலைப்பு  ஆளுநரால்
கூட்டம் ஊர்வலத்துக்குத்  தடை 
தி மு க  வாரியத் தலைவர்கள் பதவி  விலகுகின்றனர்
 கலைஞருக்கு ரூ 30 கோடி சொத்து என்று செய்தி
வருகிறது ஊடகங்களில்  தவறாக  
அண்ணா தி மு க  ஆதரிக்கிறது நெருக்கடி நிலையை
கலைஞர் மற்றும் அமைச்சர்களின் 'ஊழல்' பற்றி
விசாரிக்க  சர்க்காரியா ஆணையம் (கமிசன் ) அமைக்கப்
படுகிறது  இந்திரா காந்தியால் . ம கோ  இரா  54 புகார்கள்
அடங்கிய பட்டியலைக் கொடுக்கிறார் 
கட்சியில் சுகத்தை அடைந்திருந்த சிலர்
கட்சி மாறினார்கள்  ஏமாற்றத்தோடு
கலைஞர் அடிக்கல் நாட்டிய காமராசர் நினைவகம்
திறக்கப் படுகிறது இந்திராகாந்தியால்  அதில்
உள்ள இரா ட்டை சின்னம் அகற்றப்படுகிறது
கலைஞடன்  மகிழுந்தில் வந்தவர்கள் கைது
செய்யப்படுகிறார்கள் ஓட்டுனரும் வரவில்லை
தோழர் கண்ணப்பன் மகிழுந்து ஓட்டுகிறார்
அவரையும் கைது  செய்கிறார்கள்
சிறையில்  இருக்கும் கைதிகளை பார்க்க
முடியவில்லை குடும்பத்தினரால் கலைஞர்
காவலதுறை  உயர் அதிகாரிக்கு தொலை பேசியில்
பேசுகிறார் அவர் உறவினர்களை மட்டும்  பார்க்கலாம்
என்றும் மற்றவர்களை பார்க்க முடியாது என்றும் சொல்கிறார்
கலைஞர் ஸ்டாலின்  மாறன் மட்டும் பார்க்கிறார்
முரகசொலி கடுமையான தணிக்கைக்கு ஆகிறது
அரசியல் எதுவும் எழுதமுடியவில்லை
இலக்கியக் கட்டுரைகள்  எழுதுகின்றார்
கழக கண்மணி சாத்தூர் பாலகிருட்டிணன் மறைகிறார்
மகிழுந்தில் சாத்தூர் போகிறார் அஞ்சலி செய்து திரும்புகிறார்
வழக்கு நிதி  திரட்டுகிறார்  கலைஞர்  கட்சிக்கு
வாதாடுவதற்காக  கடமை உணர்ச்சியோடு
 மாநிலக் காட்சிகள் தடை செய்யும் எண்ணம்
எழுகிறது மத்திய அரசுக்கு  உடனே அதிமுக
தன பெயரை அனைத்திந்திய அதிமுக  என்று
மாற்றிக் கொள்கிறது அச்சத்தோடு
சிறையில் வாடும் க;ழகக்  கண்மணிகளின் குடும்பங்களுக்கு
மாதம் ரூ  200  வீதம்  கழக நிதியிலிருந்து அனுப்புகிறார் 
 பெங்களூரு சிறப்புக் கூட்டமும் தடை செய்யப் படுகிறது
மணவிழாக்களில்  கலந்து கொண்டு மணமக்களை
வாழ்த்துவது போல் அரசியலும் பேசுகிறார்

ஜூன் 2ம் நாள் இளமுருகு பொற்செல்வியோடு
மகிழுந்தில் தணிக்கை அதிகாரி அலுவலகம் செல்கிறார் கையில் கொடியோடும் மு.க அழகிரி மு.க.தமிழரசு ஆகியோர்
கையால் ஒற்றிக் கொடுத்த பிறந்த நாள் செய்தியோடும்
(அண்ணா  என் அன்னையை விட மிகுதியான அன்பு காட்டினார் )
என்பது பிறந்த நாள் செய்தி அனுமதிக்கப் படவில்லை
அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே  கையில்
கொடியோடும் சர்வாதிகாரம் ஒழிக என்கிற முழக்கத்தோடும்
மறு  நாள் பிறந்தநாள் வாழ்த்த வந்த உடன் பிறப்புக்களை
காவலர்கள் தடியடி செய்கின்றனர் காயத்தோடு வந்த
1000 பேரை சேர்த்துக் கொண்டு கோட்டை நோக்கி ஊர்வலம்
போகிறார் கலைஞர்  துணிச்சலோடு
கோபாலபுரம் வீட்டை அளக்கிறார்கள்  அதிகாரிகள்
கலைஞர் அது 1956ல் வாங்கியது என்கிறார்
ஆனாலும்  அளக்கிறார்கள் அதை
தலைமை அமைச்சர் இந்திரா காந்தி இறங்கி
வருகிறார் தவறுகளை உணர்ந்து  கைது
செய்யப்பட்டிருந்த பெரிய தலைவர்கள்
விடுதலை ஆகிறார்கள் நல்லபடி
தில்லிக் கூட்டம் கலைஞர் பெரிய எதிர்கட்சித்
தலைவர்களோடு கலந்து உரையாடுகிறார் கழகத்தின்
நிலைப்பாட்டை எடுத்துரைக்கிறார்  நன்கு
கைதாகி இருந்த கழக கண்மணிகள் எல்லோரும்
விடுதலை  ஆகிறார்கள் மகிழ்ச்சியோடு
கலைஞர் அமைத்திருக்கிறார் பெரியார் சமத்துவபுரங்கள்
பெரியார் மகிழ்ச்சியடைந்தார் கலைஞர் அமைச்சரவையில்
பார்ப்பனர்கள் இல்லை என்று  அதே போல் அமைச்சர்கள்
மனசாட்சிப்படி பதவி ஏற்றுக் கொண்டார்கள்  என்று
அரசு அலுவலகங்களில் கடவுள் படம் கூடாது என்றதையும்
பாராட்டினார் பெரியார் அதே நேரம் இவர்களும் மத விழாக்களுக்கு
விடுமுறை விடுகிறார்களே என்றும் வருத்தப் பட்டார் தி மு க
அமைச்சர் கோவில்  துறைக்கு 4 1/2 கோடி ஒதுக்கீடு செய்தபோது
அதை அறிவியல் ஆய்வுக்கு பயன் படுத்தலாமே   என்ற
ஆதங்கம் பெரியாருக்கு  இருந்தது
தொழில் வளர்ச்சிக்காக  சி ட் கோ அமைத்தார்
சி ப் கா ட் உருவாக்கினார் கலைஞர்
கணினி வளர்ச்சிக்காக டை ட ல்  பா ர் க்
ஏற்படுத்தினார் தமிழர்களுக்காக

கலைஞர் குமரி முனையில் திருக்குறள் 133 அதிகாரங்களை
உடையது திருவள்ளுவருக்கு வைத்தார்  சிலை 133 அடியில்
அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்  ஆசியாவிலேயே
சிறந்ததாக  சென்னையில் இணையதள வசதியோடு
அன்னைத்  தமிழ் மொழியை செம்மொழி ஆக்கினார்
அன்னை சோனியா காந்தியின் உதவியோடு
அந்தச் செம்மொழிக்கு  கோவையில் மாநாடும்
நடத்தினார் பெரிய அளவில் பாராட்டும்படி 
தமிழைச்செம்மொழி ஆக்க வேண்டும் என்று
வேண்டுகோள் வைத்த பரிதி மாற்கலைஞர்
 ஆகிய  சூரிய நாராயண சாஸ்திரிக்கு  நினைவகம்
அமைத்தார் நூல்களை நாட்டுடைமையாக்கி
குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகையும் கொடுத்தார்
தமிழ் செம்மொழி ஆவதற்குக் கரணியமான
பிரைமரி கிளாசிக்கல் லாங்வாஜ் ஆப் தி வேர்ல்ட்
(   உலகின் முதல் தாய் மொழி  ) என்கிற  ஆங்கில
நூலை எழுதிய தனித்தமிழ் அறிஞர் மொழி ஞாயிறு
ஞா .தேவநேயப்  பாவாணருக்கும் நினைவகம்
அமைத்தார் நூல்களை நாட்டுடமை ஆக்கி
குடும்பத்தினருக்குப் பரிவுத் தொகை அளித்தார் 
வேர்ச்சொல் ஆராய்ச்சியில் சிறந்த
தேவநேயப்  பாவாணரின்
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்
திட்டத்தை அரசு சார்பில் ஏற்றுக்கொண்டு
பாவாணரை அதன்  இயக்குநராக்கினார்
தமிழறிஞர் வ சு ப மாணிக்கனார் போன்றவர்களின்
நூல்களையும் நட்டுட மையாக்கி அவர்களின்
குடும்பங்களுக்கு  பரிவுத் தொகை வழங்கினார்
ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள்
என்று அறிவித்தார் அவர்கள் போராட்டம்
நடத்தியபோது அவர்களை நேரில் சென்று
சந்தித்தார் முதல்வர் கலைஞர்
சிறுவயதில் கையேடாகத் தொடங்கிய முரசொலி
பவள விழா  காண்கிறது  களிப்போடு
சட்டமன்றத்  தேர்தலில் தெடர்ந்து 13 முறை வெற்றி
பெற்ற சாதனையாளர்  அவர்
5 முறை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார்
48 ஆண்டுகள் திமுக தலைவர் அவர்
ஏராளமான நூல்கள் எழுதியிருக்கிறார்
வாழ்க்கை வரலாற்றை நெஞ்சுக்கு நீதியாக
வழங்கியிருக்கிறார் சங்கத் தமிழ் ,குறளோவியம்
படைத்திருக்கிறார்  தொல்காப்பிய இலக்கணத்தை
வைத்து இலக்கியம் வரைந்திருக்கிறார்
திருக்குறளுக்கு உரை எழுதியிலிருப்பதை 
இமய மலைக்குப் பொன்னாடை போர்த்துவது
போல் என்று சொல்கிறார் கலைஞர்