Sunday, June 26, 2016

அண்ணா

1935 ல் அண்ணா அறிமுகமாகிறார்
அவரின் பேச்சாற்றல் 
பெரியாரைக் கவர்கிறது
குடியரசில் உதவி ஆசிரியராகப்
பணி செய்கிறார்
1942ல் திராவிடநாடு
இதழைத் தொடங்குகிறார்
பெரியாரின் உதவியோடு
1948ல் நடைபெற்ற
இரண்டாவது இந்தி எதிர்ப்புப்
போரில் அண்ணா தலைமையில்
நடைபெற்றது மறியல்
மாணவர்களை இந்தி படிக்க வேண்டாம்
என்று கேட்டுக்கொண்டனர்
மறியல் செய்தவர்கள்

சேலம் மாநாட்டில்     
நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் 
பெயர்மாற்றம் பெறுகிறது
பெரியார் அதை
அண்ணாதுரை தீர்மானமாக
கொண்டு வருகிறார்
அண்ணாவின் பேச்சும் 
எழுத்தும் இயக்கத்திற்கு
வலுச்சேர்த்தன

 17.9.1949ல்
அண்ணா தி மு கழகத்தைத்
தொடங்கினார் தொடக்க விழாவில்
பேசும்போது , தி மு கழகம்
தோன்றிவிட்டது  திராவிடர் கழகத்துக்குப் 
போட்டியாக அல்ல ;அதே
கொள்கைப் பாதையில் தான்
திராவிடர் கழகத்தின் அடிப்படைக்
கொள்கைகளின் மீதேதான் தி.மு கழகம்
அமைக்கப்பட்டுள்ளது .அடிப்படைக்
கொள்கைகளில் ,கருத்துக்களில்
மாறுதல் ,மோதுதல் எதுவும் கிடையாது .
சமுதாயத் துறையிலே சீர்திருத்தம்,
பொருளாதாராத் துறையிலே
சமதர்மக் குறிக்கோள்,
அரசியலில் வடநாட்டு
ஏகாதிபத்தியத்தினின்று
விடுதலை ஆகிய கொள்கைகள்தான்
தி .மு.கழகத்தின் கோட்பாடுகளாகும்
என்றும், இத்தனை ஆண்டுகளில் நான்
அறிந்த தலைவர் -தெரிந்த தலைவர் -
பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான் . 
வேறு தலைவரின் தலைமையில்
வேறு தலைமையில் வேலை
செய்ததும் கிடையாது செய்யவும்
மனம் வந்ததில்லை வராது ஆகவேதான்
தி.மு கழகத்துக்குத் தலைவரை ஏற்படுத்தவில்லை
அவசியம் என்றும் கருதவில்லை 
இதயபூர்வமான தலைவர்
இதயத்திலே குடியேறிய  தலைவர்
நமக்கெல்லாம் அப்போது  நல்வழி
காட்டிய பெரியார் அமர்ந்த பீடத்தை
தலைவர் பதவியை நாற்காலியைக்
காலியாகவே வைத்திருக்கிறோம்  
அந்த நாற்காலியிலே பீடத்திலே
வேறு ஆள்களை அமர்த்தவோ
அல்லது நாங்களோ அல்லது நானோ
அமரவோ விரும்பவில்லை
நான் மிகத் தெளிவாகவே கூறி  
விடுகிறேன் தி.மு.கழகம்
திராவிடர் கழகத்துக்கு எதிரானதல்ல
எதிர் நோக்கம் கொண்டதுமல்ல
கொள்கை ஒன்றே ,கோட்பாடும் ஒன்றே
என்று பேசினார்


அந்த உணர்வு அண்ணாவின் நெஞ்சில்
என்றும் நிறைந்திருந்தது
18 ஆண்டுகளுக்குப் பிறகும்
தமிழக மக்கள்
ஆட்சிபொறுப்பை அண்ணாவிடத்திலே
ஒப்படைத்தபோது ஆளுநர் மாளிகைக்குச்
செல்லாமல் தம்பிகள் கலைஞர்,நாவலர் ,அன்பில்
ஆகியோருடன் 200 மைல் தாண்டி
திருச்சிக்கு வந்து பெரியாரைப் பார்த்து  
இந்த ஆட்சியை உங்களுக்கு
சமர்ப்பிக்கிறேன் என்று சொன்ன
பாச உள்ளம் அண்ணாவின் உள்ளம்
பயண இடவெளியில் எத்தனையோ
மேடு பள்ளங்கள் வந்தாலும்  
தி .க.வும் தி மு கவும்
இரட்டைக்குழல் துப்பாக்கியாக
ஓர் நாணயத்தின் இரு பக்கங்களாக
செயல்பட்டு தமிழர்களை
முன்னேற்றி வருகின்றன  

பெரியார் துறவியாகப்
போய் விடலாமா  என்று
கவலைப் படுகிறார் அண்ணா
அமெரிக்க மருத்துவமனையிலிருந்து
பதில் எழுதுகிறார் "நான் அறிந்தவரையில்
இத்தனை மகத்தான வெற்றி எந்த
சமூக சீர்திருத்த வாதிக்கும்
கிடைத்தில்லை  அதுவும்  நம் நாட்டில் 
எனவே சலிப்போ கவலையோ
துளியும் தாங்கள்

கொள்ளத் தேவையில்லை "

Friday, June 17, 2016

பிழைதிருத்தம்

பெரியார் கவிதையில் குடியரசு 
என்கிற தலைப்பில்
 ' நான் ஏன் பிறந்தேன் '
என்கிற நூலின் தமிழாக்கம்
தடை செய்யப் பட்டது
என்று  எழுதியிருக்கிறேன்
தடை செய்யப்பட்ட நூல்
பகத்சிங் எழுதிய
' நான் ஏன் நாத்திகன்' என்பதாகும்
பிழைக்கு வருந்துகிறேன் 
சுட்டிக்காட்டிய  சுபவீ க்கு நன்றி