Thursday, March 22, 2018

குறுந்தொகை - பாடல் 87

"மன்ற மராஅத்த பேஎம்முதிர் கடவுள்
கொடியோர்த் தொறூஉம் என்ப;  யாவதும்
கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்;
பசைஇய பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று,  தடமென் தோளே "
  

பாடலின் பொருள் :

அம்சம் செய்தலிலே முதிர்ந்த முருகக் கடவுள் ,கொடுமை
செய்தோரை  ஒறுக்கும் என்று அறிந்தோர் கூறுவர்
எம்முடைய மலைகள் பொருந்திய நாட்டை உடைய தலைவர்
சிறிதும் கொடுமைப் பாடுடையவர் அல்லர்
இவ் வேற்றுமை எதனால் எனில் எம் நெற்றி அவர் என்னிடம்
விழைதல் வேண்டிப் பசந்து காட்டுவதாயிற்று
அவர் உள்ளம் நெகிழ்ந்து காட்டுவதாயிற்று எமது பெரிய மெத்தென்ற தோள்கள்


பாடலை பாடியவர் கபிலர்

குறுந்தொகை - பாடல் 84

"பெயர்த்தனென்  முயங்க," யான் வியர்த்தனென்" என்றனள்
இனிஅறிந்தேன்,அதுதுனிஆ குதலே 
கழல் தொடி அய் மழை தவழ் பொதியில்  
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண் ணியளே "

பாடலின்  பொருள் :
சுழலும் தொடியினை உடைய ஆய்வல்லது முகில்கள் தவழும்
பொதிய மலையிடத்தே உண்டான வேங்கைப் பூ மணமும்
காந்த ட்பூ மணமும் கமழ்ந்து ஆம்பல் குளிர்ச்சி உடைய மகள்
என்னோடு ஒரு பாயலில் புறம் காட்டிக் கிடந்தாளை தழுவதற் பொருட்டுப்
பெய0ர்த்தேனாக அதற்கு உடன்பட்டாளாய் யான் உடல் வெயர்த்துள்ளேன் 
என்றாள் .அத வாய்மை என்று கொண்டு வாளாவிருந்து யான் vஎன்றாள் .அத வாய்மை என்று கொண்டு வாளாவிருந்து யான்
இப்பொழுது அம்மறுப்பின் காரணம் வெறுப்பு ஆதலை அறிகின்றேன் .
அறிந்தும் என் செய்கின்றேன்

பாடலை பாடியவர் மோசி கீரனார் 


Friday, March 9, 2018

குறுந்தொகை - பாடல் 83

"அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை 
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை, வரும் என் றோளே"

பாடலின் பொருள்

தமக்குரிய இல்லிலிருந்து தாம் ஈட்டிய பொருளை தென்புலத்தார்
முதலியவர்க்குப் பகுத்துண்ண கொடுத்து தமக்குரிய கூற்றை 
உண்டாற்போன்ற இன்பமுடையதும் கிளைகள் தோறும்
இனிய பழங்கள் தூங்கா நின்ற உயர்ந்த மலைகளை உடைய
நாட்டுத் தலைவனை வரைதல் முயற்சியோடு வருவான் என்று
அறிவித்தவள் ஆகிய அன்னை பெறுதற்கு அரிய ஆமிழ்தம்   
பெரும் புகழை உடைய மேனிலை உலகம் பெறுவாளாக

பாடலை பாடியவர் வெண் பூதனார்       


குறுந்தொகை - பாடல் - 78

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியார் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே .

பாடலின் பொருள் :
மலை உச்சியில் தோன்றிய வெள்ளிய அருவி நீர்
அறிவு வாய்த்தலை உடைய கூத்தரது முழவை போன்று ஒலித்து
பக்க மலையின் கண்ணே விளங்குகின்ற மலைகளை உடைய தலைவனே
காமநோய் வெறுக்கத் தக்க தோன்றும் தன்னை சிறிதும் நன்றென உணராத வரிடத்தில் வலிந்து சென்று குறை இரந்து நிற்கும் பெரிய மடமையை
அடைவார்களாக

பாடலை பாடியவர் நக்கீரனார்