Saturday, December 30, 2017

குறுந்தொகை - பாடல் 40

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் ?
யானும் நீயும் எவ்வழி அறிதும் ?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்   தனவே

பாடலின் பொருள் :
என் தாயும் நின் தாயும் எம்முறையில் உறவினர் ? என்
தந்தையும் நின்தந்தையும் எவ்வகையில் உறவினர் யானும்
நீயம் ஒருவரை ஒருவர் எவ்வகையில் உரியவரென அறிந்தோம்?
செந்நிலத்துப் பெய்யும் மழை நீரானது தானும் அம்மண்ணுடன் 
கலப்புற்றுச் செந்நிறமாவது போல நம்முடைய அன்பு கொண்ட
நெஞ்சங்கள் தாமே தம்மில் கலந்து ஒன்று பட்டன .
பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை
பாடலில் வரும் உவமையை வைத்து

செம்புலப் பெயல் நீரார் என்று பெயர் வைத்துள்ளனர்

குறுந்தொகை - பாடல் 38

" கான மஞ்ஞை அறையீன் முட்டை
 வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்று மன்  வாழி - தோழி உண்கண் 
நீரொடு ஓராங்குத் தணப்ப
உள்ளாது ஆற்றல் வல்லு வோர்க்கே

பாடலின் பொருள் :
கானகத்தே மயில் ஈன்ற முட்டையினை   பாறையின் கண் குரங்குக்குட்டி உருட்டும் மலை நாடனுடைய நட்பு பெரிதாகும் .மை உண்ட கண்களில் பெருகு கின்ற நீரொடு ஒரு படியாக அவன் பிரியவும் அவனை நினையாமல் இருப்பதற்கான ஆற்றலை வன்மையாகப் பெற்றவர்க்கே அது என்றும் நன்மை உடையதாகும்.


நயம் : தலைவி அடையும் துன்பத்திற்கு இரங்காமால் பழி கூறி நிற்கும் ஊர்  

Wednesday, December 20, 2017

குறுந்தொகை - பாடல் 36:

துறுக லய லது   மானை மாக்கொடி                                 
துஞ்சு களி றிவரும் குன்ற நாடன்
நெஞ்சுகளன் ஆக   நீ யலன் யான் என
நற்றொன் மணந்த ஞான்றை மற்று –அவன்
தாவா வஞ்சினம்  உரைத்தது
நோயோ - தோழி -- நின்யி னானே

பாடலின் பொருள் :
சூளுறவு பொய்த்தலால் வரும் நோயைக் குறித்துத் தொடர்புடைய
தாமே கவலைப் படாதிருக்க நீ ஏன் துன்புறு கின்றாய் என்பதாம் .நெஞ்சு
அறிய  உரைத்த சூளுறவைப் பொய்ப்பின்  தன் நெஞ்சே தன்னைச் சுடும்
என்பதனாலே அது அவனுக்கு நோயாகும்.

நயம்:
நெஞ்சு  கனமாக என்பதற்கு நின் நெஞ்சு இடமாக இருந்து என்பாரும்  உளர் .நெஞ்சு இடமாக இருத்தலில் பிரிந்த பொழுதும் தவறு இலனாகலின் அது கூறான்  என்க

பாடியவர் பரணர்

குறுந்தொகை - பாடல் 34

 “ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர்
தமியர் உறங்கும் கவ்வை இன்றாய்
இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே
முனா அது யானையங் குருகின் கானல் அம் பெருந்தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்ப இசை வேறூஉம்
குட்டுவன் மாந்தை அன்ன எம்
குழல்  விளங்கு ஆய்நுதற் கிழவனும் அவனே

பாடலின் பொருள் :
இன்னாது கேட்டுக் கலங்கிய ஊர்ப் பழி இனி மணமங்கள
ஒலியாகிய இன்னோசை கேட்டு இன்புறுமாறு அவளுக்குத்
தலைவனுடன் மணம் உறுதியாயிற்று என்பதாம்.

நயம் :கொல்லி மலையைச் சேர்ந்தவ ராதலால் அவர்க்குரிய மாந்தைப் பட்டினத்தைக் கூறினார்.

பாடலைப்  பாடியவர்  கொல்லிக் கண்ணனார்

Saturday, December 9, 2017

குறுந்தொகை - பாடல் 31

மள்ளர் குழீஇய விழவினாலும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண் தக்கோனை
யானுமோ  ராடுகள மகளே என்கைக்  
கோடீரிலங்கு  வளை நெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே

பாடலின் பொருள் :
அயலார் தலைவியை மனத்தின் பொருட்டாக வரைந்து வந்த காலத்து
தலைவி தோழிக்கு தன்னுடைய நிலையை வெளிப் படுத்துகிறாள் 
அவனோ பீடுகெழு குரிசில் மாண் தக்கோன் ;யானும் குலமகள்
எனினும் என்னைக் கைவிட்டு அவன் பிரிய அவனை நான் யாண்டும்
சென்று தேட என் தகுதியும் கெட்டு அவன் தகுதியும் கெட நேர்ந்ததன்றி
அவனை எவ்விடத்தும் கண்டிலன் என்கின்றாள்

நயம் :
தலைவனை தகுதி கேட்டுத் தேடியும் எங்கும் கண்டிலள் என்கிறாள் 

பாடலைப் பாடியவர் ஆதி மந்தியார்

குறுந்தொகை - பாடல் 29

நல்லுரை இகந்து புல்லுரைத் தா அய்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளந் தாங்கா வெள்ள  நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 
பெரிதா லம்மநின் பூசலுயர் கோட்டு
மகவுடை மந்தி போல
பெரிதாலம்மநின் பூசலுயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அக னுறத் தழீஇக் கேட்கு நர்ப்பெறினே

பாடலின் பொருள் :
அங்ஙனம்     பூசலை அகனுறத் தழுவிக் கேட்பாரின்மையின் உள்பூசல்
பயனின்றாகும் என்பது கருத்து . தன் விருப்பத்திற்கிணங்கி இரவுக் குறியில்
வர உடன் படுதல் .இரவுக்குறி மறுத்தல் .ஆசை வெள்ளத்திற்கும் ,அதனைத்
தாங்காது உருகும் பசு மட் கலத்திற்கும் உவமை . 
நயம் : தண்ணீர் பட்டவு டன்  உருகி அழிதலின் எண்ணியவுடனே  உருகும் உள்ளத்திற்கு உவமையாக்கினாள்

படலைப் பாடியவர் அவ்வையார்