Thursday, December 11, 2014

தொகுதி - 2

11. Jewellery - அணிகலன்

12. Furniture - அறைகலன்

13. Sofa - பஞ்சிருக்கை

14. Arrival  -  வருகை

15. Departure - புறப்பாடு

16. VIP lounge - சான்றோர் இருக்கை

17. Passport  - கடவுச்சீட்டு

18. Airport - வானூர்தி நிலையம்

19. Aeroplane - வானூர்தி

20. Immigration - குடியேற்ற அனுமதி

7. மக்கட்பேறு

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிருக்கு எல்லாம் இனிது ."
(தம் மக்களின் அறிவுடைமை , பெற்றோர் தமக்கு இன்பம் பயப்பதைக் காட்டிலும் இம் மாபெரும் உலகத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் பயப்பதாகும்)

நல்லதம்பியின் பிள்ளைகள் இருவரும் பாவலரின் வழிகாட்டுதலில் அறிவுமிக்கவர்களாக
வளர்ந்துள்ளனர். பெரியவன் பாவாணன் இரண்டாம் ஆண்டு வேதியல்(chemistry) படிக்கிறான்.
பாடத்திட்டத்தில் உள்ள நூல்களோடு படிப்பை நிறுத்திக்கொள்வதில்லை. நூலகத்தில் உள்ள மூல நூல்களை வீட்டுக்கு எடுத்து வந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வான் .90% மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்வான். துணைப் பாடமான இயற்பியலிலும்(physics) அதே போல் நன்கு படித்து முதலிடம் பெறுவான். வேதியல் கழகத்தின் கூட்டங்களில் வேதியல் தலைப்புகளில் தமிழில் உரையாற்றுவான்.

Wednesday, December 3, 2014

சுப.முத்துராமன் (எஸ்.பி .முத்துராமன் )

சுப்பையா - விசாலாட்சி பெற்ற பிள்ளை 
   சுறுசுறுப்பாய் எப்போதும்  இயக்கும் பிள்ளை
அப்பாவின் குடும்பத்தில் மூத்த பிள்ளை
   ஆனாலும் திரையுலகின் தத்துப்பிள்ளை

தப்பிவிடும் கலையுலகில் தவறாத நல்லபிள்ளை
    தனக்கென்று வசதிகளைச் சேர்த்ததில்லை
எப்போதும் எல்லோர்க்கும் உதவும் வாழ்க்கை
   எந்நாளும் இப்படியே வாழ்க   வாழ்க!

தந்தை தம்பியர்  தங்கை பிள்ளைகள்
   மருகன் மருகியர் பேரன் பேத்திகள்
சொந்தம் நட்புடன் சேர்ந்து யாவரும்
  அறுபது  அறுபதில் வாழ்த்த வாழ்கவே!