Thursday, May 18, 2017

பெரியார் வசன கவிதை - நிறைவு

பெரியார் வசன கவிதை  போன வாரத்துடன்
நிறைவேறியது . அது பெரியாரைப் பற்றியும்
அவருடன் தொடர்புடைய பெரியோர்களைப்
பற்றியும் இருந்தது அதை நூலாக வெளியிடலாம்
என நினைத்தேன்.  நம் சுபவீ அவர்கள்   'பெரியாரும்  பெரியோரும் '
என்று நூலுக்குப் பெயர் வைக்கலாம் என்றார்கள் .
அதே பெயரில் நூலை 5.6.2017 அன்று வெளியிடுகிறேன்
அதற்கான அழைப்பை அனுப்பிக் கொண்டிருக்கிறேன் .
அழைப்புக் கிடைத்தவர்கள் வெளியீட்டு விழாவுக்கு
வர வேண்டுகிறேன் .வாரம் தோறும் படித்தவர்களுக்கு நன்றி .
வலைப்பூவில் 13000 பார்வைகள் வந்துள்ளன. 

Thursday, May 11, 2017

அதே காலகட்டத்தில்  இந்திய தேசிய காங்கிரஸ்
,ஹோம் ரூல் இயக்கம் சுயராஜ்யக் கட்சி முஸ்லீம் லீக்
ஆகிய கட்சிகள் களத்தில் இருந்தன    ஆங்கிலேயர்
தம்மிடமிருந்த அதிகாரத்தை  இந்தியர்
கைக்கு மாற்றினால் தென்னாடு         பொறுத்தவரையில்
அது பார்ப்பனர் ஆதிக்கமாகவே இருக்கும்  என்று அஞ்சியது
நீதிக் கட்சி கட்சியின் மாநாடுகள் அனைத்தும் 
பார்ப்பனரல்லாதார் மாநாடுகள் என்ற
பெயரிலேயே நடத்தப் பட்டன
மாண்டகு  செம்சபோர்டு அறிக்கையில் சென்னை மாகாண
பார்ப்பனரல்லாதாருக்கும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும்  தனி வகுப்புவாரி வாக்குரிமை தேவையில்லை என்று
கூறியதால்      நீதிக்கட்சி அறிக்கையை புறக்கணித்தது
வெள்ளைக்கார அரசு பார்ப்பனரல்லாதாருக்கு
துரோகம் இளைத்துவிட்டதாக கண்டனக் குரல் எழுப்பினர் 260 லட்சம் கொண்ட பார்ப்பனரால்லாதார் தற்போதைய
தேர்வு முறையினால் ஒரே ஒரு பிரதிநிதியை
கொண்டுள்ளார்கள் ஆனால் வெறும் 15 லட்சம் உடைய பார்ப்பனர்கள் ஒன்பது பிரிதிநிதிகளை கொண்டுள்ளார்கள்
வகுப்புவாரி உரிமயைப் பெற வேண்டுமானால்
இங்கிலாந்து மக்களின் ஆதரவை பெற வே ண்டும்
என நாயர் திடமாக நம்பினார்
தம் சொந்த செலவில் இங்கிலாந்துக்குப்
பயணமானார் தலைவர் நாயர் பிரிட்டன்
அரசு மருத்துவர் நாயர் இங்கிலாந்தில்
எந்தப் பொது இடத்திலும் எதைப் பற்றியும்
பேசக் கூடாது என்று தடை விதித்தது
பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த
நண்பர்களைக் கொண்டு அத்தடையை நீக்கினார்
பாராளுமன்றத்தில் பார்ப்பனல்லாதவரின் கோரிக்கை குறித்து ஒரு மணி நேரம் பேசினார் நாயர்   
இங்கிலாந்து செய்த்தித்தாள்களில்  நீதிக் கட்சியின்
கொள்கை முழக்கம் கேட்டது
இலண்டன்  டைம்ஸ் ,கார்டியன் போன்ற இதழ்களிலும்
தென்னகத்தின் வகுப்புரிமைக்குரல் ஒலித்தது
நாயர் எழுத்து வேந்தர் ஆவார்
நீதிக் கட்சியின் சார்பில் ஒற்றை மனிதராக
அதுவும் சொந்த செலவில் தென்னக பார்பனரல்லாதாரின்
குரலை இங்கிலாந்து மக்கள் கேட்க செய்த பெருமை
டி எம் நாயரையே சேரும் சிறப்பாக
நாயருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது 
நீதிக் கட்சியின் இரண்டு சிறப்பு மாநாடுகள் நடைபெற்றன
தியாகராயர்  பேச்சு       ல்வித் துறையிலும் சமுதாயத் துறையிலும் அரசியல் துறையிலும் உத்தியோகத் துறையிலும் போதிய பங்கும் இடமும் அதிகாரமும் பெறும் வரையில் பார்ப்பனரல்லாதோர்    தனி வாக்குரிமை உடையவர்களாக இருந்தே ஆக வேண்டும் "
நாயர் இங்கிலாந்துக்கு இரண்டாவது முறை  செல்கிறார்
ஒரு குழுவோடு அவர் மட்டும் 20 நாட்கள் முன் செல்கிறார்
நாயர் உடல் நலிவுறுகிறது ஆனாலும் உடன் வந்த
குழுவினரை தன்னைப் பார்க்க வந்த ஆங்கிலேய
நண்பர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
அறிமுகம் செய்து வைக்கிறார் அக்கறையோடு
ஆனாலும் நாயர் மரணமடைகிறார்              ஆங்கிலேயர் வரலாறு சொல்வதைப்போல நாயர் போராட்டத்தை தொடங்கி அப் போராட்டக் களத்திலேயே உயிரை விட்டவர் அவர்  17.7.1919 அன்று 52 வயதில்
ஜஸ்டிஸ் நாளேடு அ லுவலகத்தில் டி எம் நாயருக்கு
இரங்கல் கூட்டம் நடை பெற்றது பிட்டி தியாகராயர்
தலைமையில் துக்கத்தோடு 
நாயரின் முழுப்பெயர் தாராவத் மாதவன் நாயர் என்பதாகும்
151.1868ல் பிறந்தவர் 6 1/2  அடி  உயரம்
நாயர் பாலக்காட்டில் அரசுப் பள்ளியில்  ஐ ந்தாம் படிவம்
படிக்கும்போதே மெட்ரிகுலேசன் தேரினார்  பிறகு மாநிலக்
கல்லூரியில் ஃ எப் ஏ தேறினார்   சென்னை  மருத்துவக்
கல்லூரியில் சேர்ந்ததார் இங்கிலாந்துக்கு சென்று
எடின்பரோ பல்கலையில் எம் பி சி எம் பயின்றார் 
அதே பல்கலையில் எம் டி முடித்தார்
பிறகு  பாரிஸ் சென்று செவி,மூக்கு .,தொண்டை
மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார்
ஆராய்ச்சியும் செய்தார் அதில்
நாயர் சிறந்த மேடைப்  பேச்சாளர்
சென்னை மாநகராட்சியின்  உறுப்பினராக  இருந்தார்  சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்
அப்போது சென்னை மருத்துவ பதிவுச் சட்டம்
கொண்டுவரக் கரணியமாக   இருந்தார்
நாயரின் மறைவிற்குப் பின் கே வி ரெட்டி நாயுடு
இராமசாமி முதலியாரின் பணி இங்கிலாந்தில் 
மிகச் சிறப்பாக நடைபெற்றது.    அவர்களுக்கு உதவியாக
வாட்னி என்கிற ஒர்ல்டு இதழாசிரியர் இருந்தார்
ரெட்டி நாயுடுவும் இராமசாமி முதலியாரும்
ஒரு      மனு அளித்தனர்  அதில் 
பார்ப்பனர்கள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்
பார்ப்பனரல்லாதார் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள்
என்றும் குறிப்பிட்டிருந்தனர் அவர்கள்
பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் இருவரும் பேசிக் கொண்டு
அல்லது  கடிதம் மூலம் சிக்கலைத்   தீர்த்துக் கொள்ள வேண்டும் இயலாத நிலையில் நடுநிலையாளர் ஒருவரிடம் விட்டுவிட வேண்டும் நடுநிலையாளரை ஆளுநர் பரிந்துரைப் படி இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும்    என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழு கருதியது
மேதகு மெல்டன் நடுநிலையாளராக ஏற்படுத்தப்
பட்டார் இந்திய அரசால் சிக்கலைத் தீர்ப்பதற்கு  

நீதிக் கட்சி சார்பில் பிட்டி தியாகராய செட்டி,கே  வி .
ரெட்டி நாயுடு ,சர் எ இராமசாமி முதலியார் ,எல் .கே .
துளசிராம் ஆகியோர் இருந்தனர் 
இவர்கள் எல்லோரும் சென்னை சட்டமன்றத்தில்
உள்ள 65 பொதுத் தொகுதிகளில் 42 தொகுதிகளை
பார்பனரல்லாதாருக்கு ஒதுக்க வேண்டும் என்றனர்
மேதகு மெல்டன் 28 தொகுதிகளையே ஒதுக்கினார்
இது பார்ப்பனர்கள் கோரிக்கையை அப்படியே
ஏற்றுக்கொண்டது போல் இருந்தது
இச்சூழலில் தேர்தல் வருகிறது காங்கிரஸ் தேர்தலில்
போட்டியிடவில்லை .  பிட்டி தியாகராயரும்                                   ஓ .தணிகாச்சல செட்டியாரும் பெரும் வெற்றி பெறுகிறார்கள் ஆனால் மருத்துவர்  சி  நடேசனார் திட்டமிட்டு சொந்தக் கட்சிக் காரர்களாலேயே தோற்கடிக்கப்
பட்டார் ; பிட்டி  தியாகராயர் கரணியம்
முன்னர் நடை பெற்ற இடைத் தேர்தலில்
நடேசனார் மாபெரும் வெற்றி பெற்றவர்
என்று வரலாறு சொல்கிறது
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய
இடங்கள் 98அதில் நீதிக்கட்சி 63 இடங்களைக்
கைப்பற்றியது  நியமன உறுப்பினர்கள் 18 பேர்
நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர்
மொத்தம் 127 இடங்களில் 81 இடங்களைப் பிடித்து
ஆட்சியைப் பிடித்தது நீதிக்  கட்சி
கே வி.ரெட்டி நாயுடுவின் சூறாவளித் தேர்தல்
பரப்புரை  கரணியமானது
நீதிக்கட்சியின் தலைவரான பிட்டி தியாகராயரை
ஆட்சி அமைக்கும்படி கேட்டுக்கொண்டார் ஆளுநர்
அவர் ஆட்சி அமைக்க மறுத்து கடலூர்
வழக்கறிஞர் எ .சுப்பாராயலு ரெட்டியார்
முதல் அமைச்சராக பரிந்துரைத்தார்
இரண்டாவது அமைச்சராக பி இராமராய நிங்கார்
(பானகல்  அரசர் )தேர்ந்தேடுக்கப் பட்டார்
மூன்றாவது அமைச்சர் கே வி ரெட்டி நாயுடு
அமைச்சர்கள் பார்ப்பனரல்லாதவர்களாக இருந்தாலும்
மேதகு வெலிங்டன் நிர்வாகப் பொறுப்புகளுக்கு
பார்ப்பனர்களையே நியமித்தார்
சட்டமன்றத் துணைத்தலைவராக சென்னை
மாகாண சங்கத்தை சேர்ந்த திவான் பகதூர்
கேசவப் பிள்ளையை நியமித்தார்கள்
1921 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் சுப்பாராயலு ரெட்டியாரின்
உடல்நலம் பாதிக்கப் பட்டது முதல்வர் பொறுப்பிலிருந்து
விலகினார் ;திசம்பர் திங்கள் மறைந்தார்
சுப்பாராயலு ரெட்டியாரின் மறைவிற்குப் பின்
இராமராய நிங்கார் (பானகல்  அரசர்) முதல்வர் ஆனார் 
இரண்டாவது அமைச்சராக கே வி ரெட்டி நாயடுவும்
மூன்றாவது அமைச்சராக எ .பி .பாத்ரோவும்
பொறுப்பேற்றுக் கொண்டார்கள்
நீதிக்கட்சியின் முதல் இரண்டு அமைச்சரவைகளிலும்
நீதிக் கட்சி தோன்றுவதற்குக் கரணியமான நடேசனார்
முதல் மூவரில் ஒருவர் இடம்பெறவில்லை என்பது
வரலாற்றுப் பிழை ஆகிறது
அதேபோல் எந்தத் தமிழரும் இல்லை அவற்றில்
ஆந்திர பார்ப்பனரல்லாத இந்து அமைச்சரவைகளே
அவை இரண்டும் .  தமிழர்களுக்கு வருத்தமிருந்தது
பார்ப்பனரல்லாதார் என்றால் முகமதியர் ,இந்திய
கிறித்தவர் பார்ப்பனரல்லாத இந்துக்கள் , ஜைனர்கள் ,
பார்சிகள் ,ஆங்கிலோ இந்தியர் என்று பொருள்  என்று
அரிய விளக்கம் தருகிறார் நடேசனார்
பானகல் அரசரின் பணிகள்
1.1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 16 ல்
முதல் சமூக நீதி உத்தரவு : எல்லாச் சமூகத்தினருக்கும்
அரசுப் பணிகளில் வாய்ப்பளிக்க வேண்டும்
இவ்வாணையை   நடைறைப் படுத்தாமல் கிடப்பில்
 போட்டனர் அதிகாரிகள்
கல்லூரிக் கல்வி : ஒவ்வொரு கல்லூரி யிலும்
குழுக்கள் அமைத்து அதன் மூலமே மாணவர்
சேர்க்கை நடைபெற வேண்டும் . கல்லூரித் தலைவர்கள்
தங்கள் விருப்பம் போல் மாணவர்களை சேர்க்கக் கூடாது
என்று ஏ ,பி. பாத்ரோ ஓர் ஆணையை பிறப்பித்தார் 
அதன் பிறகே பார்ப்பனரல்லாதாருக்கு கல்லூரிகளில்
ஓரளவு இடம் கிடைக்கும் நிலை உருவாயிற்று
சி நடேசனார் திராவிடர் சங்கத்தின் சார்பில் அரசுக்கு  மனு
ஒன்று கொடுத்தார் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களை
இழிவான பெயர்களில் அழைப்பதை விட்டு ஆதி  திராவிடர்
என்கிற வரலாற்றுப் பெயரை உறுதிப் படுத்த வேண்டும்
என்றார் சென்னை நகர்மன்றத்த்திலும் இதே போல் ஒரு
தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார் அக்கறையோட
1921 ஆம் ஆண்டு சென்னை மாகாண மக்கள் தொகை
கணக்கு எடுக்கப்பட்டது  . நீதிக் கட்சியின் வேண்டுகோளின்
படி 'பஞ்சமர்' முதலான சொற்களுக்குப் பதிலாக ஆதி  திராவிடர்
என்று குறிக்கப் பட்டது தாழ்த்தப் பட்டோரை உயர்த்தி 
1. பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உட்பட                                                                                                                 எல்லோருக்கும்  உரிய இடங்கள்  வழங்கப் பட்டன 
2 .தாழ்த்தப் பட்டோருக்கு தொழிலாளர் ஆணையர் நியமிக்கப்   பட்டனர் 
3   தாழ்த்தப் பட்டோருக்கு  பனி உயர்வு,உயர் பதவி நியமனங்கள் செய்யப் பட்டன
4        .தாழ்த்தப் பட்டோருக்கு இது போன்ற பத்துக்கும் மேற்பட்ட  சலுகைகள்  வழங்கப் பட்டன
5. குறவர்களை எல்லா வகையிலும் சீர் திருத்த நடவடிக்கை
  எடுக்கப் பட்டது  
6. கோவை  மாவட்டத்திலுள்ள வலையர் ,குறவர் ஆகியோரை குற்றப் பரம்பரையிலிருந்து மீட்டு அவர்கள் குழந்தைகளுக்கு ரூ 25 நிதி உதவி அளிக்கப்பட்டது
7.  கோட்டையில் குறவர் பையன்களுக்கு படுக்கை
   வசதி கொண்ட மன்றம் கட்ட தொகை உயர்த்தப் பட்டது
8.மீனவர் நலன் காப்பதற்காக தொழிலாளர் ஆனையயர்
   நியமிக்கப் பட்டார்
9  கள்ளர் சமுதாய முன்னேற்றத்துக்காக புதிய தொழிலாளர்
     ஆணையர் நியமனம்
10 பி அண்ட் சி வேலை நிறுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன
11.தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று
    தஞ்சை வட்டாரத்தில் ஐந்து பள்ளிகள் திறந்தது
12.குடிப் பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற
   மக்களை நெறிப்படுத்துதல்
13.  ஆதி ஆந்திரர்களுக்கு ஷாங்ஹாய் விலையில் நிலங்களை அளித்தல்
14மலபார் மாவட்டத்தில் மீனவர் பிள்ளைகளுக்கு பள்ளிகள்  திறத்தல்  
15. சென்னை நடுக்குப்பத்தில் மீனவப்  பிள்ளைகளுக்கு பள்ளிகள்  திறத்தல்  
16கிழக்கு கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறத்தல் மேலும் மூன்று  தொடக்கப் பள்ளிகள் திறத்தல்
  17.மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்  நிதி
உதவி பிற்படுத்தப்பட்ட /தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு
வழங்கப் பட்டது
18.அரசு  பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டிட அறிக்கை வெளியிடும்படி
பொதுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது
19கல்லூரிகளிலும் உயர் நிலைப் பள்ளிகளிலும் படிக்கும்
பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் அரை சம்பளம் கட்டினால்
போதும் என்ற  சலுகை 
இத்தனை சாதனைகளோடு நீதிக் கட்சியின் முதல்
அரசு செயல் பாடுகள் நிறைவடைகின்றன
1923 ஆம் ஆண் டு சென்னை மாகாண சட்டமன்றத்
தேர்தல் நடைபெற்றது பிட்டி தியாகராயருக்கும்
மருத்துவர் நடேசனாருக்கும்  கடுமையான கருத்து
வேறுபாடு  இருந்தது ;நடேசனார் சுயேச்சை யாகப்
போட்டியிட்டார் தேர்தலில்
தேர்ந்தெடுக்கப் பட்ட 98 வேட்பாளர்களில்
பார்ப்பனரல்லாதார்  61 நீதிக் கட்சி
இரண்டாவது அமைச்சரவை அமைத்தது
பானைகல்  அரசர் முதல்வரானார் ; சர் ஏ .பி .பாத்ரோ
இரண்டாவது அமைச்சராகவும் டி .என் .சிவஞானம் பிள்ளை
மூன்றாவது   அமைச்சராகவும் பொறுப்பேற்றனர்
சிவஞானம் பிள்ளை ஒய்வு பெற்ற அரசு அதிகாரி
கட்சிக்காகப் பாடுபட்ட எத்தனையோ   தமிழர்கள்
இருக்க அவரை அமைச்சராக்கியது யாரும்
விரும்ப வில்லை நடேசனாரும் ஓ .தணிகாசலம்
செட்டியாரும் கடுமையாக எதிர்த்தனர்
சி .ஆர் .ரெட்டி நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
கொண்டுவந்து  இரண்டு மணி நேரம் பேசினார்
அப்போது  பழுத்த  நீதிக் கட்சிக்காரரான சி .
நடேச முதலியார் சுயேச்சை யாகப் போட்டியிட்டு
வெற்றிபெற்று எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்துள்ளார்
என்று குறிப்பிட்டார் வருத்தததோடு
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை   எதிர்த்து  அமைச்சர்களும்
பானகல் அரசரும் பேசினர் ; தீர்மானம் ஓட்டுக்கு விடப்
பட்டது அது தோல்வி அடைந்தது
இரண்டாவது அமைச்சரவையின் சாதனைகள்
1மருத்துவத்துறையில் : ஒரு மாணவன் மருத்துவக்
கல்லூரியில் படிப்பது என்றால் அவனுக்கு  சமற்கிருதம்
தெரிய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது  அதை
பானகல் அரசர் உடைத்தெறிந்தார்
சென்னை மாகாண மருத்துவத் துறை ஆங்கிலேயர்
வசம் இருந்தது 'அதை மாற்றி சட்டம் இயற்றினார்
முதலாவதாக சென்னையில் இந்திய மருத்துவக்  கல்லூரியை   ஏற்படுத்திய பெருமை பானகல்  அரசரையே சேரும் .         அண்ணாமலைப்  பல்கலைக் கழகம் :   இராமநாதபுரம் ராஜாவின்
தலைமயில் ஓர் குழு அமைக்கப் பட்டது அதன்  செயலாளராக பி ,டி ராஜான்  இருந்தார் அக்குழு பரிந்துரைப்படி அமைக்கப் பட்டது தான் அண்ணாமலைப் பல்கலைக்  கழகம்
அறநிலைய பாதுக்ககாப்புச்   சட்டம் :  நீதிக் கட்சியின் துணிச்சலாக
செய்த செயல்களில் ஒன்று அற  நிலையப் பாது காப்புச்சட்டம்
இயற்றியது ஆகும் .இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த
சட்டம் இருப்பதற்குக் கரணியமே நீதிக்கட்சி தான்
இந்தச் சட்டம் இயற்றப் படுவதற்கு முன் ஆலயங்களின்
சொத்துக்களுக்கும் மானியங்களுக்கும் சரியான  பாதுகாப்பு
இல்லை .சுயநலக் காரர்கள் கோவில்களின் சொத்துக்களை
தம் சொந்த சொத்து போல் பயன் படுத்தி வந்தனர்
சத்திய மூர்த்தி அய்யர் நீதிக் கட்சியினர்ஆண்டவனையே
சட்டம் போட்டு கட்டுப் படுத்துகிறார்கள்  என்றார்
சட்டமன்றத்தில் இம்மசோதாவை நிறைவேற்ற
தமக்குத் துணையாக கோபால்சாமி அய்யங்காரை 
சிறப்பு உறுப்பினராக நியமித்துக் கொசண்டார்
வைசிராய் இர்வினிடமும் வாதாட வேண்டியிருந்தது
துறை அமைந்தவுடன் அதன்முதல் தலைவராக
உயர் நீதி மன்ற நீதிபதி சதாசிவ அய்யரை நியமித்தார்
முதல் அமைச்சரவையில் 1920-23 கொண்டுவரப் பட்ட மசோதா
இரண்டாவது அமைச்சரவையில் 1923-26 நிறைவேறியது
நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான
மருத்துவர் சி நடேசனார் "வழக்கில் இல்லாத செத்த
மொழியான சமற்கிருதத்தைகற்பிக்கபாடசாலைகள்
உள்ளன ஆனால் எல்லா சமயங்களாலும் போற்றப்
படுகின்ற தமிழைப் புறக்கணிக்கிறார்கள் "  என்றார்
அறநிலைய பாதுக்ககாப்புச்   சட்டம் :  நீதிக் கட்சியின் துணிச்சலாக செய்த செயல்களில் ஒன்று அற  நிலையப் பாது காப்புச்சட்டம் இயற்றியது ஆகும் .இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த சட்டம் இருப்பதற்குக் கரணியமே நீதிக்கட்சி தான்
வெள்ளுடை வேந்தர் தியாகராயர்  மறைந்தார்
சர் பிட்டி தியாகராயர் நீதிக் கட்சி யை  உருவாக்கிய
முதல் மூவரில் ஒருவர் பார்ப்பனரல்லாதார்
அறிக்கையை வெளியிட்டவர்  சென்னை
மாநகராட்சியின் 40 ஆண்டு கால உறுப்பினர்
நீதிக் கட்சி  முதல் அமைச்சரவை அமைத்த போது
முதல்வராக பதவி ஏற்க விரும்பாதவர் . பார்ப்பனரல்லாதார்
கல்வி, அரசுப் பதவி மற்றும் எல்லாத் துறைகளிலும்
சிறந்து விளங்க வேண்டுமென கனவு கண்டவர்
அவர் 1925 ஏப்ரல் 28 ஆம் நாள் இரவு 9.45 மணிக்கு
மறைந்தார் ; அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கன்னத்தில்
ஒரு சிறு கட்டி ஏற்பட்டு அது பெரிதாகி மறைவில்
முடிந்து விட்டது  . சென்னை நகர மக்கள்
அவர் மாளிகை முன் கூடினர் ; சென்னை மாநிலம்
முழுவதும் செய்தி பரவியது ;நாளேடுகள் இதழ்கள்
செய்தி  வெளியிட்டன . ஏப்   29 ஆம் நாள்  காலை
உடல் மாளிகையின் வெளி அரங்கத்தில்
மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது
பல்லாயிரக் கணக்கானோர் அஞ்சலி  செலுத்தினர்
உடல் மலர்களால் அலங்கரிக்கப் பட்டு ஊர்வலமாக
எடுத்துச்செல்லப் பட்டது . அடக்க நிகழ்ச்சியில்
பானகல்  அரசர் ,கே .வி .ரெட்டி நாயுடு ,ஓ .தணிகாச்சலம்
செட்டியார் ,நடேச முதலியார்  போன்றவர்கள் கலந்து
கொண்டனர் . இரங்கல் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கும்
மேலாக நடை பெற்றது
திரு வி க  ' பெருங்கிழவர்  பிரிந்தார்'  என்னும் தலைப்பை
இட்டிருந்தார் தன்  தலையங்கத்துக்கு
சென்னையில் 1925 ல் அவர் பெயரால் நிறுவப்பட்ட
 நகரம் தியாகராய நகர் ஆகும்
1926 ல் தேர்தல் களத்தில் பெரியார் இருந்தார்
பார்ப்பனரல்லாதார் பெற்றுவரும் முன்னேற்றத்தைக்
 காணச் சகிக்காமல் நீதிக் கட்சி ஆட்சியை சுயராஜயக்
கட்சியினர் ஒழிக்கப் பார்க்கிறார்கள் என எழுதினார்
தேர்தல் முடிவுகள் -அமைச்சரவையும்

மொத்தம் உள்ள 98 இடங்களில் சுயராஜ்யக் கட்சி 41 இடங்களையும்
சுயேச்சைகள் 36 இடங்களையும் நீதிக் கட்சி 21 இடங்களையும்
கைப்பற்றினர் 30 பேர் அரசு அலுவலர்களும் நியமன உறுப்பினர்களும் இருந்தனர் சென்னை நகரில் ஒரு இடம் கூடக் கிடைக்கவில்லை சர் கே வி ரெட்டி நாயுடு ,பி டி இராசன் ,சர் ஏ இராமசாமி முதலியார்
மருத்துவர்  சி நடேசனார்   ,ஓ தணிகாசலம் செட்டியார்
போன்ற பெரிய தலைவர்கள் எல்லாம் தோற்றனர்
சுய ராஜ்யக் கட்சியினர் ஆளுநர் அழைத்தும் அமைச்சரவை
அமைக்க முன் வரவில்லை
சுயராஜ்யக் கட்சியினர் பி  சுப்பாராயனை நீதிக்
கட்சியிலிருந்து  விலகச் செய்தனர் .இந்திய
அரசியலில் கட்சி மாறிய முதல் அரசியல் வாதி
அவர்தான் ,அவர் முதல்வரானார்
சுயராஜ்யக் கட்சியை சேர்ந்த எ .ரங்கநாத
முதலியார்  ஆரோக்கியசாமி முதலியார்
இரண்ண்டாவது மூன்றாவது  அமைச்சர்களாக
பொறுப்பேற்றுக் கொண்டனர்
சுப்பாராயன் அமைச்சரவை 4.12.1926 முதல் 27.10.1930
வரை பதவியில் இருந்தது
சட்டசபையில் பெண்களுக்கு பெயராண்மை(representation)
இல்லாமல் இருந்தது ஒரு பெண்மணி தேர்தலில்
போட்டியிட்டு தோல்வி அடைந்தார்
ஆனால் நியமனம் மூலம் ஒரு பெண்மணியை
சட்டசபைக்கு னுப்ப முடியும். அந்தக் காலத்தில்
இந்திய பெண்கள் சங்கம் என்கிற அமைப்பு
பெண்ணுரிமைகளுக்காக போராடி வந்தது
சென்னை மாநிலசட்டசபையில் நியமனம் செய்வதற்காக
பொதுப் பணியில் ஈடுபடும் பெண்களின் பட்டியலை உருவாக்கி  அளித்தது . அப் பட்டியலில் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டிபெயரும் இருந்தது .  சட்டசபை முத்துலட்சுமி ரெட்டியை நியமனம் செய்து  அறிவித்தது 
25.1.1927 ல் முத்துலட்சுமி ரெட்டி துணைத் தலைவராக
தேர்ந்த்தேடுக்கப் பட்டார் . அந்த பதவி ,சிறப்பு  இந்திய
பெண்கள் சமூகத்துக்கு அளிக்கப்பட்ட பெருமை என்று
கூறினார்  அடக்கத்தோடு
நீதிக்கட்சியைச் சேர்ந்த முனுசாமி நாயுடு சுப்பாராயன்
அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
கொண்டு வந்தார் சத்தியமூர்த்தி நடுநிலை வகித்தார்
அதனால் தீர்மானம் தோல்வியடைந்தது
நீதிக்கட்சியினர் பிளவு பட்டிருந்தனர் தனித் தனிக்
குழுக்களாக செயல்பட்டு வந்தனர் சுப்பாராயான்
அமைச்சரவை பார்ப்பனரல்லாதாருக்கு நன்மையை
விட தீமையை  மிகுதியும் செய்து வந்தது  .  அதைப்
பட்டியலிடுகிறார் பெரியார் தெளிவு படுத்த 
சி  நடேசனார் 62 வயதில் 1937 ஆம் ஆண்டு மறைந்தார்