Tuesday, April 21, 2015

subavee

பேராசிரியர் சுப .வீ.



லெனின் திருமணத்தில்
அம்மா படிப்பதற்காக
நான் எழுதிய கவிதை.
 .
பாண்டியனுக்கு 64 வது
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
கருஞ்சட்டைத் தமிழர் மூலம்
கருத்துக்களைப் பரப்புகிறீர்கள்
நாளும் ஒன்றே சொல்லி
அதை நன்றே சொல்கிறீர்கள்.




தம்பி வீரபாண்டியன்
வீட்டில் கடைக்குட்டி
பெற்றோருக்கு மட்டுமல்ல
எங்கள் எல்லோருக்கும்  செல்லப்பிள்ளை.

வீட்டில்  நாங்கள் சொன்னதைக்
கேட்கும் தம்பி
வெளியில் அவன்
சொன்னதைக் கேட்க
ஆயிரம் தம்பிகள் 


அவர்களுக்குப்
பாடம் நடத்துவதற்காக
கல்லூரியில்   பாடம் நடத்தும்
வேலையை விட்டுவிட்டான் .


சிறைக்கு போய் வருவதைச்
சின்ன விசயமாய்
நினைக்கும் அளவுக்கு
பெரிய மனிதனாய் வளர்ந்திருக்கிறான்.
ஆனாலும்

வாய்ப்புக் கிடைத்தால்
அண்ணன் , அண்ணி
அக்கா , அத்தான்
அவர்கள் பிள்ளைகள்
என்று எல்லோரையும்
கூட்டி வைத்துச்
சிரிக்க சிரிக்கக்
கதைகள் பேசுவான்.

வீரபாண்டியன் விளையாட்டுப்
பிள்ளையாய் இருக்கும் போதே
அவனுடைய மூத்த மகன்
வளர்ந்து ஆளாகி
இல்லறம் ஏற்கிறான் .


எங்கள் வள்ளுவன்
செல்வமணி வள்ளியப்பன்
சாமி சுப்பு, லெனின்
நால்வரும் இணைபிரியாத் தோழர்கள்
ஆளுக்கொரு திசையில்
அவரவர் தேர்ந்த துறையில்
அடியெடுத்து வைத்து
முத்திரை பதிக்கின்றார்கள் .


அவர்களில்  லெனின்    
பொறியியல் படித்தவன் ;
பொறுமையான பிள்ளை;
மாமன் மகளையே
மணம் விரும்பிக் கைப்பிடிககிறான் .


மணமகள்  விசயலட்சுமி
சிவகாசியில் வளர்ந்தாலும்
பட்டாசாய் இருக்க மாட்டாள் ;
திருச்சிக் கதம்பம் போல்
குடும்பத்தில் கலந்து
மணம் பரப்புவாள் .

லெனின்  விசயலட்சுமி
இணைப்ரியாத் தம்பதியாய்
இல்லறம் நடத்தி
இணையில்லாப் பிள்ளைகளை
ஈன்றும் வளர்த்தும்
வாழ்க வாழ்கவென
வாழ்த்துகிறேன்
என் சார்பிலும்
என் அத்தான் மற்றும்
குடும்பத்தின் சார்பிலும்!!



No comments:

Post a Comment