Friday, October 21, 2016

தந்தை பெரியார் வசன கவிதை சுப்பையா - 3

சாமி திராவிடமணி பதிவு செய்திருப்பதைப்போல்
இராம சுப்பையா  பழமொழிகள் சொல்வார் அதில் ஒன்று
கிடையை (நோயை) நடையால் வெல்ல வேண்டும்
இதை சொல்வது மட்டுமல்ல செயலிலும் அப்படித்தான்
எங்கே போவதாக இருந்தாலும் நடப்பார் அதுவும் வேகமாக
                                                                                                                                                          

வை சு வின் பேரன் ராஜா சண்முகம் சொல்லியிருப்பதைப்போல் 
அந்தக் காலத்தில் வை சு சண்முகனார் சிங்கப்பூரிலிருந்து
வர இயலவில்லை அவர் மனைவி லட்சுமி இறந்து விடுகிறார்கள்
பங்காளிகள் வர மறுத்துவிடுகிறார்கள் இராம  சுப்பையாவும் இன்னொரு
உறவினரும் மலர்களைக் குவித்து அஞ்சலி செய்கிறார்கள்

இராம சுப்பையாவின் களப்  பணிகளில்
கடை அடைப்பு போன்ற நேரங்களில் உதவியாக
இருந்தார்  தோழர் அஞ்செழுத்து 

இன்னொருவரையும்  குறிப்பிட  வேண்டும்
அவர்தான் ஸ்பீக்கர் நாராயணசாமி என்றழைக்கப்படும்
சைக்கிள் கடை நாராயணசாமி அவர் சொல்கிறார்
இராம சுப்பையா சொல்லி அண்ணா ,கலைஞர் ,நாவலர் , பேராசிரியர்
போன்ற பேச்சாளர்களை அவர் தன் சைக்கிள் பின் இருக்கையில்
அமர வைத்து மேடைக்கு அழைத்து  செல்வாராம்
சிலம்பொலி செல்லப்பனார் சொல்கிறார்
அவர்  மாணவராயிருந்தாராம்  இராம சுப்பையாவுடன்
சேர்ந்து காரைக்குடி சுவர்களிலும்  சாலைகளிலும்
பனை மட்டை கொண்டு எழுதுவர்களாம் கட்சி விளம்பரங்களை
புலவர் ஆ பழனி அவர்களோ
செட்டிமார் நாட்டில் திராவிட இயக்கத்தின்
கொள்கைக் கோபுரம் கட்டிய சிற்பி
எனப்  பாடுகிறார்
கொள்ளுப்பேத்தி முத்துலட்சுமி முத்தையா சொல்லி
இருப்பது போல் அழைப்புமணி அடித்தால் சுப்புத்  தாத்தா
முதலில் ஓடுவார்கள் கதவை த்   திறக்க
முன்னாள் துணைப் பதிவாளர் அண்ணாமலைப்
பல்கலை ஆர்  எம்  கிருஷ்ணன் அவர்கள் சொல்லியிருப்பது
போல்  இராம சுப்பையா தன்னிலும்  இளையவர்களான
சொக்கநாதபுரம் சேதுராமன், தேவகோட்டை இராம வெள்ளையன்
காரைக்குடி  சித சிதம்பரம் போன்றவர்களை தலைவர்களிடம்
அறிமுகம் செய்து அவர்கள் வளர்ச்சிக்கு உதவினார்
பாவேந்தர் மகன் மன்னர் மன்னன்
பாராட்டியிருப்பதைப்போல்  இராம சுப்பையா
தொண்டர்தம் தொண்டர் னவர்
கயல் தினகரன் சொல்லியிருப்பதைப்போல்
வரவு  கணக்கை மட்டும் கொடுப்பாராம்
தென்றலில் பணியாற்றும்போது இராம சுப்பையா
கவிஞர் செலவு கணக்கு எங்கே என்று
கேட்டால் செலவு செய்தால்தானே
சொல்வதற்கு என்பாராம் சில கழகப் பிள்ளைகள்
உணவு தருவாங்க மற்ற இடங்களில் மூணு
வேளையும் தேநீரும் பொறையும் தான் என்பாராம்

21.5.1997 அதிகாலை உடல் நலிவால் மறைவு
இறுதிவரை வாழ்ந்தார் அவர் பகுத்தறிவாளராக
அவர் சொல்லிக்கொண்டுஇருந்ததைப்போல்
கலைஞர் முதல்வராக வந்து முதல்  மாலை அணிவித்தார்
அவர் இறுதிப் பயணம் சாதி , மதச் சடங்குகள் இல்லாமல்
நிறைவடைந்தது   துக்கத்தோடு
அமைச்சராயிருந்த தமிழ்க்குடிமகன் காரைக்குடியில்
இராம சுப்பையாவின் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு வந்தார்
     

1 comment:

  1. Hi annan today read ur kavithai reg Subbiah iyya. Its very nice and so many Informations.

    ReplyDelete