Friday, October 2, 2020

எஸ்பிபி நினைவலைகள்

 பாடும் நிலா பாலு அவர்கள் நம்மை எல்லாம் தவிக்கவிட்டு விட்டு மறைந்து விட்டார். அவர் பாடிய பாடல்கள் எண்ணிலடங்கா. 14 மொழிகளில் 42,000 பாடல்கள் பாடிய மாமனிதர். ஒரே நாளில் 21 பாடல்களை பதிவு செய்த சாதனையாளர் பாலு அவர்கள். எம்ஜிஆர் அவர்களின் "அடிமைப்பெண்" படத்தில் அறிமுகமாகி, ரஜினி அவர்களின் "அண்ணாத்த" படத்துடன் தன் இசைப் பயணத்தை  முடித்துக்கொண்டார். அவரின் புகழ் உலகம் உள்ளவரை இருந்துகொண்டே இருக்கும். அவருடைய பாடல்கள் நமக்கு ஒலித்துக்கொண்டே இருக்கும். "கேளடி கண்மணி" படத்தில் மண்ணில் இந்த காதல் பாடலை மூச்சு விடாமல் பாடியும் நடித்தும் சாதனை புரிந்தார். அன்பானவர், அடக்கமானவர், பண்பாளர், மனிதநேயம் உள்ளவர். இப்படி அவர் குணநலன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நம் மத்திய அரசு விருதுகளையும் பல மாநில அரசு விருதுகளையும் இன்னும் பல்வேறு விருதுகளையும் ஒருங்கே பெற்றவர். மாமா எஸ்பிஎம் இயக்கிய 70 படங்களில் 100 பாடல்கள் பாடியும், 2 பாடல்கள் இசை அமைத்தும், 1 படத்தில் நடித்தும் கொடுத்தவர். மாமா அவரைப்பற்றி நிறைய சொல்வார்கள். கேட்டு பெருமிதம் அடைவோம். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என்று. 

No comments:

Post a Comment