Thursday, December 11, 2014

7. மக்கட்பேறு

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிருக்கு எல்லாம் இனிது ."
(தம் மக்களின் அறிவுடைமை , பெற்றோர் தமக்கு இன்பம் பயப்பதைக் காட்டிலும் இம் மாபெரும் உலகத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் பயப்பதாகும்)

நல்லதம்பியின் பிள்ளைகள் இருவரும் பாவலரின் வழிகாட்டுதலில் அறிவுமிக்கவர்களாக
வளர்ந்துள்ளனர். பெரியவன் பாவாணன் இரண்டாம் ஆண்டு வேதியல்(chemistry) படிக்கிறான்.
பாடத்திட்டத்தில் உள்ள நூல்களோடு படிப்பை நிறுத்திக்கொள்வதில்லை. நூலகத்தில் உள்ள மூல நூல்களை வீட்டுக்கு எடுத்து வந்து குறிப்புகள் எடுத்துக்கொள்வான் .90% மதிப்பெண் பெற்று வகுப்பில் முதல் இடத்தைத் தக்க வைத்துக்கொள்வான். துணைப் பாடமான இயற்பியலிலும்(physics) அதே போல் நன்கு படித்து முதலிடம் பெறுவான். வேதியல் கழகத்தின் கூட்டங்களில் வேதியல் தலைப்புகளில் தமிழில் உரையாற்றுவான்.


பாவணனுக்கு தமிழ் இலக்கியத்திலும் ஆர்வம் உண்டு. கல்லுரி , பல்கலைக்கழக  அளவிலும் முதல் பரிசுகள் பெறுவான் பரிசுத்தொகை புத்தகங்களாக வழங்கப்பெறுகிறது. அவற்றை சேர்த்து வீட்டில் ஒரு நூலகம் வைத்திருக்கிறான். பாவாணன் தன் மேற்படிப்பை வெளிநாட்டில் தொடரவேண்டும் என்றும் வெளிநாட்டிலேயே பணியாற்றி தன் அறிவு உலக மக்களுக்கு பயன்படவேண்டும் என்றும்  விரும்புகிறான் .

தென்றல் படிக்கிற நாட்களில் தன் துறை சார்ந்த மூல நூல்களை காசு கொடுத்து வாங்கி விடுவாள் . மற்ற நூல்களை நூலகத்திலிருந்து குறிப்புகள் எடுத்து கொள்வாள். தன்னுடைய பொறியியல் படிப்பில் ஆழ்ந்த புலமை பெற்றிருப்பதை தவிர பொது அறிவுப் போட்டிகளிலும் கலந்து கொள்வாள் . பல்கலைக்கழக அளவில் நடைபெறும் வினாடிவினா  நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றாள் .

அவளுக்கு இருக்கும் ஆங்கிலப் புலமை, பொது அறிவுத்திறன் கரணியமாக இந்திய ஆட்சிப் பணித்தேர்வு ( IAS ) எழுதி முதனிலைத் தேர்வில்(preliminary) வெற்றி பெற்றுசென்னை சென்று பயிற்சி மையத்தில் படித்து இறுதித் தேர்வு எழுத திட்டமிட்டிருக்கிறாள். கணவர் ஆடலும் பாவலரும் அவள் இறுதி தேர்விலும் வெற்றி பெறுவாள் என நம்பிக்கையோடு இருக்கின்றனர். இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் ( IAS ) வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறாள்.

பாவணன், தென்றல் ஆகியோருடைய அறிவுடைமை வள்ளுவர் கூறியதைப் போல பெற்றோருக்கு இன்பம் பயப்பதைக் காட்டிலும் மக்கள் எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமைந்துள்ளது .  
                                                                  

   

No comments:

Post a Comment