Wednesday, December 3, 2014

சுப.முத்துராமன் (எஸ்.பி .முத்துராமன் )

சுப்பையா - விசாலாட்சி பெற்ற பிள்ளை 
   சுறுசுறுப்பாய் எப்போதும்  இயக்கும் பிள்ளை
அப்பாவின் குடும்பத்தில் மூத்த பிள்ளை
   ஆனாலும் திரையுலகின் தத்துப்பிள்ளை

தப்பிவிடும் கலையுலகில் தவறாத நல்லபிள்ளை
    தனக்கென்று வசதிகளைச் சேர்த்ததில்லை
எப்போதும் எல்லோர்க்கும் உதவும் வாழ்க்கை
   எந்நாளும் இப்படியே வாழ்க   வாழ்க!

தந்தை தம்பியர்  தங்கை பிள்ளைகள்
   மருகன் மருகியர் பேரன் பேத்திகள்
சொந்தம் நட்புடன் சேர்ந்து யாவரும்
  அறுபது  அறுபதில் வாழ்த்த வாழ்கவே!



அகவாழ்வுக்கு எல்லை -​ அத்தை கமலாதான்

புறவாழ்வுக்கு எல்லை  - புகழேதான்

கண்டிப்பின் எல்லை - மனைவி பிள்ளைகளே

சுற்றத்தின் எல்லை - குறிப்பிடவே முடியாது

பக்தியின் எல்லை - மனிதாபிமானம்தான்

பணிவுக்கு எல்லை - நல்லவர்கள் மட்டிலுமே

பேச்சுக்கு எல்லை - பண்பாட்டை மீறாது

கோபத்தின் எல்லை - கொப்பளிக்கும் வரையிலுமே

ஊதியத்தின்  எல்லை - உழைப்பைவிடக் குறைவாகும்

செலவுக்கு எல்லைவரவைவிடப் பெரிதாகும்

புகழுக்கு எல்லை - அடக்கத்தில் நிலைக்கிறது

பெருமைக்கு எல்லை - எளிமைக்குள்  விரிகிறது

தூக்கத்தின் எல்லை - விழிப்பாய் மலர்கிறது

துக்கத்தின் எல்லை - மௌனத்தில் கரைகிறது

படிப்பின் எல்லை - பக்குவமாய் விரிகிறது

சாப்பாட்டின் எல்லை - சைவமாய் சுருங்கியது

உழைப்புக்கு எல்லை - ஒரு போதும் கிடையாது

வாழ்வுக்கு எல்லை - வளர்ச்சியாய் மலரட்டும்



அத்தை இருந்த நாள் முத்துராமனின்

அறுப தாயினால் உலகம் கூடுமே!

அத்துணை போயினும், பிள்ளைகள் வேண்டும்

"தாயு மானவர் " நீங்களே ! நீடு வாழ்கவே!

   
(இயக்குனர் எஸ் .பி. முத்துராமன் அவர்களின்
அறுபதாவது பிறந்தநாள் வாழ்த்து


No comments:

Post a Comment