Friday, July 31, 2015

திரு அப்துல் கலாம் பற்றிய கவிதை

கிராமத்தில் பிறந்து
அரசுப் பள்ளியில் படித்து
உயர்ந்த நிலைக்கு உயர்ந்தவர்
நம்மையெல்லாம் கனவு
காணச் சொன்னார் .ஆனால்
விமானியாக வேண்டும்  என்கிற
அவர்கனவு  நிறைவேறவில்லை

அக்னி செலுத்திய
ஏவுகணை  விஞ்ஞானி
உலகமே இந்தியாவை
நிமிர்ந்து  பார்க்கச்செய்த
பொக்ரான் வெற்றியின் மூளை
மாற்றுத்திறனாளிகளுக்கு
குறைந்த எடையில் காலணி
கண்டு பிடித்ததே பெரிதென்று
சொன்ன மனிதாபிமானி


யாதும் ஊரே யாவரும் கேளீர் 
என்ற கணியன் பூங்குன்றனாரின்
கவிதை வரிகளை
உலக அரங்கில் ஒலித்த தமிழர்
இசுலாமியராக இருந்தாலும்
சைவத்துக்கு  மாறி
சைவராகவே வாழ்ந்தவர்.
பள்ளிகளில் கல்லூரிகளில்
உரையாற்றுவதைக் கடமையாக
நினைத்த பேராசிரியர்
இயற்கை விஞ்ஞானத்தையும்
மரம் நடுவதையும்
வலியுறுத்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்.



குடியரசுத் தலைவராக
இருந்த போதும் குடும்பத்தினரை
ஒரு முறை மட்டுமே
அதுவும் தொடர்வண்டியில்
அழைத்துச் சென்ற
எளிய மனிதர் .
மும்மதத்தையும் ஒன்றாகப்
போற்றிய மதநல்லிணக்கவாதி
அக்னிச் சிறகுளை விரித்துப்
பறந்த எழுத்தாளர் .
2020ல் இந்தியாவை
வல்லரசாக்கிட வழிகாட்டி .
திருக்குறளை  வழிகாட்டி
என்று சொன்னவர்
வள்ளுவர் சொன்னதைப்போல
"எண்ணிய எண்ணியாங்கு
எய்துப  எண்ணியார்
திண்ணியராகப் பெறின் "
என்ற குறளுக்கு
இலக்கணமாகத் திகழ்கிறார்
மக்கள் தலைவர்
              அப்துல் கலாம். 


6 comments:

  1. மிகவும் அருமை

    ReplyDelete
  2. அருமையான கவிதை இளைஞர்களின், மாணவர்களின் கிரியா ஊக்கியாக விளங்கிய திரு அப்துல் கலாம் குறித்து

    ReplyDelete
  3. Very nice & Inspirational Uncle. Keep posting more. By the way, this is Anu(Bala's daughter). Appa called and gave me your blog link and I am really happy to read all your posting.

    ReplyDelete
  4. கருத்துக்கினியன கண்டேன்!

    நாச்சியப்பன் கவிதைகள் அனைத்தையும் படித்தேன். நம் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய தன்னுணர்வுக் கவிதைகளும், நதிகள், விழிகள் போன்ற போதுவுனர்வுக் கவிதைகளும் விரவிக் கிடக்கின்றன.

    அத்தான் பற்றிய கவிதை அவர்களை அப்படியே படம் பிடித்தது போல் இருந்தது. கூடையிலே பழம் வாங்கிக் கூட்டுக்கு நறுக்குவது போல் நறுக்கும் அந்த அழகை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். அந்த நேர்த்தியும் பாசமும் நெஞ்சில் இன்னும் நிற்கின்றன. அத்தான் பக்திமானா, பகுத்தரிவாலரா என்று கேட்டால் சட்டென்று விடை சொல்லிவிட முடியாது. "பக்தியில் திளைத்ததுமில்லை, பகுத்தறிவு பேசியதுமில்லை" என்னும் நாச்சியப்பன் வரிகள்தாம் உண்மை.

    அண்ணன் எஸ்.பி.எம் குறித்த வரிகளும் அருமையானவை. ரஜினி, கமலோடு பழகினாலும், சாதாரனமானவர்களோடும் தன் பழக்கத்தை விட்டதில்லை. தனக்கு எந்த விழாவும் வேண்டாமென்று மறுத்தாலும், பிற விழாக்களிலே ஓடி ஓடி வேலை செய்யக் களைத்ததில்லை. எல்லா வரிகளும் உண்மை பேசுகின்றன.

    பொங்கல் பற்றிய கவிதை உணர்வுப் பிரவாகம். ஒவ்வொரு தமிழனும் நெஞ்சில் ஏற்றிக் கொள்ள வேண்டிய தீர்மானம்.

    "மனித நேயமே மானுட அடையாளம்" என்னும் வரி குறித்துக் கொள்ள வேண்டியது.

    நதிகள், விழிகள் பற்றிய பொதுக் கவிதைகள் என்னை ஓரளவே கவர்ந்தன.

    நாச்சியப்பன் பணி நாளும் தொடரட்டும்!

    ReplyDelete
  5. thanks for your comments for all my writings.

    ReplyDelete