Monday, August 17, 2015

சித .இராமசாமி 60

அன்புத் தம்பி இராமுவுக்கு
அறுபது நிறைகிறது
பள்ளியில் படிக்கும் போதே
கடை வேலையிலும்
வயல்  வேலையிலும்
பயிற்சி கொடுத்தார்கள் அப்பா
அது எங்களுக்கு
வாழ்க்கைக் கல்வியாய் அமைந்தது


நானும் இராமுவும்
தோட்டத்தில் இருப்போம்
மின்சாரம் கூட கிடையாது
மாடுகளைப் பார்த்துக்கொள்வோம்
கடையையும் கவனிப்போம்
அப்போதே சமையல் செய்வான்
என்னிடம் சண்டைபோட மாட்டான்
அன்பாக நடந்துகொள்வான்


பொறியியல் பட்டம்
அண்ணாமலைப்  பல்கலையில்
பெரியார் கொள்கையில் பற்றுடையவன்
சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டான்
மணிமேகலை நல்ல துணையாய் அமைந்தாள்
இருவரும் சேர்ந்து
இரண்டு பிள்ளைகளையும்
அவையத்து முந்தியிருப்பச்  செய்தனர்
அருணும் சிதம்பரமும்  இரு நல் முத்துக்கள்
பிள்ளைகளிடம் நண்பனைப் போல நடந்து கொள்வான்










தம்பி இராமு தெர்மாக்ஸ் அமைப்பிலும்
வெற்றிகள் கண்டான்
அது போதாது என்று
யுனிவே என்ற தனி நிறுவனம் கண்டான்
எதனை எதனால் எவர்முடிப்பர்
என்றாய்ந்து  அதனை அவர்  கண்விடும்
ஆற்றல் மிக்கவன்
அதனால் வெற்றிகள் குவிக்கிறான்
முடிவுகள் - எல்லாம்
வெட்டொன்று துண்டிரண்டாய் இருக்கும்
 எங்கள் குடும்பத்தில்
ஈட்டுவதற்கும் சிக்கனத்துக்கும்
சிறந்த எடுத்துக்காட்டு 


அரசியலில் மட்டும் அல்ல
குடும்பத்திலும் கூட்டணி உண்டு
நான் வேலைக்கு சேர்ந்தபின்பு
குடும்பத்தில் எல்லோருக்கும்
பொங்கலுக்கு துணி எடுப்பதுண்டு
இராமு தான் வேலைக்குச்  சென்றவுடன்
தானே முன் வந்து அந்தக் கடமையைப்
பகிர்ந்து கொண்டான்
அன்று அமைந்தது  முதல் கூட்டணி
அது மட்டும் அல்ல எங்கே இருந்தாலும்
அம்மா அப்பாவுடன் கூட்டுப்பொங்கல் வைக்கிறோம்
அதுவும் தொடர்கிறது



அடுத்த கட்டத்தில்
தம்பி சுப்புவும்
குடும்பப் பொறுப்புகளை
பகிர்ந்து கொண்டான்
மூவரணி மலர்ந்தது
தம்பி வள்ளுவன்
கடமையைச் செய்வதில்
மூவரையும் விஞ்சுகிறான்



எங்களுக்குத்  துணையாய் நின்ற
மீனா, மணிமேகலை
திருநலசுந்தரி , அலமு
நால்வருக்கும் பாராட்டுக்கள்
அம்மாவும்  அப்பாவும்
வடம் பிடித்து  குடும்பத்தேரை
தலம் சேர்த்தார்கள்
அவர்களுக்கு  நன்றி


மனைவி நல்லாளொடும்  
அருண்,தேவி,அத்விக்காவோடும்
சிதம்பரப் பிள்ளையோடும்
நல்ல உடல்நலத்தோடும்
நீடு வாழ்கவென
அண்ணனும் அண்ணியும் வாழ்த்துகிறோம்
எங்களோடு சேர்ந்து
மாதவி, வள்ளியப்பன்
கனகம்தங்கவேல்
அருமைப் பேத்திகள் ரதி, கவிமொழி
அருமைப் பேரன் கவின்
அனைவரும் வாழ்த்துவர் !!




                                                


                                                

 

                                                 

2 comments:

  1. நன்கு சிறப்பாக உள்ளது கவிதை. இளவல் ராமு தம்பதியர் நலமுடன், வளமுடன் பல்லாண்டு சீரும் சிறப்புமாக வாழ, வாழ்த்துக்கள் பல குவித்திடுகிறோம் இணைந்து.

    ReplyDelete
  2. Thanks for the kavithai, reminds me of our olden days.overwhelmed and touching

    ReplyDelete