Friday, November 13, 2015

தந்தை பெரியார் கவிதை - காங்கிரஸ்

ராஜகோபாலாசாரியாரும்
வரதராஜுலு நாயுடுவும்
ஈவெராவைக் காங்கிரசில் 
சேரும்படி கேட்டுக்கொள்கின்றனர்
திரு வி .. வும் வ..சியும் காங்கிரசில்
இருக்கின்றனர் ஈவெரா
காங்கிரசில் சேருகிறார்


வகித்த 29 பதவிகளையும்
தூக்கி ஏறிந்தார்
மண்டி வணிகத்தை
விட்டார் வருமானம் தரும்
கருவூலத்தை  விட்டார்
பஞ்சாலையை  மூடினார்
கோர்ட் பகிஷ்காரம்
செய்து குடும்பத்துக்கு
வரவேண்டிய பல்லாயிரக்கணக்கான
ரூபாய்களை வசூலிக்க
மறுத்தார் கட்சிக் கொள்கைக்காக
சொத்தை இழந்த
தியாகி ஈவெரா

ஒத்துழையாமை இயக்கத்திலும்
ஈடுபட்டார் கள்ளுக்கடை
மறியலிலும் ஈடுபட்டார்
ஈவெரா கைதாகிறார்
500 தென்னை மரங்களை
வெட்டுகிறார்  மேலும்
நாகம்மையாரும்  தங்கை
கண்ணம்மாவும்  கள்ளுக்கடை
மறியலில் ஈடுபட்டு
கைதாகிறார்கள்  நாட்டிலேயே
கைதாகும் முதல் பெண்கள்
அவர்கள் இருவரும்
காந்தியாரிடம்  கள்ளுக்கடை
மறியலை நிறுத்தி விடலாமா
என்று கேட்டபோது
ஈரோட்டில் உள்ள இரு
பெண்களைக் கேட்டுச்
செய்யவேண்டும்  என்கிறார்

ஈவெரா ஆடம்பரத்
துணிகள் அணிவதை
விட்டுவிடுகிறார் கதருக்கு
மாறுகிறார் நாகம்மையாரையும்
80 வயது அன்னையாரையும்
உறவினர்களையும்  நண்பர்களையும்
கதருக்கு மாற்றுகிறார்
கதர்க் கடைகளைத்
திறக்கிறார் தோளில்
சுமந்து விற்கிறார்
கதர்ப் புரட்சி ஏற்படுகிறது

வைக்கம்
--------------
கேரளாவில் உள்ள
வைக்கத்தில் கோவிலைச்
சுற்றியுள்ள தெருக்களில்
தாழ்த்தப் பட்டவர்களை
நடக்க விடாமல்
தடை  இருந்தது
அங்கே இருப்பவர்கள்
போராடினார்கள் வெற்றி
கிடைக்கவில்லை ஈவெராவுக்கு
தகவல் அனுப்பினர்
ஈவெரா  வந்து
நடத்தினார் போராட்டம்
கைதானார் முதலில்
நாகம்மையாரும்  ஈவெரா வுக்குப்பின்  
போராட்டம்  தொடர்ந்தார்  
கிடைத்தது வெற்றி

அவரைக் கொல்ல
நடத்தினர் யாகம்
இறந்ததோ மன்னர்
ராணியிடம் பேச்சுவார்த்தை
நடத்தி சம்மதம்
பெறுகிறார் தாழ்த்தப்பட்டோர்
கோவிலைச் சுற்றியுள்ள
தெருக்களில்  நடக்க

வைக்கம் வீரர்
ஆனார் ஈவெரா
தற்பொழுது வைக்கம்
கோவிலுக்கு அருகில்
ஈவெராவுக்கு சிலையும்
வைக்கப் பெற்றுள்ளது

குருகுலம்
----------------
அதேபோல் சேரன்மாதேவியில்
. வே. சு  அய்யர்
குருகுலம் நடத்தினார்
அந்த  இடத்தை
செட்டிநாட்டைச் சேர்ந்த
வை. சு. சண்முகனார்
கொடுத்தார் கொடையாக
குருகுலத்தை நடத்த
கொடுததார் ஈவெரா
ரூ 10000 கட்சியிலிருந்து

. வே. சு அய்யர்
பார்ப்பனப் பிள்ளைகளுக்கு
தனியே நீர் அருந்துதல்
உணவு உண்ணுதல்
மற்ற பிள்ளைகளுக்கு
தனியே நீர் அருந்துதல்
உணவு உண்ணுதல்
என்று ஏற்பாடு
செய்கிறார் ஓமாந்தூர் 
ரெட்டியாரின் பிள்ளை
பர்ப்பனருக்கான நீரை
அருந்தியதால் தண்டிக்கப்படுகிறான்


அவன் ஈவெரா
முன் தோன்றி
நடந்ததை  சொல்கிறான்
ஈவெரா வாவேசு அய்யர்
செய்வது  தவறென்று
முடிவு செய்கிறார் திரு வி க
வரதராஜுலு  நாயுடு
போன்றோரும் அதேபோல்
கருதுகின்றனர்  வவேசு அய்யரை
அழைத்து சமபந்தி போஜனத்துக்கு
ஏற்பாடு செய்யுமாறு
வேண்டுகின்றனர் அவர் மறுக்கிறார்
ராஜகோபாலாச்சாரியாரும்
சத்தியமுர்த்தி அய்யர்
போன்ற மற்ற
பார்ப்பனர்களும் வவேசு அய்யரை
ஆதரித்தனர் எனவே
கட்சியிலிருந்து பணம்
கொடுப்பது நிறுத்தப்பட்டது
குருகுலம் ஒழிந்தது

வகுப்புவாரி பிரதிநிதித்துவ
தீர்மானத்தை காங்கிரஸ்
மாநாடுகளில் கொண்டுவந்தார்
ஈவெரா பார்ப்பனர்கள்
தோற்கடித்தனர் காஞ்சிபுரம்
மாநாட்டில் திருவிக தலைவர்
வகுப்புவாரி பிரதிநிதித்துவ் தீர்மானம்
ஆறாவது முறையாகக் கொண்டுவந்தார்
பார்ப்பனர்கள் சூழ்ச்சியால்
தோற்கடிக்கப்பட்டது வெகுண்டெழுந்து
கட்சியை விட்டு விலகினார்
காங்கிரசை ஒழிப்பதே
என்வேலை என்று முழங்கினார்





1 comment:

  1. Chronological description of history is good. Yes, Kathar, Vaikkam and Gurugulam are the main issues of his career when he was in congress. Your language is simple and neat. Presenting the great life to the next generation is also a great job. Congrats Nachiappan! However i feel,in some area, it runs prosaic than poetic.

    ReplyDelete