Friday, October 23, 2015

தந்தை பெரியார் கவிதை - பணிகள்

கௌரவ மாஜிஸ்ட்ரேட் உள்பட
 29 பதவிகள்  தேடி   வந்தன
ஈரோட்டில் பிளேக் வந்தது
எல்லோரும்  ஊரைக்காலி
செய்தனர் ஈவெரா
துணிச்சலோடு  ஊரிலேயே
இருந்து ஏழைகளுக்கு
உதவினார் நல்ல பெயர்
கிடைத்தது நகரசபைத்
தலைவரானார் ஈவெரா


சாலைகளை அகலப்படுத்தினார்
செல்வந்தர்களின் கட்டிடங்களை
இடித்துத்தள்ளினார்  அவர்களின்
கோபத்தை  எதிர்கொண்டார்
காவிரி நீரைத் தொட்டிகளில்
தேக்கி குழாய்களில்
வீடுகளுக்கு விநியோகம்
செய்கிறார் அன்னையாரும்
பார்ப்பன பெண்களும்
நீர் தீட்டாகி விட்டதாக
கூறி புளியால் விளக்கி
 நீர் பிடிக்கிறார்கள்


அவர்களைப்  பார்த்து
இசுலாமியப்  பெண்களும்
அவ்வாறே செய்கிறார்கள்
ஈவெரா வுக்கு  சிரிப்பு
வருகிறது  அங்குள்ள வ உ சி
பூங்காவில் உள்ள
நீர்த்  தொட்டிகளில்
ஈவெரா  பெயர்
எழுதப்பட்டிருக்கிறது
ஈவெரா வின் ஆற்றலைக் கண்டு
மகிழ்ச்சியடைகிறார்கள் மக்கள்


பார்ப்பனர்கள்  பொறாமை
கொண்டு நகரசபைத் தலைவர்
பதவியிலிருந்து  நீக்கும்படி
அரசுக்கு  மனுப்போட்டனர்
அரசு ஆய்வு செய்தது
29 பதவிகளில் காட்டியுள்ள
திறமையையும் நாணயத்தையும்
ஈரோடு நகராட்சியின்
முன்னேற்றத்தையும் கண்டனர்
மனு பொய்யானது
என்ற முடிவுக்கு
அரசு வந்தது 
ஈவெரா தலைவராக
தொடர்ந்தார்; மேலும்
ராஜகோபாலாசாரியார்
சேலம் நகராட்சித் தலைவராக
இருந்தார் அவர்
சேலம் நகராட்சியை விட
ஈரோடு நகராட்சி
சிறப்பாக செயல் படுவதாக
ஈவெரா வைப் பாராட்டினார்



1 comment:

  1. பெரியார் பற்றிய பிறப்பும், பெரியார் மேற்கொண்ட துறவும், மக்கள் பணிகளுக்காகவே என்பதற்கான முன்னோட்டமே , ஈரோட்டுப் பணிகள். பெரியாரை முழுமையாக அறிந்திராத நம் அடுத்த தலைமுறையினர், எளிமையாகவும், உரிய வகையிலும் தெரிந்து கொள்ள இத்தொடர் உதவும். தொடர்ந்திட வாழ்த்துகள்!

    ReplyDelete