Monday, May 9, 2016

இந்தி

1937ல் நீதிக்கட்சி படுதோல்வி
அடைந்தது காங்கிரஸ்
வெற்றி பெற்றது
ராஜகோபாலாசாரியார் முதல்வரானார்

பள்ளிகளில் இந்தியைப்
புகுத்தினார். மறைமலை அடிகள்,
சோமசுந்தர பாரதி , கி ஆ பெ விசுவநாதம்   
எல்லோரும் எதிர்த்தனர்
ஈவெரா தடயைமீறி
சிறைப்பட்டார் 167 நாட்கள் 
பெல்லாரி சிறையில்
அடைக்கப் பட்டார்
சிறையில் 190 பவுண்டு
எடையிருந்த ஈவெரா
166 பவுண்டாகக் குறைந்தார் 


வழக்கம்போல் எதிர் வழக்காடவில்லை
நீதிபதியின் மீதும்
அரசாங்கத்தின் மீதும்
நம்பிக்கையில்லை  என்று
வாக்குமூலம் மட்டும் கொடுத்தார்

தாலமுத்துவும் நடராசனும்
சிறையிலேயே மாண்னர்
ஈவெரா நினைவுத் தூண்
எழுப்பினார் பிற்காலத்தில்
சென்னையில் எம் எம் டி எ
கட்டிடத்துக்கு தாலமுத்து நடராசன்
மாளிகை என்று கலைஞர் பெயர் சூட்டினார்

1271 பேர் சிறைத்தண்டனை பெற்றனர்
ஈவெரா வை விடுதலை செய்த அரசு  
படிப்படியாக மற்றவர்களையும்
விடுதலை செய்தது
ஈவெரா  சிறையிலிருக்கும்போதே
நீதிக்கட்சித் தலைவரானார்

தமிழர் படை அமைக்கப்பட்டது
திருச்சியிலிருந்து புறப்பட்டு
வழியெல்லாம் பிரசாரம்
செய்து கொண்டு சென்னை
வந்தடைந்தனர் வரவேற்பு
1 லட்சம் பேர் கலந்து
கொண்ட கடல்கரைக் கூட்டம்

தமிழ்நாடு தமிழருக்கே
என்று அறிவித்தார்
1001 ரூபா பணமுடிப்பு
சென்னையில் வழங்கப்பட்டது
மற்ற ஊர்களிலும் பணமுடிப்பு
வழங்கப்பட்டது வணிக வரியை
உயர்த்தியதால் வணிகர்களும் 
போராட்டத்தில் கலந்து கொண்டனர்

ஈவெரா தமிழர் தலைவர் ஆனார்.

No comments:

Post a Comment