Tuesday, May 31, 2016

பட்டம்

பெண்ணுரிமை இல்லாமல்
சமூக சீர்திருத்தம்
கிடையாது என்றார்
குழந்தை திருமணத்தால்
1921ல் 3.29 லட்சம் விதவைகள்
இருந்தனர் விதவைகளுக்குத்
திருமணம் செய்ய வேண்டும்
 
கற்பு இருபாலருக்கும்
பொதுவாக இருக்கவேண்டும்
என்றார் ஒருவரை ஒருவர்
அறிந்துகொள்ள காதல்
வேண்டும் என்றார்
உடல் தொடர்பு கூடாது
என்றார் மணமுறிவுக்கு
உரிமை வேண்டும் என்றார்

பெண்களுக்கு சொத்துரிமை
வேண்டும் என்றார்
பெண்கல்வி கட்டாயம்
வேண்டும் என்றார்
வேலைவாய்ப்பில் ஆணுக்கு
நிகராய் இருக்கவேண்டும்
காவல்துறையிலும் இராணுவத்திலும்
பெண்கள் வேலைபார்க்க  வேண்டும்

பிள்ளைப் பேற்றிலும்
பிள்ளை வளர்ப்பிலும்
ஆணுக்குப் பங்குண்டு  
தேவதாசி முறை ஒழிப்பு
பெண்விடுதலையைப்
பெண்களே  தேடிக்கொள்ள
வேண்டும் ஆண்களால்
கிடைக்கும் என்பது
எலிக்குப் பூனை நன்மை செய்யும்
என்பதைப் போன்றதே
என்றார் ஈவெரா
அவரைப் பாராட்டும்
வகையில் மறைமலை அடிகளாரின்
திருமகளார் நீலாம்பிகை
அம்மையார் தலைமையில்
நடைபெற்ற  மகளிர் மாநாட்டில்
ஈவெரா வுக்குப் பெரியார் பட்டம்
கொடுத்துச் சிறப்பித்தார்கள்

திருவள்ளுவர் சொன்னதைப்போல்
ஈவெரா செயற்கரிய செய்த
பெரியார் ஆவர் எனவே
இந்தப்  பட்டம் அவருக்குப்
பொருத்தமானதே  ஆகும் 




No comments:

Post a Comment