Thursday, August 4, 2016

பாவேந்தர்

பாரதிதாசன் இயற் பெயர்
கனக சுப்பு ரத்தினம் 
மகாகவி பாரதி  மீது
கொண்ட காதலால்
பாரதிதாசன் என்று
புனைந்து கொண்டார்


1920 இல் இருந்தது இறைநம்பிக்கை                                              
அவர் கவிதைகளில்

ஈர்த்தது அவரை
பெரியாரின் பகுத்தறிவு
திகழ்ந்தார் அவர்
புரட்சிக் கவிஞராக எப்போதும்

எழுதினார் அவர்
ஏராளமான கவிதைகளை
சொற்கள் எல்லாம் எளியவை
உவமைகள் ஒவ்வொன்றும் அரியவை

  
தமிழ், தமிழியக்கம் , இந்தி  எதிர்ப்பு ,
 காதல் ,பெண்விடுதலை , இயற்கை ,
பார்ப்பன எதிர்ப்பு  போன்ற
தளங்களில் எழுதிக் குவித்தார்
.
வெளியிட்டதோ நான்கு கவிதைத் தொகுதிகள்
நல்லதோர் குடும்பத்தைக்  காட்ட குடும்ப  விளக்கு 
அதில் ஐந்து  தொகுதிகள் . நன்றல்லாததைக் காட்ட
ஒரு இருண்டவீடு, புரட்சிக்கவி
(பில்கணீயம்   என்கிற வடமொழி நூலின்  தழுவல் )
பாண்டியன் பரிசு போன்ற காப்பியங்கள்
இன்னும்  ஏராளமான கவிதைகளை
இயற்றினார் புரட்சிக் கவிஞர்
தமிழ்  உலகம் போற்றுகிறது அவரை
பாவேந்தர் என்று பாராட்டி
சிலைகள் வைத்திருக்கிறது
அவர் வாழ்ந்த  வீட்டை
புதுவை அரசு நினைவிடமாக
மாற்றியுள்ளது

எழுதினார் பாவேந்தர்
பெரியார் பற்றியும்

1. வயதில் அறிவில் முதியார்
  வாய்மைப் போருக்கு
  என்றும் இளையார்
  உயர் எண்ணங்கள்
  மலரும் சோலை

2. தொண்டு செய்து பழுத்த பழம்
   தூய தாடி மார்பில் விழும்
   மண்டைச் சுரப்பை
   உலகு தொழும்
   மனக்குகையில் சிறுத்தை எழும்


நாமக்கல்லைச் சேர்ந்த செல்லப்ப செட்டியார்
நல்லதோர் தமிழ்த்  தொண்டர்
எண்ணம்  எழுந்தது புரட்சிக் கவிஞருக்கு
நிதி திரட்டிக் கொடுத்தால் என்னவென்று
சொன்னார் அதைப் பெரியாரிடம்
பெரியார் அமைத்தார் நிதிக்குழு ஒன்றை
நிதிக்குழுவில்  பெரியார்,செல்லப்ப  செட்டியார்
தவிர ஆர்.கே .சண்முகம் ,டாக்டர் ஏ கிருட்டிணசாமி,  
மேனாள் அமைச்சர் இராமநாதன்,மேனாள் அமைச்சர் முத்தையா முதலியார்,
அண்ணா  மற்றும் தோழர்கள் ,தோழியர்கள் சிலர்   இருந்தனர்

நிதிக்குழு 21.4.1945 ல்  குடியரசு இதழில் வெளியிட்டது வேண்டுகோள்
புரட்சிக்  கவிஞர் தமிழ் இலக்கியத்துக்கும்
தமிழர் சமூகத்துக்கும் செய்துள்ள ஒப்புயர்வற்ற
சேவையைப் பாராட்டும் பாங்கில் நிதி திரட்டிக்
கொடுப்பதெனத் தீர்மானித்துள்ளோம்
இதைச்  செய்வதன் மூலம் ஓரளவு
நன்றியும் பாராட்டும் செய்தவர்களாவோம்
ஆகவே  தமிழ் அன்பர்கள்  அனைவரும்
தாராளமாக நன்கொடை தருமாறு
கேட்டுக் கொள்கிறோம்
பெரியார் 150 ரூபாய்  அளித்தார்
நிதிப்  பொறுப்பாளர் கிருட்டினராஜ் ரெட்டியார்
விடுத்தார்  நினைவூட்டல் அறிக்கைகளை
வெளியிட்டார்  பெரியார் அதை குடியரசு  இதழில்
திருச்சியில் திராவிடர் கழக மாநாட்டில்
போட்டார்  தீர்மானம் நிதி வேண்டி

28. 7.1946அன்று நிதியளிப்பு  விழா
இடமோ  பச்சையப்பன் கல்லூரித்  திடல்
புரட்சிக்  கவிஞர்  பாடல்களை பாடியதோ
தண்டபாணி தேசிகர் தலைவரோ நாவலர்
சோமசுந்தர பாரதியார் திரண்ட நிதியோ
ரூபாய் 24,399 வழங்கியதோ  அண்ணா
பேசினார்கள் புரட்சிக் கவிஞரின் கவிதை
இன்பம் பற்றி மாநகர தந்தை என்.சிவராஜ் ,
இராதாகிருட்டிண  பிள்ளை,டி .செங்கல்வராயன்
டாக்டர் ஏ .கிருட்டிணசாமி ,இரா பி சேதுப்  பிள்ளை ,
குஞ்சிதம்  குருசாமி ,பி.சம்பந்த  முதலியார் ,
கி  ஆ .பெ .விசுவநாதம் மு . வரதராசனார்
ப .ஜீவானந்தம் .ம.பொ.சி,நாவலர் நெடுஞ்செழியன் ,
புலவர் வேணுகோபால் முதலியோர்
அண்ணா வின்  சிறப்பான  நிறைவுரை 


1 comment:

  1. பாவேந்தர் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டோம். பெரியாரைப் பற்றிய பாவேந்தர் கவிதை அருமை

    ReplyDelete