Monday, August 22, 2016

அம்பேத்கர்

பிறந்ததோ மகர் சாதியில்(தலித்)
பெற்றதோ பாரத ரத்னா பட்டம்
அழைக்கப் பட்டார் பாபா சாகேப் ஆக
பெற்றார் இரு முனைவர் பட்டங்கள்
கொலம்பியா பல்கலையில் ஒன்றும்
இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஒன்றுமாக

பாடுபட்டார்  தலித்துகளின்அரசியல் ,சமூக
விடுதலைக்காக ஒடுக்கப்பட்டோருக்காக
கேட்டார் தனித் தொகுதிகள் மகாத்மா எதிர்த்தார்
அது  இந்துக்களைப் பிரிக்கும் என்று  சொல்லி
கையெழுத்திட்டார் அம்பேத்கர்   பூனா ஒப்பந்தத்தில்
 
சாதி ஒழிக்கும் வழி ,சூத்திரர்கள் யார் ,
புத்தரும் அவருடைய தம்மமும் போன்ற
நூல்களை எழுதினார். ஆதரித்தார்  அவர்
நாட்டுப் பிரிவினையை.  ஆனார் அவர்
முதல் சட்ட அமைச்சராக ; துறந்தார்
அதையும் சில ஆண்டுகளில்
திகழ்கிறார் அவர் இந்திய அரசியல்
சட்ட சிற்பியாக. அனுபவித்தார்
துன்பங்களை   இந்து  மதத்தில்
மாறினார் மதம் புத்தரை நோக்கி
500000 தோழர்களோடு;
  
1940  ல் பெரியார்  அம்பேத்கர்  ,ஜின்னா , எம்.ஆர்.ஜெயகர்
முதலிய தலைவர்களைச் சந்திப்பதற்காக
அண்ணாவையும் தோழர்கள் சிலரையும்
அழைத்துக்  கொண்டு சென்றார் மும்பைக்கு
அம்பேத்கர் அளித்தார் விருந்து பெரியாருக்கு
தனது மாளிகையில் இருவரும் பேசினார்கள்
அரசியல் சமூக மாற்றங்கள் பற்றி நெடுநேரம்
மறுநாள் மாலை அம்பேத்கர் அளித்தார்
தேநீர் விருந்து பெரியாருக்கு கோகலே
கல்விக் கழகத்தில் அன்று இரவு
அம்பேத்கர்  தலைமையில் தாராவியில் பேசினார்  பெரியார் 
பார்ப்பனீயத்தை ஒழிப்பதில்
பெரியார் கொள்கையை ஒத்துக்  கொள்வதாகவும்
பெரியார்  பேச்சுக்குத் தலைமை வகிப்பது
தன் வாழ்க்கையில்  கிடைத்த பெரும் பேறு
என்று குறிப்பிட்டார் அம்பேத்கார்

பெரியார் பார்ப்பனார்க்கள் தமிழர்கள்  அல்லர் என்றும்
அவர்கள்  ஆதிக்கத்திலிந்து விடுபட  தமிழ்நாடு
தனிநாடு ஆகவேண்டும்  பர்மா போல என்றார்
அண்ணாவின் இருமொழிப் புலமைக்குச்
சான்றாக இருந்தது அவர் அம்பேத்கரின்
ஆங்கிலப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்ததும்
பெரியாரின் தமிழ்ப் பேச்சை ஆங்கிலத்தில்
மொழி பெயர்த்ததும் அம்பேத்கர் -பெரியார் சந்திப்பு
பற்றி செய்தி வெளியிட்டது மும்பை கிரானிகில் ஆங்கில நாளேடு

14.2.1942ல் திருச்சியில் தாழ்த்தப் பட்டோர்
மாநாட்டில் பெரியார் அம்பேத்கர் படத்தைத்
திறந்து வைத்து அம்பேத்கருடைய அரசியல்
ஞானமும் ,உயரிய கல்வி அறிவும்,ஊக்கமும்
குறித்துப் பேசினார் 23.9.1944 அன்று அம்பேத்கர்
பெரியார் இல்லத்துக்கு வந்துபேசிக் கொண்டிருந்தார்
ஒருமணி நேரம் வரவேற்றார் சேலம் மாநாட்டு
தீர்மானங்களை .பட்டம் ,பதவி நடுபவர்களை
பெரியார் பின்னுக்கு தள்ளியிருப்பது
அவருடைய கட்சிக்கு புத்துயிர் ஊட்டும்
என்று பாராட்டினார் .பெரியாருடன் இணைந்து
வைதிகம்  ,மனுதர்மம் முதலிய கொடுமைகளை
எதிர்த்துப் போராட விரும்பினார் என்று
ஆ .பத்மநாபன் ஐ .ஏ.எஸ் குறிப்பிடுகிறார்

உண்மை இதழில்

1 comment:

  1. அம்பேத்கர் பற்றிய அருமையான கவிதை

    ReplyDelete