Thursday, November 17, 2016

தந்தைபெரியார் வசன கவிதை - கலைஞர் 1

1924 ல் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை
எனும் நல்லூரில் முத்துவேலர் - அஞ்சுகம் இணையருக்கு
மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்
கருணாநிதி என்று சூட்டினார்கள் பெயர்
படிக்கும் போது அரசியலில் ஈடுபட்டால்
படிப்புக் கெடும்  என்பதற்கு  எடுத்துக் காட்டாகிறார்
கருணாநிதி  பள்ளிஇறுதித் தேர்வில்அடைகிறார் தோல்வி
14 வயதில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து
கொள்கிறார்  மாணவ நேசன் கையேடு
மாணவர்க்காக நடத்துகிறார் அமைக்கிறார்  அவர்
தமிழ்நாடு தமிழ்  மாணவர் மன்றம்
ஈடுபடுகிறார் இயக்கப் பணிகளில்
தேவைப் படுகிறது பொருள்
திருடுகிறார் அஞ்சுகம் அம்மையாரின் 
பொற்சங்கிலியை தேடுகிறார்கள்
அதை எல்லோரும் வீட்டில்
தென்னன்  நண்பராகிறார் முரசொலி
கையேடாக வெளியிடுகிறார் இளமையிலேயே
20 வயதில் வருணாசிரம   மாநாட்டில் கலந்து கொள்கிறார்
சிறுவர் சீர்திருத்தசங்கம் நடத்துகிறார்
பட்டுக்கோட்டை அழகிரியின் பேச்சால் கவரப் படுகிறார்
அண்ணாவின் திராவிட நாடு இதழில் கட்டுரை
எழுதுகிறார் 'இளமைப்பலி ' அண்ணாவுடன் சந்திப்பும்
நிகழ்கிறது   'பழனியப்பன் 'நாடகம் எழுதுகிறார்
சாந்தா -நச்சுக்கோப்பை என்றும்   அழைக்கப்  படுகிறது
காதல் செய்கிறார் ஒருத்தியை
அது முடிகிறது தோல்வியில் 
பெண் வீட்டார் சீர்திருத்தத்    திருமணத்துக்கு
மறுப்புச் சொல்வதால் மனமுடைந்து
பத்மாவதி அம்மையாருடன் திருமணம்
சுயமரியாதை வழியில்
கலைவாணரின் கிந்தனார் நிகழ்ச்சி

நாடகம் தொழிலாக ஆகிறது
விழுப்புரத்தில் பகலில் ஒத்திகை
இரவில் கட்சிக்கூட்டம்
திராவிடநடிகர் கழகம் என்று பெயர்
திராவிடப்பெயரால்  எழுகிறது  விழுப்புரத்தில்      
சிக்கல்  சமாளிக்கிறார்  கருணாநிதி

புதுவை மாநாட்டில் கலந்து கொள்கிறார்
பெரியார்,அண்ணா,அழகிரி ஆகியோர்        
பேசுவதைக் கேட்டுவிட்டு  காஞ்சி   கல்யாணசுந்தரம்,
பாரதிதாசன்  ஆகியோருடன்   வருகிறார்  
ஒரு கும்பல் அவர்களைத்
தாக்குகிறது இருவரும் பிரிந்துவிடுகிறார்கள்
கருணாநிதியை கடுமையாக அடித்து 
இறந்துவிட்டார் என்று நினைத்து சாக்கடை ஓரம்
வீசிவிட்டு    செல்கிறார்கள்.          காப்பாற்றுகிறார் ஒரு மூதாட்டி
இசுலாமியரைப்போல்  மாறுவேடம் புனைந்து
தப்பிப் போகிறார்  பெரியார் மருந்திடுகிறார்

ஒரு ஆண்டுக்  காலம் பெரியாரின்
ஈரோடு குருகுல வாசத்துக்கு போகிறார்
'அண்ணாமலைக்கு   அரோகரா' கட்டுரை
பாராட்டுப்  பெறுகிறது
1944 ஆம் ஆண்டு கல்லூரி மாணவர்களின் கோடைகால
சுற்றுப்பயணத்தில்  கலந்து கொண்டு உரையாற்றினார்
மு.கருணாநிதி அறிவுரை பகர்ந்து அவர்களுக்கு

ஈரோடு  குருகுலத்தில் இருக்கும்போது திராவிடர் கழகக்
கொடியைத் தேர்வு செய்கிறார்கள் சுற்றிக் கருப்பும்
நடுவில் சிவப்பு வட்டமும் என்று முடிவாகிறது
சிவப்பு நிறத்துக்கு தன்  விரலைக்  குண்டூசியால்
குத்தி இரத்தத்தை பூசினார்  கலைஞர் 
21.2.1946 நீடாமங்கலத்தில்   நடைபெற்ற திராவிடநாடு
திராவிட மாணவர்கள் மாநாட்டில் மீண்டும் தமிழ்
நாட்டில் இந்தி  புகுத்தப்பட்டால் தக்கதொரு போராட்டம்
மாணவர்களே நடத்துவதென தீர்மானிக்கிறது  என்கிற
தீர்மானத்தை  கலைஞர் கருணாநிதி கொண்டுவந்தார்

  10.8.1947 அன்று கடலூர் ஓ  ,டி யில் திராவிடநாடு
பிரிவினைக் கூட்டம் நடைபெற்றது  அதில்
திராவிட நாடு ஏன் பிரிய .வேண்டும்  என்பது
பற்றி விரிவாகப் பேசினார்  கலைஞர்

1.9.1948 விடுதலையில் முரசொலி வார வெளியீடு
ஆசிரியர் மு.கருணாநிதி . போர் முழக்கம் ,புயல் நடை
புரட்சிக்கு அழைப்பு 14.1.1948  பொங்கல் அன்று புறப்படும்
புதிய ஏடு என்று விளம்பரப் படுத்தப் படுகிறது
ராஜகுமாரி' திரைப்படம்
உரையாடல்எழுதும் வாய்ப்பு பெரியாரிடம்
விடை பெற்றுக்கொண்டு கோவை செல்கிறார்
ராஜகுமாரி திரைப்படத்தில் ம.கோ.இரா(எம்.ஜி .ஆர் )
கதாநாயகன் .   கருணாநிதி அண்ணாவின் புத்தகங்களை
கொடுப்பார்  ம. கோ. இரா  காந்தியின் புத்தகங்களை  கொடுப்பார்
பிற்காலத்தில்  ம. கோ.  இரா  தி.மு.கழகத்தில்  இணைந்தார் அந்த
நாட்களில் கருணாநிதி கோவை  சிங்காநல்லூரில் 10ரூ  வாடகைக்கு
குருவிக்கூடு  போன்ற வீட்டில் மனைவி பத்மாவதியுடன்
வாழ்ந்தார் பத்மாவதி பெரிய இடத்துப் பெண்ணாக வந்தவர்

தந்தை முத்துவேலர் உடல் நலிவு
மு.க விடம்உன் கதை எப்படி இருக்கிறது
என்று கேட்கிறார் மு.க  பாதியில் இருக்கிறது
என்கிறார்  முத்துவேலர் என் கதையை முடிக்கப்
போகிறேன் என்கிறார்  புலமையோடு அதே  போல்
அவர் மறை ந்தும் விடுகிறார்  மு .க வும்  குடும்பத்தினரும்
துக்கத்தில் ஆழ்கின்றனர் ஆதரவின்றி

நாவலர் ஜி டி நாயுடு நிறுவனத்தில் விடுதிக் காப்பாளராக
பணி புரிகிறார் அவரோடு பழக்கம் ஏற்படுகிறது
அபிமன்யு படத்துக்கு உரையாடல் எழுதுகிறார்
படத்தில் மு.க  பெயர் போடவில்லை
கலைஞனுக்கு புகழும்தேவை என்பதால்
மு.க. கோபித்துப்பிக்கொண்டு  திருவாரூர் திரும்புகிறார்
'மந்திரி குமாரி' படத்துக்கு உரையாடல்
எழுத வாய்ப்பு முரசொலி வார இதழாகிறது .
ஆண்  குழந்தை பிறக்கிறது  முத்து  என்று
தந்தை  பெயரை  வைக்கிறார்
மனைவி  பத்மாவதி மறைகிறார்
அந்த  நேரம்  புதுக்கோட்டைக்  கூட்டத்திற்குப்
போய் விடுகிறார் மு.க.
20.4.1948 விடுதலையில் பத்மாவதி அம்மையாரின்
படத்தையும் வெளியிட்டு கலைஞருக்கு இரங்கல்
கூறியிருந்தார் பெரியார் துக்கத்தோடு
5.6.1949   அன்று   தஞ்சை மாவட்ட திராவிட மாணவர்
கழக நான்காவது மாநாடு நடைபெற்றது  . அதில்
பட்டுக்கோட்டை அழகிரி படத்தைத்  திறந்து வைத்து
பேசினார்  .அழகிரி தன் நிலங்களை அடமானம் வைத்து
கடனை அடைக்காமல் நோயுற்று இறந்தார் இயக்கப் பணிகளை
முடித்து விட்டார் குறைவின்றி  என்றார்  கலைஞர்

இரண்டாவது மனைவியை நடுத்தரக்
குடும்பத்தில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்
தயாளு அம்மையாரை  மணக்கிறார் 
இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து
கொள்கிறார் ; பெரியார் கூட்டும்
ஈரோடு மாநாட்டிலும்  பங்கு  பெறுகிறார்
பட்டுக்கோட்டை அழகிரிக்கு அது கடைசி  மாநாடு
அண்ணா உதவி செய்கிறார் அழகிரிக்கு
பெரியார் மணியம்மையாரை  திருமணம்
செய்து கொள்கிறார் மணியம்மையார் திருமணத்துக்கு
முன்பே பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்து
வேறுபாடு  ஏற்பட்டு விடுகிறது

1949 ல் தி .மு.க தோற்றம்   மு. க  அதில்  இணைகிறார்
சேலம் மாடர்ன் தியேட்டர் அழைக்கிறது
மாதம் ரூ 500 சம்பளத்தில் ; கட்சிப் பணிக்கு
இடையூறு  இல்லாமல் என்கிற நிபந்தனையுடன்
ஏற்கிறார்  அதை . கண்ணதாசன் பாடல் எழுதிக்
கொண்டிருக்கிறார் அங்கே ; இருவரும் நண்பர்கள்
ஆகிறார்கள்  கவிஞர்  கழகத்தில் இணைகிறார்
மு. க. பரப்புரைக்குழு உறுப்பினராகிறார்
சேலத்துக்கு குடும்பம் மாறுகிறது 

மந்திரி குமாரி படத்துக்கு உரையாடல் எழுதுகிறார்
கலைவாணர்   சந்திப்பு  நிகழ்கிறது
அவரும் மதுரம் அம்மையாரும்  நடிக்கும்
மணமகள் படத்துக்கு உரையாடல் எழுத
மு.க.வை  அழைக்கிறார் ரூ 10000 சம்பளம்
கேட்கும்படி வழிகாட்டுகிறார்
கலைவாணரோடு சீட்டாட்டம்  விளையாடுகிறார் மு.க.
அதில் ரூ 5000 கிடைக்கிறது கலைவாணர் தேவைப்படும்
கூடுதல் பணத்தைத் தன் கையிலிருந்து போட்டு
மு.க.வுக்கு  புதிய மகிழுந்து ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார்
1957 தேர்தலில் கலைவாணர் பரப்புரை செய்கிறார்
வள்ளலாக இருந்த கலைவாணரை வறுமை
பிடித்துக் கொள்கிறது அப்போதும் தன்னிடம்  வந்து
பணம் கேட்ட ஏழை நடிகருக்கு வீட்டில் இருந்த
வெள்ளிக் கூஜாவை கொடுத்தனுப்புகிறார்  
கலைவாணர் மறைகிறார் நோயில்
அண்ணா தலைமையில் ஆன கழக அரசு
கலவாணருக்கு சென்னையில் சிலை
அமைக்கிறது  அந்தச் சிலை திறப்பு
விழா தான்  அண்ணாவின் கடைசிப் பேச்சு
திருச்சி தொடர் வண்டி நிலையத்தில்
கலைஞர் இந்தி எழுத்துக்களை அழிக்கிறார்
பெரியாரும் அங்கே இந்தி எழுத்துக்களை அழிக்கிறார்
நெசவாளர்களுக்கு உதவிட கழகம் கைத்தறித்
துணிகளை விற்க முடிவு செய்கிறது  கலைஞர்
சென்னையில் விற்று உதவுகிறார் உவகையோடு
ஒரு மாதம் தொடர்ந்து பேசுகிறார்
புளுரசி வருகிறது  6 மாதம்  படுக்கையில்
இருந்து வாடுகிறார்
1952 தேர்தலில்   கழகம் போட்டியிடவில்லை
1953 ல் மும்முனைப் போராட்டம் அறிவிக்கிறது
1. குலக்கல்விக்கு   எதிரான போராட்டம்
2.பண்டிதர் நேரு முட்டாள் (நான்சென்ஸ் ) என்று
   கூறியதை  எதிர்த்துப் போராட்டம்
3. டால்மியாபுரம் பெயரை கல்லக்குடி என்று
  மாற்றும் போராட்டம்
போராட்டக் களத்தில் மூன்று  அணியாகப்
பிரிந்து  சென்றனர்  அதில் கலைஞர் தலைவர்
முதல் அணிக்கு   அவரோடு 24 தோழர்கள்  5, 5 பேராகப் பிரிந்து
சென்றனர் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தனர் எல்லோரும்
தொடர் வண்டிக்குப் பச்சைக்கொடி
காட்டினார்கள் ; காவலர்கள் எழுந்து போங்கள்
என்று அதட்டினார்கள் ; ஒருவரும் எழுந்திருக்கவில்லை
எல்லோரையும் கைது செய்தார்கள்  காவலர்கள்
துப்பாக்கிச்சூடு நடந்தது களத்தில்
நடராசன் ,கேசவன் ஆகிய கண்மணிகள் பலி
கைதானவர்களை முதலில் அரியலூர் சிறைக்கு
கொண்டு போனார்கள்  அங்கே இடமில்லாததால்
திருச்சி சிறைக்குக் கொண்டு போனார்கள்
மற்ற அணியினரும் அங்கே இருந்தார்கள்
கலைஞர் அணிக்கு ஆறு மாத கடுங்காவல்
மற்றவர்களுக்கு மூன்று மாத  சிறை  
கலைஞர் தோழர்களை அமைச்சர்களாக்கினார்
அவர்கள் அவரை முதல்வர் ஆக்கினார்கள்
சிறையில் உணவுதான் தண்டனை
அதை உண்ண மறுப்பது குற்றம்
கல்லக்குடிப் போராட்டத்தில் அண்ணா சொன்னது
டால்மியாபுரம் பெயர்ப்பலகை மீது கல்லக்குடி
என்று எழுதியதை ஒட்டுவது தொடர் வண்டியை
சங்கிலியைப் பிடித்து நிறுத்துவது மட்டும்தான்
மற்றதெல்லாம் கலைஞர் களத்தில் வகுத்தது
ஆகவே அண்ணாவுக்கு செல்லக் கோபம்

அண்ணா ஆட்சியிலும் கலைஞர் ஆட்சியிலும்
சிறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன
உணவு சிறிது மேம்படுத்தப்பட்டது
சி வகுப்பு கைதிகள் சொந்த செலவில்
சோப்பு போன்றவற்றை வாங்கிக்கொள்ளலாம்
சி வகுப்பினர்க்கு . கடிதப்போக்குவரத்தும்  நேர்காணலும்
உண்டு .  ஏ .பி  வகுப்பினருக்கு செய்தித்தாள் ,வார ,
கிழமை இதழ்கள் உண்டு .  எல்லாக் கைதிகளும்ஓய்வு
நேரத்தில் சதுரங்கம் கே ரம் விளையாடலாம்
அரசு செலவில் 100 பேருக்கு 1 செய்தித்தாள்
வழங்கப்படுகிறது தாராளமாக 
உலகத்தமிழ் மாநாடு, மகாத்மா பிறந்த நாள்
போன்றவற்றுக்கு  தண்டணை குறைப்பு
பள்ளி , பல்கலைக்கழகத் தேர்வுகள் , இரவுப் பள்ளி ,
திறந்தவெளி கிறைச்சாலை , விடுதலைக்குப் பின்
அரசு வேலை  போன்ற  சலுகைகள்  வழங்கியிருக்கிறோம்

திருச்சி வரும் வழியில் திருப்பத்தூரில் மகிழுந்து விபத்து
கண்ணில் பலத்த அடி 12 முறை அறுவைச்சிகிச்சை
நடைபெறுகிறது அந்தக்கண் அப்படியே இருக்கிறது
1956ல்   திருச்சி மாநில மாநாட்டில் திமுக தேர்தலில்
போட்டியிடுவதென்று  முடிவாகிறது .  கலைஞர் நாகையில்
போட்டியிட விரும்புகிறார் . அண்ணா குளித்தலையில்
போட்டியிட சொல்கிறார்  அதேபோல் குளித்தலையில்
போட்டியிட்டு  வெற்றி வாகை  சூட்டுகிறார்
1956 அக்டோ   தமிழ்நாடு பெயர் கேட்டு
உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் மறைகிறார்
 1956 திசம்   அண்ணல் அம்பேத்கர் மறைகிறார்
1957 தேர்தலில்  15 பேர் தி மு க  சார்பில் சட்டப் பேரவைக்கு
போகிறார்கள் .   கலைஞர் தன் கன்னிப் பேச்சை நிகழ்த்துகிறார்
நங்கவரம் விவசாயி போராட்டம் நடத்துகிறார்
1958 பண்டிதர்   நேருவுக்கு கறுப்புக்கொடி  காட்டுகிறார்ப 
பரப்புரைக்காக 'உதய சூரியன்' நாடகம்  போடுகிறார்
1960 ம் ஆண்டு புதிய பெரிய மகிழுந்து வாங்குகிறார்
1961 சொல்லின் செல்வர் சம்பத்தும் , கவிஞர் கண்ணதாசன்
கழகத்திலிருந்து  வெளியேறுகின்றனர்  வருத்தத்தோடு

1962 தேர்தலில் தஞ்சையில் வெற்றி வாகை
ஆனால் காஞ்சியில் அண்ணா தோல்வி
கழகம் 50 சட்டப்பேரவை உறுப்பினர்களையும்
8 பாராளுமன்ற உறுப்பினர்களையும்  பெறுகிறது
1962 விலைவாசி உயர்வு எதிர்ப்புப் போராட்டத்தில்
கலந்து கொள்கிறார் கலைஞர் . அதே  ஆண்டு
சீனா இந்தியா மீது போர் தொடுக்கிறது
நிதி திரட்டுகிறார்கள் மக்கள்  பணமும் , நகைகளும்  கூடக்
கொடுக்கின்றனர் கடமை  உணர்வோடு
1962 அவசரநிலை அறிவிக்கப் படுகிறது
1963 ஜனவரி அருமை அன்னையார்   அஞ்சுகம்
அம்மையார் மறைகிறார்கள்
16 வது அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேறுகிறது
1965 இந்தி ஆட்சி மொழி யாக   அறிவிப்பு
போராட்டக் குழுத்தலைவர்  கலைஞர்
1963 ஜூலை அண்ணாவுக்கு கழுத்தில் கட்டி 
அகற்றப் படுகிறது
லால் பகதூர் சாஸ்திரி இந்தி படிக்கச் சொல்கிறார்
அண்ணா எதிர்க்கிறார் .  சென்னை, சேலம் ,தஞ்சை  மற்றும்
நெல்லையில் மாநாடுகள் 
1963 ஜூலை 'இருவர் உள்ளம்' படம் வெற்றி
எல் வி பிரசாத்  ரூ 10000 பரிசு வழங்குகிறார்
அதை திருக்குவளையில் அஞ்சுகம்-முத்துவேலர்
தாய் சேய் நலவிடுதி அமைக்க எடுத்து வைக்கிறார்
பிற்பாடு அதை கட்டி முடித்து முதல்வர் பக்தவத்சலம்
அவர்களைக் கொண்டு திறந்து வைக்கிறார்
1963 ஆகஸ்ட்   16 வது அரசியல் சட்ட திருத்தம்
பிரிவினைத் தடைச் சட்டத்தை எதிர்க்கிறார் அண்ணா
1963 அக்   காஞ்சித் தலைவன் படம் வெற்றி
1964 தொடக்கம் சிங்கத் தமிழன் சின்னசாமி
தமிழுக்காக தீக் குளிப்பு தீரத்தோடு
1964 பிப்   உள்ளாட்சித் தேர்தலில் அடக்குமுறை
அவிழ்த்து விடப்படுகிறது .

1964 ஏப்   பைந்தமிழ்ப் பாவேந்தர் மறைகிறார்
 தமிழரைத் தவிக்கவிட்டு விட்டு
1964 மே  பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு
மறைகிறார் மக்களை மறந்து போய்
1964 ஜுன்  சென்னை இராயபுரத்தில் தலைமைக்
கழகப்  பணிகளுக்காக  'அறிவகம் ' கட்டப்பட்டது
1964 செப்   பூம்புகார் படம் பார்ப்பவரை ஈர்க்கும்
வண்ணம் வெளியானது வெற்றிகளையும் குவித்து
1964 திசம்   சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம்
ஏற்பபட்டது  கழகம் அதைத் தீங்கானது என்று சொல்லிற்று
1964 கடைசி தனுஷ்கோடியைப் புயல் தாக்கியது
தி மு க  நிவாரணப் பணிகளை மேற் கொண்டது  
1965 ஜன   அண்ணா, நாவலர் ,கலைஞர்  தடுப்புக்காவல்
சட்டத்தில்  கைது . கலைஞர்  காவல்துறை லாரியில்
பாளையங்கோட்டைதனிமைச்சிறைக்கு கொண்டு போகப்
படுகிறார் அவருக்கு நெஞ்சு வலி என்கிறார் அதைப்பற்றி
காவல்துறை கவலைப்பட வில்லை
அங்கே பொழுதைக் கழிக்க மார்க்சிம் கார்க்கியின் ' தாய் '
நூலைப் படிக்கிறார் அக்கறையோடு
வெளியே மதுரை இராஜாங்கம் காவல் துறையால்
தாக்கப்படுகிறார்  முரசொலி  மாறன் பாதுகாப்புச்
சட்டத்தில்  கைதாகிறார் . அண்ணா பாளை  சிறைக்கு வருகிறார்
கலைஞரை பார்க்க  வெளிவந்த பின்பாராட்டுக்கள் குவிகின்றன
முதல் கூட்டம் நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் நெகிழ்ச்சியோடு        
1966 செப்ட   அண்ணாவிடம் 1967  தேர்தலுக்கு
10 லட்சம் திரட்டித் தருவதாக வாக்களிக்கிறார்
அதை நிறைவேற்ற தமிழ்நாடு முழுதும் சுழன்று
ஒரு நிகழ்ச்சிக்கு ரூ 500 வீதம் பெறுகிறார்
கலைஞர் பேசுகிறார் கொடியேற்றுகிறார்
1967 தேர்தலில் சைதாப்பேட்டையில்   போட்டி
அண்ணா வேட்பாளர்களை அறிவிக்கும்  போது
சைதாப்பேட்டை தம்பி 10 லட்சம் என்கிறார் 
1965 செப்ட் பாக்கிஸ்தான் போர் தொடுக்கிறது

1965 அ க் ட் பூமாலை   படம் வெளியாகிறது
 
1966 மார்ச்   தண்ணீர் தட்டுப் பாடு போராட்டம்
1966 மா ர் ச்  திருவள்ளுவர்  படம்  சட்டப்  பேரவையில்
திறக்கப்  படுகிறது ஆனால் சிலை வைக்க அரசு மறுக்கிறது
எனவே கழகத்தின்  சார்பில் சென்னை மயிலையில்
வள்ளுவர் சிலை வைக்கப் படுகிறது
1966 மார்ச்  ரூபாய் மதிப்புக் குறைகிறது 4.75 ரூ கொடுத்து
வாங்கிய அமெரிக்க $ ரூ 50 ஆக ஏறுகிறது  
1966 ஏப்   அவன் பித்தனா படம் வெளியாகிறது
மணிமகுடம் நாடகம் போடுகிறார்
1966 திசம்   சென்னையில்  விருகம்பாக்கம் மாநாடு
அண்ணா  தலைவர்  ராஜாஜி திறப்பாளர் ,காயிதே மில்லத் ,
(அரசியல் சட்ட சபையில பொது மொழியாக   தமிழ்
இருக்க வேண்டும் என்று சொன்ன  கண்ணியமிக்கவர்)
ம பொ .சி  கலந்து கொள்கின்றனர் சிறப்பு அழைப்பாளர்களாக 
1967 தேர்தலில் பரப்புரை செய்யும்போது
கோட்டுரில் தாக்குதல் நடந்தது 

1967ல்   தேர்தலில் கழகம் வெற்றி  பெறுகிறது
அண்ணா பெரியாரைச் சந்திக்கிறார் ஆட்சியை
அவருக்கு  சமர்பிக்கிறார்  பெரியாரின்  வாழ்த்தோடு
ஆட்சி அமைக்கிறார் அண்ணா .  அரசு இலச்சினையில்
மாற்றம் செய்கிறார் . தமிழ்நாடு அரசு மேலும்
வாய்மையே வெல்லும் கீழும் இருக்கிறது  இப்போது .
அண்ணா அமைச்சரவை அமைக்கிறார் அதில்
கலைஞருக்கு பொதுப் பணித் துறையை  வழங்குகிறார்
அண்ணா தமிழ்நாடு  என்று பெயர் சூட்டுகிறார்
சுயமரியாதைத்  திருமணம் செல்லுபடியாகும் என்று
சட்டம் கொண்டு வருகிறார்(ஏற்கனவே நடந்த சுயமரியாதைத்
 திருமணங்களும் கூட )  இந்தி  கிடையாது
தமிழ் ,ஆங்கிலம் தான் என்று இருமொழிக்  கொள்கையை
அறிவிக்கிறார்  அண்ணா உறுதியோடு
1967 ஆகஸ்   15 விடுதலைநாள் கவியரங்கம் நடக்கிறது
 கலைஞர்         தலைமையில் .
1968 ஜனவ   அண்ணா உலகத்தமிழ் மாநாடு கூட்டோகிறார்
உகலகத்தமிழ் அறிஞர்கள் பங்குபெறும் ஆய்வரங்கு
கருத்தரங்கு கவியரங்கு நடைபெறுகிறது 
தமிழகத்தின் கலை பண்பாட்டை விளக்கும்
ஊர்வலம் நடக்கிறது .  திருவள்ளுவர், அவ்வையார்
கண்ணகி ,கம்பர் ,வீரமாமுனிவர் ,ஜி யு போப் ,கால்டுவெல் ,
வ.உ.சி  பாரதியார் பாரதிதாசன் ஆகியோருக்கு சிலைகள்
வைக்கப்பட்டன சிறப்பு செய்து
அண்ணா வுக்குப் புற்றுநோய் வருகிறது
அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்கிறார்
பிழைத்து வருகிறார் .  ஆனாலும் மறுபடியும்
நோய்  தாக்குகிறது  1969ஆம் ஆண்டு பிப்ரவரி
திங்களில் அண்ணா மறைகிறார்
லட்சக் கணக்கான தமிழர்கள் அண்ணாவுக்கு
அஞ்சலி செலுத்த வருகின்றனர் .                
(பிரதமர்) இந்திரா வருகிறார் . பெரியாரும் ,ராஜாஜி ,
காயிதேமில்லத், போன்றோரும் கண்ணீர் அஞ்சலி
செலுத்துகின்றனர்  அண்ணாவுக்கு .  அமைதி
தவழும் மெரீனா கடல் கரையில் அடக்கம்

செய்யப் படுகிறார்  அண்ணா 

No comments:

Post a Comment