Monday, November 28, 2016

ஃ பிடல் காஸ்ட்ரோ

90 வயதில் அந்தக்  கியூபா ஞாயிறு மறைந்து விட்டது
அமெரிக்க ஆதரவில்  ஆட்சி நடத்திய வல்லாளுனர்  (சர்வாதிகாரி )
படிஸ்டாவை எதிர்த்து  ஃ பிடல் போராடினார்
தம்பி ரவுல் காஸ்ட்ரோ வும்  ஃ பிடலும் தளைப்பட்டனர்

விடுதலை ஆனதும் மெக்சிகோ சென்றனர் மேலும்
மக்கள் படிஸ்டாவுக்கு எதிராகத் திரும்பும்போது
ஃ பிடல் தலைநகர் ஹவானாவுக்குள் நுழைகிறார்
திட்டங்கள் தீட்ட சேர்ந்து கொண்டார் சேகுவேராவும்
மெக்சிகோவில் தங்கி பொதுவுடமைப் புரட்சியை
உருவாக்குவதில் உடனிருந்தார் சேகுவேரா  என்பதால்
ஃ பிடல் ஆக்குகிறார் அவரை அமைச்சராக 

கியூபா ஒரு குட்டித் தீவு 90 கல் தொலைவு
அமெரிக்காவிலிருந்து ஃ பிடல் சோவியத் போலப்
பொதுவுடைமை புரட்சி செய்தார் அது அமெரிக்கா
விரும்பவில்லை விதித்தது பொருளாதாரத் தடைகளை
கலங்கவில்லை காஸ்ட்ரோ.    அப்போது அவருக்கு
வயது 32 தான்     அவர்  எதிர்த்தார் 10 அமெரிக்க
அதிபர்களை  .   அமெரிக்கா 638 முறை கொல்ல
முயன்றது .    அவர் காதலியைக்  கொண்டே
அவர் பிடிக்கும் சுருட்டில் கலந்தது நஞ்சு
ஆனாலும்  அவர் தப்பித்துக் கொண்டார்
 
அவர் இருந்தார் தலைமைஅமைச்சராக
பின்பு ஆனார் குடியரசுத் தலைவராக
49 ஆண்டுகள்   இருந்திருக்கிறார் தலைமைப்
பொறுப்பில் உலகில் அவர் மட்டும் அப்படி

சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை விழித்துக்
கொண்டார் சுழலும் உலகத்துக்கு முன்பே
அணி சேரா நாடுகள் இயக்கத்திலும் இருந்தார்
(non alliied   movement)
அவரும் நடத்தினார்  இந்தியாவுக்கும் வந்தார்
இந்திரா காந்தியை சந்தித்தார் அன்போடு

கியூபாவில் 100 க்கு 100 பேர் படித்தவர்கள்
ஊட்டச்சத்து இல்லாதவர்களே இல்லை
அறிவியல் தொழில் நுட்பத் துறையில்
பெண்கள் பெரும்பான்மை அங்கே
வேளாண் துறையில் விளைச்சல் மிகுதி
மறைந்துவிட்ட கியூபா ஞாயிறுக்கு நம்

           வீர வணக்கம்

1 comment: