Thursday, May 4, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - கீ . வீரமணி

2.12.1933 ல் கடலூரில் பிறந்தார் தந்தை
கிருட்டிணசாமி பள்ளிப் படிப்பு கடலூரில்
முதுகலை பொருளாதாரத்தில் அண்ணாமலை
பல்கலையில் தங்கப் பதக்கம் வென்றார் சட்டப்
படிப்பு சென்னை சட்டக் கல்லூரியில்
மோகனா அம்மையாரைத் திருமணம் செய்து
கொண்டார் அதுவும் சாதி மறுப்புத் திருமணம்
பெரியார் தொடங்கிய 'விடுதலை 'நாளேட்டின்
ஆசிரியர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின்
வேந்தர் ஆவார்   1944.7.29 ஆம் நாள் கடலூரில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் மாநாட்டைத் திறந்து வைக்க பெரியார் வந்திருந்தார் மாநாட்டு தலைவர் விருதுநகர்  வி வி இராமசாமி திராவிட நாட்டுப் படித் திறப்பாளர் தளபதி அண்ணா   அய்யாவை திருப்பாதிரிப்புலியூரில் சத்திரம்  ஒன்றில் தங்க வைத்திருந்தார்கள் மணியம்மையாரும் உடன் இருந்தார்கள் பொழுது விடிந்ததும் அய்யாவைப் பார்க்க தோழர் ஏ பி சனார்தனம் சிறுவன் வீரமணியை அழைத்துப் போனார் அப்போது சிறுவன் வீரமணிக்கு வயது 11    
சிறுவன் அய்யாவைப் பார்த்து வணக்கம்
தெரிவித்தான் தோழர் ஏ .பி .ஜே இந்தப்
பையன் நம் இயக்கத்தில் ஈடுபாடு உடையவன்
நண்பர் திராவிடமணியின் தயாரிப்பு
மேடைகளில் நன்றாகப் பேசுகிறான்
என்று வீரமணியை அறிமுகப்படுத்தினார்
அய்யா எதிர்ப்புகளையும் கண்டனங்களையும்
பார்த்து சிங்கம் போல் பிளிறினார் பேசிய கருத்தை
விட பேசிய முறை தான் வீரமணியைக் கவர்ந்தது 
அடுத்து அண்ணா பேச வேண்டும் இடையில்
வீரமணியை பேச விட்டனர் இல்லை மேசைமீது
தூக்கி நிறுத்தினர் எழுதித் தயாரித்து மனப்பாடம்
செய்த பேச்சுதான் என்றாலும் கூச்சமும் தயக்கமும்
இன்றிப் பேசிய பேச்சு அது  அப்படித்தான் மற்றவர்கள்  கூறினர் அடுத்து அண்ணா பேசினார்
என்பேச்சை வைத்தே அவர் பேச்சை துவக்கினார்
"இப்போது பேசிய இச்சிறுவன் காதிலே குண்டலம்
நெற்றியிலே நீறு,கழுத்திலே ருத்திராட்சம்
அணிந்து இப்படிப் பேசி இருந்தால் ,இவரை
இந்தக்கால ஞானப்பால் உண்ட திருஞான
ஆக்கி இருப்பார்கள் இவர் பேசியதிலிருந்து
இவர் உண்டதெல்லாம் ஞானப்பால்  அல்ல   
பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான் "
என்றார் அய்யா அதைக் கேட்டு பலமாக
சிரித்தார் .மாநாட்டுப் பந்தல் அதிரக் கையொலி .
மதிய உணவின்போது அய்யாவைச் சந்தித்தார்
வீரமணி .அய்யா என்ன படிக்கிறாய் என்றார்
ஐந்தாம் வகுப்பு என்றார் வீரமணி நன்றாகப் படி
என்றார் அய்யா இந்த சந்திப்பு வீரமணியை
அய்யாவின்  பால் ஈர்த்தது அவர் அய்யாவின்
பல்லாயிரக் கணக்கான தொண்டர்களில்
ஒருவராக ஆக்கிய அரிய சந்திப்பு
எதிர் காலத்தில் வீரமணி சிறந்தபேச்சாளராக
ஆனார் நல்ல எழுத்தாளரும்கூட 'வாழ்வியல்
சிந்தனைகள்'போன்ற நூற்களும் 'மகாபாரத
ஆராய்ச்சி' 'பகவத் கீதையின் மறுபக்கம்
போன்றஆராய்ச்சிநூல்களும் 'அய்யாவின்
அடிச்சுவட்டில்' பெரியார்  களஞ்சியம்போன்ற
தொகுப்பு நூல்களும் எழுதியுள்ளார்
இத்தனைக்கும் நடுவில் மணியம்மையார்
மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்தின்

ஒப்பற்ற தலைவரும் கூட

No comments:

Post a Comment