Friday, September 22, 2017

குறுந்தொகை

பெரியாருக்குப் பிறகு என்னுடைய வலைப்பூவில் சங்கத் தமிழ்  குறுந்தொகையைப் பற்றி மாதத்தின் 1ஆம் நாள் , 10ஆம் நாள், 20ஆம் நாள் எழுத  இருக்கிறேன்.அனைவரும் படிக்க வேண்டுகிறேன். நன்றி .
  
குறுந்தொகை
சங்க இலக்கியம் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமாகும்
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று
எட்டுத் தொகை எங்கிற வெண்வபாவால் எட்டுத்தொகை 
நூல்களை அறியலாம் பத்துப் பாட்டு நூல்கள்
 
திருமுருகாற்றுப் படை           பொருநர் ஆற்றுப் படை
சிறுபாண்  ஆற்றுப்   படை       பெரும் பாண் ஆற்றுப் படை
முல்லைப் பாட்டு                 மதுரைக்காஞ்சி
நெடுநல்  வாடை                 குறிஞ்சிப் பாட்டு
பட்டினப்பாலை                   மலைப்படு கடாம்
குறுந்தொகை சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகையுள்
அடங்கும் நல்ல என்கிற அடைமொழியும் உண்டு
காதல் பாடல்கள் 4முதல் 8 வரை அடிகள் உடையவை
கடவுள் வாழ்த்தை பாரதம் பாடிய பெருந்தேவனார்  பாடியிருக்கிறார்
அவரைத் தவிர்த்து 205 புலவர்கள் காணப் படுகின்றனர் .பெயர்
தெரியாத பாடல்கள் 10 உள குறுந்தொகையில் 400 பாடல்கள் உள்ளன 
ஒரு பாடல் இறையனார் இயற்றியது
 ’’கொங்குதேர்   வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது  மொழிமோ
பயிலியது    கெழிஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று  அரிவை கூந்தலின்
மணமும்  உளவோ நீ அறியும்  பூவே ‘’ 
இதன் பொருள்   ;  இவள் கூந்தல் போன்று இனிது மணக்கும்
மலர் இதுவரை அறிந்திலேன்
மலர் தொறும் சென்று   ஆராயும் வண்டே  நீ சொல்
இந்தப் பாடலைப் பாடி பாண்டியன் அவையில்
தருமி பொற்கிழி பெறுகிறான் நக்கீரனார் பாடலில்
பொருட் குற்றம் இருப்பதாக கூறுகிறார் இறையனாரே
அவைக்குச் சென்று வாதிடுகிறார் ஆனாலும் நெற்றிக்
கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்கிறார்
நக்கீரனார் இது திருவிளையாடல் கதையும் கூட.



13 comments:

  1. Our hearty wishes. For your next step

    ReplyDelete
  2. Eagerly expecting and best wishes
    It will be a unique one based on your interest in tamil literature and eager to do things differently.

    ReplyDelete
  3. Really a good attempt. Now only I know, this song in Thiruvilaiyadal is from Kurundhokai. If feasible you may increase the frequency of this as choosing one of the week days which is convenient to you.

    ReplyDelete
  4. பெரியாரைத் தொடர்ந்து சங்க இலக்கியத்துள் உட்புகுந்து, குறுந்தொகை பற்றிய நாச்சியப்பனின் முதல் பதிவைப் படித்தேன். வெறுமனே பாட்டும், பொருளுமாக இல்லாமல், குறிப்பிட்ட பாடலைத் தேர்ந்தெடுத்து, அதன் நயம், திறன் ஆகியன உரைத்தால், கூடுதல் சிறப்பாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

    ReplyDelete
  5. Great effort. Helps to enrich my knowledge. Wishing you all success in your endeavor.

    ReplyDelete