Sunday, October 8, 2017

குறுந்தொகை - பாடல் 3

நிலத்தினும் நீரினும்

'நிலத்தினும் பெரிது வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே ''
இதன் பொருள்  நாடனொடு கொண்ட நட்பானது
பெரிது ; உயர்ந்த்தது ' அளவிறந்த ஆழமுடையது எனக்கூறி
அதனையே சிறந்தது எனக்  கூறுகின்றாள்.இதனால்
தலைவன் தலைவியின் பெருங்காதலை உணர்ந்து
அவளை விரைய மணந்து வாழும் வாழ்விலே மனத்தை
செலுத்துபவ னாவான் . குறிஞ்சி 12 ஆண்டு வளர்ந்து மலரும் பூ
அதேபோல் தலைவி 12 ஆண்டில் பூப்பெய்தி நிற்பவள் .  
பாடலைப் பாடியவர் தேவகுலத்தார்
நயம்:
சாரல் மலைப் பக்கம் குறிஞ்சி மரத்தின் கொம்பு கரிய நிறம்
உடைய தாதலின் கருங் கோட் குறிஞ்சி எனப்பட்டது . பூவில் தேனைக்
கவர்ந்து கொண்டு வந்து என்க .தேன் ஆகுபெயராய் இறாலுக்கு ஆயிற்று
தலைவர் என்னை மறப்பாரல்லர் அவர் அன்பு பெரிது என இயற்பட
மொழிந்தபடியாம் . அளத்தற்குரிய தென்பாள் அகலம்,உயரம்,ஆழம்
ஆகிய மூன்றற்கும் தனித் தனியே சிறந்த உவமை எடுத்தோதினாள்

திருவள்ளுவனாரும் ஞாலத்தின் மாணப் பெரிது என்றார்.  

1 comment:

  1. எங்களின் அன்பு நிலத்தை விட அகன்றதாய், வானை விட உயர்ந்ததாய், கடலை விட ஆழ்ந்ததாய் உள்ளது என்னும் இப்பாடல், காதலின் இலக்கணம்! நாச்சியப்பன் தேர்ந்தெடுத்துள்ள நல்ல பாடல் இது!!

    ReplyDelete