Thursday, May 31, 2018

குறுந்தொகை - பாடல் 400

சேயாறு செல்லாம் ஆயின் இடரின்று
களைஇக் காமம் பெருந்தோட்கு என்று
நன்றுபுரிந்து எண்ணிய மனத்தை யாகி
முரம்புகண் உடைய ஏகிக் களரிக்
கரம்பைப் புதுவழிப் படுத்த மதியுடை
வலவோய் இன்று தந்தனை தேரே
நோயுழந்து உறைவியை நல்க லானே .

பாடலின் பொருள் :

நீண்ட வெளியில் செல்வோமாயின், பெரும்தோளையுடைய  தலைவியின் காமமாகிய துயரை இன்று களைதல் நம்மால் இயலாதென்று,
நல்லதை விரும்பி எண்ணிய மனத்துடன் பாகனே நீ தேரைச் செலுத்தினை!
அதாவது அவ்வாறு நல்லதை  எண்ணிய விரைந்து கரம்பு நிலத்தில்
மனத்தையுடையை  ஆகி  , முரடான மேடுகள்  உடையும்படி விரைந்து , கரம்பை நிலத்தில் புதுவழி கண்டு செலுத்திய அறிவுத்திறனுடைய தேர்ப்பாகனே ! காம நோயால் பிரிவுத்துயரில் உழன்று வருந்தி இருந்த தலைவியை  ,நலமுடன் நீ தந்ததால் , இன்று  நீ தேரை மட்டுமா ஊருக்குள் தந்தனை ? இல்லை ; என் தலைவியையே உயிருடன் தந்தனை! ! நீ போற்றுதற்கு உரியை !


இப்பாடலை எழுதியவர் பேயனார்

No comments:

Post a Comment