Monday, October 12, 2015

தந்தை பெரியார் கவிதை - துறவு

25 வயதில் தந்தையாரோடு
கோபித்துக்கொண்டு 
காசிக்குப் போகிறார்
ஈவெரா இரண்டு
தமிழ்நாட்டு அய்யர்களையும்
கூட்டணி சேர்த்துக்கொள்கிறார்
முதலில் விஜயவாடாவும்
பிறகு ஐதராபாதும் போகிறார்கள்
பகலில் உஞ்சவிருத்தி (பிச்சை) செய்வார்கள்
இரவில் அய்யர்கள் இருவரும்
புராண,  இதிகாசங்களிலிருந்து
சொற்பொழிவு செய்வார்கள்
ஈவெரா அதை தெலுங்கில்
மொழிபெயர்ப்பார் .அதோடு
கைச்சரக்கையும் சேர்த்துக்கொள்வார்
மக்கள்  சுவைத்துக் கேட்டனர்


காஞ்சிபுரம் முருகேச முதலியார்
தன் வீட்டில் தங்க வைத்திருந்தார்
காசிக்குப் புறப்படும் முன்
ஒரு மோதிரம் தவிர மற்ற
நகைகளைக் கழற்றி
முருகேச முதலியாரிடம்
கொடுத்தார் ஈவெரா
மூவரும்  காசிக்குப்பயணமானார்கள்
காசியில் அய்யர்கள் இருவரும்
ஈவெராவைப் பிரிந்தனர்


காசியில் திராவிடர்களின்
சத்திரங்கள் இருந்தன ஆனால்
சோறு பார்ப்பனர்களுக்கு மட்டுமே
போடப்பட்டது எச்சில் இலைகளை
உண்டார் தலையை மழித்து
துறவிக்கோலம் பூண்டார்
மலர்பறிக்கும் வேலை கிடைத்தது
சில நாட்களில் கை நழுவிப்போனது
அங்கே பார்ப்பனர்கள்
பெண்டிர் உட்பட
மதுவும், மாமிசமும்
உண்பதைக்கண்டார்
காசியை விட்டுப்புறப்பட
எண்ணினார் மோதிரத்தை
விற்றுவிட்டு ஆந்திராவில் உள்ள
எல்லூர் வருகிறார் வணிகர் ஒருவர்
ஈவெராவை அடையாளம் காண
வெங்கட்ட நாயக்கருக்கு
தகவல்  போகிறது


நாயக்கர் எல்லூர் வந்தார்
முருகேச முதலியாரிடமிருநது
நகைகளை வரவழைக்கிறார்கள்
சாப்பாட்டுக்கு என்ன செய்தாய்
என்று நாயக்கர் கேட்க
நீங்கள் செய்த அன்னதானத்தையெல்லாம்
வசூல் பண்ணிவிட்டேன் என்கிறார்
நகைகளைப் போட்டுக்கொண்டு
ஈரோடு திரும்புகிறார் ஈவெரா
வெங்கட்ட நாயக்கர் மண்டி
ஈவெராமசாமி நாயக்கர் மண்டி
ஆகிறது ஆற்றலைக் காட்டுகிறார்
எண்சுவடி, வாய்ப்பாடு ,பேரேடு எழுதுதல்
தகராறு  எழுந்தால் தானே
விசாரித்து  தீர்ப்பு வழங்குகிறார்






2 comments:

  1. பெரியாரின் துறவு படிப்பதற்கு மிக சுவையாக இருந்தது. நன்றி

    ReplyDelete