Saturday, September 26, 2015

தந்தை பெரியார் கவிதை - பிறப்பு



நான் யார் என்று
அவரே சொன்னது
"திராவிட சமுதாயத்தைத் திருத்தி
உலகில் உள்ள மற்ற
சமுதாயத்தினரைப் போல்
மானமும் அறிவும் உள்ள
சமுதாயமாக ஆக்கும் தொண்டை
மேற்போட்டுக்கொண்டு அதே
பணியாய் இருப்பவன் "
95 வயது வரை  வாழ்ந்து
எழுதியும் பேசியும் போராடினார்
திராவிட சமுதாயம் இன்று
இருக்கும் நிலைக்கு
அவரே காரணம்

பெரியாரின் பெற்றோர்
வெங்கட்ட நாயக்கரும்
சின்னத்தாயம்மையாரும்
சிறியதோர் தட்டுக்கடை
வைத்திருந்தார்கள்
மளிகைக் கடையாய்
மாறியது பின்னர்
மண்டிக் கடையாய்
மலர்ந்தது வணிகமோ
மண்டியில் வளர்ந்தது
நம்பிக்கை நாயகரானார்
பணத்தைக் கொண்டுவந்து
வங்கியில்  கொடுப்பதுபோல்
கொடுத்தார்கள் வளம் சேர்ந்தது
சின்னதாயம்மையாரும் கணவரின்
தொழிலுக்கு உதவினார்கள்


பத்தாண்டுகள் குழந்தையில்லை 
நோன்புகள் தொடர்ந்தன
கிருட்டிணசாமி,இராமசாமி,கண்ணம்மாள்
என மூன்று குழந்தைகள்
பிறந்தனர் கிருட்டிணசாமி 
சவலைப் பிள்ளையானதால்
இராமசாமியை நாயக்கரின்
சிறிய தகப்பனார்  மனைவி
விதவை  அம்மையாருக்கு
தத்துக்கொடுத்து  விட்டார்கள்
இராமசாமி கட்டுப்பாடில்லாமல்
வளர்ந்தார் படிப்பும் ஏறவில்லை
காலில் விலங்கு போட்டார்கள்
வாணிய செட்டியார் வீடுகளிலும்
இசுலாமியர் வீடுகளிலும்
நீரும் தின்பண்டங்களும் உண்டார்
அய்ந்து வகுப்புககு மேல
படிக்கவில்லை தத்துக் கொடுத்ததை
ரத்து  செய்து அன்னையார்
வீட்டுக்கு அழைத்துக்கொள்கிறார்கள்
இராமசாமியை மண்டியில்
போடுகிறார் நாயக்கர்
12 வயதில்   வணிக் ஆற்றலை
மெய்ப்பிக்கிறார்  இராமசாமி 

இப்போது வெங்கட்ட நாயக்கர்
குடும்பம் வசதி மிக்கதாகவும்
வைணவப் பற்று மிக்கதாகவும்
விளங்குகின்றது புராண இதிகாச
சொற்பொழிவுகள் நிறைந்திருந்தன
இராமசாமி அவற்றில் உள்ள
முரண்பாடுகளை உணர்ந்தார்
தர்க்க ஆற்றலும்  வளர்ந்தது  
எல்லாம் கடவுள் செயல்
என்று சொன்ன ஒரு
அய்யரின் கடையில் தாழ் வாரத்
தட்டியைத் தட்டி விட்டு
அதுவும் கடவுள் செயல்
என்றார் குறும்புக்கார இராமசாமி
பார்ப்பன அன்னதானத்தின்  நடுவில் 
துலுக்கனைக் கூட்டிக்கொண்டு
போனதால் அன்னதானம்
கெட்டுவிட்டதென்று நாயக்கரிடம்
பார்ப்பனர்கள் புகார் செய்ய
நாயக்கர் இராமசாமியை
செருப்பால் அடிக்கிறார்
இராமசாமி கலங்கவில்லை
வாரண்ட் இருக்கும்போது
அன்னதானம் நடக்கும் இடத்தில
ஒரு பார்ப்பான் ஒளிந்து
கொண்டதுதான்  காரணம்
என்றார் கலங்காமல்
பார்ப்பன பில் கலக்டருக்கு
மஞ்சள்,வெள்ளம்,கருப்பட்டி
கொடுதனுப்புவதும் 'சாமி '
என்று மரியாதை காட்டுவதும்
இராமசாமி கண்ணை உறுத்துகிறது

பெற்றோர் பணக்காரப் பெண்களை
இரமாசாமிக்குப் பார்த்தபோது
அவர் நடுத்தரக் குடும்பத்தில்
உறவினர் பெண்ணான
நாகம்மையாரை விரும்புகிறார்
அது காதல் திருமணம்
ஈவெராவும்  நாகம்மையாரும்
35 ஆண்டுகள் இல்லறம் நடத்தினர்
இருவரும் விருந்தோம்பல் சளைப்பதில்லை
ஆச்சாரத்தோடு இருந்த நாகம்மையாரை
தன் குறும்புத் தனங்களைக்காட்டி
பகுத்தறிவு  வழிக்குக் கொண்டுவந்தார்
ஈவெரா; அவரைத் தொட்டால்
தீட்டு என்று குளிப்பார்கள்
அன்னையார் .நாகம்மையாரை புலால்
சமைக்கப் பழக்கி விடுகிறார் ஈவெரா
தாலி இல்லாமல் இருந்தால்
தப்பில்லை என்று நம்ப  வைக்கிறார்
கோவிலுக்குப் போவதையும்
முரடர்களைக் கொண்டு
பயம் காட்டி
நிறுத்தி விடுகிறார்




4 comments:

  1. Annan very nice super. Nila also read this and after reading this kavithai she came to know periyar in school days

    ReplyDelete
  2. பெரியாரின் பிறப்பு குறித்து அறிந்து கொள்ள மிக பயனுள்ள கவிதை. தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete