Sunday, September 4, 2016

தந்தை பெரியார் கவிதை - செல்வம்

சர் பன்னீர்  செல்வம்  அவர்களின்  முழுப் பெயர்
ஆரோக்கியசாமி  தாமரைச்செல்வம்  பன்னீர்செல்வம்
கேம்பிரிட்ஜ் பல்கலையின் முன்னாள் மாணவர் 
இருந்தார் தஞ்சை மாநகராட்சித்தலைவராக
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினர் கூட
தஞ்சை மாவட்டம் திருவையாறில்
இருந்தது மன்னர் மானியத்தில் நடைபெற்ற
சமற்கிருதக் கல்லூரி ஒன்று செல்வம்
உத்தரவிட்டார் தமிழும் அங்கே கற்பிக்க

அவர் இருந்தார் பொப்பிலி அரசரின் அமைச்சரவையில்
உள்துறை அமைச்சராக 1937 தேர்தலில் நீதிக் கட்சி
தோற்றது ஆனாலும் வென்ற சிலரில் அவர் ஒருவர்
சுயமரியாதை கூட்டங்களிலும் மாநாடுகளிலும்
கலந்துகொண்டு எதிரிகளுக்கு பதில் கூறி வந்தார்


இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பெரியாருக்கு
சிறை தண்டணை விதிக்கப்பட்ட போது
கலங்கா நெஞ்சினர் ஆன செல்வம் கலங்கினார்
1938ல் வேலூரில் கூடிய உணர்ச்சி மிக்க
தமிழர்மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்
சிறை செல்லு முன்பே  பெரியாரால் எழுதப்பட்டிருந்த 
மாநாட்டு விரிவுரையை படித்தார் பன்னீர்செல்வம்

அரசு நியமித்தது அவரை ஆலோசகராக
இந்திய மந்திரி சபைக்கு.  பெரியார்
எழுதினார் தலையங்கம் விடுதலையில்
நமது செல்வம் என்று.   நாட்டுக்கு இன்னும்
நல்லது செய்வார் என்று பெருமைப் பட்ட
பெரியார் நீதிக் கட்சிக்கு அடித்தளமாகவும்
உதவியாகவும் இருந்தவர் இந்த நெருக்கடியான
நேரத்தில் இந்தியாவை விட்டுப் பிரிந்து
செல்கிறாரே என்று வருத்தப் பட்டார்.

ஹனிபால் ஓமான்  கடலில்  விழுந்தது
செல்வம் இங்கிலாந்துக்கு சென்ற விமானம்
பெரியார் எழுதினார் மெய் நடுங்குகிறது
எழுதக் கை ஓடவில்லை
கண்கலங்கி மறைக்கிறது கண்ணீர் எழுத்துக்களை
அழிக்கிறது என்று.  பாழாய்ப் போன உத்தியோகம்
வந்ததும் போதும் தமிழர்களைப் பரிதவிக்க
விட்டு விட்டு மறைந்து விட்டார் என்றார்.


பெரியார்.விடுத்தார் வேண்டுகோள்
தமிழர்கள் கட்ட வேண்டும் கறுப்புக் கொடி 
வீடுகளில் என்றும் அடைக்கவேண்டும்
கடைகளை என்றும் கருப்புக் கொடி ஊர்வலம்
வந்து இரங்கல் கூட்டம் நடத்தி செல்வத்தின்
தொண்டை விளக்க வேண்டும்  என்றார்.

எழுதினார் பாவேந்தர் பன்னீர் செல்வம்  பற்றி
"மேலோங்கிய விண் விமானம் உடைந்ததோ
ஒலிநீர் வெள்ளம் தூங்கிய கடல் வீழ்ந்தானோ
துயர்க்கடல் வீழ்ந்தொம் நாங்கள்  "
2.4.1940 அன்று கடைப்பிடிக்கப்பட்டது
செல்வம்   நினைவு நாள்   திருச்சியில்

பேசினார்  பெரியார்.

No comments:

Post a Comment