Friday, December 2, 2016

தந்தை பெரியார் வசன கவிதை - இராஜாஜி

தொரப்பள்ளி  கிராமத்தில் சக்கரவர்த்தி வெங்கட்ராயன் -
சிங்காரம்மா இணையருக்கு 10.12.1878 அன்று  மகனாகப்
பிறக்கிறார் இராஜகோபாலாச்சாரி பள்ளிப் படிப்பு ஓசூர்
பெங்களுருவில் நிறைவடைகிறது சட்டப்  படிப்போ
சென்னை மாநிலக்  சட்டக்  கல்லூரியில்  முடிக்கிறரர்         
அலமேலு  மங்கம்மாவைத் திருமணம் செய்து
கொள்கிறார் அவருக்கு 3 மகன்கள் 2 மகள்கள்  உள்ளனர்
சேலத்தில்    வழக்குரைஞர்     தொழில் செய்கிறார்
சேலத்தில் நகரசபைத் தலைவராகவும் இருக்கிறார்
நகரசபையில் ஒரு தலித் உறுப்பினர் (councilor)
வர உதவுகிறார்  தாராள     மனதோடு
மகள் இலட்சுமியை  மகாத்மா காந்தி
மகன் தேவதாஸ் காந்திக்கு மணம்
செய்து கொடுக்கிறார் கலப்புத் திருமணம்
அரசியலில் ஈடுபாடு ஏற்படுகிறது
வ  உ சி யின்  நட்பு ஏற்படுகிறது
அன்னி பெசன்ட் அம்மையாரை  வியக்கிறார்
இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில்
இணைகிறார் காங்கிரஸ் செயற்குழு
உறுப்பினராகிறார்  ஒத்துழையாமை
இயக்கத்தில் ஈடுபடுகிறார்  ஆர்வத்தோடு
வேதாரண்யத்தில் உப்பு சத்தியா கிரகம்
செய்கிறார் துணிச்சலோடு
விடுதலைப் போராட்டத்தில் கைதாகி
சிறை வாசமும் அடைகிறார்
தமிழக முதல்வராகிறார் 1937 முதல் 1939 வரை
மது விலக்குக்  கொண்டு வருகிறார்  வருமானம்
குறைகிறது  அதை ஈடு செய்ய வணிக வரி அறிமுகப்
படுத்துகிறார்  தமிழ் நாட்டில் புதிதாக
இராஜாஜி பள்ளி மாணவர்கள் பள்ளிகளில்
இந்தி படிப்பதைக் கட்டாயமாக்குகிறார்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும்
நடைபெறுகிறது பெரியார் கைதாகிறார் தொண்டர்களும்
கைதாகிறார்கள் இந்தி என்கிற தலைப்பில் நாம்
பார்த்திருக்கிறோம் விரிவாகவும் தெளிவாகவும் 
1942ல் மகாத்மாவால் நடத்தப்பட்ட வெள்ளையனே
வெளியேறு இயக்கத்தை இராஜாஜி ஏற்றுக்கொள்ள
வில்லை  கருத்து மாறுபட்டார்  மகாத்மாவோடு
பாகிஸ்தான் பிரிவினை ஜின்னா கேட்டபோது
இராஜாஜி அதை ஆதரித்தார் விருப்பத்தோடு
1947-48 மேற்கு வங்க ஆளுநராக இருந்தார்
1948-1950ல் கவர்னர் ஜெனரல் ஆக இருந்தார்
நேருவின் அமைச்சரவையில் இலாகா இல்லாத
அமைச்சர் அவர் அப்போது
குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்தார்
6000 பள்ளிகளை கிராமப்புறத்தில் மூடும்  நிலை
வந்தது பெரியார் எதிர்த்தார் கட்சிக்குள்ளேயும்
எதிர்ப்பு  எழுந்தது முதல்வர் பதவியில் இருந்து
விலகினார் கமராசருக்கு வழிவிட்டு
இராமாயணம் தொடர் எழுதினார்
1955ஆம் ஆண்டு இந்திய அரசு
வழங்கியது பாரத் ரத்னா பட்டம்
காங்கிரஸ் கட்சியிலிருந்து  விலகி
தொடங்கினார் சுதந்திரா கட்சி
அமைத்தார் கூட்டணி திமுக வுடன் 1967
தேர்தலில் திமுக வென்றதுமுன்பு இந்தி படிக்கச் சொன்ன இராஜாஜி
1965 இந்தி எதிர்ப்புக்கு ஆதரவான நிலை
எடுத்தார் மன மாற்றத்தால்
கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு ரத்து
ஆகும் சூழ்நிலை வந்தபோது கலைஞர்
வீட்டுக்குப் போய் ரத்து செய்ய வேண்டாம் என்று
கேட்டுக் கொண்டார் ஆனாலும் கலைஞர்
நிதி நிலையை சொல்லி ரத்து செய்தார்
எழுதியிருக்கிறார் நூல்கள்  தமிழிலும் ஆங்கிலத்திலும்
கீதை ,மகாபாரதம் ,இராமாயணம் போன்ற நூல்களை
மொழி பெயர்த்திருக்கிறார்  தமிழில்
சாகித்ய அகாடெமி விருதும் பெற்றார்
பெருமையோடு புகழ் சேர்த்து
அரசியலில் இராஜாஜி பார்ப்பனர்களுக்கு
ஆதரவாகவும் பெரியார் பார்ப்பனரல்லாதாருக்கு
ஆதரவாகவும் இருந்தார்கள் ஆனாலும் இருவரும்
தனிப்பட்ட முறையில் நண்பர்கள் தான்
இப்போது பெரியார் இராஜாஜி பற்றிப் பேசியதைக்
காண்போம் "எங்களது நட்பு ஆழமானது ஒருவருக்கொருவர்
மாறாத தன்மை கொண்டது .
இராஜாஜி அவர்கள் 1910ல்  பார்ப்பனரல்லாதாருடன் சம பந்தி
போசனம் செய்தார் .1915இலிருந்து பார்பனரல்லாத  மக்கள்
வீட்டில் உணவு அருந்துவார்  ஆரால் காங்கிரசில் எல்லாப்
பார்ப்பனர்களும் காந்தியாரும் சமபந்தி போசனம்
அருந்தும்படி ஆயிற்று . நான் அறிய திராவிட நாட்டில்
யார் வீட்டிலும் யாரும் உணவு அருந்தலாம் என்கிற தன்மை
இவரால்தான் ஏற்பட்டது .  மேலும் கலப்புத் திருமணத்தை
துணிந்து முதலில் ஆதரித்தவரும் அவரே . ருக்மணிதேவி-
அருண்டேல் கட்டுப்பாடாக  பார்ப்பன சமுதாயமே -ஏன்
சத்திய மூர்த்தி அய்யர் ,ரெங்கசாமி அய்யங்கார் ,
கஸ்தூரி ரெங்க அய்யங்கார் எல்லோருமே எதிர்த்தபோதும்
துணிந்து அதை ஆதரித்ததோடு  தமது மகளையும்
கலப்புத் திருமணமாக காந்தியார் மகனுக்கு
கொடுத்தவர் இராஜாஜி "
பெரியார் போற்றிய இராஜாஜி மறைந்தார்
25.12.72 அன்று  கலைஞர் எழுப்பினார்
காந்தி மண்டபம் அருகில் நினைவகம்
முதன்மையான சாலை அவர் பெயரில் உள்ளது



No comments:

Post a Comment