Friday, April 7, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - கடவுள்

பெரியார் பேசுகிறார்  கடவுள் என்னும் சொல்
தமிழனுக்கு ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குள்
கற்பிக்கப் பட்ட சொல்லேயல்லாமல் பழங்காலசொல்
என்று சொல்ல முடியாது  இலக்கியங்களும் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டனவே
தொல்காப்பியம் ஆரியர் வருகைக்குப் பிற்பட்டதே
இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள்  ஏன் ?அவை எப்படி
வந்தன  என்னவெல்லாம் கடவுளாக்கப்பட்டிருக்கின்றன
மாட்டு மலம் முதல் மாடு, குதிரை ,எருமை,குரங்கு ,பெருச்சாளி கழுகு , காக்கை ,பாம்பு மரம் ,செடிகள்,மண், உலோகம் காகிதம் முதலியவைகளும் மற்றும்  பல ஆபாச உருவங்களும்  கடவுளாக  வணங்கப் படுகின்றன
 
இராமலிங்க சுவாமி என்ற பெரியார் அறிவுதான்
கடவுள் என்று சொன்னதோடு சாதி,சமயம் ,மோட்சம்
நரகம் ,கடவுள்கள் எல்லாம் வெறும் பித்தலாட்டம்
என்று சொல்லிவிட்டார் அவர் என்ன நாத்திகரா

இன்று சிறையில் இருப்பவர்களில் சமரசவாதிகளோ
நாத்திகர்களோ  விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே 
இருப்பார்கள் மற்றைய யாவரும் கடவுள் நம்பிக்கை
உடைய ஆத்திகர்கள் தான்
 குடி அரசு 30.1.1930
சுப்ரமணியன் என்றும் சண்முகம் என்றும் கார்த்திகேயன்
என்றும் கந்தன் என்றும் சொல்லப்படும் சாமியானது 
மேற்கண்ட மாதிரி ஒரு பிறப்பு வளர்ப்புக்கு உட்பட்டது
என்பது வைணவ புராணங்களிலும் சைவப்புராணங்களிலும்
ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது
பகுத்தறிவு மலர் 1936
விடுதலை  17.9.1969
கொஞ்ச காலத்திற்கு  முன் எல்லா விடயங்களும் கடவுள்
செயல் என்று எண்ணியிருந்த மக்கள் உலகில் அறிவியல்
ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்டு பல விடயங்கள் மனிதன் செயல் என்று சொல்ல்லத் தொடங்கி  விட்டார்கள் 
குடி அரசு    11.8. 1929
கடவுள் மனித நலத்துக்காக கண்டுபிடிக்கப்  பட்ட  கருவி
அல்ல . மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தப்
பட்ட கருவியே ஆகும் .சூரியனை ,சந்திரனை ,நெருப்பை ,
நீரை ,காற்றை ,கல்லை,மண்ணை எந்த மனிதனும் கண்டுபிடிக்கவில்லை .அவற்றின் பெயரைத்தான் தெரிந்து கொண்டான் எல்லாம் கடவுள் செயல் என்கிற எவனும் எல்லாவற்றிற்கும் தற்காப்புச் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை .எல்லாம் கடவுள் செயலாய் இருக்கும்போது நாத்திகன் -கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை
கடவுள் ஒரு கற்பனையே 1971]
5 வயது   சராசரியாக வாழ்ந்த ஒரு இந்தியன் எப்படி
52 வயது உடையவனாக மாறினான் .பெரிய பெரிய
நோய்களை எல்லாம் எப்படித் தீர்த்துக் கட்டினான் .இது
அறிவு முயற்சியால்தானே .வெறும் கடவுளை மட்டும்
நம்பிக்கொண்டு சிவ சிவா என்றால் இந்த வளர்ச்சியை
 பெற்று இருக்க  முடியுமா
விடுதலை  9.10.1972
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் ;கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று நான் கூறுவது கண்டு பார்ப்பனர்கள் நெருப்பின்மேல் நிற்பது போல் துள்ளுகிறார்கள்
நான் சொல்லவந்தது கடவுள் கண்டுபிடிக்கப் பட்டதுமில்லை
தானே தோன்றியதுமில்லை முட்டாள்களால் உண்டாக்கப்
பட்டது  என்பதாகும்
கடவுளைப் பரப்புகிற எவனுமே கடவுள் தத்துவத்திற்கு
ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன்
பரப்புகிறவர்கள் யாவருமே நாணயத்தையோ யோக்கியதை
யையோ ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக்  கொண்டு
கடவுளைப் பரப்புவதில்லை
காட்டுமிராண்டித் தனமா அறிவுடைமை ஆகுமா என்று கேட்கிறேன் உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால் முதல் தொண்டாக இப்படிப் பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால்தானே அவன் உண்மையான அறிவாளியான தொண்டனாக  இருக்க  முடியும்  உயர் சாதிக் காரன் நலன் அனுபவிப்பவன் கடவுளைக் காப்பாற்றினால் தாழ்ந்த சாதிக் காரன் கேடு அனுபவிப்பவன் கடவுளை ஒழிப்பது என்பது தானே நியாயமும் நேமையும் அறிவுமாகும்
கடவுள் பாது காப்பு இருந்தால் வீட்டிற்குத் தாழ் போடாமலும்
பெட்டிக்குப் பூட்டுப் போடாமலும் அச்சமின்றி பொருட்களை
வைக்க முடியவில்லையே ஏன்
கடவுள் ஒரு கற்பனையே 1971
ஆங்கில அகராதிகளில் இந்து மதம் என்றால் பிராமண
மதமென்றும் கிறித்தவர் முகமதியர் அல்லாதவர்களுடைய
மதமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கின்றது
விடுதலை  17.12.1969
தமிழர்களுக்கு ஆரியர்களுக்கு முன் கடவுள் இல்லை
என்பதற்கு என்ன ஆதாரம் என்றால் தமிழில் கடவுள்
என்ற சொல்லே இல்லை
ஐரோப்பா ஆசியா ஆகிய கண்டங்களில் முக்கிய நகரங்களில்
கோடிக் கணக்கான மக்களை கொண்ட கடவுளை மறுக்கும்
சங்கங்கள் இருந்து வருகின்றன

வேதம் என்பதற்கு காணப்படும் கடவுள் தத்துவம் கூட
வேதத்திற்கு விளக்கம் செய்தவர்களான சங்கரர்  இராமானுசர் மாத்துவர் முதலிய மத குருமார்களின் விளக்கங்கள் கூட கடவுளைப் பற்றி ஒன்றுக்கொன்று பொருந்தாத  வகையில் உள்ளன அந்த வேற்றுமைகள்தாம் இன்று சங்கர ,இராமானுச மாத்துவ மதங்களாக உருப்பெற்றுள்ளன  உலகிலாகட்டும் நம் நாட்டிலாகட்டும் கடவுள் ,மதம்,சாஸ்திரம் ,தர்மம் என்பவை கற்பிக்கப்படா விட்டால்  ஏழையேது பணக்காரன் ஏது பாட்டாளி
ஏது   முதலாளி ஏது பறையன் ஏது சூத்திரன் ஏது பார்ப்பான் ஏது பட்டினி கிடப்பவன் ஏது 
இன்று நாட்டில் கல்வி என்னும் பெயரால் பல கோடிகள்
சேவு செய்து பல்கலைக்கழகம் ,கல்லூரி உயர்தரப் பள்ளி
வைத்துக் கல்வி கற்ப்பிப்பதைவிட பகுத்தறிவுப் பள்ளிகள்
மட்டும் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்தால் எந்தப் பற்றுமற்ற வகையில் மக்கள் முன்னுக்கு வருவார்கள் என்பது உறுதி 
விடுதலை 16.12.1969
இவ்வளவு கடவுள் ,மதம் இருந்தும் ஒழுக்கம் ,நாணயம்
மனிதப் பண்பு இல்லாமல் போய்விட்டது . மற்ற நாட்டில்
எல்லாம் அவற்றிலே நாகரிகம் நடக்கிறது .அந்தப் பண்பு
நமக்கில்லை .ஆனால் மேலான பண்பு என்று நம்மவன்
பேசுகிறான்  

விடுதலை  3.5.1959  

No comments:

Post a Comment