Friday, April 21, 2017

தந்தை பெரியார் வசன கவிதை - மறைவு

பெரியார் 91 வது பிறந்த நாள் செய்தியாக
'எனது நிலை 'என்ற தலைப்பில் கட்டுரை
வரைந்தார் அதைப் பார்ப்போம்
"எனக்கு வயது 90; உடல் மிகவும் மோசம்
கைகால்  நடுக்கம் அதிகம் ; சிறுநீர் கழிக்கும்
போது சப்தம் போட்டுக் கொண்டுதான் கழிக்கிறேன்;
அவ்வளவு வலி ; தூக்கம் சரியாய் வருவது இல்லை;
நினைத்தபோது உடலில் ஏதாவது ஒரு பாகத்தில்
வலி ஏற்பட்டு , சில ஏப்பமோ காற்றுப் பிரிதலோ
ஏற்பட்ட பிறகு நோய் விலகுகிறது ; உண்ட உணவு
சரியானபடி செரிமாணமாவதில்லை ;முன்போல்
உணவும் சரியாய் உட்கொள்ள முடியவில்லை
எந்தக் காரியம் பற்றியும்  மனதிற்கு
உற்சாகம் ஏற்படுவதில்லை ;களைப்பு
அடிக்கடி ஏற்படுகிறது ;நெஞ்சில் வலி
திடீரென்று ஏற்படுவதும் ஏப்பம் வந்த
பிறகு குறைவதுமாக இருக்கிறது
எதைப் பற்றியும் சலிப்பும் வெறுப்பும்
ஏற்பட்டு விடுகிறது
பெரியார் 95 வயது வாழ்ந்தார் மருத்துவர்கள்
ஓய்வெடுத்துக் கொள்ளும்படி சொன்னார்கள்
உதகையில் நீண்ட ஒய்வு பெறும்படி மணியம்மை
யாரும் வீரமணியும் மற்றவர்களும் சொன்னார்கள்
பெரியார் கேட்கவில்லை 90 வயதில் நாம் பார்த்த
உடல் நலத்தை  வைத்துக்கொண்டு பெரியார் தன்
தொண்டை தொடர்ந்தார் ஊர் ஊராய் சுற்றுவதை
பேசுவதை குறைக்கவில்லை சொல்லப் போனால்
தனித்தமிழ்நாடு பெறுவதில் அதற்கான போராட்டத்தில்
தீவிரம் காட்டினார் சூத்திரப் பட்டத்தை சாதி இழிவை
ஒழிப்பதில் வேகம் கொண்டிருந்தார் அக்கறையோடு
சென்னை தி .நகரில் திடீர்ப் பிள்ளையார்
பற்றிப் பேசுவதற்கு 3 ஆண்டுகளுக்கு
முன்பு முன் பணம் கொடுத்தார்கள்  பெரியார்
பேசவில்லை அது மனதை உறுத்திக் கொண்டிருந்ததது
எனவே 19.12.1973 அன்று அங்கே பேசினார் 
இறுதிப் பேருரையாக அமைந்தது  
பகுத்தறிவு உரை அது சாதி ,
மதம் ,கடவுள் சாஸ்திரம் ஆகியவற்றுக்கு
எதிராக தன் கருத்துக்களை மொழிந்தார்
பேச்சுக்கு இடையில் நெஞ்சுவலி வந்து
துடித்தார் சற்று நிறுத்தியவர் மீண்டும்
தொடர்ந்தார் பேருரை இறுதிப் பேருரை
ஆனது பெரியாருக்கு
21.121973 அன்று இரணியா தொல்லையால்
அவதிப்பட்ட பெரியாரை சென்னை அரசு பொது
மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் பிறகு
அவருடைய விருப்பப்படி வேலூர் கிறித்தவ மருத்துவக்
கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்
மருத்துவர்கள் ஜான்சன் , பட் இருவரும் முயன்றனர்
22.12.1973  சென்னையிலிருந்து  மருத்துவர் இராமச்சந்திரா வந்து சேர்ந்து கொண்டார்   23.12.73 மதியம் நினைவிழந்த நிலையில் காணப்பட்டார் கலைஞர் வந்து பார்த்தார்   மருத்துவர்கள்   மூவரும் அய்யாவைக் காப்பாற்ற  இயலவில்லை தந்தை பெரியார் 24.12.1973 காலை 7.22
மணிக்கு உலகை விட்டு மறைந்தார்
தமிழர்களை சோகத்தில் விட்டு விட்டு
இராஜாஜி அரங்கத்தில் பெரியார் உடல் வைக்கப்
பட்டது மக்கள் அஞ்சலிக்காக தமிழகமே சென்னையில்
திரண்டது பெரியாரை எல்லா அரசு மரியாதைகளுடன்
அடக்கம் செய்ய விழைந்தார் கலைஞர் பெரியார்
எந்த அரசுப் பதவியிலும் இருந்ததில்லையே  என்றார்
தலைமைச் செயலாளர் பார்த்துக் கொள்ளலாம் என்று
கூறிய கலைஞர் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்
36 குண்டுகள் முழங்கின அரசு விடுமுறை அறிவிக்கப்
பட்டது கருப்புக்கோடிட்ட அரசிதழ் வெளியிடப்பட்டது 
இருப்பூர்தி மொட்டைத் தட்டு  வண்டி யில் ( டிரக் )சற்றே உயர்த்தி சாய்வாக பெரியார் உடல் கிடத்தப்பட்டது இரு மருங்கிலும் மணியம்மையார் ,வீரமணி, கலைஞர் ,நாவலர் ,
என் வி நடராசன் ,ஈ வெ .கி .சம்பத் ஆகியோர்
அமர்ந்திருக்க உடல் பெரியார் திடலுக்கு
எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தேக்குப்
பேழையில் வைத்து அடக்கம் செய்யப்
பட்டது .      பின்னர் பொருத்தமான நினைவகமும்
ஏற்படுத்தப் பட்டது அங்கே
ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த வீட்டின்
பின்புறம் அண்ணா வாழ்ந்தார் அதை
கலைஞர் அரசு வாங்கி பெரியார் -அண்ணா
நினைவகம் மணியம்மையார் தலைமையில்

17.9.1975 அன்று கலைஞர் திறந்து வைத்தார்

No comments:

Post a Comment